Wednesday, March 08, 2023

IRATTA (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


  கேரளா - பாலக்காடு  - ஓட்டப்பாலம்  என்னும்  ஊரில் போஸ்ட்  ஆஃபீசில்  பணி புரிபவர் தான்  இந்தப்பட  இயக்குநரான ரோகித்  எம் ஜி  கிருஷ்ணன். இவர்  எந்த ஒரு  இயக்குநரிடமும்  அசிஸ்டெண்ட்  ஆகப்பணி  புரியாதவர், சினிமாப்பின்புலம்  எதும்  இல்லாதவர். படத்தின் நாயகனான  ஜோஜூ  ஜார்ஜ்ஜின்  சொந்தப்படம் .கமர்ஷியலாக  சுமாராகத்தான்  ஓடிய  படம்  என்றாலும்  விமர்சன  ரீதியாக  ஏகோபித்த  பாராட்டுக்களைப்பெற்ற  இந்த த்ரில்லர்  படத்தை பற்றி  பார்ப்போம் ,இது  நெட்  ஃபிளிக்சில்  இன்று  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வினோத் , பிரமோத்  இருவரும்  ட்வின்ஸ்.10  வயசு  வரை  அம்மா, அப்பாவுடன்  ஒற்றுமையாக  வாழ்ந்தவர்கள் தான். அப்பா  கேரக்டர்  சரி இல்லை . பல  பெண்களுடன்  தொடர்பு  உள்ளவர் . ஒரு  கட்டத்தில்  வீட்டுக்கே  ஒரு  பெண்ணைக்கூட்டி  வந்து  சொந்தமனைவியையும் , மகன்களையும்  வீட்டை  விட்டு  விரட்டி  விடுகிறார்.


 ஜீவனாம்சம்  கேட்ட போது , இரு  குழந்தைகளுக்கும்  ஆகும்  செலவை  ஏற்க  வேண்டும்  என  பஞ்சாயத்து  நடந்தபோது ஒரு  மகனை  நான்  வளர்த்திக்கொள்கிறேன், இன்னொரு  மகனை  அவ  வளர்த்தட்டும்  என்கிறார்



அதன்படி  வினோத்  அப்பாவுடனும், பிரமோத்  அம்மாவுடனும்  வளர்கிறார்கள் . அப்பா  ஒரு  போலீஸ்காரர்  என்பதாலோ  என்னவோ  மகன்கள்  இருவருமே  போலீஸ்  ஆகிறார்கள் , வினோத்  அசிஸ்டெண்ட்  சப் இன்ஸ்பெக்டர்  ஆகவும், ;பிரமோத்  டி எஸ் பி  ஆகவும்  இருக்கிறார்கள் 


அப்பாவின்  கேரக்டர்  சரி  இல்லாததால்  அப்பாவால்  வளர்க்கப்பட்ட  வினோத்  அப்பாவைப்போலவே  பெண்கள்  விஷயத்தில்  வீக்  உள்ளவராகவும், அம்மாவால்  வளர்க்கப்பட்ட  பிரமோத்  நல்லவராகவும்  இருக்கிறார்கள் 


நல்லவரான  பிரமோத்  தன்  மனைவியை  விட்டுப்பிரிந்து  16  வருடங்களாக  தனிமையில்  வாழ்கிறார். அவர்களுக்கு  ஒரு  மகளும்  உண்டு . மகள்  அவரது  மனைவியுடன்  வாழ்கிறார்


கெட்டவரான  வினோத்  ஒரு  நாள்  போலீஸ்  ஸ்டேஷனில்  இருக்கும்போது    வெளியே  இருப்பவர்களுக்கு  மூன்று  முறை  குண்டு  வெடிக்கும்  சப்தம்  கேட்கிறது. வினோத்  இறந்து  கிடக்கிறார்.


ஸ்டேஷனில்  இருக்கும்  மூன்று  போலீஸ்  மேல்  சந்தேகம்  எழுகிறது. வெவ்வேறு  சந்தர்ப்பங்களில்  வினோத்  உடன்  பகைமை  பாராட்டியவர்கள்  தான்  அவர்கள் . 


 பிரமோத்க்கு  தகவல்  தெரிவிக்கப்படுகிறது, அவர்  வந்து  இந்த  கேசை  இன்வெஸ்டிகேசன்  செய்கிறார்.   என்ன  சம்பவம்  நடந்தது ? என்பது  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்.


