Monday, September 25, 2023

NO HARD FEELINGS (2023) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


ஹாலிவுட்  கனவுக்கன்னி  ஜெனிஃபர்  லாரன்ஸ்  நடித்து  தயாரித்த  அவரது  சொந்தப் படம் . 47  மில்லியன்  டாலர்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு   87  மில்லியன்  டாலர்  வசூல்  செய்த  படம்  இது .23/6/23   அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  23/9/23  முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


        ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  30  வயது  ஆன  பெண். வாடகை  டாக்சி  டிரைவர். தனது  காருக்கான  டாக்ஸ்  கட்டாததால்  காரை  பறிமுதல்  செய்ய  கோர்ட்  உத்தரவிடுகிறது. நாயகிக்கு  இப்போது  சம்பாத்யத்திற்கு  வழி  இல்லை . அப்போது  ஒரு  விளம்பரம்  அவரது  கவனத்துக்கு  வருகிறது


 மிகவும்  கூச்ச  சுபாவியான , ரிசர்வ்டு  டைப்பான  தங்கள்  மகனைக்கவனித்துக்கொள்ள  அல்லது  அவன்  கூட  டேட்டிங்  செல்ல , அவனை  சகஜமாக்க  ஒரு 20  வயதுப்பெண்  தேவை . தக்க  சன்மானம் , சம்பளம்  வழங்கப்படும் 


நாயகி  விளம்பரத்தில்  உள்ள  முகவரிக்கு  செல்கிறாள்/  பெற்றோரை  சந்திக்கிறாள். அவர்கள்  மகனுக்கு  19  வயது ஆகிறது . காலேஜ்  செல்ல  இருக்கிறான். அவனுக்கு  நண்பர்கள்  யாரும்  கிடையாது , கேர்ள்  ஃபிரண்ட்சோ , காதலியோ  இல்லை .  அவனை  திட்டமிட்டு  சந்தித்து  தோழி  ஆகி  அவனை  சகஜமான  மற்ற  இளைஞனைப்போல்  ஆக்க  வேண்டும், 

 இதுதான்  நாயகிக்கு  கொடுக்கப்படும்  டாஸ்க் . அவர்கள்  திட்டப்படி  யதேச்சையாக  நாயகனை  சந்திப்பது போல  நாயகி நடந்து  கொள்கிறாள் . அவர்கள்  பழக்கம் , நெருக்கம்  திட்டமிட்ட படி  நடக்கிறது . கொஞ்சம் கொஞ்சமாக  அவனிடம்  மாற்றம்  வருகிறது 


 ஒரு  கட்டத்தில் இது  எல்லாமே  பெற்றோரின் திட்டமிட்ட  நாடகம்  என்பதை  நாயகன்  புரிந்து  கொள்கிறான், இதற்குப்பின்  நிகழும்  சம்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  ஜெனிஃபர்  லாரன்ஸ் . தயாரிப்பாளர்  என்பதால்  நாயக்னை  விட  அதிக  காட்சிகள்  நாயகிக்கு . படம்  முழுக்க  இவரைச்சுற்றி  சுற்றித்தான்  கேமரா  நகர்கிறது . முகபாவனைகள் , சிரிப்பு , நல்ல  நடிப்பு  இந்த  மூன்று  பிளஸ்  பாயிண்ட்கள்  இருப்பதால்  இவர்  வரும்  காட்சிகள்  எல்லாம்  ரசிக்க  வைக்கின்றன 


நாயகன்  ஆக  ஆண்ட்ரூ பர்த்  , பால் மணம்  மாறா  பாலகன். அரங்கேற்றம்  கமல்  போல  அப்பாவித்தனமான  முகம். கொஞ்சம்  கொஞ்சமாக  நாயகி  மீது   வசப்படுவதும்  உண்மை  அறிந்ததும்  அவரை  விட்டு  விலகுவதும்  குட் 


நம்  பொறுமையை  ரொம்ப  சோதிக்காமல் 103  நிமிடங்களில்  படம்  முடியும்படி  ஷார்ட்  அண்ட்  ஸ்வீட்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் . ஒளிப்ப்திவு  இளமைக்கொண்டாட்டம் . இசை , பின்னணி  இசை   ஓக்கே  ரகம் 


