Thursday, August 31, 2023

பீட்சா 3 த மம்மி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


 2012ஆம்  ஆண்டு  விஜய் சேதுபதி  நடிப்பில்  கார்த்திக்  சுப்புராஜ்  இயக்கத்தில்  பீட்சா  எனும்  மெகா ஹிட்  படம்  ரிலீஸ்  ஆனது. அதே  பட  நிறுவனம் 2013 ஆம்  ஆண்டில்  பீட்சா  2  த  வில்லா  எனும்  டைட்டிலில்  அசோக்  செல்வன்  நடிப்பில் தீபன்  சக்ரவர்த்தி  இயக்கத்தில்  வெளியாகி  சுமாராக  ஓடியது. இப்போது  அறிமுக  மோகன்  கோவிந்த்  இயக்கத்தில்  அஸ்வின்  நடிப்பில்  பீட்சா  3  த மம்மி வெளியாகி  உள்ளது   . இது  மினிமம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு   5  கோடி  வசூல்  செய்து  வெற்றிப்படம்  ஆகி  உள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 -  டீன் ஏஜ்  வயதான ஒரு  சின்னப்பொண்ணு  தலைல  அடிபட்டதால்  கஜினி  மாதிரி  அடிக்கடி  நினைவுகளை  மறந்துடுது , அம்மா  கூட  ஒரு  அப்பார்ட்மெண்ட்ல  வசித்து  வரும்  அந்த  சிறுமியின்  அம்னீஷியா  நிலை  தெரிந்து  அப்பார்ட்மெண்ட்  செக்யூரிட்டி  அந்த  சிறுமியை  அடிக்கடி  பாலியல்  வன் கொடுமைக்கு  ஆளாக்குகிறான், இது  தெரிய  வந்த  அபார்ட்மெண்ட்  செக்ரட்ரியான  மெயின்  வில்லன்  தன்  ஆட்களுடன்  அந்த  சிறுமியை  அவன்  பங்குக்கு  நாசம்  செய்கிறான். பாதிக்கப்பட்ட  சிறுமி   இறந்து  விடுகிறார். பேயாக  வந்து  வில்லன்களைப்பழி  வாங்குகிறார்


 சம்பவம் 2 - நாயகன்  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்  நடத்தி  வருகிறார். அவர் நாயகியைக்காதலிக்கிறார். நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  தங்கை . அண்ணனுக்கு இந்தக்காதலில்  இஷ்டம்  இல்லை . வேறு  மாப்பிள்ளை    பார்க்கிறார். நாயகனின்  ரெஸ்ட்டாரண்ட்டில்  ஒரு  மம்மி  பொம்மை  வருகிறது ., அந்த  பொம்மை  வருகைக்குப்பின்  அமானுஷ்யமான  சில  சம்பவங்கள்  நடக்கின்றன. ஒரு  கொலையும்  நடக்கிறது . இதுதான்  சாக்கு  என்று  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனை  அந்த  கேசில்  ஃப்ரேம்  பண்ணப்பார்க்கிறார். அதில்  நாயகன்  தப்பித்தானா? என்பது  மீதிக்கதை 


 மேலே  சொன்ன  இரு  தனித்தனிக்கதைகளை  ஒன்றாக்க  இயக்குநர்  ரொம்பவே சிரமப்பட்டு  இருக்கிறார்


நாயகன்  ஆக அஸ்வின்  தாடி , ஹிப்பித்தலை  ஃபங்க்  ஹேர்  ஸ்டைலில்  வருகிறார். இவர்தான்  பேய்  ஆக  இருப்பாரோ  என  டவுட்  நமக்கு  வருகிறது . நடிப்பு  ஓக்கே  ரகம்


 நாயகி  ஆக பவித்ரா  அழகிய முகம் , கண்ணிய  உடை  என  மனம்  கவர்கிறார். நடிப்பு  ஓரளவு  வருகிறது .இவ்வளவு  அழகான  பெண்  ஏன்  இந்த  தாடிவாலாவை  லவ்வுகிறார்  என  டவுட்  வரவில்லை , இந்தக்காலப்பெண்கள்  மாடர்ன்  யுகவாசிகள்  என்பதால்  பொதுவாகவே  அவர்கள்  டீசண்ட் ஆன  ஆண்களை  விரும்புவதில்லை , ரவுடி  மாதிரி  இருப்பவனைத்தான்  விரும்புகிறார்கள் 


