Friday, November 10, 2023

இறுகப்பற்று (2023) தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

      திருமணம் ஆகிப்பிரிந்து  வாழ்பவர்கள் , அல்லது  காதலித்து  பின்  பிரேக்கப்  செய்தவர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  ஒரு  , மெலோ  டிராமா  இது . டீன்  ஏஜ்காரர்களுக்கு  இது  பிடிக்காது . 30+  வயது  ஆனவர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  படம் 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் . திருமண  ஆலோசகர். மனோவியல்  நிபுணர். திரும்ணம்  ஆகி  பின்  பிரிந்து   வாழும்  தம்பதிகளுக்கு  கவுன்சிலிங்க்  கொடுப்பவர்


இவரைத்தேடி  பலதரப்பட்ட  ஆட்களும்  வந்து  ஆலோசனைகள்   கேட்கும்போது , அவர்களுக்கு  ஐடியா  சொல்லும்போது  இவர்  தன் பர்சனல்  வாழ்க்கையில்  இது  போல் பிரச்சனை  வந்து  விடக்கூடாது  என்று  முன்  ஜாக்கிரதையாக  இருக்கிறார்.  தன்  ரெகுலர்  கஸ்டமர்கள் (!)  செய்த  தப்பை தான்  செய்து  விடக்கூடாது  என   முன்  ஏற்பாடாக  இருக்கிறார். இதனால்  இவர்  வாழ்வில்  சண்டை  சச்சரவு  எதுவும்  இல்லை


 ஆனால்  இவரது  கணவருக்கு  இந்த  ஓவர் புத்திசாலித்தனம் , டிஃபன்ஸ் தனம்  பிடிக்கவில்லை . புருசன்  பொண்டாட்டின்னா  அப்பப்ப  சண்டை  போடனும். சமாதானம்  ஆகனும்.. ஊடல்  பின்  கூடல்  இதில்  தானே  சுவராஸ்யம்?என  எண்ணுபவர் . தன்  மனைவி  எதுக்குமே  ரீ  ஆக்சன்  காட்டாமல்  இருப்பது  பிடிக்கவில்லை  இவருக்கு 


இந்தக்கதையில்  மெயினாக  மொத்தம்  மூன்று  ஜோடிகளின்  பிரச்சனை

ஆராயப்டுகிறது. முதல்  ஜோடி  மேலே  சொன்னது


 அடுத்த  ஜோடி  யில்  நாயகன்  ஒரு  ஐ டி  ஊழியர்.  அவர்  மனைவி  திருமணத்துக்குப்பின்  குண்டாகி  விட்டார்  என  அவருக்கு  வருத்தம். அடிக்கடி  சண்டை  போடுகிறார். ஒரு  நாள்  டைவர்ஸ்  கேட்கிறார்.அவர்  மனைவி  ஜிம்  எல்லாம்  போய்  எடைக்குறைப்புக்கு  முயற்சி  செய்கிறார், ஆனால்  பலன்  இல்லை 


 இன்னொரு  ஜோடி  கணவன்  சொல்வதை  மனைவி  காதில்  போட்டுக்கொள்வதே  இல்லை . இருவரும்  வேலைக்குப்போகிறவர்கள் . கணவனை  விட  மனைவி  புத்திசாலி . ஸ்மார்ட் . அதை  கணவனால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை . அடிக்கடி  மனைவ்யை  நீ  ஒரு  தத்தி  என  திட்டிக்கொண்டே  இருக்கிரார்.  இது  நமக்கு  சரிப்பட்டு  வராது  என  அவர்  டைவர்ஸ்  கேட்கிறார் 


 இந்த  மூன்று  ஜோடிகளும்  எப்படி  கடைசியில்  ஒன்று  சேர்கிறார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


மெயின்  கதையின்  நாயகன் - நாயகி  ஆக  விக்ரம் பிரபு - ஸ்ரத்தா  நடித்திருக்கிறார்கள் . எல்லாவற்றுக்கும்  ஸ்மைலிங்  ஃபேஸ்  காட்டும்  ஸ்ரத்தா  நன்கு  மனதில்  பதிகிறார். நேர்கொண்ட  பார்வை  யில்  சிடுமுகமாக , சீரியஸ்  ரோல்  செய்தவரை  சிரித்த  முகமாகக்காட்டியதில்  இயக்குநருக்கு  வெற்றி. விக்ரம்  பிரபுவுக்கு  இந்த  ரோல்  புதுசு  . நல்லா  பண்ணி  இருக்கார்


