Friday, August 18, 2023

GIRL'S TO BUY (2021) (போலந்து) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

   


2021  ஆம்  ஆண்டின்  டாப் 5  வசூல்  சாதனைப்படங்களில்  இதுவும்  ஒன்று . ஜேம்ஸ்  பாண்ட்  படமான  நோ  டைம்  டூ  டை  க்கு  நிகரான    வசூலை  இது  ஏற்படுத்தியது. இது  உண்மை  சம்பவங்களின்  அடிப்படையில்  எழுதப்பட்ட  திரைக்கதை . ஒரு  பாடகி  தான்  இதன்  தயாரிப்பாளர். ஒரு  சாதாரண  பெண்  எப்படி  அரபு  ஷேக்குகளுக்கு  லேடீஸ்  சப்ளை  செய்யும்  ஏஜெண்ட்  ஆக  மாறுகிறார்?  அந்த  பிஸ்னெசின்  கறுப்புப்பக்கங்கள்  என்ன? என்பதை  விவரிக்கும்  கதை . DZIEWEZYNY Z DUBAJU


போலந்து  மொழியில்   எழுதப்பட்ட  நாவல்  ஆன  DZIEWEZYNY Z DUBAJU  (girl's from dubai)  2018l வெளீயானது . அந்த  நாவலைத்தழுவி  திரைக்கதை  அமைக்கப்பட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி   தன்  அம்மாவுடன்  வசித்து  வருபவர் , அவருக்கு  விரைவில்  செல்வச்சீமாட்டி  ஆக   வேண்டும்  என்ற  கனவு  உண்டு. அம்மாவின்  ஏகபப்ட்ட  கண்டிஷன்களுடனான   வாழ்க்கை  அவருக்கு  செட்  ஆகவில்லை . அதனால்  அம்மாவை  விட்டுப்பிரிந்து  தனியே  வாழ்கிறார்


ஒரு கப்பலில்  ஒரு  பார்ட்டி  நடக்க  இருககிறது. அதற்கு  இளம்பெண்கள்  தேவை . நாயகி  அந்த  வேலையை  செய்ய  முற்படுகிறார். இளம்பெண்களை  சப்ளை  செய்தால்  அதற்கு  தனியாகக்கமிஷன்  கிடைக்கும் 


 கப்பலில் ஒரு  ஆளுடன்  நாயகிக்குப்பழக்கம்  ஏற்படுகிறது, அவர்  கையில்  காசு  புரள்கிறது

பார்ட்டி  முடிந்தவடன்  அவரவர்  அறைக்கு  வந்து  பார்த்தால்  எல்லோர்  பணமும்  களவு  போய்  இருக்கிறது . போலீசில்  புகார்  கொடுக்க  முடியாத  சூழல் 


இந்த  அமளி துமளிகளுக்கு  இடையே  ஒரு  குடும்பப்பாங்கான  நபர்  நாயகியை  பிரப்போஸ்  செய்கிறார். நாயகி  அவருக்கு  ஓக்கே  சொல்ல  இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது . ஒரு  குழந்தைக்கு  தாய்  ஆகிறார். குடும்ப  வாழ்க்கை  நன்றாகப்போய்க்கொண்டிருக்கிறது 


 இப்போது  கப்பலில்  சந்தித்த  அந்த  நபர்  நாயகியைப்பார்க்க  வருகிறார். கணவனுக்கு  நாயகியின்  நடவடிக்கைகள்  பிடிக்கவில்லை . கணவன்  குழந்தையை  பள்ளியில்  இருந்து  அழைத்துக்கொண்டு  தனியே  போய்  விடுகிறார். நாயகி  போலீசில்  மாட்டிக்கொள்கிறார்


 பெண்களை  அவர்கள்  விருப்பத்துக்கு  மாறாக  பாலியல்  தொழில்  ஈடுபட  வைத்ததாக  அவர்  மேல்  குற்றச்சாட்டு. நாயகி  அந்த  கேசில்  இருந்து  தப்பித்தாரா?|  நாயகியின்  குழந்தைக்கு  உண்மையான  அப்பா  யார்?  கணவனா? கப்பலில்  சந்தித்த  காதலனா? இதற்கெல்லாம்  பின்  பாதி  திரைக்கதை  விடை  அளிக்கிறது   


நாயகி  ஆக  நடித்தவர்  கேரக்டர்  டிசைன்  அப்பாவிப்பெண்ணாகப்படைக்கபடாமல்  ஆடபரப்பிரியை  போல்  காட்டப்படுவதால்  அவர்  போலீசில்  மாட்டும்  காட்சிகளில்  நமக்கு  அவர்  மேல்  பரிதாபம்  வரவில்லை . அதே  போல  தன்  கர்ப்பத்துக்காரணம் ஒருவன், ஆனால்  இனிஷியலுக்கு  மட்டும்  இன்னொருத்தன்  என  முடிவு  எடுப்பது  அவர்  மேல்  மேலும்  வெறுப்பைத்தான்  ஆடியன்சுக்கு  வளர்க்கிறது 


கணவன்  ஆக  வருபவர்  மீது  நமக்குப்பரிதாபம்தான்  வருகிறது . இத்தனைக்கும்  நாயகி  செய்யும்  தொழில்  பற்றி  நன்கு  அறிந்தே  இருக்கிறார்