 நண்பனாக  காளி  வெங்கட்  சிறப்பாக  நடித்திருக்கிறார். அவர்தான்  ஓனரோ  என்னும்  சந்தேகம்  எழும்  அளவுக்கு  ஓவராக  நாயகனிடம்  உரிமை  எடுத்துக்கொள்கிறார்


போலீஸ்  ஆஃபீசர்  ஆக கவுரவ் நாராயணன்  விறைப்பாக  நடித்திருந்தாலும்  வசன  உச்சரிப்பில்  கோட்டை  விட்டிருக்கிறார். மெயின்  வில்லன்  ஆக  கவிதா  பாரதி  கம்பீரமான  நடிப்பு  ( இவர்  ஈரோடு  மாவட்டம்   சென்னிமலையான  எங்க  சொந்த  ஊர்க்காரர்  ஆக்கும். ஹலோ , நினைத்தேன்  வந்தாய்  பட இயக்குநர்   கே செல்வ பாரதி  கூட  சென்னிமலை  தான் )


சிறுமியாக  வரும்  அபிநட்சத்திரா  புருவங்கள்  இணைந்த  கண்  அழகி . நல்ல  நடிப்பு , அவரது  அம்மாவாக  வரும்  அனுபமா  குமார்  கனகச்சிதம் 


பிரபு  ராகவின்  ஒளிப்பதிவில்   இருட்டுக்காட்சிகளில்  சிக்சர்  அடிக்கிறார் . எடிட்டர்  இக்னேஷியஸ்  அஸ்வின்  டைம்  டியுரேசன்  2  மணி  நேரம்  வருமாறு  ட்ரிம்  செய்திருக்கிறார். முதல்  பாதியில்  இழுவைக்காட்சிகளைக்குறைத்து  இருக்கலாம் . அருண்  ராஜின்  இசை  குட், பின்னணி  இசை  அருமை 


 பேய்க்கு  மேக்கப்  போடுபவர்  லீவ்  எடுத்துக்கொண்டதால்  முகத்தை  கூந்தலால்  மறைத்து  சமாளித்த  விதம்  அருமை 


சபாஷ்  டைரக்டர்  (மோகன்  கோவிந்த் ) 

1  ஜவுளிக்கடை  ஷோ  கேஷ்   பொம்மைகள்  ஒரு  அறையில்  வரிசையாக  முக்காடிட்டு  மூடிய  நிலையில்  இருக்க  அங்கே  நடக்கும்  திகில்  சம்பவம்  அருமை 


2 வில்லனின்  ஃபிளாட்டில்  மித்ரா  இருப்பதை  ஸ்மார்ட் வாட்ச்சில்  அட்ரஸ்  ரிமைண்ட்  வாய்ஸ்  மூலம்  கேட்கும்  இடம்  குட் 

3   பேய்  தயாரித்த  ஸ்வீட்  பற்றி  எல்லோரும்  சிலாகிக்கும்  காட்சியும்  நாயகன்  முகத்தில்  மட்டும்  உண்மை  அறிந்து  திகில்  ஆவதும் 

ரசித்த  வசனங்கள் 


1    எங்க  டிப்பார்ட்மெண்ட்  ரூல்ஸ்  படி  எங்களையே  நாங்க  நம்பக்கூடாது

2 கடை மூடறதுக்குள்  போய்  வாங்கிட்டு  வா

 புரியல 

10  மணிக்கு  எந்தக்கடை  மூடுவாங்க?

புரிஞ்சிடுச்சு 

3 கதவு  ரொம்ப  டைட்டா  இருக்குண்ணே 

 இல்லை , நீ தான்  டைட் ஆகிட்டே

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 மர்மமான  சத்தம்  அதிகமாக  வரும்போது  அதைத்தாங்க  முடியாத  நாயகன்  அதை  நிறுத்துங்க  என  கத்திக்கொண்டே  இருக்காரே?  வெளியே  போகலாமே? 


