Wednesday, November 22, 2023

கருங்காப்பியம் (2023) தமிழ் -- சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்) # சிம்ப்ளி சவுத் & அமேசான் பிரைம்

   


 ஹோட்டலில்  பசியோடு  உள்ளே  போகிறவன்  ஃபுல்  மீல்ஸ்  சாப்பிடத்தான்  ஆசைப்படுவான் . அது  இல்லை , தீர்ந்து  விட்டது  என்றால்  தான்  வேறு  வழி  இல்லாமல்  வெரைட்டி  ரைஸ்  ஆன  லெமன்  ரைஸ் , புளி  சாதம் , தயிர்  சாதம்  ஏதாவது  இரண்டு  வகை  சாப்பிடுவான், ஆனால்  முழு  சாப்பாடு  சாப்பிட்ட  திருப்தியை  இந்த  பட்டை  சாதம்  தராது . 


  அது  போல  தமிழர்களைப்பொறுத்தவரை  இந்த  குறுங்கதைகளின்  தொகுப்பு  என்பதெல்லாம்  சினிமாவில்  பெரிதாக  எடுபடுவதில்லை . ஐந்து  வெவ்வேறு  சிறுகதைகளின்  தொகுப்புதான்  இப்படம் , இதில்  நான்கு  சிறுகதைகள்  தலா  20  டூ 25  நிமிட்ங்களும் , கடைசி  சிறுகதை  மட்டும்  40  நிமிடங்களும்  ஆகின்றன .  ஐந்து  கதைகளுக்கும்  ஒரு  லிங்க்  இருக்கு என  சிரமப்பட்டு  கண்டுபிடித்து  அடுத்த  பாகம்  வரும்  என  பயமுறுத்துகிறார்கள் . முதல்  பாகம்  ஹிட்  ஆனாத்தானே  அடுத்த  பாகம்  வரும் ?   


       ஸ்பாய்லர்  அலெர்ட்


கொரோனா  லாக் டவுன்  டைமில்  நாயகி  100  வருடங்கள்  பழமை  வாய்ந்த  ஒரு  லைப்ரரி போய்  அங்கே  அமர்ந்து  ஒரு  புத்தகத்தை  வாசிக்கிறார். அதில்  ஐந்து  கதைகள்  இருக்கின்றன 

 1  கரிநாக்குக்காரி - நாயகி  மீரா  லாக்  டவுன்  டைமில்  திடீர்  என  ஹவுஸ்  ஓனரால்    வீடு காலி  பண்ண சொல்லி  நிர்ப்பந்திக்கப்படுகிறாள். வேறு  வழி  இல்லாமல்  வீட்டைக்காலி   பண்ணி  வெளியே  படிக்கட்டில்  அமர்ந்து  அழுது  கொண்டிருக்கிறாள் , அப்போது  அங்கே  வரும் நாயகன்  டோண்ட்  ஒர்ரி , என்  ஃபிலாட்ல  வந்து  தங்கிக்குங்க  என  அழைக்கிறான், நாயகியும்  அவன்  ஃபிளாட்டில்  தங்குகிறாள் 


நாயகன்  ஃபிளாட்டில்  இல்லாத  போதுதான்  நாயகிக்கு  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது . நாயகன்  ஒரு  சைக்கோ கில்லர் . அந்த  ஃபிளாட்டில்  இரு  பெண்களின்  டெட்  பாடிகள்  இருக்கின்றன. இதற்குப்பின்  நாயகி  எப்படி  தப்பித்தாள்  என்பது  மீதிக்கதை 


 டைட்டிலுக்கான  அர்த்தம்  நாயகி  ஹவுஸ்  ஓனரை  நாசமாகப்போவாய்  என  கோபத்தில்  சாபம்  இட்டதும் , அயர்ன்  செய்யும்  நபரை  கோபமாக  நீ  எரிந்து  போவாய்  என  சொன்னதும்  பலித்ததாக  ஒரு  இடத்தில்  சொல்கிறாள் 


நாயகன்  தன்  நண்பனுக்கு  ஃபோன்  பண்ணி  ஒரு  கிளி  புதுசாக  சிக்கி  இருக்கிற்து  என  ஃபோட்டோ  அனுப்புகிறான்,  அப்போதுதான்  அந்த  நண்பன்  ஃபேஸ் புக்கில்  செக்  பண்ணி  மீரா  பற்றிய  ஒரு  உண்மையை  சொல்கிறான். அந்த  மீரா  செத்தே  ஐந்து  வருடங்கள்  ஆகின்றன 


 இந்த  ட்விஸ்ட்டுக்குப்பின்  சைக்கோ  கில்லர்  ஆன  நாயகனுக்கு  என்ன  நிகழ்ந்தது  ? என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


