Saturday, April 15, 2023

HUNGER (2023)(தாய்லாந்து) - சினிமா விமர்சனம் ( மோட்டிவேஷனல் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


2017ல்  ரிலீஸ்  ஆன் குக்  அப் எ ஸ்டோர்ம் ( COOK UP A STORM ) என்ற  ஹாங்காங்  சைனீஷ்  பட  பாணியில்  முழுக்க  முழுக்க  சமையல்  கலையை  அடிபப்டையாகக்கொண்டு  எடுக்கப்பட்ட  ஒரு சுவராஸ்யமான  படம், 2022 ல்  ரிலீஸ்  ஆன த  மெனு ( THE MENU-2022)  எனும்  அமெரிக்கன்  மூவி  சாயலில் இருக்கும்  கதை . சமையல்  படமா? அப்போ  அது  பெண்களுக்கானது, என  ஆண்கள்  எஸ்கேட்  ஆக  வேண்டாம், ஒரு  கமர்ஷியல்  படத்துக்கு  உண்டான  விறுவிறுப்பு , சுவராஸ்யம்  எல்லாம்  கலந்த  நல்ல  படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி    ஒரு  டிகிரி  முடிச்சுட்டு  வாழ்க்கைல  ஏதாவது  சாதிக்க  வேண்டும்  என்ற  லட்சியக்கனவுடன்  இருப்பவர். இவரது  குடும்பம்  நடத்தும்  ஒரு  சின்ன  ஹோட்டலில்  இவர்தான்  சமையல்  இன்சார்ஜ். ஃபிரைடு  ரைஸ் , நூடுல்ஸ்  செய்வதில்  இவர்  ஸ்பெஷலிஸ்ட். என்னதான்  சுவையாக  இவர்  சமைத்தாலும் தினமும்  ஒரே  மாதிரி  வாழ்க்கை  வாழ்கிறோமே  என  நாயகிக்கு  போர்  அடிக்கிறது 


 இப்படி  இருக்கும்போது  ஒரு  நாள்  கடைக்கு  வந்த  ஆள் ( நாயகன் ) நாயகியின்  சமையலை  ருசி  பார்த்து  வியந்து  நாயகியிடம்  ஒரு  விசிட்டிங்  கார்டைக்கொடுத்து  இங்கே  வந்து  பாருங்க  என  சொல்லி  விட்டு  செல்கிறான்


அந்த  விசிட்டிங்  கார்டு  வில்லன்  உடையது .அவர் அந்த  ஏரியாவிலேயே  பெரிய  சமையல்காரர்  . அவர்  ஒரு  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டலிலோ  , வேறு  எங்கோ  வேலை  பார்ப்பவர்  அல்ல . பெரிய  பெரிய  கோடீஸ்வரர்கள்  கலந்து  கொள்ளும்  பர்த்டே  பார்ட்டி ,   பேச்சிலர்  பார்ட்டி  போன்றவற்றில்  ஸ்பெஷல்  ஆர்டர்  எடுத்து  சமையல்  செய்து  சம்பாதிப்பவர் ., இவரது  கைப்பக்குவம்  செம  ஃபேமஸ் 


நாயகி  வில்லனின்  இடத்துக்குப்போகிறார். அங்கே  சமையல்  வேலைக்கு  சேர்கிறார், ஆனால்  அவ்வளவு  சீக்கிரம்  வில்லனிடம்  நல்ல  பெயர்  வாங்க  முடியவில்லை , என்னதான்  பிரமாதமாக  சமைத்தாலும்  ஏதாவது  குறை  சொல்லிக்கொண்டே  இருக்கிறார்


நாயகியை  வில்லனுக்கு  அறிமுகப்படுத்திய  நாயகன்  உட்பட  பலர்  அங்கே  வேலை  செய்தாலும்  நாயகி  தான்  சமையலில்  இப்போ  நெ ஒன்.ஒரு  கோடீஸ்வர்ர்  பர்த் டே  பார்ட்டியில்  நாயகியின்  சமையல்  சிலாகிக்கப்படுகிறது. ஆனால்  வில்லனுக்கு  அதில்  விருப்பம்  இல்லை 


