லியோ படம் பார்க்கும் முன் அதன் ஒரிஜினல் வெர்ஷன் பார்த்தால் தான் ஒரு ஐடியா கிடைக்கும் என்பதால் இதைப்பார்த்தேன்.32 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 61 மில்லியன் டாலர் வசூலித்த படம். ஏகப்பட்ட அவார்டுகளை வென்ற படம். சிறந்த திரைக்கதை , இயக்கம், துணை நடிகர் , நாயகன் என விருதுகளின் பட்டியலே விக்கி பீடியாவில் ஒன்றரை பக்கங்கள் வருகின்றன. ஆனால் 1995 ல்வெளியான பாட்ஷா படம் தான் இதற்கெல்லாம் முன்னோடி என்று நினைத்தால் தமிழ் சினிமா வை நினைத்துப்பெருமையாக இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி ரன் பண்ணிட்டு இருக்கான், ஒரு மனைவி , ஒரு மகன் , ஒரு மகள் இவர்களுடன் காஃபி ஷாப் கம் ரெஸ்டாரண்ட் நட்த்தி வருகிறான்.ஒரு நாள் போலீசாரால் தேடப்படும் இரண்டு குற்றவாளிகள் நாயகனின் காஃபி ஷாப்க்கு வருகிறார்கள் .
கடை க்ளோஸ் பண்ணியாச்சு என்று நாயகன் சொன்ன பின்னும் வம்படியாக அங்கேயே இருக்கிறார்கள் . கடையில் இருக்கும் சேல்ஸ் கேர்ள் உடனும் வம்பு செய்கிறார்கள் . அவர்களிடம் முடிந்தவரை பணிவாகப்பேசும் நாயகன் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து அவர்கள் இருவரையும் ஷூட் செய்து கொலை செய்து விடுகிறான்
இந்த விஷயம் பேப்பர் , மீடியா என எல்லாவற்றிலும் வந்து நாயகன் அந்த ஏரியாவின் செலிபிரிட்டி ஆகிறான். ஒரு சாதாரண சாமான்யன் எப்படி இரு பயங்கர கிரிமினல்களை வீழ்த்த முடிந்தது என ஆச்சரியமாகப்பேசிக்கொள்கிறார்கள்
நாயகனின் ஃபோட்டோ பேப்பரில் வருகிறது . அப்போது ஒரு கேங்க்ஸ்டர் நாயகனைதேடி வருகிறான். நீ முன்னாள் கேங்க்ஸ்டர் ஜோ தானே?? எனக்கேட்கிறான் . நாயகன் இல்லை நீங்க வேற யாரையோ தவறாக நினைத்துக்கொண்டு என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ., என் பெயர் டாம் என்கிறான்
ஆனாலும் அந்த கேங்க்ஸ்டர் நாயகனை விட்ட பாடில்லை . தொடர்ந்து நாயகனை ஃபாலோ செய்வதும் டார்ச்சர் கொடுப்பதுமாக இருக்கிறான், இதற்குப்பின் நாயகன் என்ன முடிவு எடுத்தான் ? நாயகன் நிஜமாலுமே முன்னாள் கேங்க்ஸ்ட்ரா? என்பது பின் பாதி திரைக்கதை
நாயகன் ஆக விகோ மார்ட்டென்சென் இரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார். நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா மாணிக்கம், மாணிக் பாட்ஷா என இரு ரோல்களில் கச்சிதமாக நடித்திருக்கிறார். சாமான்யன் ரோலிலும் , ட்ரான்ஃப்ர்மேசன் ஆன கேங்கஸ்டர் ரோலிலும் ஒருவர் பொருந்திப்போவது தோற்றத்திலும், திரைக்கதை அமைப்பு நேர்த்தியிலும் உள்ளது . இரண்டுமே பொருந்திப்போய் இருக்கிறது
வில்லியம் ஹர்ட் வில்லன் ரோலில் வருகிறார். பெஸ்ட் சபோர்ர்ட்டிங் ஆக்டர் விருதை வென்றவர். இவாது தோற்றமும் நடிப்பும் அடிபொலி
96 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய சின்னப்படமாக ஷார்ப் ஆக கட் பண்ணி இருக்கிறார் எடிட்டர் . .ஒளிப்பதிவு , இசை , பின்னணி இசை போன்ற டெக்னிக்கள் அம்சங்கள் தரம்
வ்ன்முறை மட்டும் தூக்கல் ஆக இருந்தாலும் டைட்டிலிலேயே வன்முறை இருக்கிறதே என்று சமாளிக்க வேண்டியதுதான்
சபாஷ் டைரக்டர்
1 காஃபி ஷாப்பில் வில்லன்கள் ரகளை செய்யும்போது நாயகன் முதலில் அடக்கி வாசிப்பதும் பின் அவர்களை போட்டுத்தள்ளுவதும் சரியான ஆக்சன் சீக்வன்ஸ்
2 மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டு அடல்ட் கண்ட்டெண்ட் காட்சிகளை வலுக்கட்டாயமாக காட்சிப்படுத்தி கிளாமர் புகுத்திய விதம்
3 டைட்டிலில் வன்முறை இருந்தாலும் ஃபிளாஸ்பேக் காட்சிகளில் ஓவரான வன்முறைக்காட்சிகளைப்புகுத்தாமல் அளவாக பயன்படுத்திய விதம்
ரசித்த வசனங்கள்
படத்தில் பேச்சுக்கு வேலையே இல்லை , வீச்சுதான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் ஒரு முன்னாள் கேங்க்ஸ்டர் என்பதை அறிந்தவர்கள் மீண்டும் அவன் தங்கள் இடத்துக்கு வரும்போது வன்முறை வெடிக்கலாம், அவனால் நமக்கு ஆபத்துதான் என்பதை யூகிக்க மாட்டார்களா?
2 நாயகன் தன் சொந்த மனைவியை தன் சொந்த வீட்டில் நிறுத்தி நிதானமாக பெட்ரூம்க்கு அழைத்துச்சென்று ரொமான்ஸ் பண்ணாமல் ஏன் பறக்காவெட்டி மாதிரி மாடிப்படிக்கட்டுகளில் அவ்ளோ சிரமப்பட்டு ரொமாண்ஸ் செய்ய வேண்டும் ? பொதுவாக கள்ளக்காதலர்கள் தான் கிடைச்ச இடம் நினைச்ச நேரம் என இப்படி செய்வார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 + காட்சிகள் , வன்முறைக்காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விஜய் ரசிகர்கள் , அஜித் ரசிகர்கள் இரு தரப்பினரும் லியோவை ஒப்பீடு செய்ய இதைப்பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5
A History of Violence | |
---|---|
Directed by | David Cronenberg |
Screenplay by | Josh Olson |
Based on | A History of Violence by |
Produced by | Chris Bender J. C. Spink |
Starring | |
Cinematography | Peter Suschitzky |
Edited by | Ronald Sanders |
Music by | Howard Shore |
Production companies |
|
Distributed by |
|
Release dates |
|
Running time | 96 minutes |
Countries | |
Language | English |
Budget | $32 million[5] |
Box office | $61.4 million[5] |