 அடுத்த  ஜோடி  விதார்த் - அபர்ணதி  இருவரும்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்கள் , குறிப்பாக  அபர்ணதி  அசத்தி  இருக்கிறார். அய்யோ  பாவம்ப்பா  என  பரிதாபத்தை  எற்பட்டுத்தும்  கதா  பாத்திரம்,  பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  பிரமாதப்படுத்தி  இருக்கிறார்


 மூன்றாவது  ஜோடி   ஸ்ரீ - சானியா  அய்யப்பன்  இந்த  ஜோடியில்  ஸ்ரீ  முன்னிலையில்  இருக்கிறார் . நல்ல  நடிப்பு  சானியா  கொஞ்சம்  பின்  தங்கினாலும்  சமாளித்து  இருக்கிறார் 


மறைந்த  இயக்குநர்  மனோபாலா  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வருகிறார். பாந்தமான  நடிப்பு 


இரண்டரை மணி  நேரம்  ஓடும்படி  எடிட்  செய்து  இருக்கிறார்  மணிகண்ட  பாலாஜி , இன்னும்  ட்ரிம்   பண்ணி  இருக்கலாம், கோகுல்  பெனாய் ஒளிப்பதிவு  அருமை  ஜஸ்டின்  பிரபாகரன்  இசையில்  நான்கு  பாடல்களுமே  மெலோடி .  ஓக்கே  ரகம், பிஜிஎம்  பக்கா 


மகாராஜ்  தயாளன்  திரைக்கதை  எழுத  யுவராஜ்  தயாளன்  இயக்கி  இருக்கிறார். அண்ணன்  தம்பி  கூட்டணி  போல 



சபாஷ்  டைரக்டர் (யுவராஜ்  தயாளன்) 


1 திருமண  முறிவுக்கு  பெரும்பாலும்  காரணங்களாக  இருப்பது   கள்ளக்காதல், வரதட்சணைக்கொடுமை , , டொமெஸ்டிக்  வயலன்ஸ்  இந்த  மூன்றையும்  காட்டாமல்  மிக  சாதாரண  பிரச்சனைகளைக்கையில்  எடுத்து  தீர்வு  சொன்ன  விதம்


2   அட்வைஸ்  அம்புஜம்  டைரி  படிப்பது  போல  படம்  முழுக்க  ஏகப்பட்ட  வாழ்க்கைத்தத்துவங்க:ள் , அறிவுரைகள் 


3   அபர்ணதியின்  பிரமாதமான  நடிப்பு 


4 வாய்ப்பிருந்தும்  திரைகக்தையில்  கிளாமர்  புகுத்தாமல்  கண்ணியமாகக்காட்சிகளைப்படம்  ஆக்கிய  விதம்


  ரசித்த  வசனங்கள் 


1  கணவன் , மனைவி  இருவரும்  சண்டை  போட  தனியா  காரணம்  எதுவும்  தேவை  இல்லை , கணவன் - மனைவியா  இருப்பதே போதும்.சண்டை  வந்துடும்


2  ஒவ்வொருவரும்  அவங்க  துணையின்  கண்ணைப்பார்த்துப்பேசும்  டைம்  ஒரு  நாளுக்கு  ஜஸ்ட்  அஞ்சு  நிமிசம்  தான். ஆனா  மொபைல்  பார்ப்பது  மூன்றரை  மணி  நேரம் 


3  எப்போக்கோபம்  வந்தாலும்  கண்ணாடி  முன்  நின்னு  பேசு , அப்றம்  என் கிட்டே  வந்து  பேசு 


4  இந்த  சேலை  எனக்கு  எப்படி  இருக்கு ?


 இந்த  சேலைல  எப்பவுமே  நீ அழகாத்தான்  இருப்பே


 இந்த  சேலையை  இப்போதான்  முத  டைமா  கட்றேன் , நீங்க  வாங்கிக்கொடுத்ததுதான் , அது  கூட  நினைவில்லையா?