 அடுத்த  முறை  சமையலில்  நாயகியை  இருட்டடிப்பு  செய்கிறார்  வில்லன்.மெயின்  சமையல்  வேலைக்கு  அவரை  நியமிக்காமல்  எடுபுடி  வேலைக்கு  நியமிக்கிறார். இதனால்  நாயகிக்கு  வருத்தம், அவமானம்


ஒரு  பார்ட்டியில்  வேறு  ஒருவர்  நாயகியை  சந்தித்து  நீங்க  இருக்கும்  ரேஞ்சுக்கு  தனியாக உங்க  ஆட்களுடன்  சேர்ந்து  சமையல்  செய்தால்  பெரிய  ஆளாக  வரலாம், எத்தனை  நாட்களுக்குத்தான்  ஒருவரிடம்  வேலைக்கு  இருப்பீர்கள்  என்கிறார்


 ஆனால்  நாயகனுக்கு  நாயகியுடன்  பணி  செய்ய  தயக்கம், நாயகி  தனியே  களமாட  வேண்டிய நிர்ப்பந்தம். நாயகி  வில்லனை  மீறி  சாதித்தாரா? நாயகன் - நாயகி  காதல்  நிறைவேறியதா?  என்பது  தான்  மீதி  திரைக்கதை 


வில்லன்  செஃப்  பால்  ஆக  நடித்தவர்  அடி பொலி  நடிப்பு . உங்கள்  ஒவ்வொருவரின்  முதலாளி  அல்லது  பாஸ்  அலல்து  எம் டி  யை  நினைவுபடுத்துவார். அவரது  உடல்  மொழியும்  நடிப்பும்  அட்டகாசம் 


நாயகியாக  நடித்தவர்  மேல்  நமக்கு  ஒரு  பரிதாபம்  வருவது  அந்த  கேரக்டர்   டிசைனுக்குக்கிடைத்த  வெற்றி . அவரது  முகமே  பால் வடியும்  அப்பாவி  முகமாக  இருப்பது  பெரிய  பிளஸ்., எப்படியாவது  அவர்  ஜெயிக்க  வேண்டுமே  என்ற  எண்ணம்  ஆடியன்ஸ்  மனதில்  பற்றிக்கொள்ளும் விதமான  நடிப்பு 


 நாயகனுக்கு  அதிக  வேலை  இல்லை . சில  காட்சிகள் . படம்  முழுக்க  ஆக்ரமித்து  இருப்பது  வில்லனும், நாயகியும் தான் . இருவருக்கும்  இடையே  நடக்கும்  சம்பவங்கள் தான்  திரைக்கதை 


படத்தில்  குறிப்பிட்டு  சொல்ல  வேண்டிய இரண்டு  அம்சங்கள்  ஆர்ட்  டைரக்சன் , புரொடக்சன்  டிசைன்  டீம்  ஒர்க் , ஒளிப்பதிவு  அனைத்தும்  அருமை .  குறிப்பாக  ருமாலி  ரொட்டி  சமைப்பது  போல  கடாயில்  நெருப்பில்  சமைக்கும்  காட்சி  கலக்கல்  ரகம் 


சபாஷ்  டைரக்டர்


1  வில்ல்னின்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்ட  விதம்  அருமை . ஒரு  படம்  அல்லது  கதை  ஜெயிக்க  வேண்டும்  எனில்  அதில்  வில்லன்  ரோல்  கச்சிதமாக , பலமாக  டிசைன்  செய்திருந்தாலே  போதும், இப்பேர்ப்பட்ட  ஆளை  எப்படி  நாயகன்  வெற்றி  பெறப்போகிறான்  என்ற  ஆர்வம்  ஆடியன்சுக்கு  தொற்றிக்கொள்ளும்


2  நாயகி   மற்றும்  வில்லன்  சமைக்கும்  ஒரு ஒரு  காட்சியும்  கலக்கல்  ரகம் .


  ரசித்த  வசனங்கள் 


1  பசித்து  இருப்பவர்களுக்கே  வெற்றி  கிடைக்கும்


2  ஒவ்வொரு  நாள்  காலையில்  நான்  எழும்போதும்  ஏழையாகவே  எழுகிறேனே  என்ற  வருத்தம்  உண்டு

3  கைவசம்  பணமே  இல்லாம  இங்கே  ஜெயிக்கனும்னா  ரொம்ப  கஷ்டம் 


4  சாமான்யர்கள்  சந்தோஷமா  இருக்க  உரிமை  கூட  இல்லை 


5  சாமான்யனாக  இருப்பதில்  திருப்தி  அடைகிறவரா? நீங்கள் ? இல்லை , சம்திங்க்  ஸ்பெஷல்  என இருக்க  ஆசைப்படுபவரா? 


