Friday, May 19, 2023

விஜய் ஆண்ட்டனியின் பிச்சைக்காரன் பாகம் 2 படத்தின் கதை இதுதான்

 


2015 ஆம்  ஆண்டு  ஆர் பாண்டியராஜன்  நடிப்பில்  அன்பரசன்  இயக்கத்தில்  வெளியான  ஆய்வுக்கூடம்  என்னும்  படத்தின்  கதையை  பட்டி  டிங்க்ரிங்  பண்ணித்தான் பிச்சைக்காரன் பாகம் 2 படத்தின்  கதை  உருவாக்கப்பட்டது  என  படத்தயாரிப்பாளர்  ரூ 10 லட்சம்  நட்ட  ஈடு  கேட்டு கோர்ட்டில்  கேஸ்  போட்டிருக்கிறார், ஆனால் விஜய்  ஆண்ட்டனி  தரப்பு  அதை  மறுத்திருக்கிறது. நான்  ஆய்வுக்கூடம்  படம் பற்றியே  கேள்விப்பட்டதில்லை. பார்த்ததும்  இல்லை  என  விளக்கி இருக்கிறார். பட  வெளியீட்டுக்குப்பின்  வசூல்  நிலவரத்தைக்கோர்ட்டில்  தாக்கல்  செய்ய  வேண்டும் என்ற  நிபந்தனையுடன்  பட  வெளியீட்டுக்கு  கோர்ட்  அனுமதித்து  உள்ள்து


இப்போது  இரு  படங்களின்  கதை  என்ன? எனப்பார்ப்போம்


 முதலில்  ஆய்வுக்கூடம்  படக்கதை . நாயகன்  ஒரு  விஞ்ஞானி. மூளை  மாற்று   அறுவை   சிகிச்சையில்  ஆராய்ச்சியில்  இருக்கிறார், ஆனால்  அரசாங்கம்  மனித  மூளை  மாற்று  அறுவை   சிகிச்சைக்கு  அனுமதி  மறுத்து  விடுகிறது. பெரிய  பெரிய  விஞ்ஞானிகள்  இறக்கும்போது  இந்த  சமூகத்துக்கு  பெரிய  இழப்பு  ஏற்படுகிறது . அவர்களது  அறிவு  வீணாகிறது . மனநலம்  பாதிக்கப்பட்ட   ஒருவருக்கு  இறந்த  விஞ்ஞானியின் மூளையை  பொருத்தினால்  விஞ்ஞானியின்  அறிவு  மனநலன்  பாதிக்கப்பட்டவருக்கு  வந்து  விடும் . இதுதான்  நாயகனின்  எண்ணம். அரசாங்கம்  அனுமதி  அளிக்காததால்  திருட்டுத்தனமாக  இந்த  ஆராய்ச்சியை செய்ய  முடிவெடுக்கிறார்  நாயகன்

 ஒரு  நாள்  பாக்சிங்  வீரர்  ஒருவர்  நாயகனின்  காரை  இடித்து  விடுகிறார். மயங்கி  விழுந்த  பாக்சிங்  வீரரை  நாயகன்  தன் ஆய்வுக்கூடத்துக்கு  எடுத்து  வருகிறான், மனநலன்  பாதிக்கப்பட்ட  ஒருவரை  தன்  உதவியாள்ர்  மூலம் ஆய்வுக்கூடத்துக்கு  அழைத்து  வருகிறான்  நாயகன். இப்போது  பாக்சிங்  வீரர் , மனநலன்  பாதிக்கப்பட்டவர்  இருவரது  மூளையையும்  மாற்றி  ஆபரேசன்  செய்து  விடுகிறார். இப்போது  மனநலன்  பாதிக்கப்பட்டவருக்கு   பாக்சிங்   வீரரின்  குணநலனும்  பாக்சிங்  வீரருக்கு மன  நலன்  பாதிக்கப்பட்டவரின்  குணநலனும்  வருகிறது . இதற்குப்பின்  ஏற்படும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  மீதி  கதை 


பிச்சைக்காரன்  பாகம்  1  கதையின்  சீக்வல்  கதையாக  பாகம்  2  வெளி  வருகிறது / கோடீஸ்வரனான  நாயகன்  உருவ  அமைப்பில்  இன்னொரு  ஆள்  இருப்பதை  வில்லன்  க்ரூம்  கண்டறிகிறது .ஏகப்பட்ட  சொத்துக்களைக்கொண்ட  நாயகனின்  செல்வங்களைத்தன்  வசப்படுத்த  கோடீஸ்வரனைக்கொலை  செய்து  அவனின்  மூளையை சாமான்யனின்  தலையில்  மூளையை  வைத்து  ஆபரேசன்  செய்து  விடுகிறார்கள் . அவர்கள்  திட்டம்  நிறைவேறியதா? அல்லது  கோடீஸ்வரனின்  மூளை  கிடைக்கப்பெற்ற  சாமான்யன்  கோடீஸ்வரனின்  குணநலன்களையே  அடைந்து  வில்லன்  க்ரூப்பை  எபபடி  முறியடிக்கிறார்  என்பதே  மீதிக்கதை . யோகி  பாபு  பிச்சைக்காரனாக  வரும்  காமெடி  டிராக்  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்க் ஆக  சேர்க்கபப்ட்டுள்ளது 


பிச்சைக்காரன் 2 = 35% எம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ( 1965) + + 35 % ரஜினி யின் ராஜாதிராஜா (1989) - 30% ஆர் பாண்டியராஜன் -ன் ஆய்வுக்கூடம் ( 2015) டி வி சீரியல் பார்க்கும் பெண்களுக்குப்பிடிக்கும். எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 39 , ரேட்டிங் 2.25 / 5 யோகிபாபுவின் காமெடி டிராக் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை , முதல் பாகத்தில் அம்மா -மகன் செண்ட்டிமெண்ட் சீன்ஸ் வைத்தவர்கள் இதில் அண்ணன் - தங்கை செண்ட்டிமெண்ட் சீன்ஸ் . தியேட்டருக்கு கர்சீஃப் உடன் செல்லவும்