பிரணய விலாசம் என்றால் காதல் முகவரி என அர்த்தம் . பரத் நடித்த காதல் , அஜித் நடித்த முகவரி இரண்டு படங்களையும் இணைத்தால் இந்த டைட்டில் வருகிறதே? கதையும் அப்படியோ என நினைக்க வேண்டாம் .,இது வேறு மாதிரியான கதை . மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் 10 நாட்களில் 2 கோடி வசூலைக்கொடுத்து இருக்கிறது .2023 ஃபிப்ரவரி 24 ம் தேதி திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது 3/5/ 2023 முதல் ஜீ 5 ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது
ஒரு ஆணின் பல காதல்களைச்சொன்ன படங்களான சேரனின் ஆட்டோகிராஃப் ( தமிழ் )மலர் டீச்சர் சாய் பல்லவியின் பிரேமம் ( மலையாளம்) ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றதும், திருமணம் ஆன ஒரு பெண்ணின் ஒரே ஒரு முந்தின காதலைச்சொன்ன சொல்லாமலே சசி இயக்கிய பூ படம் தோல்வி அடைந்ததும் வரலாறு. இந்தப்படம் தரமான படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக பிரமாத வெற்றி பெறாததற்கு ஆணாதிக்க மனப்பான்மை ஒரு காரணமாக இருக்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு பாடகன், இசையில் ஆர்வம் உள்ளவன், பட்டதாரி ஆனால் அப்பாவின் கட்டுப்பாட்டால் அவனால் அவன் மனசுக்குப்பிடித்த சப்ஜெக்டில் படிக்க முடியவில்லை . இவனுக்கு தோல்வி அடைந்த ஒரு காதல் உண்டு , இப்போது புதிதாக ஒரு பெண்ணைக்காதலிக்கிறான்
நாயகனின் அப்பா ஒரு அரசாங்க அதிகாரி , கிராம அதிகாரி. அவர் பல வருடங்களுக்குப்பின் காலேஜ் ரீ யூனியன் சந்திப்பில் முன்னாள் காதலியை சந்திக்கிறார். 96 படத்தில் வருவது போல இருவரும் சந்தித்து தங்கள் முன் தின காதல் பற்றி கருத்துக்களை பகிர்கிறார்கள்
நாயகனின் அம்மா, திடீர் என இறந்து விடுகிறார். அவரது டைரி அப்போதுதான் காணக்கிடைக்கிறது . அவ்ரது வாழ்க்கையிலும் ஒரு முதல் காதல் இருக்கிறது என்பதை உணர்ந்து ஆரம்பத்தில் அப்பா , மக்ன் இருவரும் அதிர்ச்சி அடைந்தாலும் காதலனைத்தேடி இருவரும் பயணப்படுகின்றனர்
இறுதியில் அவர்கள் சந்திப்பு நிக்ழ்ந்ததா? என்ன நடந்தது ? என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக அர்ஜூன் அசோகன் பாந்தமாக , அமைதியாக நடித்திருக்கிறார், அப்பாவுடனான முரண்கள் இருந்தாலும் அம்மாவின் மறைவுக்குப்பின் இருவரும் ஒன்று சேர்ந்து பயணிப்பது அருமை
நாயகனின் அப்பாவாக மனோஜ் கே யூ முரண்பாடான கேரக்டரில் நடித்திருக்கிறார். என் மனைவி டைப்பிகல் ஒயிஃப் என அலட்சியமாகக்கூறுவதும் தன் முந்தைய காதலை நியாயப்படுத்துவதும் தன் மனைவியின் முதல் காதல் பற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி ஆவதும் சிறப்பான நடிப்பு
நாயகனின் அம்மாவாக ஸ்ரீதன்யா பாவமான முகமே பாதி நடிப்பை வழங்கி விடுகிறது . இவரது இளமைத்தோற்றத்தில் அதாவது ஃபிளாஸ்பெக் கில்; அனஸ்வரா ராஜன் இளமை பொங்கும் ஊற்றாக கதைக்கு ஜீவன் சேர்த்து இருக்கிறார்
மியா ஜார்ஜ் , மம்தா பைஜூ , சபீதா ஜார்ஜ் என அனைத்துப்பெண் கேரக்டர்களும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர்
முதல் பாதி திரைக்கதை க்கும் பின் பாதி திரைக்கதை அமைப்புக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் , நாம் யூகிக்க முடியாத பாதையில் திரைக்கதை பயணிப்பது சிறப்பு
ஷினோஜின் ஒளிப்பதிவு 3 வெவ்வேறு கால கட்டங்களில் கதை பயணிப்பதற்கு ஏற்ப கலர் டோன் மாறுவது அழகு . பினு நெப்போலியன் எடிட்டிங்கில் இரண்டே கால் மணி நேரப்படமாக தந்திருக்கிறார்
