Sunday, October 08, 2023

OMG -2 (2023)- ஹிந்தி - சினிமா விமர்சனம் (கோர்ட் ரூம் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


 2012ல்  வெளியாகி  செம  ஹிட்  அடித்த  ஓஎம்ஜி ( ஓ மை  காட்) படத்தின் இரண்டாம்  பாகம்  தான் இது . இரண்டும்  தனித்தனி  கதை. முதல்  பாகம்  பார்க்கவில்லை  என்றாலும்  இது புரியும். முதல்  பாகம் பார்க்காமல்  இதைப்பார்ப்பவர்கள்  இதைப்பார்த்த  பின்  முதல்  பாகத்தைத்ததேடிப்போய்ப்பார்ப்பார்கள் 


50  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இப்படம்  இந்தியாவில்  மட்டும் 178  கோடி  ரூபாயும் , வெளிநாடுகளில்  44  கோடி  ரூபாயும்  வசூல்  செய்தது. அக்டோபர் 3  முதல்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  கடவுள்  பக்தன். கோயிலில்  பூஜை  செய்து  அங்கேயே  ஒரு  கடை  நடத்துபவன். அவனது  மகன்  பள்ளியில்;  கல்ச்சுரல்  புரோகிராமில்  ஒரு  சக  மாணவியுடன்  டான்ஸ்  ஆடும்  பயிற்சியில்  இருக்கிறான், அந்த  மாணவியின்  காதலனுக்கு  அது  பிடிக்கவில்லை . அவளிடம்  இனிமேல்  அவனுடன்  டான்ஸ்  ஆடாதே  என  சொல்லி  விடுகிறான்


என்ன  காரணத்தால்  என்னுடன்  நீ  டான்ஸ்  ஆடவில்லை  என  கேட்டபோது  மாணவி  பதில்  சொல்லவில்லை , ஆனால்   சிலர்  அவனை  கிண்டல்  செய்கிறார்கள் .   சில  விஷயங்களை  சொல்கிறார்கள் . அதை  உண்மை  என்று  நம்பி  மாணவன்செய்த  ஒரு  செயலை  வீடியோ  எடுத்து  வாட்சப்பில்  பரப்புகிறார்கள் .


 பள்ளியை  விட்டு  மாணவனை  டிஸ்மிஸ்  செய்கிறார்கள் . என்   மகன்  மீது  தவறில்லை . கல்வி  நிறுவனம்  மீது  தான்  தவறு . போலி  மருத்துவர் . லேகியம்  விற்பவன்  மீது தான்  தவறு  என  நாயகன்  கேஸ்  போடுகிறான் 


 கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . நாயகன்  தானே  வாதாடி  அந்த  கேசில்  எப்படி  ஜெயிக்கிறான்  என்பதே  மீதிக்கதை


நாயகன் ஆக பங்கஜ்  த்ரிப்பாதி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். அவரது  கடவுள்  பக்தி , கோர்ட்டில்  வாதிடும்  லாவகம்  எல்லாமே  செம 

எதிர்க்கட்சி  வக்கீல்  ஆக  யாமி  கவுதம்  பல  இடங்களில்  பாராட்டுப்பெறுகிறார்.


 தமிழ்  சினிமாவில்  விதி  படத்தில்  தான்  கோர்ட்  சீன் காட்சிகள்  அதிகம்.அதற்கு  நிகராக  இது  இருக்கிறது 


 கடவுள்  ஆக  கெஸ்ட்  ரோலில் அக்சய்  குமார்  நடித்திருக்கிறார். அவரது  தெய்வீகப்புன்னகை  பிளஸ் 


படத்தில்  பங்கு  பெற்ற  அனைத்துப்பாத்திரங்களும்  அவரவர்  பங்கை  சிறப்பாக  செய்திருக்கிறார்கள் 


அமித்ராஜ்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். பின் பாதி  நீளம்  அதிகம் சுவிர்நாத்  எடிட்  செய்து  இருக்கிறார். 155  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கலாம்


 இசை பின்னணி  இசை இவற்றை  ஐந்து  பேர்  செய்திருக்கிறார்கள் ., குட் அம்லேந்த்  சவுத்ரி  ஒளிப்பதிவில்  பல  காட்சிகளில்  கை  தட்டல்  வாங்குகிறார்.  



