நாயகன் , நாயகி , வில்லன் மூவரும் சிறந்த செஸ் பிளேயர்கள் என காட்டிய படங்கள் எனக்குத்தெரிந்து ஒன்றுமே இதுவரை வரவில்லை . டைட்டில் , போஸ்டர் டிசைன் முதற்கொண்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தாலும் கம்ப்ளீட் மெடிக்கல் செக்கப்க்கு 5000 ரூபாய் பணம் கட்டி ரிசல்ட் வந்த பின் எந்தக்குறைகளும் இல்லை என டாக்டர் சொல்லும்போது நமக்கு நிம்மதிதான் வரவேண்டும், மாறாக அடடா வீணா 5000 ரூபா தண்டம் கட்டிட்டமே என எண்ணத்தோன்றும், பட க்ளைமாக்ஸ் அப்படித்தான் எண்ண வைத்தது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு கிழ போல்ட். இந்த ஆளுக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி முதல் மனைவியைப்பிரிந்து வாழ்பவர்.ஏகப்பட்ட சொத்துக்களுக்கு அதிபதி , ஆனா ஆள் ஒரு சிடுமூஞ்சி , எல்லார் கிட்டேயும் எரிந்து விழும் கேரக்டர் . இந்த ஆள் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் நாயகியை இரண்டாம் தாரமாகக்கட்டிக்கொண்டு தன் இருப்பிடத்துக்கு அழைத்து வருகிறார்
டொமெஸ்டிக் வயலென்ஸ் என சொல்லப்படும் எல்லாக்கொடுமைகளையும் நாயகிக்கு இழைக்கிறார். அவர் கூட் செஸ் விளையாடி அதில் நாயகி ஜெயித்தால் அதற்கு ஒரு பளார் . பால்கனில நின்னுட்டு இருந்தா அதற்கு வெளி ஆட்கள் யாராவது கமெண்ட் அடிச்சா கமெண்ட் அடிச்சவங்களை விட்டுட்டு மனைவிக்கு ஒரு அடி ..
இந்த மாதிரி கொடுமைகளை எல்லாம் சகித்துக்கொண்டு வாழும் நாயகிக்கு ஒரு தங்க தருணம் வாய்க்கிறது . வில்லன், நாயகி இருவரும் ஒரு மலை உச்சியில் நின்று பேசிகொண்டிருக்கும்போது பாறை வழுக்கி வில்லன் கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிறான்
நாயகிக்கு ஒரே கொண்டாட்டம், என்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினே? உனக்கு நல்லா வேணும் எனும் தொனியில் வில்லனை ட்ரீட் பண்ணுகிறாள் . வில்லனை கவனித்துக்கொள்ள ஒரு ஆண் நர்ஸ் நியமிக்கப்படுகிறான். அவன் தான் நாயகன்
நாயகன் - நாயகி இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஆகி கொடுக்கல் - வாங்கல் எல்லாம் நடந்து முடிகிறது
நாம் இருவரும் நிம்மதியாக வாழ வில்லனை போட்டுத்தள்ளிவிடலாம் என நாயகி ஐடியா கொடுக்கிறாள் . ஆனால் நாயகனுக்கு கொலை செய்ய மனம் வரவில்லை. நாயகனுக்கு ஃபாரீன் போய் செட்டில் ஆக ஆசை, அவனுக்கு வேறு ஒரு காதலி உண்டு
இப்போது வில்லன் மர்மமான முறையில் இறக்க குடும்ப வக்கீலுக்கு நாயகி மீது சந்தேகம், உயிலில் வில்லன் எல்லா சொத்துக்களையும் நாயகி பேரில் எழுதி வைத்திருந்தாலும் சந்தேகத்துக்கு உரிய மரணம் எனில் சொத்து நாயகிக்குப்போய் சேராது என கண்டிஷன் வேற இருக்கு . இதைக்காரணம் காட்டி லாயர் நாயகியை தன் ஆசைக்கு இணங்க மிரட்டுகிறான்/ வில்லனின் முன்னாள் மனைவி தன் குடும்பத்துடன் வருகிறாள் . போலீஸ் நாயகி , நாயகன் இருவரையும் விசாரணைக்கு ஆளாக்குகிறது
இதற்குபின் இந்த மரணத்தில் துப்பு துல்ங்கியதா? என்பது மீதி திரைக்கதை
நாயகியாக மொத்தப்படத்தையும் தாங்கி நிற்பவர் ஸ்வாஷிகா விஜய் .கன்னங்கள் இரண்டுக்கும் இவ்வளவு ரோஸ் ஷேடு கொடுத்து மேக்கப் போட்ட முதல் நடிகை இவராகத்தான் இருக்கும் . ட்ரான்ஸ்ஃபர்மேசன் சீன்களில் கலக்குகிறார்
