Monday, August 07, 2023

யானை முகத்தான் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி காமெடி மெலோ டிராமா)

 


 மலையாளபட  இயக்குநர்  ஆன ரெஜிஷ்  மிதிலா  இதுவரை  மூன்று  மலையாளப்படங்களை  இயக்கி  இருக்கிறார். லால் பகதூர்  சாஸ்திரி , லாரிக்குழியிலே கொலைபாதகம், இன்னு  முதல்  ஆகிய  மூன்று படங்களுமே  பேசப்பட்டவை. மூன்றாவதாக  அவர்  இயக்கிய  இன்னு  முதல்  படத்தின்  தமிழ்  ரீமேக்  தான்  யானை  முகத்தான். அந்த  வகையில்  தமிழில்  இவருக்கு  இது முதல்; படம். இப்படத்தின்  கதைக்கரு   அறை  எண்  305 ல் கடவுள்  படத்தின்  சாயல்  கொண்டது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  ஆட்டோ  ட்ரைவர். இவருக்கு  ஏகப்பட்ட  கடன்  இருக்கிறது .  குடி  இருக்கும்  வீட்டுக்குக்கூட  6  வருடங்களாக  வாடகை  பாக்கி . வாய்க்கு  வந்தபடி  பொய்  பேசி  சமாளித்து  வருபவர்.இவருக்கு  ஆதரவாக  இருப்பவர்கள்  இருவர்  மட்டுமே . நண்பன் மட்டும்  ஹவுஸ்  ஓனர்  அக்கா


நாயகன்  பொய்ப்புளுகன்  ஆக  இருந்தாலும்  தீவிர  வினாயக  பக்தன்.ஒரு  நாள்   திடீர்  என  நாயகன்  வீட்டில்  இருக்கும்  காலண்டரில்  வினாயகர்  உருவம்  மட்டும்  காணவில்லை , அதுமட்டுமல்ல , நாயகன்  கண்ணுக்கு  எந்த  இடத்திலும்  வினாயகர்  ம்ட்டும்  தெரிவதில்லை . இத்னால் நாயகன்  குழப்பம்  அடைகிறார்


அப்போது  வினாயகர்  மனித  ரூபத்தில்  நாயகனுக்குக்காட்சி  அளித்து  ஒரு  நாள்  முழுக்க  பொய்  பேசாமல்  யாரையும்  ஏமாற்றாமல்  இருந்தால்  தன்  விசுவரூப  தோற்றத்தைக்காட்டுகிறேன்  என்கிறார். அதன்படி  நாயகன்  நடந்து  கொண்டாரா?  க்ளைமாக்சில்  என்ன  ஆனது  ? என்பதைப்படம்  பார்த்துத்தெரிந்து  கொள்க 


நாயகன்  ஆக  ரமேஷ்  திலக்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். வினாயகர்  ஆக யோகி  பாபு  யதார்த்தத்தமிழ்  பேசி  ஆச்சரியப்படுத்துகிறார்.ஹவுஸ்  ஓனர்  அக்காவாக  ஊர்வசி  அசத்தல்  ஆன நடிப்பு . நண்பன்  ஆக  கருணாகரன்  அதிக  வாய்ப்பில்லை 


முஸ்லீம்  பெரியவர்  ஆக  உதய்  சந்திரா  உருக்கமான  நடிப்பு 


பரத் சங்கரின்  இசையில்  ஒரு  பாடல்  சுமார்  ரகம். பின்னணி  இசை  பரவாயில்லை 

 2  மணி  நேரம்  ஓடும்  அளவு  எடிட்டிங்கில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


மலையாளப்பட  இயக்குநர்  என்றால்  கொஞ்சம்  ஸ்லோவாகத்தான்  திரைக்கதை  நகரும், அதற்காக  இவ்ளோ  ஸ்லோவாகவா? முதல்  ஒரு  மணி  நேரம்  கழித்துத்தான்  கதையே  ஆரம்பிக்கிறது . அதற்குப்பின்  படம்  ஸ்லோவாக[ப்போகிறது . அது  வரை  டெட்  ஸ்லோ . ரொம்பப்பொறுமை  வேண்டும்  

ரசித்த  வசனங்கள் 


1  கஷ்ட காலத்துல  கூட  இல்லைன்னா  அது  என்ன  கடவுள்?


2 அன்பான  மனிதத்துவம், கடவுள்  ரூபத்தில் ,மனிதன்  இவங்களை  எல்லாம்  ஹாஸ்பிடலில்தான்  பார்க்க முடியும் 


3  நான்  நேர்மையான  ஆளா  ஒரு  முழு  நாள்  நடந்துக்கிட்டா  கடவுளின்  உண்மையான  உருவமான  பத்து  தலையுடன்  தரிசனம்  தர  முஜ்டியுமா? 


 பத்து  தலை  பார்க்கனும்னா  சிம்பு  படம்தான்  பார்க்கனும்


4  மனிதனுக்குள்  கலந்த  விஷம்  சுயநலம



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  மணி  நேரப்படமாக  எடுத்திருக்க  வேண்டியது  ரொம்ப  இழுத்து  விட்டார்கள் . சுமார்  ரகம் . ரேட்டிங்  2.25 / 5 


Yaanai Mugathaan
Theatrical release poster
Directed byRejishh Midhila
Written byRejishh Midhila
Produced by
  • Rejishh Midhila
  • Lijo James
Starring
CinematographyKarthik S Nair
Edited bySyalo Sathyan
Music byBharath Sankar
Production
company
The Great Indian Cinemas
Distributed byUFO Moviez India Limited
Release date
  • 21 April 2023
CountryIndia
LanguageTamil