 நாயகனின்  அம்மா, அப்பா  ஆக நடித்தவர்கள்  ஏதோ  டிராமா  ஆர்ட்டிஸ்ட்  போல்  நாடகத்தனமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் , அதிக  கேரக்டர்கள்  இல்லாமல்  6  கேரக்டர்களை  வைத்தே  மிகக்குறைந்த  செலவில்  படத்தை  முடித்தது  புத்திசாலித்தனம் 


சபாஷ்  டைரக்டர்

1  முதல்  காட்சியில்  இருந்தே  கதை  ஆரம்பம்  ஆகி  விடுகிறது . ஒரு  சிறுகதையின்  முதல்  வரியே  வாசகனை  கதைக்குள்  இழுத்துக்கொள்ள  வேண்டும்  என்ற  அமரர்  சுஜாதா  வரிகளை  நினைவுபடுத்துகிறது 

2    தமிழ்  சினிமாக்களில்  வருவது  போல  நாயகியின்  வேண்டுகோளுக்கிணங்க  நாயகன்  ஹோட்டலில்  அனைவர்  முன்னும் பியானோ  வாசித்து  கை  தட்டல்  பெறும் காட்சி 

3  மெச்சூர்டாக  இல்லை  என  விமர்சிக்கப்பட்ட  நாயகன்  தன்  பெற்றோரைதன்  முன்  அமர  வைத்து  அவர்களுக்கு  க்ளாஸ்  எடுக்கும் காட்சி 


ரசித்த  வசனங்கள்\

1

20  வயசு  பெண்  தேவைனு  விளம்பரம்  பார்த்தேன், எனக்குக்கொஞ்சம்  வயசு  அதிகம். போன  வருசம்   29  வயசு  முடிஞ்சுது 


 சோ  இப்போ உங்க  வயசு  என்ன? 30 ?


 இல்லை  32 


2  நான்  வாழ்க்கைல  ஜெயிக்கறனோ , தோக்கறனோ  அதை  என்  வழில  நடக்க  விடுங்க . ஒரு  பெற்றோரா  என்னை  ரொம்ப  தாங்கிட்டு இருக்காதீங்க 


3  நான்  மத்தவங்களை  ஹர்ட்  பண்றது  நிஜம்தான் , காரணம்  நான்  பலரால்  ஹர்ட்  ஆகி  இருக்கேன் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஒரு  சீசர்  ஏஜெண்ட்  ஒரு வாகனத்தை  சீஸ்  பண்ணுகிறான்  என்றால்  வண்டியை  நேராக குடோனுக்கு  கொண்டு  செல்லும்  வரை  வழியில்  எங்கும்  நிறுத்த  மாட்டான், நிறுத்தக்கூடாது, அதுதான்  ரூல் .  இவரு பாட்டுக்கு  வழில  டீ  குடிப்பாராம், நாயகி  நைசாக  வண்டியை  அபேஸ்  பண்ணுவாராம் 

2  நான்  பணத்துகாக  உன்னிடம்  பழகவில்லை  என்பதை  நிரூபிக்க  நாயகிக்கு  பல  வழி  இருந்தும்  அதை  செயல்படுத்த வில்லை 

3  ஹோட்டல்  ரூம்  கதவை  நாயகி  வெறும்  காலால் உதைத்தே  உடைப்பது  செம  காமெடி , அவர்  என்ன அர்னால்டு  ஸ்வார்செனேக்ரா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -   இரண்டு  இடங்களில்  18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நாம்  பல  தமிழ்  சினிமாக்களில் பார்த்த  கதை  தான், ஆனாலும்  ஜாலியாக  ரசிக்கலாம் ., ரேட்டிங் 2.25 / 5 


No Hard Feelings
Theatrical release poster
Directed byGene Stupnitsky
Written by
  • Gene Stupnitsky
  • John Phillips
Produced by
Starring
CinematographyEigil Bryld
Edited byBrent White
Music by
Production
companies
Distributed bySony Pictures Releasing
Release date
  • June 23, 2023
Running time
103 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget$45 million[2]
Box office$87 million[3][4]