நாயகன் ஆக ரோஷன் மேத்யூ கச்சிதமான நடிப்பு . இவரது கேரக்டர் டிசைன் சரியாக விளக்கப்படவில்லை , தன் முதல் காதலியிடமும் நேர்மையாக , நாணயமாகப்பேசுகிறார். தன் கள்ளக்காதலியிடமும் அதே போல் பழகுகிறார். உண்மையில் இவர் யாரை உண்மையாகக்காதலிக்கிறார் என்பது குழப்பம் .( குழப்பமா முக்கியம் படத்தைப்பாருய்யா மொஎண்ட் )
வில்லனாக அலென்சியர் லெ கொஞ்சம் செயற்கைதட்டும் நடிப்பு . படுக்கையில் வீழ்ந்த பின் இவரால் எந்த பங்களிப்பையும் சரி வர செய்ய முடியவில்லை
ஒரு சாதாரண கேரக்டரைக்கூட தன் அசாத்திய திறமையால் தூக்கி நிறுத்தும் நடிகர்கள் இருவர். 1 சித்திக் 2 ஜாஃபர் இடுக்கி
நாயகனின் முதல் காதலியாக சாந்தி பாலச்சந்திரன் அழகிய முகம், கச்சித நடிப்பு
போலீஸ் ஆஃபீசராக லியோனா லிசாய் அதிக வேலை இல்லை ., வந்தவரை ஓக்கே
பிரதீஷ் வர்மாவின் ஒளிப்பதிவில் நாயகியை அடிக்கடி க்ளோசப்பில் அழகாகக்காட்ட முயல்கிறார். பீத்து ஜோசஃபின் எடிட்டிங்கில் கச்சிதமாக 2 மணி நேரத்தில் படத்தை கட் பண்ணி ட்ரிம் பண்ணி இருந்தாலும் 3 மணி நேரம் ஓடுவது போன்ற பிரமையைத்தருகிறது . பிரசாந்த் பிள்ளையில் இசையில் இரு பாடல்கள் ஓக்கே ரகம், பின்னணி இசை ஓக்கே ரகம்
சித்தார்த் பரதன் தான் திரைக்கதை இயக்கம் ,பெரிய ட்விஸ்ட் அண்ட் டர்ன்ச் எல்லாம் எதுவும் இல்லாமல் ஸ்லோ பர்ன் த்ரில்லர் ஆக படத்தை எடுத்திருக்கிறார்
சபாஷ் டைரக்டர் (சித்தார்த் பரதன்)
1 இந்த மாதிரி படங்களுக்கு நாயகியின் குளியல் காட்சி மிக முக்கியம் என்பதை உணர்ந்து சமூகப்பொறுப்புடன் கதைக்கு தேவை இருக்கோ இல்லையோ அட்டாச் செய்தது
2 படத்தில் பங்கேற்றவர்கள் 70% பேர் பெண்களே! பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்த பாங்கு அருமை
ரசித்த வசனங்கள்
1 கணவனுக்கு கை ராசி என்பது மனைவி கால் எடுத்து புகுந்து வீட்டுக்கு வந்த கால் ராசி தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து டொம் என்ற சத்தத்துடன் பின் மண்டையில் அடிபடும்போது அப்போதே ஆள் அவுட் ஆகி இருக்க வேண்டும் . ஆனால் சும்மா காயம் தான் என பூசி மெழுகுவது
2 நாயகன் - நாயகி இருவருக்கும் தொடர்பு உண்டா? என போலீஸ் விசாரிக்கும்போது உண்மை அறிந்த சம்ப்வத்தை நேரில் பார்த்த பணிப்பெண் அதை ஏன் போலீசிடம் மறைக்கிறார் ?
3 நாயகன் வெளியூர் / வெளிநாடு போய் விடக்கூடாது என நாயகி செய்யும் சதித்திட்டம் நாயகனுக்கு க்டைசி வரை தெரியாமலே இருப்பது
4 நாயகனின் முதல் காதலி நாயகனின் கள்ளக்காதல் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாதது உறுத்துகிறது
5 வில்லனுக்கு நாயகி சயனைடு வைத்துக்கொலை செய்திருப்பாரோ? என போலீஸ் , வக்கீல் என எல்லோரும் சந்தேகப்படுவது மடத்தனம் . தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கு சும்மா ஆக்சிசன் ட்யூப்பை கட் பண்ணி விட்டாலே போதுமே? சயனைடு விஷம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டில் காட்டிக்கொடுக்காதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஏ சர்ட்டிஃபிகெட் ஃபிலிம் , லைட்டாக கிளாம்ர் இருக்கிறது ( டார்க்கா எதிர்ப்பார்க்க வேண்டாம்)
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பர பரப்பாக ஆரம்பிக்கும் படம் ஸ்லோவாக சென்று ஏனோ தானோ என முடிகிறது . பிரமாதம் என மெச்சவும் முடியல , டப்பாப்படம் என தள்ளவும் முடியலை , சுமார் ரகம் ., ரேட்டிங் 2.25 /5