டைட்டில் , போஸ்டர் டிசைன் எல்லாம் பார்த்து முதல்ல பயந்துட்டேன். ஆனா இது நல்ல காமெடிப்படம் . டைட்டிலுக்கு அர்த்தம் மெக்சிகோ நீடுழி வாழ்க . ஆனா டைட்டிலுக்கும் கதைக்கும் பெரிய சம்பந்தம் இல்லை . இது பொலிடிக்கல் சட்டயர் ஃபிலிம் ஆகவும் பார்க்கலாம், ட்ரெஷர் ஆக்சன் டிராமாவாகவும் பார்க்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தன் மனைவி , மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். ஒரு கம்பெனியில் ஜெனரல் ,மேனேஜராகப்பணி புரிகிறான். இவன் தன் அம்மா, அப்பா , தாத்தா ஆகிய குடும்பத்தாரை விட்டு விலகி 20 வருடங்கள் ஆகின்றன.
தாத்தா இறந்துட்டார் என்ற தகவலை அப்பா ஃபோன் பண்ணி சொன்னதும் முதலில் வர முடியாது என தட்டிக்க்ழித்தவன் பின் தாத்தா தனக்கு எதாவது சொத்து எழுதி வைத்திருக்கலாம் என நப்பாசையில் கம்பெனிக்கு நான்கு நாட்கள் லீவ் போட்டு விட்டு தன் சொந்த கிராமத்துக்குப்போகிறான்
தழுவாத கைகள் படத்தில் ஒரு பாட்டு இருக்கும். குடும்பத்தை உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தார் எங்கப்பா.. அதே மாதிரி நாயகனின் குடும்பம் மிகப்பெரியது. அவர்களை எல்லாம் தன் மனைவிக்கு அறிமுகம் செய்யவே 4 மணி நேரம் ஆகிறது
தாத்தாவின் உயில் படிக்கப்படுகிறது. ஒரு இன்ப அதிர்ச்சி , எல்லா சொத்துக்களையும் நாயகனுக்கே எழுதி வைத்து விட்டார் தாத்தா . வீடு தோட்ட, நிலம் , தங்க நகைகள் என லிஸ்ட் நீளமா போகுது
நாயகனின் அண்ணன், தம்பி , தங்கை, அம்மா, அப்பா , பாட்டி உட்பட அனைவருக்கும் பொறாமை. எப்படியாவது சொத்துக்களை அபகரிக்க நினைக்கின்றனர் .
முதல் கட்டமாக அன்று இரவு நாயகன் எங்கும் வெளியே போகமுடியாதபடி அவன் வந்த காரை எரித்து விடுகின்றனர் . செல் ஃபோன் நெட் கவரேஜ் இல்லாத வறப்பட்டிக்காடு.. இதற்குப்பின் நாயகனுக்கு என்ன ஆனது? எப்படி தப்பித்து வந்தான் என்பதே மீதிக்கதை
நாயகன் ஆக அல்ஃபோன்சா ஹெராரோ அட்டகாசமான நடிப்பு . டைமிங் காமெடி , கோபம், ஆற்றாமை என பல முக பாவனைகளை அருமையாக கொண்டு வருகிறார்
லூயிஸ் எஸ்ட்டார்டா திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்.மூன்று மணி நேரத்துக்கு மேல் படம் ஓடினாலும் ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை , அடுத்து என்ன நேருமோ என்ற ஒரு பதைபதைப்பு இருக்கிறது . நாம் சின்னவயதில் படித்த நீதிக்கதைகள் பல இதில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது
பேராசை பெரு நஷ்டம் , ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை .10 அடி தோண்டுனா தண்ணி வர்ற கிணறுல எட்டு அடி தோண்டிட்டு தண்ணீர் வர்லைன்னு வேற இடத்துல தோண்ட ஆரம்பிச்ச கதையாக பல கதைகள் , பழமொழிகள் நினைவு வருகின்றன
அரசியல் அமைப்புகள் , பெண்களின் சாதுர்யம் , வஞ்சனை எல்லா வகையான விஷயங்களையும் காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் மூன்று இடங்களில் இருக்கிறது . நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் தன் குடும்பத்துடன் சொந்த ஊர்க்குச்செல்லும் வழியில் இரு திருடர்கள் வழி மறித்துக்கொள்ளை அடிக்க பின் அவர்களீல் ஒருவன் டேய் என்னை தெரியலையா? நாம ரெண்டு பேரும் அஞ்சாங்கிளாஸ்ல ஒண்ணாப்படிச்சோமே? என சொல்லி வழிப்பறி செய்ததை திருப்பித்தரும் காட்சி