சபாஷ்  டைரக்டர்  (அமித்ராஜ்) 


1  வக்கீல்  ஆன  நாயகிக்கான  ஓப்பனிங்  இண்ட்ரோ  சீனில்  கையைத்தூக்க  முடியாது  , அசைக்க  முடியாது   என  பொய்  சொல்லும்  சிறுவனிடம்  சாக்லெட்டைத்தூக்கிப்போட்டு  கேட்ச்  என்றதும்  அவனையும்  அறியாமல்  கைகளை  உயரே  தூக்கி  கேட்ச்  பிடித்து  மாட்டிக்கொள்ளும்  சீன் 


2  எதிர்க்கட்சி  வக்கீல்  ஆன  நாயகி  அந்த  மாணவனை  நோக்கி  செல்லும்போது  வரும்  பின்னணி  இசை 


3  நாயகனின்  மனைவியை  மடக்குவதற்காக  எதிர்க்கட்சி  வக்கீல்  உங்க  முதல்  இரவு  அன்று  என்ன  நடந்தது  ?  எனக்கேட்ட போது  உங்களுக்குக்குழந்தை  இருக்கா?  இல்லையில்ல? ஜட்ஜூக்கு  குழந்தை  இருக்கா?  இருக்கில்ல? அப்போ  அவருக்குத்தெரியும், அதான்  நடந்தது  என  சாமார்த்தியமாக  பதில்  சொல்லும்  காட்சி 


4  ஆண்களூக்கு  பெண்ணின்  உடல்  , மனம்  பற்றி  எந்த  அறிவும்  இல்லை  என  கோர்ட்டில்  பெண்  சொன்னதும்  நாயகன்  அப்போ  பெண்ணைப்பற்றிய  புரிதலை , அவங்க  உடல்  அமைப்பு பற்றிய  கல்வி  அறிவைப்புகட்ட  வேண்டியது  அவசியம்னு  சொல்ல  வர்றீங்க?  ரைட்? என  மடக்குவது  அப்ளாஸ்  அள்ளும்  சீன் 


5  வெறும் 101  ரூபாய்  அபராதம்  கட்ட்சொல்லி  ஸ்கூல்  நிர்வாகத்தின்  மேல்  தொடுத்த  வழக்கில்  காம்பரமைஸ்  அமவுண்ட்  ஆக  ரூ  ஒரு கோடி  கொடுக்கத்தயார்  ஆகும்  நிறுவனத்துக்கு  நாயகன்  அளிக்கும்  ரீ  ஆக்சன் அமேசிங் 

6 க்ளைமாக்ஸில் ஒரு  மாணவன்   சுய இன்பம்  தவறல்ல, நானும்  செய்கிறேன்  என  சொல்லும்போது  வக்கீல் உன்  பெற்றோர்  யார்  எனப்பார்க்க  விரும்புகிறேன், மானங்கெட்ட  அப்பா  யாரு? என  கேட்க  கோர்ட்டில்  இருக்கும் ஜட்ஜ்  தான்  அது  என்பது  தெரிய  வரும்போது  வக்கீல் அடையும்  ஷாக் 


7  எதிர்க்கட்சி  வக்கீல்  க்ளைமாக்ஸில்  சொல்லும் டயலாக்  செம,  நீங்க  ஏன்  ஜெயிச்சீங்க  தெரியுமா?  நான் பணத்துக்காக, தொழிலுக்காக  வாதிட்டேன், நீங்க  உங்க  குடும்பத்துக்காக, உங்க  மகனுக்காக  வாதிட்டீங்க   என்பது


  ரசித்த  வசனங்கள் ,  ஜோக்ஸ், சம்பவங்கள்


1 டாக்டர்...  எனக்கு  குழந்தை  பெறும்  பாக்கியம்  இல்லை , ஆனா  என்  சம்சாரம்  கர்ப்பமா  இருக்கா, எப்படி ?


