Monday, November 27, 2023

KAALKOOT (2023) -ஹிந்தி / தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் டிராமா ) @ ஜியோ சினிமாஸ்


எட்டு  எபிசோடுக்ள்  கொண்டது  இந்த  வெப்  சீரிஸ் . ஒவொரு  எபிசோடும் 25 நிமிடங்கள்  டூ 30  நிமிடங்கள் , கடைசி  5  நிமிடங்கள்  டைட்டில்  ஓடுவதால்  ஸ்கிப்  செய்து  விடலாம், ஆக  மொத்தம்  மூன்றரை  மணி  நேரம்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம்.


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . சப்  இன்ஸ்பெக்டர்  ஆக  பணியாற்றும்  இவரது  ஸ்டேஷனுக்கு  ஒரு  கேஸ்  வருகிறது . சாலையில்  செல்லும்  ஸ்கூட்டர்  ஒன்றில்  பயணிக்கும்  ஒரு  ஆள்  ஒரு  இளம்பெண்  முகத்தில்  ஆசிட்  ஊற்றி  விடுகிறான், அவன் யார்? எதற்காக  அப்படி  செய்தான் ? என்ன  முன்  பகை ??  என்பதை  அலசி  ஆராய்வதுதான்  இந்த  வெப்  சீரிசின்  மையக்கரு. 


மெயின்  கதை  மொத்தமாகவே  ஒரு  மணி  நேரம்  தான்  இருக்கும், மீதி  எல்லாம்  கிளைக்கதைகள் . நாயகன்  - நாயகி  இருவருக்குமான  காதல் , கல்யாண  ஏற்பாடுகள் , நாயகனின்  ஸ்டேஷனில் பணி  ஆற்றும்  போலீஸ்  ஆஃபீசர்கள்  நடந்து  கொள்ளும்  விதம், நாயகனின்  அக்கா வின்  காதல்  கல்யாணம்   என  சுவராஸ்யமான  சம்பவங்கள்   சுவை  கூட்டுகின்றன 


 நாயகன்  ஆக விஜய்  வர்மா  சிறப்பாக  நடித்திருக்கிறார். ஹீரோ  பில்டப்  எல்லாம்  இல்லாமல்  யதார்த்த,மான  போலீஸ்  ஆக  அவரது  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டிருப்பது  சிறப்பு 


நாயகனின்  அம்மாவாக  சீமா  பிஸ்வாஸ் கச்சிதமாக  வந்தாலும்  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்கோ  என  எண்ண  வைக்கிறார். 


நாயகி  ஆக  ஸ்வேதா  த்ரிப்பாதி  அமர்க்களமான  நடிப்பு 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சுமித்  சக்சேனா


ஒளிப்பதிவு , இசை , பின்னணி  இசை , எடிட்டிங்  போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  கச்சிதம் 

சபாஷ்  டைரக்டர் (சுமித்  சக்சேனா) 


1 நாயகன்  போலீஸ் ஆக  இருந்தாலும்  அவரது  சுபாவம்  கொஞ்சம்  பயந்த  மாதிரி  என  வடிவமைத்த  விதம்  குட் 

2   நாயகன் - நாயகி  ரொமாண்டிக்  போர்சன் , அவர்களுக்கு   இடையேயான  கான்வெர்சேஷன்  கவிதை 


3  ஆசிட்  வீசப்பட்ட  பெண் , அவளது  பாய்  ஃபிரண்ட்  இருவருக்குமிடையேயான  நல்ல  நட்பு  சொன்ன  விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1   வேலை  செய்வதில்  ஹீரோவா  இருங்க , வேலையை  விடுவதில்  ஹீரோவா  இருக்க  ட்ரை  பண்ணாதீங்க 


2 போலீசோட  உண்மையான  திறமையே  எஃப் ஐ ஆர்  போடாமயே வேலையை  முடிக்கறதுதான் 


3  குப்பைத்தொட்டிக்குப்பக்கத்துல  இருக்கும்  காக்கா  நாய்க்காக  வெய்ட்  பண்ணும், ஏன்  தெரியுமா? நாய்  குப்பைத்தொட்டியை  ஓப்பன்  பண்ணியதும்  காக்கா  கூட்டம்  கூடிடும். இப்போ  நீ  அந்த  காக்கா  வேலையை  செய்யனும்


