Tuesday, July 04, 2023

பட்டிக்காட்டுப்பொன்னையா (1973) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


எம் ஜி  ஆர்  + ஜெ  காம்போ  வில்  வந்த  கடைசிப்படம் இது . இந்தப்படம்  கம்ர்ஷியலாக  சரியாகப்போகவில்லை  என்றதும்  பலர்  எம் ஜி ஆரிடம்  ஜெ  இனி மேல்  ஜோடியாக  வேண்டாம்.  மக்களுக்கு  அது  சலித்து  விட்டது  என்று  கூறியதாகவும்  அதற்குப்பின்  அவர்  எடுத்த  சொந்தப்படமான  உலகம் சுற்றும் வாலிபன்  படத்தில்  நான்கு  ஜோடிகள்  இருந்தும்  ஜெ  இல்லாததற்கு  அதுதான்  காரணம்  எனவும் சொல்வார்கள் . ஸ்டண்ட்  கலைஞர்   மற்றும்  டூப்  கலைஞரும் ஆன  சாகுல்  பாய்  எம் ஜி ஆருக்கு  டூப்  ஆக நடிக்க  ஆரம்பித்த  முதல்  படம்  இது . மதுரையை  மீட்ட  சுந்தர  பாண்டியன்  வரை  எம் ஜி ஆர்  படங்களுக்கு  ஸ்டண்ட்  மாஸ்டரும்  இவரே , டூப் பும்  இவரே! 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பொன்னையா ஒரு  கிராமத்தில்  ஏழை  விவசாயிக்குடும்பத்தில்  பிறந்தவர் .அவருக்கு  அம்மா, அப்பா , தங்கை , அவரது  முகச்சாயலில்  ஒரு  தம்பி  ஆகியோர் உண்டு. வில்லன்  ஊர்  பண்ணையார். அவரிடம்  நிலம் , மற்றும்  வீட்டு  பத்திரத்தை  அடமானமாக  வைத்து  கொஞ்சம்  பணம் கடன்  வாங்கி  இருக்கிறார்கள் 


காலேஜூக்குப்போய்  படிக்க  தம்பி  முத்தையா  பட்டணம்  போய்  இருக்கிறார். அங்கே  நாயகியை  சந்திக்கிறார்  தம்பி .  . நாயகி பெரிய  செல்வந்தரின்  மகள் , ஆனால்  அவள்  விருப்பத்துக்கு  மாறாக  ஒரு  லூஸ்  முறைமாமனுடன்  கட்டாயத்திருமணம்  நடக்க  இருப்பதால்  நாயகி தற்கொலை  முயற்சியில்  ஈடுபடும்போது  நாயகனின்  தம்பி  முத்தையா  காப்பாற்றுகிறார்.


 இது தான்  சாக்கு  என  நாயகி  அவரை  வீட்டுக்கு  அழைத்துப்போய்  இவர் தான்  என்  காதலன் , இவரைத்தான்  திருமணம்  செய்வேன்   என  அடம்  பிடிக்கிறார். காதலன்  ஏழை  என்பதை  மறைத்து  பெரிய  மிட்டா  மிராசுதாரர்  என  அளந்து  விடுகிறார்


வேறு  வழி  இல்லாமல் முத்தையா  திரும்ணம்  பெற்றோர்  , குடும்பம்  வராமலேயே நடக்கிறது. வீட்டோடு  மாப்பிள்ளை  ஆன  பின்  சில  சுயமரியாதை தாக்குதல் காரணமாக  இனி இந்த  வீட்டுக்கு  பணம்  சம்பாதித்த பின் தான் வருவேன்  என  நாயகன்  வீட்டை  விட்டு  வெளியேறுகிறான்


அங்கே  நாயகன் பொன்னையா வை  ஒரு  பெண்  காதலிக்கிறாள் , அதே  பெண்ணை  வில்லன்  ஆன  பண்ணையாரும்  விரும்புகிறான். நாயகனை  ஊரை  விட்டு  விரட்ட  பணத்தை  , வாங்கிய  கடனை  வட்டியுடன்  திருப்பித்தர  வேண்டும்  என  நெருக்குகிறான்


பணம்  சம்பாதிக்க  நாயகன்  பட்டணம்  வருகிறான் . இப்போது அண்ணன் , தம்பி  இருவருக்கும்  பணத்தேவை  இருக்கிறது . இருவரும்  தனித்தனியாக  வெவ்வேறு குஸ்தி  வீரரிடம்  சேர்ந்து  பயிற்சி  பெற்று  மல்யுத்த  வீரர்கள்  ஆகிறார்கள் 


