Sunday, October 01, 2023

டைனோசர்ஸ் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( கேங்ஸ்டர் ஆக்சன் டிராமா)@ அமேசான் பிரைம்

 


  எங்கேயும் எப்போதும்  என்ற  மெகா  ஹிட்  படத்தைத்தந்த  இயக்குநர்  எம்  சரவணனின்  சிஷ்யரான எம் ஆர்  மாதவன் இயக்குநர்   இரா  பார்த்திபனின்  அதி  தீவிர  ரசிகர்  போல, புதிய  பாதை  காலத்து  பார்த்திபனிடம்  இருந்த  நக்கல் , நையாண்டி  உடன் கலக்கலான  வசனங்களுடன் , கூஸ் பம்ப்  காட்சிகளுடன்  பிரமாதமான  ஒரு  கேங்க்ஸ்டர்  ப்டத்தைத்தந்துள்ளார். 2023ஆம்  ஆண்டின்   அண்டர்  ரேட்டட்  மூவி  என  இதை  சொல்லலாம். 

    ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்,  அவன்  அண்ணன்  இருவருக்கும்  பொதுவான  ஒரு  நண்பன்  இருக்கிறான். இவன்  ஒரு  கேங்க்ஸ்டரிடம்  அடியாளாக  முதலில்  இருந்தவன். இப்போது  திருமணம் ஆகி  விட்டதால்  அந்த  வேலையை  விட்டு  விட்டு  மனம்  திருந்தி  வாழ்ந்து  வருபவன்


 ஆனால்  அந்த  நண்பன்  அடியாளாக  இருந்த  போது  நிகழ்த்திய  ஒரு  கொலைக்கேசுக்காக  கோர்ட்டில்  சரண்டர்  ஆக வேண்டிய  தேவை  ஏற்பட்டபோது  நாயகனின்   அண்ணன்  நண்பனுக்குப்பதிலாக  தான்  ஜெயிலுக்குப்போகிறான்

ஆனால்  இந்த  ஆள்  மாறாட்டம்  தெரிந்த  வில்லன்  நண்பனைப்போட்டுத்தள்ள  அதற்குப்பின்  நாயகன்  எடுக்கும்  முடிவு  தான்  மீதி  திரைக்கதை  


வழக்கமான  கேங்க்ஸ்டர்  கதை  தானா? என  சலித்துக்கொள்ளத்தேவை  இல்லை , திரைக்கதை  விறுவிறுப்பு , வசனத்தில்  நகாசு  வேலை  மூலம் இயக்குநர்  தரமான  ஒரு  படத்தை  தந்திருக்கிறார் 

  நாயகன்  ஆக உதய்  கார்த்திக்  ஆர்  பார்த்திபன் போலவே  நக்கல்  நையாண்டி  உடன்  நடித்திருக்கிறார். பல  காட்சிகளில்  கை  தட்டல்  வாங்குகிறார்.


விஜய்க்கு  திருப்பு  முனை  படமாக  அமைந்த  திருமலை  படத்தின்  இயக்குநர்  ரமணா  ஒரு  கெஸ்ட்  ரோல்  செய்திருக்கிறார். ஓப்பனிங்  சீனிலும், க்ளைமாக்ஸ்  சீனிலும்  வருகிறார்.  எதற்கு  என்று  தெரியவில்லை , மெயின்  கதைக்கும், இவருக்கும்  சம்பந்தம்  இல்லை 


நாயகனின்  நண்பனாக மாறா  துடிப்பான  நடிப்பு, அண்ணனாக  ரிஷி ரித்விக் குணச்சித்திர  நடிப்பு 


நாயகி  ஆக  சாய்  ப்ரியா  தேவா கொழுக்  மொழுக்  உடல்  அமைப்பு , கச்சித  நடிப்பு.  இரு  தாதாக்களாக  ஜெய்  பாபு  , மனோக்‌ஷா இருவரும்  நல்ல  வில்லத்தன  நடிப்பு 


