Monday, April 10, 2023

PREMA DESAM ( 2023) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ அமேசான் பிரைம்


 1996ல்  ரிலீஸ்  ஆன  கல்ட்  கிளாசிக்  படமான  பிரேம  தேசம்  படத்துக்கும் , இந்தப்படத்துக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை. அந்தப்படத்தின்  ரீமேக்கும்  இது  இல்லை ., இது  வேறு  கதை 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


இரு  வெவ்வேறு  காதல்  ஜோடிகளின்  வெவ்வேறு  இரு  கதைகள்  எப்படி  ஒரு  புள்ளியில்  இணைகின்றன  என்பதுதான்  கதை


முதல்  கதை -  நாயகன்  தன்  அம்மாவுடன்  வீட்டில்  வசித்து  வருகிறான். இவன்  கல்லூரியில்  படிப்பவன். நாயகன்  வீட்டுக்கு  எதிர்  வீட்டுக்கு  நாயகி  குடி  வருகிறாள் . நாயகனின் காலேஜில்  ஜூனியர். இருவரும்  வெவ்வேறு  வகுப்பு  இருவருக்கும்  அறிமுகம்  ஆகிறது . இருவரும்  ஒருவரை  ஒருவர்  உள்ளூர  விரும்புகிறார்கள் , ஆனால்  காதலை  வெளிக்காட்டிக்கொள்ளவில்லை . காதலர்  தினம் அன்று  காதலை  வெளிப்படுத்துவதாக  இருவரும்  தனித்தனியே  முடிவு  எடுக்கிறார்கள் . அன்றைய  தினம்  மிகப்பெரிய  விபத்தை  நாயகன்  சந்திக்கிறான்


இரண்டாம்  கதை -நாயகன் , நாயகி  இருவருக்கும்  திரும்ணம்  நடக்கிறது  நாயகிக்கு  மவுனராகம்  கார்த்திக்  போல  ஏற்கனவே  காலேஜில்  ஒரு  காதலன்  இருந்தான்.  இருவரும்  காதலித்து  திருமணம்  வரை  சென்றவர்கள்  தான் . சரியாக  திருமண முகூர்த்தத்துக்கு  2  மணி  நேரம்  முன்  ஒரு  கார்  விபத்தில்   காதலன்  பலி  ஆக  நாயகி  சோகத்தில்  மூழ்குகிறாள் அப்பாவின்  வற்புறுத்தலில் திருமணத்துக்கு  சம்மதித்தாலும்  நாயகி  மனம் காதலன்  நினைவாகவே  இருக்கிறது. பொறுத்துப்பொறுத்துப்பார்த்த  நாயகன்  தன்  மனைவியிடம்  நாம  டைவர்ஸ்  பண்ணிக்கலாமா? என  கேட்கும்போது  அதிர்ச்சியில்  நாயகி  ஒரு  விபத்தை  ஏற்படுத்தி  விடுகிறாள் , போலீஸ்  கேஸ்  ஆகிறது . முதல்  கதையில்  உண்டான  கார்  விபத்துதான்  இவர்  ஏற்படுத்திய  விபத்து 


 இதற்குப்பின்  இரு  காதல்  ஜோடிகளும்  என்ன  ஆனார்கள்  என்பது  க்ளைமாக்ஸ் 


 முதல்  காதல்  கதையில்  நாயகனாக  த்ரிகன், நாயகியாக  மேகா  ஆகாஷ். இவருக்கு  அழகு  பொம்மையாக  வரும், நடக்கும் கேரக்டர். அவ்வப்போது  சிரிப்பார். அவளோ  தான் வேலை  முடிஞ்சுது . சம்பளம்  20  லட்சம்  ரூபாய் . நாயகனுக்கு  அம்மாவாக  மதுபாலா . 500  ரூபா  சம்பளம்  வாங்கிக்கொண்டு  5  லட்சம்  ரூபாய்க்கு  நடிக்கும்  ஓவர்  ஆக்டிங்  ஓமனா  ஜோதிகாவுக்கே  அக்கா  மாதிரி  ஆகப்பார்க்கிறார், மதுபாலா. நாயகனின்  அம்மா வாக  இல்லாமல் நாயகனின்  தோழி  மாதிரி  அமைந்த  கேரக்டர். கொஞ்சம்  ஓவர்  டோஸ்  தான் 


