Monday, July 03, 2023

THRISHANGU (2023) -திரிசங்கு - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 டைட்டிலைப்பார்த்ததும்  இது  த்ரிஷா  நடிச்ச  படம்னு  நினைச்சேன், ஆனா  அன்னாபென்  நடிக்க  அறிமுக  இயக்குநர்   அச்சியுத் வினாயக்  இயக்கிய  ஜாலியான  ரொமாண்டிக்  காமெடி  மெலோ  டிராமா  இது . மே  மாதம் 23  அன்று  திரை  அரங்குகளில்  வெளியாகி  ஏ  செண்ட்டர்களில் வரவேற்பைப்பெற்ற இப்படம்  இப்போது  ஜூன் 23  முதல்   நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆகி  உள்ள்து

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  காதலர்கள் . நாயகியின் அப்பா  முன்னாள்  போலீஸ்  ஆஃபீசர் . ஒரு  கட்டத்தில்  வீட்டை விட்டு  ஊரை விட்டு  ஓடிப்போகலாம்  என  இருவரும்  முடிவெடுக்கிறார்கள் . இவர்கள்  ஓடிப்போக  முடிவெடுத்த  அதே  நாளில் நாயகனின்  தங்கை  அவள்  காதலனுடன்  ஓடிப்போக  நாயகன்  வீட்டில்  பிரச்சனை


 பஸ்  ஸ்டேண்டில் நாயகி  நாயகனின்  வருகைக்காக  காத்திருக்கும்போது  தங்கை மங்களாபுரம்  சென்ற  தகவல்  தெரிந்ததால்  நாயகன்  தன்  மாமாக்கள்  இருவருடன்  மங்களூர்  செல்லும்  பஸ்சில்  ஏறுகிறான். இன்னொரு  நாள்  நாம்  ஓடிப்போகலாம், நீ வீட்டுக்குபோ  என  நாயகியிடம்  சொல்லி  விடுகிறான் , ஆனால்  நாயகிக்கு  வீட்டுக்குப்போக  முடியாத  சூழல் . நாயகன் ஏறும்  அதே  பஸ்சில்  அவளும்  ஏறி  விடுகிறாள் . 


நாயகியின்  அப்பா  முன்னாள்  போலீஸ்  என்பதால்  அவர்  ஒரு  டீம்  உடன்  மங்களா  புரம்  வருகிறார். இதற்குப்பின்  நாயகன்  தன்  தங்கையைக்கண்டு  பிடித்தாரா? நாயகியுடன்  ஆன  காதல்  என்ன  ஆனது  என்பதை  காமெடி  மெலோ   டிராமாவாக  சொல்லி  இருக்கிறார்கள்  


நாயகனாக    அர்ஜூன்  அசோக் அக்மார்க்  அப்பாவி  இளைஞனாக  வருகிறார். நாயகியிடம்  மாமாக்களிடம்  மாட்டிக்கொண்டு  தவிக்கும்  இடங்கள்  நல்ல  காமெடி . இயல்பான , யதார்த்தமான  நடிப்பு 


ஹெலன்  என்ற  படத்தின்  மூலம்  புகழ்  பெற்ற  அன்னாபென் இதிலும்  நம்  கருத்தை , கவனத்தைக்கவர்கிறார். இவரது  கர்லிங்   ஹேர்  ஸ்டைலும் , கச்சிதமான  கண்ணியமான  ஆடை  அலங்காரமும்  அசத்தல் . கண்களாலேயே  பேசி  விடுகிறார். ஜொள்ளு  விடும் ஆளிடம்  அவர்  நைசாக   எஸ்கேப்  ஆவது  சூப்பர்  காமெடி 


நாயகனின்  மாமாக்களாக  வரும்  இருவரும்  பின்  பாதி படத்தை  காமெடியாககொண்டு  செல்வதில்  பெரும்  பங்கு  ஆற்றி  இருக்கிறார்கள் நாயகியின்  அப்பாவாக  வருபவர்  கண்டிப்பு  மிக்க  ஆள்: ஆக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். சொந்த  மகளையே  நகை  திருடிய  கேசில்  அரெஸ்ட்  செய்வது  அச்த்தல்


பாடல்கள்  படம்  ரிலீஸ்  ஆகும் முன்பே  செம  ஹிட் , இரண்டு  பாடல்கள்  படி தொட்டி  எல்லாம்  ஒலித்த  சூப்பர்  ஹிட்  பாடல்கள் 


2  மணி நேரத்துக்கு  10  நிமிடங்கள்  குறைவாக  கச்சிதமாக  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் , ஒளிப்பதிவு  , பின்னணி  இசை இரண்டும்  அருமை . குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  ஃபீல்  குட்  காமெடி   மெலொ டிராமா 


