Thursday, August 03, 2023

MY FAULT (2023) - CULPA MIA ( ஸ்பானிஷ்) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


2023  ஜூன் 7  அன்று  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  ரிலீஸ்  ஆன  இந்த  ஸ்பானிஷ்  படம்  ரிலீஸ்  ஆன  முதல்  மூன்று  நாட்களிலேயே  ஆங்கில  மொழி  அல்லாத  வேறு மொழிப்படங்களில்  அதிக  பார்வையாளர்களைப்பெற்ற  படம்  என்னும்  பெருமையைப்பெற்றது .


மெர்சிடிஸ்  ரான் எழுதிய  நாவலின்  திரை வடிவம்  தான்  இந்தப்படம் இது  பரபரப்பாகப்பேசப்பட்டதுக்கு  முக்கியக்காரணம் இது  இன்செஸ்ட்  லவ்  ஸ்டோரி  என்பதால்


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி யின்  அம்மா  கணவனைப்பிரிந்து  வாழ்ந்தவள் , இப்போது  ஒரு மல்ட்டி  மில்லியனரைத்திருமணம்  செய்து  கொண்டார். சாதாரண  மிடில்  கிளாஸ்  வாழ்வு  வாழ்ந்த  நாயகி  இப்போது  அம்மாவுடன்  அவரது  புதுக்ணவர்  வாழும்  மாளிகைக்கு  செல்ல  இருக்கிறார்


 நாயகிக்கு  ஒரு  பாய்  ஃபிரண்ட்  உண்டு . தன்  நணபர்கள் , பாய்  ஃபிரண்ட்  இவர்களை  எல்லாம்  விட்டுச்செல்ல  நாயகிக்கு  மனமே  இல்லை . வேண்டா  வெறுப்பாகத்தான்  நாயகி  அங்கே  செல்கிறாள் 


ஆனால்  பிரம்மாண்டமான  மாளிகை , ஆடம்பர  வசதிகள்  இவற்றை  எல்லாம்  பார்த்து  பிரமித்துப்போய்  விடுகிறாள் . இது  போக  தன்  அம்மாவின்  புதுக்கணவனின் முதல்  மனைவிக்குப்பிறந்த  மகன்  22  வயது  ஆனவனைப்பார்த்து  ஆரம்பத்தில்  இருவரும்  எலியும் , பூனையுமாக  சண்டை  போட்டுக்கொள்கிறார்கள் 


 17  வயதான  நாயகி  22  வயதான  தன் அண்ணன்  முறை  ஆக  வேண்டிய  நாயகனுடன்  காதல்  வயப்படுகிறாள் . இருவரும்  காதலிக்கிறார்கள் 


நாயகியின்  அப்பா  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகிறார். தன்  மனைவி  ஒரு  முறை  கூட  தன்னை  ஜெயிலில்  வந்து  பார்க்கவில்லையே  என்ற  கோபம்  அவருக்கு , தன்  மக்ளையே  கடத்தி  பணயக்கைதியாக  வைத்து  பணம்  கேட்டு  மிரட்டுகிறார். இதற்குப்பின்  நடந்தது  என்ன  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகியாக  நிக்கோல்  வேலஸ் . 1997ல்  ரிலீஸ்  ஆன  ரோஜா  மலரே  நாயகி  ரீவா  சாயலில்  இருக்கிறார்  ( அழகோவியம்  உயிரானது  பாடல் ) சிறப்பான  நடிப்பு . இளமையான  முகம். ஆனால்  பிரமாதமான அழகி  என  சொல்லி  விட  முடியாது 


 நாயகன்  ஆக  கேப்ரியல்  க்வாரா  செம ஸ்மார்ட்  ஆக  பர்சனாலிட்டி  யூத்  ஆக  வருகிறார். கார்  ரேசிங்   காட்சிகளில்  தூள்:  பரத்துகிறார்.


நாயகியின்  அம்மாவாக  வரும் மார்த்தா  நாயகியை  விட  அழகாக  இருக்கிறார். அவரது  புதுக்கணவராக  இவான்  சான்செஸ்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்


டொமீங்கோ  கொன்சிலஸ்  இயக்கி  இருக்கிறார். 2  மணி  நேரத்துக்கு  எட்டு  நிமிடம்  குறைவாக  படம்  ஓடும்ப்டி  எடிட்டிங்  செய்து  இருக்கிறார்கள் . ஒரு  தமிழ்ப்படம்  பார்ப்பது  போல தான்  பல  காட்சிகள்  நமக்குப்பழக்கப்பட்ட  டெம்ப்ளேட்டில்  போகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  கார்  ரேசில்  கலந்து  கொள்ள  வேண்டிய  நாயகன்  தன்  தோழியிடம்  பிசி ஆகி  விட  எதேச்சையாக  காரில்  இருக்கும் நாயகி  ரேஸ்  காரை  ஓட்ட  நேரும்போது  அவர்  ஆல்ரெடி  ரேஸ்  கார்  ஓட்டியவ்ர்  என்ற  விஷயத்தை  வெளிக்கொணரும்  விதம் அருமை 


