இதே டைட்டிலில் வெவ்வேறு கால கட்டங்களில் ஆறு படங்கள் , ஏழு வெப் சீரிஸ்கள் ரிலீஸ் ஆகி உள்ளன/ எல்லாமே வேறு வேறு கதைகள் . அவுட் லா என்பதற்கு சட்டத்திற்குப்புறம்பாக வாழ்பவர்கள் என்று அர்த்தம் நெட் ஃபிளிக்சின் நேரடி ரிலீஸ் ஆன இப்படம் 2023 ஜூலை 7 அன்று வெளியானது . காட்சி ரீதியாக ஏ காட்சிகள் இல்லை என்றாலும் வசனங்களில் பச்சை வாசம் அடிப்பதால் ஏ சர்ட்டிஃபிகேட் உடன் வந்துள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு பேங்க் மேனேஜர் ,. தன் காதலியை மணக்க இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். அத்திருமணத்துக்கு இரு தரப்புப்பெற்றோரும் வர இருக்கிறார்கள் , அவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமே என்ற கவலையில் நாயகன் இருக்கிறார்
நாயகியின் பெற்றோர் அமேசான் காடுகளில் வாழ்ந்தவர்கள் என்பதால் கொஞ்சம் நாகரீகம் இல்லாமல் இருப்பார்கள் , தன் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கவலை நாயகனுக்கு
நாயகியின் பெற்றோர் வருகிறார்கள் . பார்ட்டியில் மப்பில் நாயகன் தன் பேங்க் செக்யூரிட்டி சிஸ்டம் பற்றி வருங்கால மாமியாரிடம் உளறி விடுகிறான்
அடுத்த நாள் நாயகனின் பேங்க் கொள்ளை அடிக்கப்படுகிறது . கொள்ளை அடித்த நபர்கள் இருவர் . அவர்கள் தன் வருங்கால மாமனார் - மாமியார்தான் என்ற சந்தேகம் நாயகனுக்கு
அதே போல் போலீசுக்கு நாயகன் மீது சந்தேகம் . இந்த பேங்க் கொள்ளைக்கு நாயகன் ஒரு முக்கியமான காரணம் ஆக இருந்திருப்பான் என நினைக்கிறார்கள்
இப்போது ஒரு கட்டத்தில் நாயகனின் வருங்கால மாமனார் , மாமியார் இருவரும் தாங்கள் தான் பேங்க் கொள்ளையர்கள் என ஒத்துக்கொள்கிறார்கள் . இன்னும் 5 நாட்களில் 5 மில்லியன் டாலர் கொள்ளை அடித்து ஒரு நபரிடம் தர வேண்டும் அப்படி இல்லை என்றால் நாயகியை உயிருடன் பார்க்க முடியாது , பணயக்கைதி போல் நாயகி
\ இப்போது நாயகனும் பேங்க் கொள்ளைக்கு தயார் ஆகிறார். அவர், வருங்கால மாமனார், வருங்கால மாமியார் மூவர் கூட்டணியில் இரு வெவ்வேறு பேங்க் கொள்ளைகளை எப்படி செய்தார்கள் என்பதே காமெடி களேபரமான பின் பாதி திரைக்கதை
நாயகன் - நாயகி இருவரும் காமெடி நடிப்பில் களை கட்ட வைக்கிறார்கள் . அதே போல் நாயகனின் வருங்கால மாமனார் - மாமியார் இருவரும் ஆக்சன், காமெடி இரண்டிலும் அதகளப்படுத்துகிறார்கள் . நாயகனின் பெற்றோருக்கு அதிக வாய்ப்பு இல்லை
ஒன்றரை மணி நேரம் ஓடும் அளவு டைம் டியூரெஷன் இருக்கிறது , கச்சிதமான எடிட்டிங், பிரம்மாண்டமான ஒளிப்பதிவு . பின் பாதி சேசிங் காட்சிகள் , ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்து . முதல் பாதி காமெடிகள் வசனத்தாலேயே படம் கலகலப்பாகச்செல்கிறது
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங் காட்சிகளில் இரு தரப்புப்பெற்றோருக்கும் நடக்க இருக்கும் ஈகோ கிளாஸ் தான் படம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அப்படியே யூ டர்ன் அடித்து திரைக்கதையை ராபரி திரில்லர் ஆகக்கொண்டு போன சாமார்த்தியம் அருமை
2 தம்பதி தனிமையில் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தும் வரம்பு மீறாமல் கண்ணியம் காத்த விதம் குட்
3 பேங்க் லேடி மேனேஜரை உசுப்பேற்றி செக்யூரிட்டி சிஸ்டம் பற்றிய உண்மைகளை வர வைக்கும் நாயகனின் சாமார்த்தியம் கலக்கல் காமெடி
ரசித்த வசனங்கள்
1 உங்க பொண்ணு கிட்டே தான் நான் யோகா க்ளாஸ் போனேன். முத நாளே என்னைப்பார்த்து அவ சிரிச்சா
அடுத்த நாளே டேட்டிங்க்கு கூப்பிட்டிருப்பியே?
அதான் இல்லை . ஒன்றரை வருசம் ஒழுங்கா க்ளாஸ் போனேன், என் ஒழுக்கத்தைப்பார்த்துதான் உங்க பொண்ணு வழுக்கி விழுந்துட்டா
2 இனிமே கேக் எல்லாம் கேக் காதீங்கனு பேக்கரிக்காரன் ஃபோன் பண்ணி சொல்லிட்டான். குனியும்போது குதிரை நெஞ்சுலயே மிதிச்சிடுச்சாம், ஹார்ட் வாய் வழியா வந்துச்சாம்
3 அவன் ஒரு மோசமான ரேசிஸ்ட்
அப்போ நல்ல ரேசிஸ்ட் எல்லாம் இருக்காங்களா?
அதான் என் பாட்டி இருக்காங்களே?
4 அவங்க வர்றாங்க ,நீங்க வழக்கமாப்பேசற மாதிரி நடிங்க
புரியல
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பர்சனல் விஷயங்களைப்பற்றிக்கேட்பீங்களே?
5 என் கெட்டப் பற்றி நீங்க எதுவுமே சொல்லலையே? ஏதாவது சொன்னாத்தானே அடுத்த டைம் நான் இம்ப்ரூவ் பண்ணிக்க முடியும் ? வெயிட் ஏத்தனும்னாக்கூட சொல்லிடுங்க, ஏத்திக்கலாம்
6 அந்த பேங்க்கை ஒருத்தராலயும் கொள்ளை அடிக்க முடியாதுனு நீதானே சொன்னே?
ஒருத்தராலதான் முடியாதுன்னேன், நாமதான் மூணு பேரு இருக்கோமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் காட்சி ரீதியாக அடல்ட் கண்ட்டெண்ட் இல்லை , வசனத்தில் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியாக சிரிக்க விரும்புபவர்கள் அவசியம் காண வெண்டிய மெலோ டிராமா . ரேட்டிங் 2.75 / 5
The Out-Laws | |
---|---|
Directed by | Tyler Spindel |
Written by |
|
Produced by | |
Starring |
|
Cinematography | Michael Bonvillain |
Edited by |
|
Music by | Rupert Gregson-Williams |
Production company | |
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 95 minutes |
Country | United States |
Language | English |