சபாஷ்  டைரக்டர்


1  கிளப்புக்குள்  ஜோடிக்கு  மட்டுமே  அனுமதி  என்றதும்  நாயகனின்  மாமா  உள்ளே  போக  செய்யும்  ஐடியா  கலக்கல் 

2  இன்ஸ்பெக்டரை அறைந்த கேசில்  மாட்டிய  மூவரும்   ரூ 5  லட்சம்  வரை  தர  தயார்  ஆகும்போது   போலீஸ்  அவர்களிடம்   வெறும்  600  ரூபாய்  மட்டும்  லஞ்சமாகக்கேட்பது  நம்ப  முடியாத  காட்சி  என்றாலும்  அந்த  சீன்  எக்ஸ்க்யூட்  ஆன  விதம்  காமெடி 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1 கொஞ்சாதே  கொஞ்சாதே  

பொன்  மானே  பொன் மானே 


2  வா  வா  ராப்பர்  மாமா


 ரசித்த  வசனங்கள் 


1   நியூம்ராலஜி  படி  இந்த  பஸ்  நெம்பஎர்  கூட்டுத்தொகை  17  வருது , அப்போ எட்டு . அஷ்டமத்துல  சனி , நாம  வேற  பஸ்ல  போலாம்


 பஸ்  கிடைக்கறதே  பெருசு , இதுல ராசி  நெம்பர்  வேணுமா? 


2  என்  த்ஙகச்சிக்கு  20  வயசு  கூட  இன்னும்  முடியல , அதுக்குள்ள  லவ்வரோட  ஓடிட்டா 


 ஓஹோ, இப்போ  நீ  கூட்டிட்டு  ஓடப்போற்யே  ந்தப்பொண்ணுக்கு  என்ன  வயசு ?


 19 


3  பிஸ்கெட்டும்  வாட்டர்  பாட்டிலும்  வாங்கிட்டு  வ்ர்றேன்னு  போனியெ? எங்கே? 


 அது  வந்து  , க்டைல  பிஸ்கெட்  ஸ்டாக்  இல்லைண்ட்டாங்க 


4  இந்த  லாட்ஜ் ஃபேமிலிமேன்  தங்கற லாட்ஜ் ,மாதிரி  தெரியலையே?


 டேய், உன்னை  ரேப்  பண்ணாம  நாங்க  பார்த்துக்கறோம்\


5  அப்பாவித்தனமான  முகம்  உள்ள  ஆணை  பெண்ணுக்குப்பிடிக்கும்

6 ஏம்மா , உலகத்துல  எத்தனை  ஆம்ப்ளைங்க  இருக்காங்க ,அ தென்ன பொண்ணுங்க  லவ்  பண்றது  பூரா  மொள்ளமாரி  முடிச்சவுக்கி  கஞ்சா  கேஸ் , குடிகாரன்  இப்டிதான்  சிக்கறாங்க ? நல்லவன்களை  லவ்  பண்ண  மாட்டீங்களா? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகியை  சந்திக்க  ப்ஸ்  ஸ்டேண்ட்  செல்ல  முடியாத  சூழல் , இருவர்  கைகளீலும்  செல்  ஃபோன்  இல்லை , நாயகனின்  நண்பனை  பஸ்  ஸ்டேண்ட்  அனுப்பி  நிலைமையை  நாயகிக்கு எடுத்துச்சொல்லி  இருக்கலாமே?


2  நாயகன்  கையில்  இப்போ  செல் ஃபோன்  இருக்கு . நாயகியின்  அப்பா  போலீஸ்  டிபார்ட்மெண்ட். செல்லை  ஆன்  பண்ணினா  லொக்கேஷன்  கண்டுபிடிச்சுடுவாங்க  என்பது  நாயகனுக்குத்தெரியாதா? இருவரும்  செல் ஃபோனை  ஆஃப்ல  வெச்சிருக்கனும்னு  தானே  பேச்சு? இவர்  ஏன்  ஆன்  பண்ணி  பின்  ஆஃப்  பண்றார்? 


3  நாயகனின்  தங்கையின்  காதலன்  சரக்கு  பார்ட்டி , கஞ்சா  கேஸ்  என்பது  காதலிக்கும்போது  தெரியாதா? வீட்டை  விட்டு  ஓடி  வந்த  அடுத்த  நாளே  அந்த  விஷயம்  தெரிந்து  வெறுப்பது  டிராமாத்தனம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  பார்த்து  ரசித்து  பழக்கம்  உள்ளவர்கள்  தாராளமாகப்பார்க்கலாம், ஸ்லோ  மெலொ  டிராமா  . ரேட்டிங்  2.75 / 5