 ஒரு  ஆளுக்கு  வாங்கிக்கொடுத்தா  நினைவிருக்கும்


 ஓ , அப்படி  எல்லாம்  ஆசை  இருக்கா? 


5  ஒண்ணா  வாழ்ந்தா  சந்தோஷமா  இருக்கனும், டெய்லி  சண்டை  போட்டுக்கிட்டே  இருக்க  ஏன் ஒண்ணா  வாழனும் ? 


6  சாப்ட்டாச்சா?னு  சம்சாரம்  கேட்டா  சமையல்  எப்படி  இருந்துச்சினு அர்த்தம் ? 


7  இந்த  ஆம்பளைங்க  வீட்ல  சாப்பாடு  வேண்டாம்  வெளில  சாப்ட்டுக்கறேன்னா  என்ன  அர்த்தம்  தெரியுமா? வெளீல  ஒரு  கனெக்சன்  வெச்சுக்கப்போறானுகனு  அர்த்தம்


8 நம்ம  வீட்டில்  இருக்கும்  துடைப்பம்  எப்பவும்  அழுக்காதான் இருக்கும், ஆனா  அதுதான்  வீட்டை  சுத்தம்  பண்ணுது  அதே  போல்  நாம  பர்சனல்  லைஃப் ல  எப்படி  இருந்தாலும்  நம்மால  நாலு  பேருக்கு  உதவியா  இருந்தாலே  போதும் 


9  பொறுத்துப்போதல்  அதாவது  அட்ஜஸ்பண்ணி  வாழ்வது  தான்  பெண்கள்  செய்யும்  பெரிய  தவறு 


10  நான்  ஒருவேளை  குண்டாகிட்டா  நீ  என்னை  விட்டுப்போயிடுவியா?


 ஏண்டி , நீ  இப்பவே  குண்டாதானே  இருக்கே?


11  நீ  ஒரு  தத்தி -னு  என்  ஒத்துக்க  மாட்டேங்கறே  தெரியுமா? நீ  தத்தி என்பதையே  உன்னால  உணர  முடியாத  தத்தியா  இருக்கறதாலதான் 


12  பொதுவா  ஆண்களுக்கு  தன்னோட  இணை  தன்னை  விட  ஸ்மார்ட்டா  இருந்தா  பிடிக்காது . அவங்க  மனசுல  தத்தினு  ஃபிக்ஸ்  பண்ண  ட்ரை  பண்ணுவாங்க 


13  இந்தக்குரங்கு  இருக்கே  அதனோட  உடம்புல  ஏதாவது  காயம்  ஆனா  அதை ஆற  விடாது , சும்மா  நோண்டிக்கிட்டே  இருக்கும்


14  கோபம்  நாலு நாளில் போயிடும், ஆனா  வெறுப்பு  வந்தா  வாழ்நாள்  பூரா இருக்கும்


15  இந்த  உலகத்துல  பொண்டாட்டியை  அறிவு கெட்ட  முண்டமேனு  திட்டாத  ஆளே  இல்லை 


16 பேப்பர்ல  ப்ராஃபிட்  காட்றது  ஈசி , அதுக்கு  நிறைய  உழைக்கனும்


17  உறவு  என்பது  கண்ணாடி  மாதிரி  உடைஞ்சா  ஒட்ட வைக்க  முடியாதுனு சொல்வாங்க , ஆனா  உறவு  ரப்பர்பேண்ட்  மாதிரி , ஆளுக்கு  ஒரு  பக்கம்  இழுத்தா அறுந்துடும்


18  சண்டை  வந்தா  அதை சரி  பண்ணி சந்தோசமா  வாழ  ட்ரை  பண்ணனும்


19  ஒருத்தங்களை  விட்டு  விலக  1000  காரணங்கள்  இருக்கலாம், ஆனா  சேர்ந்து  வாழ  ஒரே  ஒரு  காரணம்  போதும், அவங்களைக்கை விட்டுடாதீங்க , இறுகப்பற்றிக்குங்க 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணிப்பெண்  தன்  ஓனரம்மாவிடம்   புருசன்  வீட்டுக்கு  வரும்போது  தலை  நிறைய  மல்லிகைப்பூ  வெச்சு ஒரு  கிக்கா  வரவேற்கனும்னு  சொன்னதும்  அன்னைக்கு  நைட்  அந்த  லேடி  லிப்ஸ்டிக்  போட்டுட்டு  வ்ர்றாங்க . ஆனா  தலைல பூ  இல்லை .  எந்தப்புருசன்  தன்  சொந்த  சம்சாரம்  லிப்ஸ்டிக்  போட்டு  இருப்பதை  விரும்பறான் ? 