க்ளைமாக்சில்  ஒரு  மல்யுத்தப்போட்டி  நடக்கிறது , அதில்  வென்றால்  ரூ  ஒரு  லட்சம்  பரிசு . போட்டியாளர்கள்  அண்ணன், தம்பி  இருவரும்தான் , ஆனால்  முகமூடி  போட்டு  ச்ண்டை  இடுவதால்  இன்னார்தான்  இவர்    என  இருவருக்கும்  தெரியாது . இறுதியில்  என்ன  நிகழ்ந்தது ? என்பதே  க்ளைமாக்ஸ்   


பொன்னையா , முத்தையா  என  அண்ணன், தம்பி   டூயல் ரோலில்  எம் ஜி ஆர்.வழக்கமான  எம் ஜி ஆர்  படங்களில்  வரும்  ஓப்பனிங்  சாங்  அட்வைஸ்  சாங்  ஆக அல்லது  தத்துவப்பாடல்  ஆக  இருக்கும், ஒடு  ஹீரோ  துதி  பாடல்  இருக்கும், இந்த  இரண்டும்  மிஸ்சிங். அதே  போல  எம் ஜி ஆர்  படங்களில்  எல்லாப்பாடல்களும்  செம  ஹிட்  ஆகும், இதில்  ஐந்து  பாடல்களில்  இரண்டு  மட்டும் தான்  மெகா  ஹிட் .அதே  போல  டபுள்  ரோலில்  எம் ஜி ஆர்  நடித்தால் இருவருக்கும்  சமமான  பாடல்கள் இருக்கும், ஆனால்  இதில் அண்ணனுக்கு 3 , தம்பிக்கு  ஒன்று  தான் 


மற்றபடி எம் ஜி ஆர்  உற்சாகமாகவே  நடித்திருக்கிறார். ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட  க்ளைமாக்ஸ்  ஃபைட்  சீனில்  இரு  எம் ஜி ஆர்க்கும்  முகமூடி  போட்ட கெட்டப்  என்பதால்  பெருத்த  ஏமாற்றம். இருவருமே   டூப்  நடிகர்கள் .( ஸ்டண்ட்  மாஸ்டர்  சாகுல்  பாய்    யூ  ட்யூப்  பேட்டியில்  இது  பற்றிக்குறிப்பிட்டுள்லார்) 


நாயகியாக  ஜெ . இதில்  கொஞ்சம் உடல்  வாகு  குண்டாக  இருப்பதால் தான் ஜோடிப்பொருத்தம்  இல்லை  என  பேச்சு . நடிப்பில்  வழக்கம் போல  துள்ளல் , அடிக்கடி  அவர்  ஆஹாங்  ஹாங்  என  இழுப்பது  அபாரம்  ( இந்த  பாணியைத்தான்  சின்னி ஜெயந்த்  கொஞ்சம்  மாற்றி  ராஜா  சின்ன  ரோஜா  வில்  ஹாங்  என்பர்) 

இன்னொரு  நாயகி ஆக ராஜ ஸ்ரீ . ஜோடிப்பொருத்தம்  இல்லை . நடிப்பு  ஓக்கே  ரகம்

  பண்ணையாராக  வில்லனாக  எம் என்  நம்பியார் ,  பார்த்து  சலித்த  கேரக்டர்  டிசைன், புதுமையாக  எதுவும்  இல்லை 


 குஸ்தி  பயில்வானாக  அசோகன்  ஓவர்  ஆக்டிங். நான்  படத்தில்  கலக்கி  இருப்பார் . இதில்  கேரக்டர்  டிசைன்  அப்படி .


நம்பியாரின்  தம்பியாக  நாகேஷ் , காமெடி  அதிகம்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


வி கே  ராமசாமி , தேங்காய்  சீனிவாசன்  என  வீணடிக்கப்ப்ட்ட  கலைஞர்கள்  லிஸ்ட்  நீள்கிறது 


 கே  வி மகாதேவன்  இசையில்  இரண்டு  பாட்டு  பட்டி  தொட்டி எல்லாம்  செம  ஹிட்டு . மற்ற  மூன்று  பாடல்களு,ம்  ஏமாற்றம், எம்  ஜி ஆர்  படப்பாட்டுகள்  போலவே  இல்லை , எப்படி  இதை  எல்லாம்  அவர்  ஓக்கே  செய்தார்  என  தெரியவில்லை 


138  நிமிடங்கள்  படம்  ஓடுகிற்து, முதல்  பாதி  அளவு  பின்  பாதி  விறுவிறுப்பாக  இல்லை ,  திரைக்கதை  போகப்போக தடுமாறுகிறது. அண்ணன் , தம்பி  இருவருமே  ஃபைட்  மாஸ்டர்  போல  ஆவது  நம்பும்படி  இல்லை 