6  முறைப்படி ,  சிஸ்டமேடிக்கா  கல்வி  பயின்றவர்களிடம் கற்பனைத்திறனோ. க்ரியேட்டிவிட்டியோ  இருக்காது 


7  யாருக்காக  சமைக்கிறோமோ  அவங்க  மேல  அன்பு  அதிகமா  இருந்தா  சமையல்  ருசியா  இருக்கும்னு  சொல்வாங்க, ஆனா  எனக்கு  அதில் நம்பிக்கை  இல்லை , ஒரு  நல்ல  சமையல்காரன்  தன்  சமையலில்தான்  கவனமா  இருக்கனும், அன்பில்  அல்ல 


8  நீ  என்ன  சாப்பிடுகிறாயோ  அதுதான்  உனது  சமூக  அந்தஸ்தை  பிரதிபலிக்கிறது 


9  ஏழை  எப்போதும்  தன்  பசி  அடங்குவதற்காகத்தான்  சாப்பிடுகிறான், ஒருபோதும்  அவன்  ருசியை  நினைத்து  ஏங்குவதில்லை 


10  கிச்சன்  கேபினெட்  ல  ஜனநாயகம்,சமத்துவத்துக்கு  எல்லாம்  இடம்  இல்லை , ஆர்டர் போடனும், கீழ்ப்படியனும்


11  நீ  யார்  கிட்டே  தொழில்  கத்துக்கிட்டியோ  அவங்க  பாணியை  அப்படியே  காப்பி  பண்ணனும்னு  அவசியம்  இல்லை 


12   உன்  கனவுப்பயணத்தை  தொடர  ம்ஜுடியாமைக்கும், லட்சியத்தை  அடைய  முடியாமைக்கும்  காரணம்  உன்  கிட்டே  போதிய  அளவு  பசி இல்லை 


13  அவனை  மாதிரி  லட்சக்கணக்கான   திறமைசாலிகள்  உலகம்  முழுக்க  இருக்கா ந்க, ஆனா  உன்னை  மாதிரி  ஒரு  நல்ல  கேரக்டர்  உள்ளவங்களாலதான்  ஜெயிக்க  முடியும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நெருப்புக்காயத்துடன்  நாயகி  தன்  இரு  கைகளையும்  பார்க்கும்போது  இரு  கைகளிலும்  ஏராளமான  தழும்புகள்  தெரிகின்றன, ஆனால்  அடுத்தடுத்த  காட்சிகளில்  கைகள்  இரண்டும்  மொழு  மொழு வென  இருக்கின்றன, தழும்பு  இருந்த  சுவடே  இல்லை 


2   காயப்படாமல்  நாம்  ஜெயிக்க  முடியாது  என  சொல்லும்  வில்லன்  கைகளில்  எந்த  ஒரு  தழும்பும்  இல்லை 


3  ஒரு  கட்டத்தில்  வில்லன்  கத்திக்குத்து  பட்டு  படுத்திருக்கும்போது  நாயகி  அவர்  மேல்  காட்டும்  கரிசனம்,  அவருக்கு  சொந்தம்   என  யாரும்  இல்லையா?  எனக்கேட்பது  இதையெல்லாம்  பார்க்கும்போது  இவர்  காதலிப்பது  நாயகனையா? வில்லனையா? என்ற  கேள்வி  எழுகிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  நாயகி  குளிப்பது  போல  ஒரு  காட்சியும், காதலனுடன்  நெருக்கமாக  இருப்பது  போல் ஒரு  காட்சியும்  உண்டு , பரிபூரண  சைவ விரும்பிகள்  இந்தப்படத்தை  தவிர்ப்பது  நல்லது , படம்  முழுக்க  அசைவ  சமையல்  க்ளோசப்ல  வரும்  . 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  சாதாரண  கதை . ஆனால்  திரைக்கதை  மற்றும்  காட்சிப்படுத்தலில்  அசத்தி  இருக்கும் படம்  நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆகி  உள்ள  படம்  , ரேட்டிங்  2.75 / 5