நாயகனின் அம்மவாக  வருபவர்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  பட்டாசாக  நடித்திருக்கிறார்


போபோசசியின்  இசையில்  பிஜிஎம்  தெறிக்கிறது. ஜோஸ்வி  ஆனந்த்  ஒளிப்பதிவில் காட்சிகளை  உயிரோட்டமாக  கண்  முன்  நிறுத்துகிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கிய  எம் ஆர்  மாதவன்  மட்டும்  முதல்  பாதி  போல  பின்  பாதியையும்  கொண்டு  போய்  இருந்தால்  இது  வேற  லெவல்  படம்  ஆகி  இருக்கும். கொஞ்சம்  தடுமாறி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் ( எம் ஆர்  மாதவன்)


1  வில்லனின்  வீட்டிலேயே   மாட்டிய  நாயகனின்  நண்பன் வில்லன்  சந்தேகித்த  ஆளோ? வில்லனின்  தங்கையின்  கணவனைக்கொன்றவனோ என்ற  டவுட்டில்  பேர்  சொல்லி  சிக்க  வைக்கும்  கேமில்  சிக்காமல்  இருக்க அவர்கள்  கையாளும்  தந்திரமான அவர்கள்  ஆட்களை  பேர்  சொல்லி  இண்ட்ரோ  கொடுக்கும்போது  நாயகனின்  நண்பன்  பெயரை  மாற்றிச்சொல்வது   செம  அப்ளாஸ்  வாங்கும்  இடம்,  டெம்ப்போ  ஏறி அவனவன்  பிபி  எகிற  உட்கார்ந்த  காட்சி , வெல்டன்  டைரக்டர். 


2  அந்த  சீனில்  செம  ட்விஸ்ட்டாக  நாயகன்  திடீர்  என  அந்த  இடத்துக்கு  வந்து  நண்பன்  பெயரை  சொல்லி  அழைத்து  டிக்கெட்  வேணுமா???   என  கேட்க  வில்லன்  அவனுக்கு  டிக்கெட்    கன்ஃபர்ம்  என  கெக்கலிக்கும்  காட்சி  அடிபொலி  ஆக்சன்  சீக்வன்சுக்கான  லீடு 


3  நாயகனின்  அண்ணனை   ஜெயிலில்  சந்திக்க  வரும்  ஒரு  வில்லன்  தன்  கை  வாட்ச்  மூலம்  ஸ்பீக்கர்  ஃபோனில்  வில்லன்  நெ 2   ஒட்டுக்கேட்பதை  உணர்ந்து  அண்ணன்  பேசும்  வசனம்  செம 


4  காதல்  பிரேக்கப்  ஆன பிறகு  நாயகி  தன்  புதிய  காதலருடன் நாயகனைப்பார்க்க  வரும்போது   நாயகி  பணத்துக்கு  விலை  போய்  விட்டார்  என்பதை  சிம்பாலிக்காக  உணர்த்தும்  வகையில்  ஏலம் விடும்  காட்சி  கே  பாலச்சந்தர்  டச்


  ரசித்த  வசனங்கள் 

1 எல்லாரும்  செத்தாதான்  ஆறடி, நாங்க  வாழ்றதே  ஆறடி ல தான்


2  போலீஸ்  நான்  அடிச்சா  என்ன  வரும்னு  தெரியுமில்ல?


முதல்ல   100 க்கு  ஃபோன்  அடிச்சா  நீங்க  வாங்க  சார் 


3   இவன்  ஏன்  உஷார்  ஆன  பெண்ணையே  மீண்டும்  மீண்டும்  உஷார்  பண்ணிக்கிட்டு  இருக்கான்? 