 இரண்டாம்  கதையில் நாயகனாக  அஜய்  கத்ருவர், நாயகியாக  மாயா இருவரின்  நடிப்பும் கச்சிதம்  நாயகியின்  தங்கைகளாக  வரும்  இரு  பெண்களும்  அளவாக  நடித்திருக்கிறார்கள் 


 படத்தில்  வில்லன்  ரோல்  என  யாரும்  இல்லை . சஜாத்  காக்கு  தான் ஒளிப்பதிவு , அருமை . இரு  நாயகிகளையும்  கண்ணியமாக , அழகாகக்காட்டி  இருக்கிறார்கள் , இருவருக்குமான  காஸ்ட்யூம்  டிசைனிங்  குட்


கிரண்தம்பேரா  தான்  எடிட்டிங். கச்சிதமாக  ரெண்டே  கால்  மணி  நேரத்தில்  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்கள் 


மணிஷர்,மா  தான் இசை ., 2  பாடல்கள்  செம  ஹிட்டு . பிஜிஎம்  சராசரி .




சபாஷ்  டைரக்டர் ( ஸ்ரீகாந்த்  சித்தம் ) 


1  முதல்  பாதி  கதையை  எங்கேயும்  எப்போதும்  படத்தைப்போல  பின்  பாதி  படக்கதையை  மவுன ராகம்  போல  தந்தது 


2  இரு  நாயகிகள் , நாயகியின் இரு  தங்கைகள்  என  எல்லாருக்கும்  அடிக்கடி  க்ளோஷப்  ஷாட்ஸ்  வைத்தது 



  ரசித்த  வசனங்கள் 


1  உன் உடம்பில்  இருந்து  ரத்தம்  வருதுன்னா  அது  உன்  உயிர்  போகும்போது  வருவதாக  இருக்கக்கூடாது , மற்ற  உயிர்களைக்காப்பாற்றும்போது  வருவதா  இருக்கனும்


2  மிஸ்1  உங்க  பேருக்கு  பின்னால  ரொம்ப  நாளா  ஒரு  சர்  நேம்  அதாவது  உங்க  அப்பா  பேரு  இருக்கே? அது  ரொம்ப  போர்  அடிச்சா  வேணும்னா  என்  பேரை  பின்னால  சேர்த்துக்குங்க , நோ  அப்ஜெக்சன் 


3  காதலில்  ஈடுபடும்  ஒவ்வொரு  முட்டாளும்  ஷாஜகானே!


4 அந்த  வீணாப்போனவனுக்கெல்லாம்  செம  அழகா  ஒரு சம்சாரம்  இருக்கு , எனக்கு  என்ன  குறைச்சல் ? 


5  நீ  எப்பவோ  செத்துப்போனவனை  நினைச்சு  இப்போ  உயிரோட  இருக்கறவனை  தினமும்  சாகடிச்சுட்டு  இருக்கே!


6  அவரு  சந்தோசமா  இல்லைன்னாலும்  சந்தோஷமா  இருக்கற  மாதிரி  நடிக்கிறார். உனக்கு  அவரைப்பிடிக்கலைன்னாலும்  பிடிச்ச  மாதிரி  ஏன்  நடிக்கக்கூடாது ?



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்  அம்மாவுடன்  வசிக்கும்  வீட்டின்  எதிர்  வீட்டில்  நாயகி 4  வருடங்களாக  இருக்கிறாள்.  ஆனால்  நாயகனின்  அம்மாதான்  இவர்  என  அவருக்குத்தெரியாது. ஆனால்  இருவரையும்  தனித்தனியே  பழக்கம், இது  எப்படி  ? சாத்தியமே  இல்லையே? 


2  நாயகனின்  அம்மா  மதுபாலா  ஒரு   கடைல கிடார்  பர்ச்சேஸ்  பண்ண  ரேட்  கேட்கறார். கடைக்காரன் 10,000  ரூபா  அப்டிங்கறான், 5000  ரூபாய்க்கு  தர  முடியுமா?னு  கேட்க  நோ  என்கிறான்.சரி   பேக்  பண்ணு  என  வாங்கிக்கொள்கிறார். பிறகு  ரவுடிப்பசங்க  கிராஸ்  பண்றப்ப  அதை  உடைச்சுடறாங்க அவங்க  கிட்டே  5000  ரூபா  வசூல் பண்றார். . ஆக்சுவலா  10,000  தானே  அதன்  ரேட்?


