2017 ல் வெளியான அதே கண்கள் எனும் ரொமாண்டிக் ஹாரர் மூவி , 2019 ல் வெளியான பெட்ரோமாக்ஸ் எனும் காமெடி ஹாரர் மூவி இயக்கிய ரோகின் வெங்கடேசன் மூன்றாவதாக இப்படத்தை இயக்கி இருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தன் மனைவி , குழந்தையுடன் சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கிறார். ஆஃபீஸ் விஷயமாக மங்களூர் ரயிலில் செல்லும்போது ரயிலில் தன் முன்னாள் காதலியை சந்திக்கிறார். இருவரும் அவரவர் குடும்ப வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொள்கின்றனர் .
நாயகனின் மனைவி எப்போதும் அவரது ஆஃபீஸ் வேலையில் பிசியாக இருப்பதால் நாயகனுடன் முகம் கொடுத்துக்கூட பேச நேரம் இல்லை . நாயகியின் கணவன் ஒரு சைக்கோ . அடிக்கடி நாயகியை அடித்துக்கொடுமைப்படுத்துபவர் . நாயகிக்கு குழந்தை இல்லை
மங்களூர் சென்றதும் அடிக்கடி இருவரும் சந்தித்து அவர்களது முன்னாள் காதல் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டு டைம் பாஸ் பண்ணுகிறார்கள் .எந்த விதமான வரம்பு மீறலும் இல்லாமல்
வேலை முடிந்து சென்னை திரும்பும்போது இனிமேல் இருவரும் சென்னையில் ச்ந்தித்துக்கொள்ள வேண்டாம், அதுதான் அவரவர் குடும்ப வாழ்க்கைக்கு நல்லது என முடிவெடுக்கிறார்கள்
ஆனால் நாயகியின் கணவன் கொடுமை செய்வது ஒரு கட்டத்தில் ஓவர் டோஸ் ஆகி விட நாயகி தனியாக அவரை விட்டுப்பிரிந்து ஹோட்டலில் தங்குகிறார்நாயகனைத்தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கிறார். ஆனால் நாயகனுக்கு நாயகியுடன் ஆன காதலைத்தொடர்வதில் விருப்பம் இல்லை
இதனால் கடுப்பான நாயகி நாயகன் குடி இருக்கும் அபார்ட்மெண்ட்க்கு எதிரில் குடி வருகிறார். இதற்குப்பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது திரைக்கதையின் பின் பாதி
நாயகன் ஆக ஜெய் . பாந்தமான நடிப்பு . ஒரு சராசரி மிடில் கிளாஸ் இளைஞனாக கச்சிதமாக நடித்துள்ளார். காதலியைப்பார்த்தபோது சந்தோஷம் , திரும்ப வீட்டுக்கு வந்து மனைவியைப்பார்க்கும்போது சங்கடம், குற்ற உணர்வில் அவர் தவிப்பது அருமை . ஒரு கட்டத்தில் நாயகி வில்லி ஆக முயலும்போது நாயகன் சீறுவது பாராட்ட வைக்கும் நடிப்பு
நாயகி ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் , முழுப்படத்தையும் தாங்கிப்பிடிக்கிறார். கணவனிடம் அடி வாங்கும்போது அனுதாபத்தைப்பெறுபவர் , திருப்பி அடிக்கும்போது கைதட்டல் பெறுகிறார்
நாயகனின் மனைவியாக ஷிவதா அழகான முகம், பொறுமையான குணம் என குடும்பப்பாங்காக நடித்திருக்கிறார். கணவன் மேல் சந்தேகம் கொள்ளும் காட்சிகளில் ஓவராக நடிக்காமல் இயல்பாக நடித்துள்ளார்
இவர்களது மகளாக வரித்தி சுட்டித்தனமான நடிப்பு . நாயகியின் கணவனாக அம்ஜத் சைக்கோ கேரக்டருக்குப்பொருத்தம் . நாயகனின் நண்பனாக வரும் அப்துல் லீ காமெடிக்கு
திரைக்கதையைப்பொறுத்தவரை சில்லுனு ஒரு காதல் படத்தின் சாயல் தெரிவது பலவீனம் . நாயகி திடீர் என வில்லி ஆக மாறும் இடம் நம்ப முடியவில்லை . முந்தைய இரு படங்களோடு ஒப்பிடும்போது இயக்குநரின் தரம் கூடி இருக்கிறது