ஷான் ரஹ்மான் இசையில் பாடல்கள் மெலோடி தரம் . பின்னணி இசை சிறப்பு
சபாஷ் டைரக்டர் ( நிகில் முரளி )
1 முதல் காதல் என்பது எல்லோர் வாழ்விலும் உண்டு , அவர்களால் மறக்க முடியாத அங்கமாக மாறி விடும் எனும் கருத்தை பதிவு செய்த விதம் அருமை
2 நாயகியின் இரண்டாவது காதலி தன் பெற்றோரிடம் அவர்கள் திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்து இருக்கிறார்களா? என கேள்வி கேட்கும்போது இருவரும் இல்லை என பதில் சொன்னாலும் அன்றைய இரவு இருவருக்கும் உறக்கம் இல்லாத இரவாக அமைவதும் , முதல் காதலை உணர்வதும் அருமையான குறியீடு
3 எப்போதும் சீரியல் , சமையல் என இருக்கும் நாயகனின் அம்மாவிற்கான ஃபிளாஸ்பேக் காதலில் கவிதைத்தனம்
4 க்ளைமாக்சில் தன் அப்பாவிற்குத்தெரியாமல் அம்மாவின் காதல் டைரியை மகன் அம்மாவின் காதலனிடம் ஒப்படைக்கும் காட்சி
ரசித்த வசனங்கள்
1 நான் அவ கூட எந்த தொடர்பும் வெச்சுக்கலை , அவ மெசேஜூக்கு ரிப்ளை பண்ணுனேன், என் ரிப்ளைக்கு அவ மெசேஜ் செஞ்சா அவ்ளோ தான்
2 இந்தப்பொண்ணுங்க கிட்டே எதையும் வெளிப்படையா பேச முடியலை , பேசவும் கூடாது
3 இது காலேஜ் ரீ யூனியனா? அங்க்கிள்ஸ் ரீ யூனியனா?
4 சரக்கடிக்க காரண காரியம் தேவை இல்லை
5 ஒயிஃப்க்குத்தெரியாம எக்ஸ் கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட காண்டாக்ட்ல இருப்பது தப்பா ?
இதுக்குப்பேருதான் எக்ஸ்ட்ரா மேரிட்டல் லைஃப் . பச்சையாச்சொல்லனும்னா கள்ளக்காதல்
6 டியர் , நைட் டைம்ல நீ செம அழகு
அடேய் , அப்போ பகல்ல??
அப்பவும் தான் , ஆனா நைட்ல எக்ஸ்ட்ரா
7 காதலித்த பின் நீ அவனைப்பற்றி முழுசா தெரிஞ்சுக்கிட்டே. முழுசா தெரிஞ்சுக்கிட்ட பின் நான் அவனைக்காதலிக்கிறேன், ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு
8 தெர் ஈஸ் நத்திங் மோர் தன் ஃபர்ஸ்ட் லவ் ( முதல் காதலை விட சிறந்தது வேறெதுவும் இல்லை )
9 நாம நினைச்சச் மாதிரிதான் ஒவ்வொருவர் கேரக்டரும் இருக்கும்னு சொல்லிட முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் அம்மாவின் ஃபிளாஸ்பேக் லவ் ஸ்டோரியில் காதலன் குறிப்பிட்ட நேரத்துக்கு குறிபிட்ட இடத்துக்கு வர முடியாததால் ஓடிப்போக முடியாமல் போவது , காதலன் போலீஸ் கேசில் மாட்டுவது எல்லாம் ஆல்ரெடி 1998ல் கேஎஸ் அதியமான் இயக்கத்தில் ஆர் பார்த்திபன் - பிரகாஷ் ராஜ் - தேவயானி நடிப்பில் வெளிவந்த சொர்ணமுகி யில் வந்தாச்சு
2 நாயகனின் அப்பா தன் முன்னாள் கேர்ள் ஃபிரண்டுடன், நாயகன் இன்னாள் கேர்ள் ஃபிர்ண்டுடன் தனி தனி ஜோடி சேர்த்து ஒரே தியெட்டருக்கு வருகிறார்கள் . நாயகன் வந்தது ஓக்கே , அனால் நாயகனின் அப்பா அவர் குடி இருக்கும் வீட்டுக்கு அருகில் இருக்கும் தியேட்டருக்கு வருவது ரிஸ்க் ஆச்சே? தெரிந்தவர்கள் பார்க்க மாட்டார்களா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களைக்கவரும் படம் , பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் நிகில் முரளி முழுப்படமும் ஸ்லோவாகத்தான் போகும், பொறுமையுடன் பார்க்க வேண்டும் , ரேட்டிங் 2. 75 / 5
Directed by | Nikhil Muraly |
---|---|
Written by | Jyothish M Sunu AV |
Produced by |
|
Starring |
|
Cinematography | Shinoz |
Edited by | Binu Nepolean |
Music by | Shaan Rahman |
Production company | Green Room Productions |
Release date |
|
Country | India |
Language | Malayalam |