2   ஃபிளாஸ்பேக் சீனில் மித்ரா  ஆட்டோவில்  போகும்போது  அது  ரிப்பேர்  ஆகிற்து , அர்ஜெண்ட்  ஆக போக  வேண்டிய  சமயத்தில்  ஆட்டோ  பக்கத்துலயே  இருப்பாங்களா? ஆட்டோ  டிரைவ்ரிடம்  நீங்க  ரிப்பேர்  பண்ணிட்டு  என்னைக்கூப்பிடுங்க , அதுவரை  நான்  கிரவுண்ட் ல  இருக்கேன்  அப்டினு  மேட்ச்   பார்த்துக்கிட்டே   நாயகனின்  உருவத்தை  ஓவியமாக  வரைஞ்சிட்டு  இருக்கு  பாப்பா. நல்ல  வேளை , சினிமா  தியெட்டர் போய்  படம்  பார்க்கலை 


3 தலையில்  அடிபட்டதால்  அடிக்கடி  நினைவை  இழக்கும்  மித்ரா  கஜினி  படத்தில்  வருவ்து  போல்  பேப்பரில்  எழுதி  வைத்துக்கொள்ளலாமே?

4   பேயாக  வரும்  மித்ரா  நாயகனின்  ரெஸ்ட்டாரண்ட்டில்  அவன்  நண்பர்களை  பயமுறுத்துவது  எதற்கு? மித்ராவின்  ஃபிளாஸ்பேக்  கதைக்கும்,  நாயகனுக்கும்  சம்பந்தமே  இல்லை 

5  பேய்  ரொம்ப  மரியாதை  தெரிஞ்ச  குடும்பத்து வளர்ப்பு  போல. தன்னை  நாசம்  ஆக்கிய  வில்லனைப்பார்த்து  என்னை  ஏங்க  இப்படிப்பண்ணுனீங்க?னு  மரியாதையாக்கேட்குது . என்ன  ஏண்டா  இப்டி  செஞ்சே? நாயே?னு  கோபமா  டயலாக்  வெச்சிருக்க  வேண்டாமா?

6  க்ளைமாக்ஸ்ல  போலீஸ்  ஆஃபீசர்  தன்  தங்கையைக்கொலை  செய்ய  முயற்சி  செய்து  கொண்டிருக்கும்  வில்லனைப்பார்த்து  அவ்ளை  விடுங்க , விட்டுடுங்க , இல்லைன்னா  சுட்டுடுவேன்னு  மரியாதையா  சொல்லிட்டு  இருக்கார்/ எந்த  ஊர்ல  எந்த  போலீஸ்  கிரிமினல்ஸ்க்கு  இவ்ளோ  மரியாதை  தருது ? 

7 போலீஸ்  இன்ஸ்பெக்ட்ர்  தன்னைத்தேடி  வந்திருக்கார்னு  தெரிஞ்சதும் அவர்  போலீஸ்  ஸ்டேஷன்ல  அஃபிஷியலா  இன்ஃபார்ம்  பண்ணிட்டுதான்  வந்திருப்பார்னு  தெரியாதா?  வில்லன்  போலீஸ்  ஆஃபீசரைக்கொலை  செய்ய  முயற்சி  செய்யறார். தான்  கொலைக்கேசில்  மீண்டும்  மாட்டிக்குவோம்னு  தெரியாதா? 


8  ஒரு  முக்கியமான  கொலைக்கேசில்  ஆளை  விசாரிக்க  வரும்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  தனியாகவா  வருவார்? அட்லீஸ்  4  கான்ஸ்டபிள்ஸ் உடன்  வர மாட்டரா?  ஜீப்  டிரைவர்  கூட  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்கமான  டெம்ப்ளேட்  பேய்க்க்தை  தான்  பின் பாதி , முதல்  பாதி  சில  வித்தியாசமான  காட்சிகள்  ரசிக்க  வைக்கின்றன . பார்க்கலாம்  , ரேட்டிங் 2.5 / 5 


Pizza 3: The Mummy
Theatrical release poster
Directed byMohan Govind
Starring
CinematographyPrabhu Raghav
Music byArun Raj
Production
company
Release date
  • 28 July 2023
CountryIndia
LanguageTamil
Box office5cr