4 ஒரு  பொண்ணைப்பிடிச்சிருந்தா  போய்  முதல்ல  அவ கிட்டே சொல்லுங்க , இப்படிப்பச்சைக்குழந்தை  பலூனைப்பார்க்கற  மாதிரி  பார்த்துட்டு  இருக்காதீங்க 


5  உனக்கு  கிஃப்ட்  வாங்கித்தர்றேன், உனக்கு  சர்ட்  பிடிக்குமா டி  சர்ட்  பிடிக்குமா  


 டி  சர்ட்போட்டு  அதுக்கு  ,மேல சர்ட்  போடப்பிடிக்கும்  


அடப்பாவி


6  நீ  தாறுமாறான  ஃபிகரு , என்  லைஃப்ல  வந்த  சுகரு , என்  அத்தை  பெத்தெடுத்த  ஃபிகரு , எப்படி  கவிதை  


7  ஹோட்டலுக்கே  ஓனர்  ஆகியும்  டிப்ஸ்க்கு  அலையுது பாரு 


 ஹலோ, டிப்ஸ்  வாங்கி  வாங்கித்தான்  ஓனரே  ஆனேன்


8  உங்க  ஊர்ல  அஸ்ட்ராலஜி  மாதிரி  எங்க  ஊர்ல  கிஸ்ட்ராலஜி  ஒண்ணு  இருக்கு . ஒரு  ஆண்  ஒரு  பெண்ணை  முதன்  முதலா  கிஸ்  பண்ணும்போது  அவன்  ரெண்டு  கையையும்  எங்கே  வெச்சிருக்கான்னு பார்த்தே  அவன்  லவ்  ஒரிஜினலா?னு  கண்டு பிடிச்சிடலாம்,  டவுட்னா  கூகுள்  பண்ணிப்பாரு 


9   ஏண்டா , அது  வாயா? வாட்டர்  பாட்டிலா?இந்த உறி  உறியறே? 


10  விட்ரு  விட்ருனு  சொன்னவனையே  வெட்ற  ஆள்  நான், உன்  மச்சான்  வெட்டிருவியா? வெட்டிருவியா?னு  கேட்டா  எப்படி  சும்மா  விட  முடியும் ? 

11  நான்  சாமி  கும்பிட  கோயிலுக்கும்  போனதில்லை , சம்பவம்  பண்ணிட்டு ஜெயிலுக்கும்  போனதில்லை 

12  நான்  எந்தத்தப்பும்  பண்ணாம  உள்ளே  வந்தவன் , வெளியே  போய்  அந்தத்தப்பை  நான்  பண்ணிக்கறேன் 

13 இன்னாபா? குடிச்சிருக்கியா? 

 இல்லையே? முழுங்கிட்டேன்

14   ஆயிரம்  கிமீ  தாண்டி  கோயிலுக்கு  வந்தாலும்  மாலையை  சாமி  கழுத்துல  நாமா  போடறோம்? அய்யர் கைல  கொடுத்து  அவரைத்தானே  போடச்சொல்றோம்? 


15  அந்தப்பக்கம்  போகாதடி  அங்கே  ஒரு  ஆள்  எல்லாருக்கும்  முத்தம்  கொடுத்துட்டு  இருக்கான் 


 யாரு? விஜய்  சேதுபதியா>


 அந்தத்தம்பி  ஆம்பளைங்களூக்குதான்  கொடுக்கும், இவன்  பொம்பளைங்களுக்குக்கொடுக்கறான்


16  நம்ம  எதிரி  பெருசா  இருந்தாதான்  நம்ம  எதிர்காலம்  பெருசா  இருக்கும்


17  பிறக்கும்போது ஈயாவோ  எறும்பாவோ கூட  பிறந்துடலாம், ஆனா  சாகும்போது  டைனசரா  சாகனும், அப்போதான்  தூக்கறதுக்கு  1000 பேராவது  வருவாங்க 


18   வெள்ளைப்பேப்பருக்கு  எதுக்கு  ஜெராக்ஸ் ? எனக்கு எல்லாம்  எதுக்கு  புள்ளை  குட்டிங்க 