ஒரு  வேட்டைக்காரன்  காட்டில்  வேட்டைக்குப்போகும்போது  எதிரே  சிங்கத்தைப்பார்த்தான். துப்பாக்கி  எடுத்து  சுடறதுக்குப்பதிலா  அவசரத்துல  குடையை  எடுத்து  விரிச்சுட்டான், ஆனா  சிங்கம்  செத்துடுச்சு, எப்படி ?


 அவன்  சுட்லைன்னா  என்ன? வேற  யாராவது  சிங்கத்தை  சுட்டிருப்பாங்க 


 அதே  லாஜிக்  தான்  உங்க  சம்சாரம்  கர்ப்பம்  ஆன  சம்பவமும்


2  உங்க  பல்பு  சரியா  எரியலைன்னா பக்கத்து  வீட்டுக்காரன்  பல்பு  ஏத்திட்டுப்போயிடுவான்


3  பிரச்சனையை  ஃபேஸ்  பண்ண  முடியாம  ஓடிப்போகறதால  பிரச்சனை  சரி  ஆகாது 


4   நீ  செய்ய  இருப்பது  போர். பின் வாங்கினால்  அது  தப்பு ., போர்  செய் 

5  கோர்ட்டுக்குள்ளே  செப்பல்  போடாம  வந்திருக்கீங்களே? கோர்ட்  என்ன  கோயிலா?


 நீதி  கிடைக்கும்  கோயில்  இதுதானே? 


6  செக்ஸ்  எஜூக்கேஷன்  ஸ்கூலில்  சொல்லித்தரப்படவில்லை  எனில்  நீங்க  கேஸ்   போட  வேண்டியதுஎஜூக்கேஷன்  சிஸ்டம்  மேல, ஸ்கூல்  மேல  கேஸ்  போடக்கூடாது 


 யுவர்  ஆனர் , உங்களை  ஒரு  கார்  டிரைவர்  டாட்டா  ஏஸ்  வேன்ல  இடிச்சுட்டாரு , உங்க  கால்  போயிடுச்சு , இப்போ  நீங்க  டாட்டா  ஏஸ்  மேல  கேஸ்  போடுவீங்களா?> டிரைவர்  மேல கேஸ்  போடுவீங்களா?


7   நம்  நாட்டில்  உயர்  தரமான  கல்வி  கற்பிக்கப்படுகிறது , ஆனால்  குற்றங்கள்  குறைவதில்லை . எனவே  கல்வி  சிஸ்டத்தை  குறை  கூறக்கூடாது 


8  மாஸ்டர்பேஷன் , சுய  இன்பம்னு  முதல்ல  சொல்லிட்டு  இருந்ததை  இப்போ  டீசண்ட்டா  செல்ஃபி  எடுத்தல்  என  சொல்றாங்க . இது  எல்லோரும் செய்வதுதான். தன்னைத்தானே  இன்புறுத்திக்கொள்தல் 


9  கேள்வி  கேட்டாதான்  பதில்  கிடைக்கும், பதில்  கிடைத்ததும்  அதில்  இருந்து  சில  கேள்விகள்  பிறக்கும், மீண்டும்  பதில்கள் கிடைக்கும்.எல்லாவற்றுக்கும்  ஆதாரமா  மூல  காரணமா  இருப்பது  கேள்விகள் தான் 


10   டாக்டர் . இந்த  டுபாக்கூர் பார்ட்டி  விற்கும்  ஆயிலை  நீங்க  யூஸ்  பண்ணி  இருக்கீங்களா? சைஸ்  பெருசாகுதா?