2  மனைவி குண்டா  இருப்பதால்  டைவர்ஸ்  வேணும் என  கேட்பதெல்லாம்  கே  பாக்யராஜின்  சின்ன  வீடு  படத்திலெயே  வந்தாச்சு ,புதுசா  யோசிச்சிருக்கலாம் 


3    படத்தில்  3  செட்  ஜோடிக்கும்  ஏதோ  ஒரு பிரச்சனை  என்றதும்  பார்க்க  அலுப்பா  இருக்கு , ஏதோ  ஒரு  ஜோடி  சந்தோசமா  இருக்கற  மாதிரி  காட்டினா  ஆடியன்ஸ்  மனசுல  நாமதான்  சந்தோஷமா  இல்லை , நாம  பார்க்கும்  ப்டத்துலயாவது  ஒரு  ஜோடி  சந்தோஷ்மா  இருக்கேனு  நினைப்பாங்க 


4  விதார்த் - அபர்ணதி  ஜோடி  சேர்ந்தாகனும்  என  ஆடியன்ஸ்  மனதில்  எண்ணம்  ஏற்படுவது  போல  மற்ற  இரண்டு    ஜோடிகள்  மீது  ஏற்படவில்லை  அவங்க   சேர்ந்தா  என்ன? பிரிந்தா  என்ன? என  நினைக்க  வைக்கிறது 

5  க்ளைமாக்சில்  அப்ரணதி  ஜிம்  பொட்டிகளில்  ஜெயிக்கும்போது  விதார்த்  அவரை  ஊக்குவிப்பதாக  காட்டி  இருப்பது  செயற்கை . அது  வரை  மனைவியைக்கரித்துக்கொட்டியவர்  க்ளைமாக்சில்  ஓவர்  ஆக்டிங்  காட்டி  சொதப்பி  விட்டார்


4  என்  கிட்டே  75 பவுன்  நகை  இருக்கு , அதை  வித்தோ  அடமானம்  வைத்தோ  சொந்த  பிஸ்னெஸ்  பண்ணுங்க  என  ஒரு  காட்சியில்  மனைவி  சொல்ல  அடுத்த  காட்சியில்  அந்தக்கணவன்   பேங்க்  மேனேஜரிடம்    ஒரு  லட்ச  ரூபாய்  லோனுக்கு  கெஞ்சிக்கொண்டு  இருக்கிறார்/ 75  பவுன்  நகை  77  லட்ச  ரூபாய்  மதிப்பு  இருக்குமே?  ஏன்  ஒரு  லட்சம்  ரூபாய்க்கு  கெஞ்சனும் ? ஏதோ  எடிட்டிங்  மிஸ்டேக்  போல 


5 பிறந்த  வீட்டு  சீதனமாக  75  பவுன்  நகை  போடப்பட்ட பெண்  மனைவி  ஆக  வந்த  பின்  கணவன்  காலில்  விழுந்து  அழுவது , ரொம்பப்பம்முவது  நம்ப  முடியல .  எகனாமிக்கலி ஸ்ட்ராங்காக  இருக்கும்  வசதியான  பெண்  அப்படி  பம்ம  மாட்டார் . கேரக்டர்  டிசைனில்  சறுக்கல் 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும், பொறுமைசாலி  ஆண்கள்  யாராவது  இருந்தால்  அவர்களுக்கும்  பிடிக்கும் .. ரேட்டிங் 3 /. 5 


Irugapatru
Theatrical release poster
Directed byYuvaraj Dhayalan
Written byMaharaj Dayalan
Produced by
  • S. R. Prakash Babu
  • S. R. Prabhu
  • P. Gopinath
  • Thanga Prabaharan R
Starring
CinematographyGokul Benoy
Edited byJ. V. Manikanda Balaji
Music byJustin Prabhakaran
Production
company
Potential Studios
Release date
  • 6 October 2023
CountryIndia
LanguageTamil