தமிழில் ரிலீஸ் ஆன ஸ்பை ஆக்சன் த்ரில்லர்களில் இது ஒரு மெகா ஹிட் படம் , ஜெய்சங்கருக்கு நட்சத்திர அந்தஸ்தைத்தந்த படம், ஆனந்த விகடன் , குமுதம், கல்கி வார இதழ்களில் விமர்சனங்களில் பாராட்டித்தள்ளீய படம்
1964 ல் ரிலீஸ் ஆன ஃபிரெஞ்ச் படமான ஷேடோ ஆஃப் ஈவில் படத்தின் அஃபிஷியல் ரீ மேக் இது . கமர்ஷியல் ஆக செம விறுவிறுப்பாக , ஜாலியாகப்போகும் படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாட்டில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன, ரயில்களில் பாம் வைக்கிறார்கள் . இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருந்து கந்தகம் சப்ளை ஆகிறது ? இவர்களாகவே தயாரிக்கிரார்களா? எங்காவது வாங்கிக்கொள்கிறார்களா? ஆயுத சப்ளை எங்கே நடக்கிறது ? இவற்ரை எல்லாம் கண்டு பிடிக்க உளவுத்துறை சிஐடி ஆஃபீசரை நியமிக்கிறது
கந்தக தொழிற்சாலையில் இதைப்பற்றி விசாரிக்கச்சென்ற சி ஐடி ஆஃபீசர் மர்மமான முரையில் கொலை செய்யப்படுகிறார். இந்தக்கொலை பற்றி துப்பு துலக்கவும், ஆயுத சப்ளை பார்ட்டியை பிடிக்கவும் இன்னொரு சி ஐ டி ஆஃபீசர் வருகிறார், அவர்தான் நாயகன்
நாயகன் இந்தக்கேசை துப்பு துலக்குகிறார் . ஒரு டாக்டரின் தங்கையைக்காதலிக்கிறார். நாயகனின் பர்சனல் அசிஸ்டெண்ட் இருவரும் எதிராளீயின் கையாள்கள் . இங்கே நடப்பதை அங்கே பாஸ் செய்கிறார்கள் . அதை எல்லாம் நாயகன் எப்படிக்கண்டு பிடித்து எதிரியை வீழ்த்துகிறான் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஜெய் சங்கர் வழக்கமான ஸ்டைல் , பிரமாதமான டிரஸ்சிங், சுறு சுறுப்பான ஆக்சன்கள் என வலம் வருகிறார்
நாயகி ஆக எல் விஜயலட்சுமி அருமையான ஜோடிப்பொருத்தம் . பாடல் காட்சிகளில் அவரது முக பாவங்கள் அடடே!
தேங்காய் சீனிவாசன் காமெடி டிராக் ரசிக்கும்படி இருக்கிறது . நாயகனின் அண்ணனாக மனோகர் நல்ல கம்பீரமான நடிப்பு
வேதா வின் இசையில் ஐந்து பாட;ல்கள், அவற்றில் மூன்று மெகா ஹிட் பாலுவின் எடிட்டிங்கில் கச்சிதமாக இரண்டரை மணி நேரம் படம் ஓடுகிறது
ஏ எல் நாராயணன் திரைக்கதைக்கு ஆர் சுந்தரம் உயிர் கொடுத்து இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் எந்த ஹோட்டலில் ரூம் போட்டாலும் அந்த ரூம் நெம்பரை உலகமெல்லாம் பரப்பி விட்டு அந்த ரூமுக்கு அருகே இருக்கும் ரூமில் தங்கி கண்காணிப்பது நல்ல ஐடியா
2 எதிர்ப்படும் பெண்களிடம் எல்லாம் வழிந்து ஃபோட்டோ எடுத்து வலிய நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் நாயகனின் குணம் ஜேம்ஸ்பாண்ட் சாயல்
3 டிடெக்டிவ் கம் ஸ்பை ஆக்சன் படம் என்றாலும் காமெடி , காதல் என ஜனரஞ்சகமான மசாலா படமாக எடுத்த விதம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 பளிங்குனால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம்உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா
2 இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது நான் கேட்டதை தருவாய் இன்றாவது
3 தொட்டுத் தொட்டுப்பாடவா
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான , விறுவிறுப்பான ஸ்பை ஆக்சன் த்ரில்லர் . இந்தக்காலத்திற்கும் ஏற்ற படம் , ரேட்டிங் 2.75 / 5
Vallavan Oruvan | |
---|---|
Directed by | R. Sundaram |
Written by | A. L. Narayanan |
Produced by | T. R. Sundaram |
Starring | Jaishankar L. Vijayalakshmi |
Cinematography | C. A. S. Mani |
Edited by | L. Balu |
Music by | Vedha |
Production company | |
Release date |
|
Running time | 147 minutes[1] |
Country | India |
Language | Tamil |