  நான்  என்  மனைவி  கிட்டே  கொடுத்தேன், அவ  டெய்லர் . தையல்  மிஷினுக்கு  அந்த  ஆயிலை  அப்ளை  பண்ணா , ஆனா  நோ யூஸ் . ஊசி  அதே  சைஸ்ல  தான் இருக்கு , பெருசாகலை 


11  பள்ளிக்கல்விப்பாடத்திட்டத்தில்  மிருகங்கள் , பறவைகளின் இனப்பெருக்கம்  பற்றி   விபரமா  சொல்லித்தர்றாங்க, ஆனா  மனிதர்களின்  இனப்பெருக்கம் ப்ற்றி  அவங்க  உறுப்புகள்  பற்றி  ஏன்  முழுமையான  படிப்பு இல்லை? 


12  உண்மை  என்பது  நிர்வாணமாத்தான்  இருக்கும், அதைப்பேசக்கூச்சப்படக்கூடாது


13 உலக  அளவில்  போர்ன்  வெப்  சைட்  பார்ப்பதில் இந்தியா  முதல்  இட்த்தில்  இருக்கிறது . நாட்டில் 85%  பேர்  இண்ட்டர்நெட்  யூஸ்  பண்றாங்க .  அப்படி  இருக்கும்போது  ஸ்கூலிலேயே  ஏன்  செக்ஸ்  எஜூக்கேசன்  பிராப்பராக  சொல்லித்தரக்கூடாது ? 


14  இந்த  உலகத்தில் 95%  ஆண்கள் , 76%  பெண்கள்  சுய  இன்பத்தில்  ஈடுபடுகிறார்கள்  என    டாக்டர்  சர்வே  கூறுகிறது , அதனால்  அது  ஒன்றும்  குற்றம்  அல்ல 


15  பிரபலம்  ஆன  நாளிதழ்கள் ., வார  இதழ்களில்  கேள்வி  பதில்  பகுதிகளில்  அந்தரங்கம்  பற்றிய  ஐயங்களே  அதிகம், ஸ்கூலிலேயே  எல்லாம்  சொல்லித்தந்தால்  அவர்கள்  ஏன்  அறியாமையில்  இருக்கிறார்கள் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மெயின்  க்தைக்கு  சம்பந்தம்  இல்லாமல்  பின்  பாதியில்  சனாதானம் , இந்து  மதத்தை  உயர்த்திப்பிடித்தல்  எல்லாம்  கொஞ்சம்  ஓவர்  ( நானும்  இந்து  தான் ) 


2  கடவுள்  ஆக  வரும்  அக்சய்  கன்னாவுக்கு  அந்த  சிவபெருமான்  தாண்டவம், பாட்டு  காட்சி  தேவை  இல்லை.  அவரது  காட்சிகள்  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்  தான். ஸ்டார் வேல்யூக்காக  சேர்த்திருக்கிறார்கள் 


3  அர்ஜூனுக்கு  தேர்  ஓட்டிய  கண்ணன்  போல  நாயகனுக்கு  கார்  ஓட்டும்  கடவுள்  கான்செப்ட்  எல்லாம் ஓவரோ  ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - காட்சி  ரீதியாக  18+  எதுவும்  இல்லை , ஆனால்  வசனத்தில்  சில  18+  உண்டு , ஆனால்  வல்கராக  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அனைவரும்  காண  வேண்டிய  கோர்ட்  ரூம் டிராமா. செக்ஸ்  எஜூக்கேஷன்  ஏன்  அவசியம்  என்பதை  உறுதியாக  சொன்ன  விதம்  அருமை ., மாறுபட்ட  திரைக்கதை . ரேட்டிங்  3.25 / 5 


OMG 2
Theatrical release poster
Directed byAmit Rai
Written byAmit Rai
Produced by
StarringAkshay Kumar
Pankaj Tripathi
Yami Gautam Dhar
CinematographyAmalendu Chaudhary
Edited bySuvir Nath
Music byVikram Montrose
Hansraj Raghuwanshi
Djstrings
Pranaay
Sandesh Shandilya
Production
companies
Distributed byViacom18 Studios
Release date
  • 11 August 2023
Running time
155 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest. ₹50 crore[2][3]
Box office₹221.08 crore[4]