2 ஜெயிலில் மாட்டிக்கொண்ட நாயகன் வெளி வர ஜெயிலர் , ஜட்ஜ் உட்பட எல்லோருக்கும் கப்பம் கட்ட வெண்டி வரும் நாயகன் நிலைமை
3 நாயகனின் பணிப்பெண் கிராமத்தில் நாயகனின் சகோதரனையே கரெக்ட் பண்ணி அங்கேயே செட்டில் ஆகும் தருணத்தில் நான் வேணா என் தங்கையை உங்க வீட்டுக்கு வேலைக்கு அனுப்பட்டா? என கேட்க வேணாம்மா இன்னொரு மருமகளை வேற குடும்பத்துல எடுத்துக்கறோம் என கூலாக நாயகன் சொல்லும் தருணம்
4 போலீஸ் கேசில் மாட்டிய நாயகனின் சகோதரனை பெரும் பண்ம் கொடுத்து மீட்ட நாயகனுக்கு நன்றி தெரிவிக்க சகோதரன் மனைவி நடந்து கொள்ளும் விதம்
5 நாயகனுக்கு அடிக்கடி கனவு வந்து திடுக்கிட்டு விழிப்பது எது கனவு எது நிஜம் என்ற குழப்பம் வந்தாலும் செம சுவராஸ்யம்
ரசித்த வசனங்கள்
1 உங்க வீட்ல இருக்கறவஙகளுக்குக்கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை , இந்த முக்கியமான பார்ட்டிக்கு அவங்களை எதிர்பார்த்தேன்
சார், நான் சின்னக்குழந்தையா இருக்கும்போதே என் அம்மா , அப்பா இறந்துட்டாங்கனு ஏற்கனவே உங்க கிட்டே சொல்லி இருக்கேன்
2 அடியே , என் க்ரெடிட் கார்டுக்கு மட்டும் வாய் இருந்தா அய்யோ அம்மா என்னை விட்டுடுனு கதறி இருக்கும்
பொண்டாட்டிக்காக புருசன் செலவு பண்ணுனாதான் அவனுக்கு மரியாதை
3 மகனே! ஒரு அதிர்ச்சியான செய்தி சில நாட்களுக்கு முன் உன் தாத்தா இறந்துட்டார்
அய்யய்யோ, அவருக்கு சுமாரா என்ன வயசு இருக்கும்,
அனேகமா 120 க்கு ம் மேல இருக்கும்னு நினைக்கறேன்
4 அரசியல்வாதிகளுக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு, கடவுளுக்கு நிகரா தன்னை உயர்த்திபேசிக்கறாங்க . பணக்காரங்க கிட்டே இருக்கும் காசை ஏழைகளுக்கு தரனும்னு டயலாக்ஸ் வேற.. கேட்டு கேட்டு சலிச்சிடுச்சி
5 சார், 3 வாரம் லீவ் வேணும்
யோவ் , ஓனர் நானே அவ்ளோ நாள் லீவ் எடுத்ததில்லை
6 ஏம்மா, கேட்கறேன்னு தப்பா நினைக்காத , என் சொந்த ஊர் போற ரூட்டைப்பார்த்தா உன் கிராமம் நினைவுக்கு வருமே?
சார் , சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்க . நான் உங்க வீட்டு வேலைக்காரிதான், ஆனா எங்க ஊர் இவ்ளோ கேவலமா இருக்காது
7 இவதான் உன் வீட்டு வேலைக்காரியா?
அப்பா, அது அவுட் ஆஃப் ஃபேஷன் , டொமெஸ்டிக் ஒர்க்கர்
8 டியர் , உங்க குடும்பத்தைப்பத்தி நான் தப்பா நினைச்சதுக்கு மன்னிச்சுடுங்க , ஆனா நான் நினைச்சதை விட உங்க குடும்பம் படு கேவலமா இருக்கு
9 நான் கிராமத்துலயே இருந்துட்டதால நகரத்தைச்சுத்திப்பார்த்ததே இல்லை , எனக்காக மெக்சிகோவை சுத்திக்காட்ட முடியுமா?
மிஸ், சான்ஸ் கிடைச்சா உனக்காக எதை வேணாலும் காட்டத்தயாரா இருக்கேன்
10 இப்படியே தோண்டிட்டே இருந்தா மெக்சிகோ வில் இருந்து சீனா போய்டுவோம்னு நினைக்கறேன்
11 பாட்டி , இந்த மண்டை ஓடு உன் கள்ளக்காதலனுடையதுனு எப்ப்டி சொல்றே>?