 நாயகன்  ஆக கலையரசன்  கச்சிதம்  ஆன  நடிப்பு . நாயகி  ஆக  ரைசா  வில்சன்  கொஞ்சம்  ஓவர்  ஆக்டிங்  தான்  அதை  அவரது  கிளாமர்  சரி  செய்து  விடுகிறது 

2   கதறக்கதறக்காதல் = நாயகி  வீட்டில்  தனியாக  இருக்கிறாள் , ஒரு  யூ  ட்யூப்  ரிவ்யூவர்  கதவைத்தட்டுகிறான். அவனை  உள்ளே  வர  வைக்கிறாள்  நாயகி . பிறகு  லைக்ஸ்க்காக  அவள்  செல்ஃபி  வீடியோவில்  சமையல்  குறிப்பு  கூறி லைவ்  வீடியோ  அப்டேட்டும்போது  ஒரு  வெள்ளை உருவம்  கடப்பதைக்காண்கிறாள் 


 அப்போதுதான்  ஒரு  ட்விஸ்ட்  வெளிப்படுகிறது . வீட்டுக்கு  வந்த  பால் காரன் ,  தபால் காரன் , என  கிட்டத்தட்ட  ஆறு  பேரை  நாயகி  அடைத்து  வைத்திருக்கிறாள் . நாயகி  ஒரு  பேய் 

நாயகி  ஆக  ஜனனி  அய்யர்  அதிக  வாய்ப்பில்லை , யோகிபாபு , கருணாகரன்  இருவருக்கும்  சின்ன  ரோல் , ஓக்கே  ரகம் 


3  கும்மிருட்டு - நாயகன்  ஒரு  பெண்ணை  அழைத்துக்கொண்டு  ஒரு  இசை  அமைப்பாளர்  வீட்டுக்கு  செல்கிறான். அங்கே  பாடல் பதிவு  நடைபெற  இருக்கிறது . ஆனால்  அதற்கு  முன்பாக  அமானுஷ்ய  சம்பவங்கள்  நடக்கின்றன . பல  அமானுஷ்ய  உருவங்கள்  இங்கெயும் , அங்கேயும்  அலைகின்றன. ஒரு  பெண்  கையில்  விளக்குடன்  அழுது  கொண்டு  இருக்கிறாள் 


ஒரு  கட்டத்தில்  நாயகனுக்கு  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது , அதற்கு  முந்தின  தினம்  குடி  போதையில்  கார்  ஓட்டி  இசை  அமைப்பாளர்  மற்றும்  பலரது  உயிரைக்காவு  வாங்கியதே  நாயகன்  தான் , இதற்குப்பின்  நடந்தது தான்  க்ளைமாக்ஸ் 


 இதில்   இசை  அமைப்பாளர்  ஆக  லொள்ளு சபா   மனோகர்  நன்றாக  மொக்கை  போடுகிறார் . பாடகிஆக   வி ஜே  பார்வதி  

காத்து  வாக்குல  ரெண்டு  பாட்டில்   நாயகன்  அவன்  நண்பன்  இருவரும்  ஃபோனில்  பேசிக்கொள்கிறார்கள் . லாக்  டவுன்  என்பதால்  சரக்கே  கிடைக்க  மாட்டெங்குது  என  நாயகன்  சொல்ல  நண்பன்  சாக்கு  இருக்கும்  பாருக்கு  அழைத்து  செல்கிறான் , அங்கே  யாரும்  இ;ல்லை .  சரக்கு  அடிக்க  முயலும்போது  சில  ஏலியன்ஸ்  அங்கே  இருப்பதை  கவனிக்கிறார்கள் 

அந்த  ஏலியன்சின்  தலைவி  ஒரு  பெண். அவர்களுக்கு  சரக்கு  தான்  ஆகாரம், அதனால்  தான்  பாரில்  இருக்கிறார்கள் . இவர்களுக்கு  இடையே  நிகழும்  காமெடி  உரையாடலகள்  தான்  கதை



5   சூனியக்காரி -  நாயகி  தெய்வ  வாக்கு  படத்தில்  வரும்  ரேவதி  மாதிரி  தெய்வீகப்பெண் , குறி  சொல்பவர் , அவர்  சொல்வது  அப்படியே  பலிக்கும், அவள்  கணவர்  மிலிட்ரி  மேன் , ஒரு  மகள்  இருக்கிறாள் ,  நாயகியின்  கணவனின்  தம்பி  நாயகியை  பார்த்துக்கொள்கிறான்