2  வழக்கமாக  படங்களில்  ரவுடித்தனத்தை நாயகி  விரும்புவது  போல  காட்டுவார்கள். இதில்  மாறுதலாக  நாயகி  முரட்டுத்தனம் , ரவுடித்தனம் இவற்றை  வெறுப்பதாகச்சொல்வதுஆறுதல்  


  ரசித்த  வசனங்கள் 


1 ரேஸ் ல  தோத்துடுவோம்னு  பயப்பட்றியா?


 ச்சே ச்சே ,ஒவ்வொரு  வருசமும்  ஈசியா  உன்னை எப்படி  ஜெயிச்சோனோ அதே  மாதிரிதான்  இந்த  வருசமும்  இருக்கும் 


2  ஆறு  வயசு  பாப்பா = ஜேம்ஸ்பாண்ட்  எனக்கு  ஃபிரண்ட்  ரிக்வஸ்ட் கொடுத்தார், நான்  இக்னோர்  பண்ணிட்டேன்


 ஏன்? உனக்கு  அவரைப்பிடிக்கலையா?


 ஆல்ரெடி  எனக்கு  ரெண்டு  பாய்  ஃபிரண்ட்ஸ்  இருக்காங்க 


3   உன்னை  கிஸ்  பண்றது  தப்பு , உனக்கு  17  வயசுதான்  ஆகுது, மைனர்


 அப்போ  18  வயசு  ஆகும்வரை  கிஸ்  பண்ணிட்டே  இரு


4  சாரி,உன்  சாயலிலேயே  இருந்ததால்தான்  அந்தப்பெண்ணை  கிஸ்  பண்ணேன்


 உன்  சாயலில் எத்தனையோ  பசங்களைப்பார்த்தேன், ஆனா  நான்  அப்படிப்பண்ணலையே? 


5   என்னடா இவன்? பூ  பொக்கே  பரிசாத்தராம  புல்வெளி பொக்கே  த்ந்து  விட்டிருக்கான் ? 


6   உன்னை வெறுக்கறது  எனக்கு  ஏன்  இவ்ளோ  கஷ்டமா  இருக்கு ? 


7  அவளுக்கு  நர்ஸ்  தேவை  இல்லை , அம்மா  தான்  தேவை 

8 இதுதான்  நாம  பகிர்ந்துகொள்ளும்  கடைசி  முத்தமா  இருக்கனும்


 அப்படி  கடைசி  முத்தமா  இருக்கனும்னா  நாம  ஏன்  அதை  முதல்  முத்தமா  மாத்திக்கக்கூடாது ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  அப்பா  ஏன்  ஜெயிலுக்குப்போனார்? நாயகி  தன்  சொந்த  அப்பாவைப்பார்த்து  ஏன்  பயப்படுகிறார் ?   என்ப்தைப்பற்றி  தெளிவாக  ஏதும்  சொல்லவில்லை, பூடகமாகத்தான்  சொல்கிறார்கள் 


2  பஞ்சும், நெருப்பும்  பற்றிக்கொள்ளும்  என்ற  உண்மை  அறியாமலா  நாயகியின்  அம்மாவும், நாயகனின்  அப்பாவும்  இருப்பார்கள் ? 


3  பல பெண்  தோழிகளைக்கொண்டிருக்கும்  நாயகன்  கோகுலத்தில்  சீதை  கார்த்திக்  மாதிரி  நாயகியிடம்  உன்னிடம்  யாராவது  பேசினால்  எனக்குப்பொறாமையாக  இருக்கிறது  என்று  சொல்வது  நம்ப  முடியவில்லை , அந்த  அளவுக்கு  நாயகி  அழகும்  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+ காட்சிகள்   உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சராசரியான  ரொமாண்டிக்  ஸ்டோரிதான். டைம்  பாஸ்  கேட்டகிரியில்  சேர்க்கலாம் ., ரேட்டிங்  2.25 /5 


My Fault
Promotional release poster
SpanishCulpa mía
Directed byDomingo González
Screenplay byDomingo González
Based onCulpa mía
by Mercedes Ron
Produced by
Starring
Production
company
Pokeepsie Films
Distributed byAmazon Studios
Release date
  • 8 June 2023
CountrySpain
LanguageSpanish