அவன் கூட டேட்டிங் போனப்ப தாத்தா அவனை எட்டு தடவை சுட்டாரு அதுல ஒரு குண்டு அவன் மண்டைல பட்டுது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் தன் காரில் தப்பிச்செல்லாமல் இருக்க அவர் காரை குடும்பத்தினர் எரித்தது ஓக்கே , ஆனால் அவர்கள் வீட்டுக்குள் இருக்கும் தங்கக்கட்டிகள் , நகைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டா அசால்ட்டா போவாங்க ? குடும்பத்தினர் எண்ணிக்கையே 20 பேருக்கு மேல் இருக்கும். சதி ஆலோசனை நடக்கும் இடத்தில் பாதிப்பேர் நகைகள் இருக்கும் இடத்தில் காவலுக்குப்பாதிப்பேர் வேண்டாமா?
2 தாத்தா தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் நாயகனுக்கு மட்டும் ஏன் எழுதி வைத்தார் ? என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை , இத்தனைக்கும்20 வருடங்களாக தாத்தாவைப்பார்க்க நாயகன் வரவெ இல்லை . மற்றவர்கள் கூடவே இருக்காங்க
3 புதையலை எடுக்க நாயகி ம்ண்வெட்டி அல்லது கடப்பாரையை வேறு இடத்தில் இருந்து வாங்கி வர மாட்டாரா? லூஸ் மாதிரி பாட்டி வீட்டுக்குப்போய் எடுக்க அவங்க ஃபாலோ பண்ணி கண்டு பிடிப்பாங்கனு தெரியாதா?
4 நாயகனின் மனைவி போதையில் இருக்கும்போது கணவனின் சகோதரனுடன் இணைந்து விடுகிறார். ஆனால் அதை யாரும் நேரில் பார்க்கவில்லை. கணவன் வந்ததும் உங்க கிட்டே ஒண்ணு சொல்லனும், உங்க சகோதரன் என் கிட்டே தவறா நடந்து கொள்ளப்பார்த்தார் என ஏன் சொல்லனும்? கணவன் கோபப்பட்டு சகோதரனிடம் விசாரித்தால் நாயகி மாட்டிக்கொள்வாளே? எதுக்கு அந்த ரிஸ்க் ?
5 அந்த பீரோ ஒண்ணும் ஜீபூம்பா லாக் சிஸ்டம் இல்லை , ஈசியா நெம்பி நாயகனின் குடும்பத்தார் திறந்துடறாங்க . ஆனால் வக்கீல் ஏன் அதை அடைய முயற்சி எடுக்கவில்லை ., அதை நாயகனிடம் ஒப்படைத்தே இருக்க வேண்டியதில்லையே?
6 பொதுவாக குழி தோண்டி புதையலை வைக்கும்போது ஒரு அடையாளத்துக்கு எதையாவது செடி மாதிரி நட்டு வைப்பதுதான் ஈசி , ஆனால் சும்மா ஸ்டெப் கணக்கு மட்டும் வைத்து அடையாளம் வைத்துக்கொள்வது ரிஸ்க்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- மூன்று இடங்களில் 18+ காட்சிகள் இருக்கின்றன. குடும்பத்துடன் பார்க்க முடியாது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் 2 மணி நேரம் செம காமெடியாகவும் , கடைசி ஒரு மணி நேரம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பையும் நம்முள் கடத்தும் படம், ஆங்காங்கே மெக்சிகன் நகரின் அரசியலை நையாண்டியும் செய்திருக்கிறார்கள் . அவசியம் காணவேண்டிய படம் ரேட்டிங் 3.25 / 5
Que viva México! | |
---|---|
Directed by | Luis Estrada |
Written by | Luis Estrada Jaime Sampietro |
Produced by | Alexa Aroesty Maynné Cortés Luis Estrada Rolf Helbig Sandra Solares |
Starring | Alfonso Herrera Damián Alcázar Joaquín Cosío Ana de la Reguera |
Cinematography | Alberto Anaya |
Edited by | Mariana Rodríguez |
Music by | Nacho Mastretta |
Production companies | |
Distributed by | Sony Pictures Releasing International |
Release dates |
|
Running time | 191 minutes |
Country | Mexico |
Language | Spanish |
Box office | $4.2 million[1][2] |