 அந்த  ஊரில்  ஒரு  பண்ணையார்  இருக்கிறார். அவர்  நாயகியை  அடைய  முயற்சிக்கிறார்/ அந்த  ஊரில்  மர்மமான  முறையில்  குழ்ந்தைகள்  இறகின்றன. சில  பெரியவர்கள் தலை  வெட்டப்பட்டு இறக்கிறார்கள் 


 இந்த  மர்ம  மரணங்களுக்கு  காரணம்  என்ன? என்பதை  யாராலும்  கண்டுபிடிக்க  முடியவில்லை 

  நாயகியின்  கணவன்  மிலிட்ரியில்  இறந்து   விட்டதாக  தகவலும், டெட் பாடியும்  ஊருக்கு வருகிறது


நாயகியின்  கணவன்  தன்  சொத்துக்களை  எல்லாம்  நாயகியின்  பெயருக்கே    உயில்  எழுதி  வைத்திருப்பது  தெரிய  வருகிறது


இதற்குப்பின்  தான்  ஒரு  திருப்பம், நாயகியின்  கொழுந்தனார்  தான் இத்தனை  மரணங்களுக்கும்  காரணம் .  நாயகி  ஒரு  சூனியக்காரி  என  ஊரில்  ப்ழி  சுமத்தி  ஊரார் கையால்  நாயகியை  கொல்ல  வைக்கிறான்  கொழுந்தனார் . பண்ணையாரும்  கொலை  செய்யப்படுகிறார். 


இறந்து  போன  நாயகி  பேயாக  வந்து  கொழுந்தனார்  க்தையை  முடிக்கிறாள் 


 நாயகி  ஆக  காஜல்  அகர்வால் , ஓவர்  மேக்கப் , ஓவர்  ஆக்டிங் . பண்னையார்  ஆக  ஜான்  விஜய்  வழக்கம்  போல்  வில்லத்தனம்  கொண்ட  கதா  பாத்திரம்


சபாஷ்  டைரக்டர்


1  ஐந்து  கதைகளுமே  மொக்கை  என்பதை  உணர்ந்து  ஐந்து  கதைகளிலும்  ஒரு  அழகான  பெண்ணை  உலவ விட்ட  ஐடியா 


2  தயாரிப்பாளருக்கு  பெரிதாக  செலவு  வைக்காமல்  நான்கு  கதைகளையிம்  நான்கு  வெவ்வேறு  ரூமிலும், ஐந்தாவது  கதையை  ஒரு  கிராமத்திலும்  சிக்கனமாக  ஷூட்டிங்  நடத்திய  சாமார்த்தியம் 


  ரசித்த  வசனங்கள் 


இந்த  மாதிரி  ஹாரர்  படங்களில்  வ்சனமாடா  முக்கியம், திகில்  சீன்  , ஜெர்க் கொடுக்கும்  சீன்  இருந்தா  பாரு  என  இயக்குநர்  முடிவு  செய்து  இருப்பதால்  பெரிய  அளவில்  டயலாக்ஸ்  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   லாக்  டவுன்  டைமில்  வீட்டைக்காலி  செய்யச்சொல்லி  ஓனர்  ஏன்  வற்புறுத்துகிறார்  என்பது  சரியாக  சொல்லப்படவில்லை . வந்தவரை  வாடகை  மிச்சம்  தானே?


2  திடீர்  என  வீட்டைகாலி  செய்யும் மீரா  கையில்  ஒரு  சின்ன  சூட்கேஸ் , தோளில்  ஒரு  பேக்  அவ்ளோ  தான்  பொருட்களே! ஒரு  லாரி  நிறைய   வேன்  நிறைய  பொருட்கள் இருக்காதா?


3   100  வருடங்கள்  பழமையான  புக்கில்  வரும்  கதையில்  கொரோனா = லாக்  டவுன்  எல்லாம்  இடம்  பெற்று  இருப்பது  எப்படி ? 


4  அண்ணியை  ஈசியாக  கொலை  செய்து  சொத்துக்களை  அடையாமல்  கிறுக்கு  வில்லன்  ஊரில்  ஏகப்ப்ட்ட  கொலைகள்  செய்து  ரிஸ்க்  எடுப்பது  ஏன் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -இந்தப்படத்தில்  கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம், அடல்ட்  கண்ட்டெண்ட்  மட்டும் தான்  குறைச்சலா?  யூ  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  டப்பாப்படம் . யாம்  பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம், ரெட்டிங் 1/ 5 



Karungaapiyam
Theatrical release poster
Directed byDeekay
Written byDeekay
Produced byPadarthi Padmaja
Starring
CinematographyVignesh Vasu
Edited byVijay velukutty
Music byPrasad SN
Production
company
Pave Entertainments
Distributed byBlockbuster Production
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageTamil