Tuesday, June 27, 2023

குமுதம் (1961) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ யூ ட்யூப்

 


  1961  ஆம் ஆண்டின் சிறந்த படமாக  ஒன்பதாவது நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  விருது  பெற்ற் படம்  இது , தமிழில்  ஹிட்  ஆனதால்  தெலுங்கில்  மஞ்சி ,மனசுலு ( 1962) ,  மலையாளத்தில்  சுசீலா ( 1963) ஹிந்தியில்  பூஜா  கி ஃபூல் (  பூஜைக்கு உரிய  மலர் )  (1964 )  ரீ  மேக்  செய்யப்பட்டு எல்லா  மொழிகளிலும்  வெற்றி  அடைந்த  படம் .இது  ஒரு  ரொமாண்டிக்  மெலோ டிராமா  வாக  பிரமோ  செய்யப்பட்டாலும்  ;பின்  பாதியின்  பின்  பாதியில்  கோர்ட்  ரூம்  டிராமாவாக  இருக்கும்


   ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்   சிதம்பரத்தில்  உள்ள  வண்டலூரில்  தன்  அண்ணன்   உடன்   வசிக்கிறார். அண்ணனுக்கு  ஒரு  மகள்  உண்டு .  காலேஜ்  படிப்புக்காக  சென்னை  செல்கிறார்  நாயகன்,  இவரைப்படிக்க  வைப்பது  அண்ணன்  தான், அதனால்  அண்ணனுக்கு  நன்றிக்கடன் பட்டவர் . 


அண்ணன்  மிகவும்  பணக்கஷ்டத்தில்  இருக்கிறார். நோய்வாய்ப்பட்டு  சிரமப்படுகிறார். இதை  உணர்ந்த  நாயகன்  ஹாஸ்டலில்  தங்கிப்படித்தால்  அதிக  செலவாகும்  என  தனி  வீடு பார்த்துத்தங்க  முடிவு  செய்கிறார்


 பிரம்மச்சாரிக்கு  சென்னையில்  வாட்கை  வீடு  கிடைக்காது  என்பதால்  திருமணம்  ஆனவர்  என  பொய்  சொல்லி  ஒரு வீட்டில்  வாடகைக்கு  தங்குகிறார்


ஹவுஸ்  ஓனருக்கு  ஒரு  மகள் . நாயகனின்  டைரியைப்படித்துப்பார்த்து  உண்மை  நிலையை  அறிந்து  நாயகனைக்காதலிக்கிறார். நாயகனும்  தான். 


நாயகனின்  குணத்தைப்பார்த்து இந்த  மாதிரி  பையன்  தான்  நம்ம  மகளுக்கு  மாப்பிள்ளையா  வரனும், அவனுக்கு  மட்டும் மேரேஜ்  ஆகாம  இருந்தா  அவனுக்குத்தான்  நம்ம  பொண்ணைக்கொடுக்கனும்  என  பேசிக்கொள்கிறார்கள் . இருவரும்  காதலிப்பதை  அறிந்து  திருமணம்  செய்து  வைக்க  முடிவெடுக்கிறார்கள் .


நாயகனின்  அண்னன்  மகள்  வில்லன்  மீது  காதல்  வசப்படுகிறாள் ., வில்லனுக்கு  விழி  ஒளி  இழந்த  தங்கை  ஒன்று  உண்டு. திருமணம்  ஆகாத  பெண். வில்லனுக்கு  வேறு  ஒரு  ப்ணக்காரப்பெண்ணுடன்  தொடர்பு  உண்டு . அவள்  அனுப்பும்  பணத்தை  ஜாலியாக  செலவு  செய்து  ஆடம்பர  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான்  வில்லன்


  நாயகனின்  அண்ணன்  சீரியஸ்  ஆக  மரண  தருணத்தில்  இருக்கிறார். தந்தி  கண்டு  நாயகன்  , நாயகி , நாயகியின்  பெற்றோர்  அனைவரும்  அங்கே  போக  அண்ணன்  தன்  மகள்  திருமணத்தை  நடத்தி  வைக்க  தம்பியான  நாயகனிடம்  உறுதி  வாங்கிக்கொண்டு இறக்கிறார்  


தன்  அண்ணன்  மகள்  வில்லன்  மீது   காதல்  கொண்டதால்  குடும்பத்தாரிடம்  பேசி  சம்ப்ந்தம்  செய்ய  முயலும்போது அவர்கள்  ஒரு  கண்டிஷன்  போடுகிறார்கள் . வில்லனின்  தங்கையை  நாயகன்  திருமணம்  செய்து  கொண்டால்  நாயகனின்  அண்ணன்  மகளை  வில்லன்  திருமணம்  செய்து  கொள்வான் 


 பெண்  கொடுத்து  பெண்  எடுக்கும்  இந்த    டீலிங்க்கு  வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  ஒத்துக்கொள்கிறான்


இரு  ஜோடி  திருமணமும்  நடக்கிறது. ஆனால்  இரு   ஜோடிகளும்  மகிழ்ச்சியாக  வாழவில்லை.


வில்லனின்  காதலி  வில்லனுக்கு  திருமணம்  ஆனதை  அறிந்து  வில்லனை  மிரட்டுகிறாள் , வில்லன்  அவளைக்கொலை  செய்து  விடுகிறான். அவன்  ஜெயிலுக்குப்போனால்  தன்  அண்ணன்  மகள்  வாழ்க்கை  வீணாகி விடும்  என  நாயகன்  அந்தக்கொலைப்பழியை  ஏற்றுக்கொள்கிறான் 


 கோர்ட்டில் கேஸ்  நடக்கிறது . நாயகி  நாயகனுக்கு  ஆதரவாக  வக்கீலாக  வாதிடுகிறாள் .  நாயகியின்  அப்பா  நாயகனுக்கு  எதிராக  வாதிடுகிறார். இறுதியில்  என்ன  ஆனது  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  எஸ்  எஸ்  ஆர் . கணீர்க்குரல் .  கண்ணியமான  நடிப்பு . எளிமையான  உடல்  மொழி 


நாயகி  ஆக விஜய  குமாரி . எதார்த்தமான  நடிப்பு , கோர்ட்  காட்சிகளில்  வக்கீலாக  அனல்  பறக்கும்  வசனம்  குட் 


வில்லன்  ஆக  எம்  ஆர்  ராதா  , கலக்கல்  ஆன  நடிப்பு , கோர்ட்  சீனில்  மனம்  திருந்திப்பேசும்  நீளமான  டயலாக்கில்  அட்டகாசமான  நடிப்பு 


நாயகனின்  அண்ணன்  மகளாக  பி எஸ்  சரோஜா  கண்ணியமான  தோற்றம் . விழி  ஒளி  இழந்தவராக  வில்லனின்  தங்கையாக  நாயகன்  மனைவியாக  சவுகார்  ஜானகி .  பரிதாபம்  ஏற்படுத்தும்  தோற்றம்


கே  வி  மகாதேவன்  இசையில்  எட்டு  பாடல்கள்  செம  ஹிட்டு ., பாடல்  ஆசிரியர்கள்  கண்ணதாசன்  அண்ட்  மருதகாசி . பாட்டுக்காகவே  படம்  பார்க்கலாம் 




சபாஷ்  டைரக்டர்


1 லவ்  ஸ்டோரி  மாதிரி  ஆரம்பித்து    ஃபேமிலி  டிராமா  மாதிரி  கொண்டு  போய்  கோர்ட்  ரூம் டிராமாவாக  முடித்த  விதம்  அருமை 


2   வில்லனின்  நடிப்பு ,  நாயகி க்கான  முக்கியத்துவம்

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   கல்யாணம்  ஆனவரே!  சவுக்கியமா?   (  மேரேஜ்  ஆனதாக  ஹீரோ  சொன்ன  பொய்  தெரிந்து  ஹீரோயின்  கலாய்க்கும்  பாடல் ) 


2  என்னை  விட்டு  ஓடிப்போக  முடியுமா? (  டூயட் ) 


3  மாமா  மாமா  ,மாமா  , ஏம்மா  ஏம்மா  ஏம்மா  சிட்டுப்போல  பெண்ணிருந்தா ( வில்லனை  கலாய்க்கும்  பாடல் )


4  கல்லிலே  கலை  வண்ணம்  கண்டான் 


5  மியாவ்  மியாவ்  பூனைகுட்டி  வீட்டைச்சுற்றும்  பூனைக்குட்டி 


6  கல்லிலே  கலை  வண்ணம்  கண்டார் 


7   நில்  அங்கே  எண்ணமும் இதயமும் 

  ரசித்த  வசனங்கள் 


1  கடவுள்  பக்தி  எதுவரை ?  கடவுளை  நேரில்  காணும்  வரை 

 தேச பக்தி எதுவரை ? நாட்டுக்கு  சுதந்திரம்  கிடைக்கும்  வரை 


2  கல்லானாலும்  கணவன்  புல்  ஆனாலும்  புருசன்  என  பெண்கள்  வாழ்ந்தால்  நாட்டில்  பத்தினிகள்  எண்ணிக்கை  வேணா அதிகரிக்கலாம், ஆனால்  நல்ல  ஆண்கள்  எண்ணிக்கை  குறைந்து  விடும் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்    அடிக்காமல்  போகும்  படம், இக்காலத்திலும்  ரசிக்க  முடியும்  படம்,  பாடல்களுக்காகவே  பார்க்கலாம் , ரேட்டிங்  3 / 5 


Kumudham
Kumudham poster.jpg
Theatrical release poster
Directed byAdurthi Subba Rao
Written byK. S. Gopalakrishnan
Produced byT. R. Sundaram[2]
StarringS. S. Rajendran
Vijayakumari
Sowcar Janaki
CinematographyR. Sampath
Edited byL. Balu
Music byK. V. Mahadevan
Production
company
Release date
  • 29 July 1961[1]
Running time
154 minutes
CountryIndia
LanguageTamil