சபாஷ்  டைரக்டர் ( பி எஸ்  ரங்கா) 


1  அரதப்பழசான  ரோல்களில்  நம்பியார் , அசோகன்  இருவரையும்  புக்  செய்த  சாமார்த்தியம் 


2  வீட்டோடு  மாப்பிள்ளையாய்  இதுவரை  நடிக்காத  எம் ஜி ஆரை  ஏதோ  சால்ஜாப் சொல்லி  சம்மதிக்க  வைத்தது


3   காமெடி  டிராக்கே  ரெடி  பண்ணாமல்  நாகேஷை  காமெடி  ரோலில்  புக்  செய்தது


4   ஐந்தே  பாடல்கள்  அதில்  மூன்றே  பாட்ல்களை  எம் ஜி ஆருக்கு தந்து   இரண்டு  பாடல்களை  லேடி  சோலோ  சாங்க் ஆக்கிய  சாமார்த்தியம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1    ஏ  மச்சான்  அட  என்  பொன்னு   மச்சான்  என்னைத்தொடாதே


2  ஒரு  வருசம்  காத்திருந்தா  கையில்  ஒரு  பாப்பா 


3  டிடி டி  சாத்துக்குடி 


4 பட்டுப்போல  பெண்ணை 


5  இரவுகளைப்பார்த்த 



  ரசித்த  வசனங்கள் 


1   ஆண்டவன்  நமக்கு  இரண்டு கைகளை  எதற்குத்தந்திருக்கிறான்  தெரியுமா?  ஒரு  கை  நாம் வாழ  உழைக்க , இன்னொரு  கை  மற்றவர்களுக்காக  உழைக்க 


2  நல்லவர்களுக்கு  சோதனை  வருவது  தற்காலிகம்தான் , இறுதியில்  எப்போதும்  நல்லவர்கள்  தான்  ஜெயிப்பார்கள் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  மாப்பிள்ளை  பெரிய  பணக்காரன்  என சொல்லும்  பொய்யை  பெண்ணின் பெற்றோர்  அப்படியே  நம்பி  திருமணம்  செய்து  வைத்து  விடுவார்களா? விசாரிக்க  மாட்டார்களா?? 


2  திருமணத்துக்கு  மாப்பிள்ளை  தரப்பில்  நண்பர்கள்  கூட  யாரும்  வரவில்லை  என  சந்தேகம்  வராதா?


3   இரு  நாயகர்களும்  ஒரே  முகச்சாயலில்  இருக்க  தம்பியின் திருமணத்துக்கு  வரும்  அண்ணன்  எக்ஸ்ட்ரா   ஃபிட்டிங்க்  ஆக  தாடி  கெட்டப்பில்  வர  தம் பி  காரணம்  கேட்கும்போது  அண்ணன்  சொல்லும்  காரணம்  - கல்யாண  வீட்டில்  குழப்பம்  வராதா? ஒரே  சாயலில்  இருவர்  இருந்தா;ல்?என்கிறார் . லைட்டா ஒரு  தாடி  வைத்தால் அடையாளம்  மாறிடுமா? 


4 பொதுவாக  பண்ணையார்கள்  பெண்களை  வீழ்த்தத்தான்  பார்ப்பார்கள் ,  ஒரு  சாதா  பெண்ணைக்கல்யாணம்  பண்ணிக்க  கெஞ்ச மாட்டார்கள்  


5   வி  கே  ராமசாமி  ஷேர்  மார்க்கெட்டில்  ரூ  5  லட்சம்  இழந்ததும் எல்லாம்  போச்சே  என  புலம்புகிறார். அவர்  மனைவி  மாப்பிள்ளை  வந்த  ராசி  என்கிறார். மாப்பிள்ளையை  அனுப்பினால்  பெண்ணும்  போவார்  என  தெரியாதா?   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர்  ரசிகர்களை  செம  கடுப்பாக்கும்  [[படம்,  மற்றவர்கள்  ஜாலியாக  ரசிக்கலாம் ., ரேட்டிங்  2.25 / 5 


Pattikaattu Ponnaiya
Pattikaattu Ponnaiya.jpg
Theatrical release poster
Directed byB. S. Ranga
Story byShyamala (Devi)
Produced byB. S. Ranga
StarringM. G. Ramachandran
Jayalalithaa
Rajasree
CinematographyB. N. Haridas
Edited byV. Chakrapani
M. Devandranath
Music byK. V. Mahadevan
Production
company
Vasanth Pictures
Release date
  • 10 August 1973
Running time
138 minutes
CountryIndia
LanguageTamil