சித்துக்குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் என்றாலும் பின்னணி இசை நன்று . ரவிவர்மன் நீலமேகம் தான் ஒளிப்பதிவு , கண்ணுக்குக்குளுமை . நாயகன், நாயகி , மனைவி மூவரையும் அழகாகக்காட்டியுள்ளது காமரா
சபாஷ் டைரக்டர் ( ரோஹின் வெங்கடேசன்)
1 நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் முன்னாள் காதலர்கள் ஹோட்டலில் டின்னர் சாப்பிடப்போகையில் அவருக்குப்பிடித்ததை இவரும், இவருக்குப்பிடித்ததை அவரும் பரஸ்பரம் ஞாபகம் வைத்திருந்து ஆர்டர் பண்ணுவதும், அதை நினைத்து புன்னகைப்பதும்
2 நாயகன் , நாயகி இருவரும் முத்தமிட நெருங்கும்போது ஒரே சமயத்தில் நாயகனின் மனைவி , நாயகியின் கணவ்ன் அலைபேசியில் அழைப்பது தேர் இழுக்கும்போது வேகத்தைத்தணிக்க சக்கரத்துக்கு அடியில் கட்டையைப்போடுவது போல கச்சிதம்
3 மாஸ்டர், இன்னைக்கு டீ என்ன நல்லாருக்கு ? என டீ மாஸ்டரிடம் கேட்டதும் அவர் உடனே கொஞ்சம் தண்ணீரை ஊற்றி டீயை கண்டம் பண்ணும் காட்சி கலக்கல் காமெடி
4 இரு நாயகிகள் படத்தில் இருந்தாலும் கிளாமர் துளியும் இல்லாமல் கண்ணியமாகக்காட்சிகளை அமைத்த விதம், ஆடை வடிவமைப்பு பக்கா டீசண்ட் . இரு நாயகிகளுமே மற்ற படங்களில் கிளாம்ராக நடித்தவர்கள்தான். இதில் கண்ணியம் காட்டியிருப்பது இயக்குநரின் கை வண்ணம்
ரசித்த வசனங்கள் ( ஜி ஆர் சுரேந்திரநாத் )
1 எரியற பல்பை முழுசா முழுங்குன மாதிரி முகம் எல்லாம் பிரகாசமா இருக்கே? என்ன விஷயம் ?
2 நமக்குப்பிடிசசவங்களோட ஒரு இடத்துல நாம இருக்கும்போது அந்த இடம் இன்னும் அழகாய்டுது இல்ல?
3 ஒரு வேளை என் மேரேஜ் லைஃப் நல்லாருந்திருந்தா உன்னைப்பற்றிய நினைப்பு எனக்கு குறைஞ்சிருக்கும்
4 இது மோசமான உலகம், சேர்ந்து வாழ வேண்டியவங்களை எல்லாம் பிரிச்சு வைக்கறாங்க , பிரிந்து வாழ வேண்டியவங்களை எல்லாம் சேர்த்து வைக்கறாங்க
5 மும்பை போகும்போது ஃபிளைட் , ரிட்டர்ன் வரும்போது ட்ரெயினா? ஏன் ?
எல்லாக்கம்ப்பெனியும் ஒரே மாதிரிதான், வேலையை முடிக்கனும்னா ஃபிளைட்டு , , வேலை முடிஞ்சிட்டா ட்ரெய்னு
6 எதுக்கு இங்கே வந்தே ? ஒன்றரை மணி நேரத்துல நானே வந்திருப்பேனே?
தெரியும், இப்பவே வந்தா ஒன்றரை மணி நேரம் முன் கூட்டியே உன்னைப்பார்க்கலாமே?
7 கடைசியா என் எந்த பர்த்டே அன்னைக்கு சந்தோஷமா இருந்தேன்னு நினைவில்லை , ஆனா இப்போ ஹேப்பியா இருக்கேன்
8 எங்கே நீ வராம இருந்துடுவிடோனு பயந்துட்டே இருந்தேன்
வர வேண்டாம்னுதான் நினைச்சேன், ஆனா வராம இருக்க முடியலை
9 ஒரு பயணம் எவ்வளவு நல்லா இருந்தாலும் கடைசில அது முடிஞ்சுதான் ஆகனும், இல்லையா?
10 நாங்க முன்னாள் காதலர்கள் , ஆனா இப்போ நல்ல நண்பர்களா இருக்கோம் என்பது எல்லாம் போங்காட்டம், ஒரு காதலி எப்போதும் காதலியாதான் இருக்க முடியும்
11 ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கறதுக்காக சம்பாதிக்கறோம், கடைசில சம்பாதிக்கறதுக்காக சந்தோஷத்தை இழந்துடறோம்
12 நான் யாராவது ஒருவரை மட்டும் கொன்னுடலாம், அதுக்கு தண்டனையே இல்லைனு சொன்னா உன்னை அடுத்த செகண்டே கொன்னுடுவேன்
13 ஹாய், எதுக்கு ஃபோன் பண்ணி இருக்கே? ஏதாவது பிரச்சனையா?