3    5000  கேட்ட  மதுபாலாவிடம்  ரவுடி 10000  ரூ   தருகிறான். எதுக்கு  5000  ரூபா  எக்ஸ்ட்ரா  என  கேட்கும்போது  இப்போ  உன்னை  இடிக்க  என  ரவுடி  சொல்கிறான். பிறகு  கடைக்காரனிடம்  இன்னொரு  கிடார்  கொண்டு  வா  என  சொன்ன  மதுபாலா  புது  கிடார்க்கு  பணமே  தர்லை 


4   ஸ்கூல்  டாப்பர்  ஆன  நாயகி  காலேஜ் எக்சாம்  செண்ட்டர்ல  எக்சாம்  எழுதத்தெரியாம  விழிப்பது  நம்பும்படி  இல்லை . அதே  போல  நாயகன்  ஒரு  பிட்டு  பேப்பரை  தர  அதைப்பார்த்து  எழுதும்  சீனும்  நம்பும்படி  இல்லை . இருவரும்  வெவ்வேறு  டிப்பார்ட்மெண்ட். என்ன  சப்ஜெக்ட்  என்ன  கேள்வி  எதுவும்  தெரியாம  எப்படி பிட்  பேப்பர்  ரெடி  பண்ண  முடியும் ?


5  மாப்பிள்ளை  இறந்து  விட்டதால்  திருமணம்  தடை  படும்  நாயகியின்  அப்பா  உனக்குப்பின் ரெண்டு  தங்கச்சிங்க  இருக்காங்க  அவங்களுக்கு  மேரேஜ்  பண்ண வேணாமா? என  மேரேஜூக்கு  வற்புறுத்துகிறார். சரி  நாயகியின்  தங்கைக்கு  என்ன  வயசுனு  பார்த்தா  ஒரு  தங்கை 12  இன்னொண்ணு 15 . எப்படியும்  6  வருசம்  கேப்  இருக்கே? என்ன  அவசரம்? 

6  திருமண  முகூர்த்தத்துக்கு இன்னும்  ரெண்டு  மணி  நேரம்தான்  இருக்கு. ஏகப்பட்ட  சாங்கியம், புனஸ்காரம்  எல்லாம்  பெண்டிங்  இருக்கும்., மாப்ளை  லூஸ் மாதிரி  நாயகியை  ஒரு  கார்  ரைடு  போலாம்னு  கூப்பிடறார். அந்த  பேக்குக்கு  கார்  ஒழுங்கா  ஓட்ட  வராதுனு  அந்த  பேக்கே  சொல்லுது, பரவால்ல  நான்  கூட இருக்கேன்னு  இந்த  கேனம்  சொல்லி  மெயின்  ரோட்ல  கார்  ஓட்ட  வெச்சு  பாப்பா மாப்ளை  மர் கயா . திணிக்கப்பட்ட  இறப்பா  தெரியுதே  தவிர  இரக்கமோ  பரிதாபமோ  வர்லை 


7  மவுன  ராகம்  மோஹன் - ரேவதி  மாதிரி  பொசிசன்ல  இருக்கும்   பேசாத  நாயகி - நாயகன்  ஜோடி  இருக்கும்  வீட்டில்  நாயகியின்  தங்கைகள்  தன்  அக்கா - மாமா  ஜோடி  சேர  ஒரு  கேவலமான  திட்டம்  போடறாங்க , அதன்படி  நாயகி  டிரஸ்  சேஞ்ச்  பண்ணிட்டு  இருக்கும்  பாத்ரூம்  கதவை  நாயகன்  திறக்க  முற்படும்போது  எதுவும்  சொல்லலை . தடுக்கலை . நாயகி  உள்  பக்கம்  கதவை  தாழ்  போட  மாட்டாரா? 


8  உன்  கிட்டே  தனியா  பேசனும்னு  தாலி  கட்ன  சொந்த  சம்சாரம்  கிட்டே  சொல்லும் ஹீரோ  யாருமே  இல்லாத  அவங்க  வீட்ல  பேசாம  லூஸ்  மாதிரி  நாயகியை  ஒரு  இடத்துக்கு  கூட்டிட்டுப்போவது  ஏன்? போய்  பேச  வேண்டிய  விஷயத்தைப்பேசாம  கார்ல  போகும்போதே  மேட்டரை  ஓப்பன்  செய்வது  ஏன் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - எதுவும்  இல்லை ., க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நாயகிகள்  இருவரின்  அழகுக்காக  பார்க்கலாம், ஒரே  டெம்ப்ளேட்டான  கதை  தான்  ரேட்டிங்  2.25 /5