4  தப்பான  விஷயங்கள்  செய்யும்  பெண்களுக்கு  தப்பான  சம்பவங்கள்  தான்  நடக்கும் 


5  நான்  நெர்வசா  இருக்கும்போது  சிரிக்க  ஆரம்பிச்சிடுவேன்


6  நீ  ரொம்ப  ரொம்ப  நல்ல  பையன், ஆனா  நல்ல  பையன்  என்பதற்காகவே எந்தப்பொண்ணும்  கல்யாணத்துக்கு  உடனே  ஓக்கே  சொல்லிட  மாட்டா


7  ஒரு  ஆள்  பலவீனமா  இருக்கும்போதுதான்  அவனை  எல்லோரும்  தங்களுக்கு  சாதகமா  பயன்படுத்திக்குவாங்க 


8  உன்னால  ஒரு  சொட்டு  ரத்தம்  கூட  சிந்த  முடியலைன்னா  இளமையா  இருந்து  என்ன  பயன் ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நல்லாதான்  போய்க்கிட்டிருந்தது, கடைசி  எபிசோடில்  நாயகன்  மீது  வில்லன் 3  அடி நீள  இரும்புக்கம்பியை  நெஞ்சில்  செருகி விடுகிறான். உடனே   ஹாஸ்பிடல்  போகாமல்  பைக்கில்  சேஸ்  செய்வது  தன்  நெஞ்சில்  செருகப்பட்ட கம்பியை  உருவி  தாக்குவது எல்லாம்  ரஜினி , விஜய்  படங்களில்  கூட  பார்க்காத  ஓவர்  ஹீரோயிசம் 


2   ஆசிட்  ஊற்றுபவன்/ அடிப்பவன்  ஒரு  பயிற்சிக்காக  ப்ளூ  கலர்   வாட்டரை  பயன்படுத்தி  ரிகர்சல்  பார்த்தான்  என்பதை  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை . வெறும்  தண்ணீர்  வேற  ஆசிட்  வேற . அதுல  பயிற்சி  எடுத்து  இதை  எப்;படி  செய்ய  முடியும் ? 


3  நாயகனின்  அப்பா  நாயகனின்  அம்மாவுக்காக  எழுதிய  கவிதையை  க்ளைமாக்சில்  படித்துக்காட்டுவது  தவிர்த்திருக்கலாம், ஒரு  மகன்  ஒரு  அம்மாவுக்கு  அது  போல  ஒரு  கவிதையை  எப்படி  படித்துக்காட்ட  முடியும் ? 


4   வில்லன்  ஆசிட்  வீசிய  வழக்குக்காக  தேடப்படுபவன், அதிகபட்சம்  10  ஆண்டுகள்  தண்டனை  கிடைக்கும்  வ்ழக்குதான். ஆனால்  அவன்  க்ளைமாக்சில்  தீவிரவாதி  ரேஞ்சுக்கு  ஆட்களுடன்  வந்து  எல்லா  போலீசாரையும்  சுட்டுக்கொல்வது  ஓவரோ ஓவர் , க்ரைம்  ரேட்  கூடிக்கிட்டே  போகுது 


5  நாயகன் , ஒரே  ஒரு போலீஸ்  உடன்  வில்லன்  இடத்திற்கே  போய்  அடி  வாங்கி  வருவது  ஏன்?  10  பேர்  கொண்ட  படையுடன்  போய்  இருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  ட்ராமா  ரசிகர்கள்  பார்க்கலாம். கவுதம்  மேனன் ரொமாண்டிக்  ப்ரியர்களும்  பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


Kaalkoot
Official poster
Genre
Written byArunabh Kumar
Sumit Saxena
Directed bySumit Saxena
Starring
Country of originIndia
Original languageHindi
No. of seasons1
No. of episodes8
Production
Producers
Production companies
Original release
NetworkJioCinema
Release27 July 2023