ஏதாவது பிரச்சனைன்னாதான் உனக்கு ஃபோன் பண்ணனுமா?
14 நான் இல்லாம உன்னால சந்தோஷமா இருக்க முடியுது , ஆனா நீ இல்லாம என்னால சந்தோஷமா இருக்க முடியலை
15 வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா வேரோடு தூக்கி எறிஞ்சுடனும், இலை வேணும், கிளை வேணும்னு கேட்கக்கூடாது
16 நீ ஒரு விஷயத்தை சொல்லாம மறைக்கறே - அப்டின்னாலே அதுல ஏதோ தப்பு இருக்குனுதான் அர்த்தம்
17 பொதுவா லவ் பிரேக்கப் ஆகும்போது லவ்வர்ஸ் தான் பிரிவாங்க , ஆனா அந்த லவ் அப்படியேதான் இருக்கும்
18 எங்கே போனாலும் தலைக்கு மேல வானம் இருப்பது மாதிரி என் மனசுல நீ இருந்துட்டே இருப்பே
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் காதலர்கள் ஒரே ரயிலில் பயணிக்கும்போது அப்போது சேட் செய்ய ஃபோன் நெம்பர் ஷேர் பண்ணிக்கவே இல்லையே? ( ரயில் பயணம் முடிந்த பின் ஷெர் பண்ணிக்கறாங்க)
2 பெட்ரூம்ல பிரகாசமா எல்லா லைட்டும் எரிய விட்டுட்டு குழந்தையை தூங்க வைக்க முயற்சி பண்றாரு நாயகன். இருட்டில் தானே தூக்கம் வரும்?
3 நாயகன் எம் டி உடன் மீட்டிங்கில் இருக்கும்போது காதலி ஃபோன் செய்வாள் என்பது தெரிந்தும் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணாமல் அல்லது சைலண்ட் மோடில் வைக்காமல் வைப்ரேசன் மோடில் வைத்து எம் டி யிடம் மாட்டுவது ஏன் ?
4 நாயகன் நாயகி பெயரை செல்ஃபோனில் அதே பெயரிலேயே ஸேவ் பண்ணி வெச்சிருக்காரே? பொதுவா பையன் பேரில் ஸ்டோர் பண்ணி வைப்பதுதானே உலக வழக்கம் ?
5 ஆஃபீஸ் டைம்ல ஃபோன் பண்ணினே ஓக்கே, இப்போ வீட்டுக்குப்போறேன். காலை வரை எக்காரணம் கொண்டும் ஃபோன் பண்ணாதே என நாயகன் நாயகியிடம் எச்சரிக்கவே இல்லையே?
6 நாயகன் தன் மனைவியுடன் ரெஸ்ட்டாரண்ட் வந்தபோது மெசேஜ் டோனை சைலண்ட் மோடில் வைக்காமல் ஏன் மாட்டிக்கொள்கிறார் ?
7 நாயகி தன் கணவனைப்பிரிந்து வாழ முடிவெடுத்தும் தன்னை பல முறை அடித்த கணவனை டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ் போலீஸ் ஸ்டேஷன்ல பதிவு பண்ணவே இல்லையே? டைவர்ஸ் அப்ளை பண்றாரு , அதுக்கு இந்த கேஸ் யூஸ் ஆகுமே?
8 நாயகி வில்லி ஆக மாறி வேறு வேறு புது எண்ணிலிருந்து மிட் நைட் டைம்ல கால் பண்ணூம்போது நாயகன் ஏன் செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணலை ?
9 அப்பாவைப்பார்க்க மகள் அவ்லவ் சின்ன வயசு மகள் ஆஃபீஸ் அட்ர்சைக்கண்டு பிடிச்சுப்போக ட்ரை பண்ணும்போது நாயகன் மகளைப்பார்க்க அவள் படிக்கும் ஸ்கூலுக்குப்போக ஏன் ட்ரை பண்ணலை ?
10 குழந்தை கிடைத்ததும் நாயகி ஏன் நாயகிக்கு தகவ்லை மெசேஜாக அனுப்பவில்லை ? அவங்க ஒரு பக்கம் தேடிட்டு இருக்காங்களே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் காணத்தக்க டீசண்ட் ஆன லவ் ஸ்டோரி . ரேட்டிங் 2.75 / 5
நன்றி - அனிச்சம் மின்னிதழ் ஜூலை
Theera Kaadhal | |
---|---|
Directed by | Rohin Venkatesan |
Written by |
|
Dialogue by | G. R. Surendarnath |
Produced by | Subaskaran |
Starring | |
Cinematography | Ravivarman Neelamegam |
Edited by | Prasanna GK |
Music by | Siddhu Kumar |
Production company | |
Release date |
|
Running time | 128 minutes |
Country | India |
Language | Tamil |