தமிழ்ப்படம்  போல  கிட்டத்தட்ட  ரெண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது . இன்னும்  க்ரிஷ்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின்  மாமனார்  தன்  மகனிடம்  உனக்கு  அவ  கூடப்படுக்கனும்னு  ஆசை  இருந்தா  அதை  நிறைவேற்றிக்கொள், ஆனா  குடும்பப்பெண்  ஆக்க  நினைக்காதே  என  கனகச்சிதமாய்  நாயகியைக்கணித்து  மகனுக்கு  அறிவுரை  சொல்லும்  காட்சி 


2   ஜெயிலில்  இருக்கும்  நாயகியை  அவரது  அம்மா  பார்க்க  வரும் காட்சியும் , இருவருக்கு  இடையே  யான  வசனமும்


3  நாயகி  ஒரே  காலகட்டத்தில்  காதலன்  கூடவும் , கணவன்  கூடவும்  நெருக்கமாக  இருக்கும்  காட்சிகளை  வடிவமைத்த  விதம்  எடிட்டிங்   கச்சிதம்  



  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  பெண்ணுக்கு  பிரச்சனைன்னா  காப்பாத்தலாம், ஆனா  பெண்ணே  பிரச்சனைன்னா?


2  நீ  நினைக்கற  உயரம்  அடையும்  வரை  நீ இயங்கிக்கொண்டே  தான்  இருக்கனும்


3 கடவுள் படைத்ததில்  அழகான  உயிரினங்கள் குதிரைகள் , பெண்கள் 

4  ரைட்டர்ஸ்  எப்பவும்  ட்ராமாட்டிக்காதான்  இருப்பாங்க 

5 எண்ணங்கள்  சிறகடித்துப்பறந்தாலும்  உன்னை  மாதிரி  ஊர்க்குருவி  பருந்தாக  முடியாது

6  கடலில் மட்டும்  எந்த  ரூல்சும்  கிடையாது , அதனால தான்  நம்  ஆழ் மன  ஆசைகளை  கடலில்  தீர்த்துக்கொள்ள  முடிகிறது 

7 நாம்  யார்? என்பது  முக்கியம் இல்லை , நாம்  எடுக்கும்  முடிவுகள்  தான்  முக்கியம் 

8  உனக்கு  இப்போ  ஒரு  கிஸ்  தரனு,ம்

பர்சனலாவா? ப்ரொஃபஷனலாவா?


9  வாழ்நாள் முழுக்க  நமக்கு  என்ன  தேவை?னு  நாம்  தேடிக்கிட்டுதான்  இருக்கோம், அதுக்காக  ஒரு  பாதையில்  போய்க்கிட்டும்  இருக்கோம் , ஆனா  அந்த  வழியை  விட்டு  நாம  தவறும்போதுதான்  பக்கத்துலயே  நிறைய  வழிகள்  இருப்பதை  உணர  முடியும் 


10 உங்களைப்பார்த்ததுல  சந்தோஷம், ஆனா  உங்களைத்திரும்பிப்பார்ப்பதில்  எனக்கு  இஷ்டம் இல்லை 


11  நம்மை  மாதிரி  பொண்ணுங்க  ரெண்டு  விஷயத்தை  இழக்க  விரும்ப  மாட்டாங்க  1  தலை  2  பணம் 


12  புரோக்கர்களை  இந்த  உலகம்  மன்னிக்காது  என்பதை  மறக்காதே!


13    என் வாழ்க்கைல  நான்  எதுக்குமே  வருத்தப்படக்கூடாதுனு  சொல்லிட்டு  இருந்தேன், ஆனா இப்போ எல்லாத்துக்கும் வருத்தப்பட்டுட்டு  இருக்கேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணத்துக்காக  எதற்கும்  தயாராக  இருக்கும்  பெண்கள்  சொல்லி  வைத்தது  போல்  எல்லோரும் ஒரே  சமயத்தில்  பணத்தை  ஹோட்டல்  ரூமில்  தொலைப்பது  எப்படி ? அசால்ட்டாக  அத்தனை  பேருமா  இருப்பார்கள் ? 


2  இந்தத்தொழில்  பிடிக்காமல்  ஒரு  பெண்  தற்கொலை  செய்து  கொள்வது  மெயின்  திரைக்கதையில்  பெரிய  பாதிப்பை  ஏற்படுத்தவில்லை ,. அது பற்றிய  குற்ற    உணர்வும்  நாயகிக்கு  வரவில்லை 


3  ஃநாயகியின்  அம்மா  என்  மனம்  மாறினார்  என்பதற்குத்தெளிவான  விளக்கங்கள்  இல்லை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 +    காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  ராயல்  லேடி  புரோக்கர்  அல்லது  பிம்ப்  -ன் பயோகிராஃபிக்கல்  மூவி  மாதிரி  இருக்கும்  இக்கதை  எல்லோருக்கும்  பிடிக்காது . குறிப்பிட்ட  சில  ஆண்களுக்கு  மட்டுமே  பிடிக்கும் , பெண்களுக்குப்பிடிக்க  வாய்ப்பே  இல்ல ரேட்டிங்  2.25 / 5 


Girls to Buy
PolishDziewczyny z Dubaju
Directed byMaria Sadowska
Written byMitja Okorn, Dimitrij Potochnik, Lucas Coleman
Produced byDorota Rabczewska
StarringKatarzyna FiguraJan Englert
CinematographyArtur Reinhart
Edited byDoda, Emil Stępień
Music byLanberry, Patryk Kumór, Dominic Buczkowski and Doda
Distributed byPhoenix Productions
Release date
  • November 26, 2021
Running time
146 minutes
CountryPoland
LanguagePolish