19  மாமா, என்னை  நம்பி  வந்த  நாயே  இப்போ சொறி  நாயா  கிடக்கு, என்னை நம்பி  பொண்ணுக்குடுக்கறேங்கறே?> 


20 நாம  இப்படியே  வாய்ல  வடை  சுட்டுட்டு  இருக்கறதால  ஹிந்திக்காரன்  இங்கே  வந்து இட்லி  சுட  ஆரம்பிச்ட்டான்


21  இந்த  மனுசப்பயலுகளூக்கு சக  மனுசன்  தோத்தா  எவ்ளோ  சந்தோஷம் ? 


22  அந்த  ஆளு  ஏன்  என்னை  அடிக்காம  அங்கே  நின்னு  ஓ பி  அடிச்சுட்டு  இருக்கான் ? 


23  யாரு  வேணா  யாரை  வேணா  கொலை  பண்ணலாம், ஒருவனை  வாழ  வைக்கனும், அதுதான் கெத்து 


24  நம்ம  ஏரியாவில்  இருந்து  சிரியா  வரைக்கும்   அதிகாரம்தான்  பிரச்சனையாடா? 


25   ஒரு  வேலை  வந்திருக்கு , ஆர்டர்  என்னுது , பார்டர்  உன்னுது 


26   இன்னைக்கு  நைட்டுக்குள்ள  நான்  அவனை  முடிக்கலைன்னு  வை, அவ தான்  இங்கே  வெயிட்டு 


27  அது  என்னடா  உதவி  செய்யறவன்  எல்லாம்  மறைமுகமாவே  செய்யறீங்க ? யாருக்குமே  தெரியாம  அவனுங்க  பண்ற  உதவி  இவனுங்களுக்கு  மட்டும்  எப்படித்தெரியுது ?


28  நாங்க  எல்லாம்  சுனாமிலயே  ஸ்விம்மிங்க்  போட்டவங்க 


 டேய், நீ  மதுரை  தானே? மதுரைல  எங்கடா கடல்   இருக்கு ? எங்கெடா  சுனாமி  வந்துச்சு ? 


29  ஏரோப்ளேன்  நிழல்  தான்  நம்ம  ஏரியா  மேல  விழுது , நாம  ஏரோப்ளேன்ல  பறக்கனும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  நண்பனின்  இழவு  வீட்டுக்காட்சி  ரொம்பவே  நீளம், அதில்  நாயகன்  செய்யும்  அலப்பறைகள்  ஆர்  பார்த்திபன்  தனமாய்  ரசிக்க  வைத்தாலும்  ஓவர்  டோஸ் . இன்னும்  ஷார்ப் ஆக  ட்ரிம்    பண்ணி  இருக்கலாம் 

2  படத்திலேயே  செம  கூஸ்பம்ப்  சீன்  வில்லனின்  வீட்டில்  பணம்  கவுண்ட்  பண்ணும்  சீன்  தான். அதில்  நாயகனின்  நண்பன் ரகசியக்குரலில்  அடியாளிடம்  பேசுவது  ஒரு  அடி  தூரத்தில்  அருகிலேயே  அமர்ந்திருக்கும்  வில்லனுக்குக்கேட்காதா? 

3  மாறுபட்ட  திரைக்கதை  உள்ள  படத்தில்  நாயகன் - நாயகி  காதல்  காட்சி  மட்டும்  மாமூல்   மசாலா படங்கள்  போல்  இருப்பது  ஏனோ? சர்க்கஸ்  வித்தை  காட்டி  நாயகியை  வீழ்த்துவது  எல்லாம்  சிரஞ்சீவி  படத்துக்கு  ஓக்கே 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பரபரப்பான  சில  கூஸ்பம்ப்  காட்சிகளுக்காகவே  பார்க்கலா,ம், டோண்ட்  மிஸ்  இட் . ரேட்டிங்  3 / 5