வெறும் 14 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 234 மில்லியன் டாலர் வசூல் செய்த அதிரி புதிரி ஹிட் படம் , இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் . கொலம்பியாவில் சிறுவர், சிறுமிகளை வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளைப்பற்றிப்படம் பேசுகிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
ஓப்பனிங் சீன்லயே ஒரு அப்பா தன் இரு குழந்தைகளை ஒரு பெண்ணிடம் அறிமுகப்படுத்துகிறார். மாடலிங்க்கிற்கான ஃபோட்டோ ஷூட் நடத்தறோம், குறிப்பிட்ட இடத்துக்கு குழந்தைகளை அழைத்து வரவும்னு அந்தப்பொண்ணு சொல்லிட்டுப்போய்டுது . அப்பாவும் தன் மகன் ,மகள் இருவரையும் ( தலா 8 வயசு ,9 வயசு ) அந்தப்பெண் குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வருகிறார். அங்கே பல குழந்தைகள் இருக்கிறார்கள். தன் வாரிசுகளை விட்டு விட்டு அவர் போய் விடுகிறார். மீண்டும் மாலை வந்து பார்த்தால் யாரையும் காணவில்லை . சுத்தமா துடைத்து வைக்கப்பட்டது போல இடம் காலியாக இருக்கிறது
போலீசில் புகார் கொடுக்கிறார். குழந்தைகளைக்கடத்தி விற்கும் கும்பல் இந்நேரம் அவர்களைக்கை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி இருக்கும் என சொல்கிறார்கள் . இருந்தாலும் கேசைக்கையில் எடுத்து ஆராய்கிறார்கள்
இந்த கேசை டீல் செய்யும் போலீஸ் ஆஃபீசர் ஆன நாயகன் தன் மனைவி , குழ்ந்தைகளுடன் வாழ்ந்து வருபவன். கடத்தப்பட்ட ஒரு மகனைக்கண்டுபிடித்து மீட்டு விடுகிறார்கள் , ஆனால் மகளை மீட்க முடியவில்லை . ஒரு தீவிரவாதக்கும்பல் தலைவனிடம் அவள் மாட்டி இருப்பதை அறிகிறார் நாயகன் . அங்கே போலீஸ் , ராணுவம் போகமுடியாது .
இந்தக்கேசை விட்டு விடும்படி மேலிடம் சொன்னாலும் நாயகன் கேட்கவில்லை , வேலையை ரிசைன் செய்து விட்டு மீட்புப்பணியில் இறங்குகிறேன் என்கிறான் . நாயகன் தனி ஆளாக அந்த படங்கரவாத கும்பல் இருக்கும் இடத்தை அடைந்து எப்படி அந்த சிறுமியை மீட்டான் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஜிம் கவிஜெல் நிதானமாக நடித்திருக்கிறார். குழந்தைகளைப்பார்த்து உருகுவது சோகமான நடிப்பு .
கடத்தபப்ட்ட சிறுவன், சிறுமியாக நடித்தவர்கள் இருவரும் யதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
சிறுமியை மீட்கும் காட்சி மட்டும் நம்ப முடியவில்லை , ஆனால் உண்மை சம்பவம் என்பதால் நம்ப வேண்டியதாக இருக்கிறது
ஒளிப்பதிவு , லொக்கேஷன் , லைவ் லொக்கேஷன் ஷூட்டிங் அனைத்தும் அருமை
சபாஷ் டைரக்டர்
1 இதை ஒரு ஆக்சன் டிராமாவாக சொல்ல வாய்ப்பிருந்தும் ஆக்சன் சீக்வன்சை திணிக்காமல் ரியல் டிராமா மூவியாக த்ந்த விதம்
2 க்ரைம் த்ரில்லர் என விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தாலும் த்ரில்லர் ஜர்னருக்கான எலிமெண்ட்ஸ் இல்லை . ஸ்லோவாகத்தான் படம் போகிறது என்றாலும் யதார்த்தம் அதிகம் என்பதால் ரசிக்க முடிகிறது
ரசித்த வசனங்கள்
1 ரெகுலரா உங்க குழந்தைங்க கூடவே படுத்துத்தூங்கிய உங்களால இப்போ உங்க குழந்தை இல்லாத காலி பெட்ல படுத்துத்தூங்க முடியுமா?
2 எதுக்காக நீ இந்த வேலைகளை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே?
ஏன்னா கடவுளின் குழந்தைகள் விற்பனைக்கு அல்ல
3 உனக்கு எதுவுமே தெரியலைன்னா யார் கிட்டேயும் எதுவும் பேசாம இருப்பதே நல்லது
4 ஜிபிஎஸ் ட்ராக் பண்ண ஏதும் வ்ழி உண்டா?
ஒரே வழி , உங்க உடம்புல் ஊசி போட்டுக்குவது தான்
அப்போ எங்க பாடீஸை ஜிபிஎஸ் மூலமா ஈசியா லொக்கேட் பண்ணிடுவீங்க ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவரிடம் தன் இரு குழந்தைகளை விட்டுச்செல்வது எப்படி ? உள்ளே தானே வர அனுமதி இல்லை ? வாசலில் வெயிட் பண்றேன் என சொல்லி இருக்கலாம்
2 சிறுமியை மீட்கும் காட்சியில் சிறுமிக்கு காவல் என யாரும் இல்லை . அனைவரும் சரக்கு போதையில் இருக்க நாயகன் எளிதில் மீட்பது போல காட்டி இருக்கிறார்கள் . அத்தனை பேர் கொண்ட கும்பலிடம் இருந்து அவ்வளவு சுலபமாக மீட்க முடிவது நெருடுகிறது
3 நாயகன் சிறுமியிடம் பேச முற்படும்போது யாருமே அதைக்கண்டுகொள்ளவில்லை ., இத்த்னை பேர் கூட்டத்தில் இருக்கும்போது அந்த சிறுமியிடம் மட்டும் இவன் ஏன் பேசுகிறான் ? என்ற சந்தேகமும் யாருக்கும் எழவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஏ சர்ட்டிஃபிகேட் படம் தான் ஆனால் காட்சிகள் கண்ணியமாக இருக்கின்றன/ வாய்ப்பிருந்தும் 18+ காட்சிகள் ஏதும் திணிக்கப்படவில்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஷாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் கதை, திரைக்கதையை நினைவுபடுத்தும் பட்ம் , பொறுமையாகப்பார்க்கும் வல்லமை கொண்டோர் பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5
Sound of Freedom | |
---|---|
Directed by | Alejandro Monteverde |
Written by |
|
Produced by | Eduardo Verástegui |
Starring | |
Cinematography |
|
Edited by | Brian Scofield |
Music by | Javier Navarrete |
Production company | Santa Fe Films |
Distributed by | Angel Studios |
Release date |
|
Running time | 131 minutes[1] |
Country | United States |
Languages |
|
Budget | $14.5 million[2] |
Box office | $238.7 million[3][4] |