 நாயகனாக  ட்வின்சாக  ஜோஜூ  ஜார்ஜ்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். இவர்  போலீசாக  ஆல்ரெடி  நடித்த  ஜோசஃப் , நயாட்டு ஆக்சன்  ஹீரோ  பைஜூ ,ஆகிய  படங்களில்  காட்டிய  உடல்  மொழிக்கும்  இந்தப்படத்தில்  இரு  மாறுபட்ட  போலீசாக  காட்டும்  உடல்  மொழிக்கும்  ஏகப்பட்ட  வித்தியாசங்கள் . நுணுக்கமான  நடிப்பு . பின்னிப்பெடல்  எடுத்து  இருக்கிறார்


கணவனால்  அடிக்கப்பட்டு  போலீசில்  புகார்  கொடுக்க  வந்து    நாயகனால்  அடைக்கலம்  தரப்படும்  நாயகியாக  அங்காடித்தெரு  அஞ்சலி  படம்  முழுக்க  வசனம்  அதிகம்  பேசாமல்  கண்களாலேயே  நடித்திருக்கிறார். பிரமாதம் 


கமிஷனராக  வரும்  ஆர்யா  சலீம்  ஒரு  லேடி  ஆஃபீசரின்  மிடுக்கை  உடல்  மொழியில்  அருமையாக  வெளிப்படுத்தி  இருக்கிறார். 


ஜேக்ஸ்  பிஜோய்  இசையில்  ஒரு  மெலோடி  சாங்  செம  ஹிட்  ஆகி  இருக்கிறது , பிஜிஎம்  குட் 


2  மணி  நேரத்துக்கு  எட்டு  நிமிடங்கள்  குறைவான  டியூரேஷன்  உள்ள தாக  கசிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


ஒளிப்பதிவாளர்  விஜய்  இடுக்கி  மாவட்டத்தின் அழகைக்கண்  முன்  கொண்டு  வ்ந்திருக்கிறார்


 இயக்குநருக்கு  இது  முதல்  படம்  என்பதை  நம்ப முடியவில்லை , த்ரில்லிங்காக  படம்  போகிறது , ஆனால்  ஸ்லோ  பர்ன்  த்ரில்லர் 



சபாஷ்  டைரக்டர்


1  கமிஷன்ர்  ரூமில்  நாயகன்  ., நாயகனின்  ட்வின்  பிரதரின்  மனைவி ,  இன்னொரு  போலீஸ்  ஆஃபீசர்  , கமிசனர்  என  நால்வர்  மட்டுமே  இருக்கும்போது  கமிஷனர் இறந்தவரின்  மனைவியிடம்  உங்க்ளுக்கு  யார்  மீதாவது  டவுட்  இருக்கா? எனகேட்கும்போது   வசனமே  இல்லாமல் மனைவி  குறிப்பால்  உணர்த்தும்  காட்சி 


2 டபுள்  ஆக்சன்  படம்  என்றதும்  ஆள்  மாறாட்டம்  நடந்திருக்கும்.. டிஎஸ்பி  ஆக  இருக்கும்  நபரை  அசிஸ்டெண்ட்  சப்  இன்ஸ்பெக்டர்  கொன்று  விட்டு  ஆள்  மாறாட்டம்  செய்துக்கலாம்  என     நாம்  நினைத்தால்  நமக்கு  ஏமாற்றமே,  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வேற  லெவல் 


  ரசித்த  வசனங்கள் 


1 கணவன் , மனைவி  இருவருமே  ஈகோ  பிடித்தவர்கள்  எனில்  யார் தான்  சமாதானமாக  இறங்கிப்போவது?


2  புருசன் , பொண்டாட்டி  சண்டைன்னா  அக்கம்  பக்கம்  இருக்கறவங்களுக்கு  அது  ஒரு  டைம்  பாஸ் , அதுக்கு  நாம  இடம்  கொடுக்கக்கூடாது 


3  பிரச்ச்னை  இல்லாத  வாழ்க்கை  யாருக்குத்தான்  இருக்கு ?


4  தண்ணி  அடிச்சாலே  என்  புருசன்  இன்னொரு  முகத்தைக்காட்டுவான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மனைவியைப்பிரிந்த  நாயகன்  தன்  மக்ளை  16  வருடங்களாக  நேரில்  போய்  பார்க்கவே  இல்லை  என்பது  நம்ப  முடியவில்லை 


2  அதே  போல    பெண்கள்  விஷயத்தில்  வீக்  ஆக  இருக்கும்  வினோத்  தன்  அண்ணனின்  மனைவி  16  வருடங்களாக  தனிமையில்  வசிக்கிறார்  என்பது  தெரிந்தும்  அவரை  தவறான  கண்ணோட்டத்தில் பார்க  வில்லை  என்பதும்  ஆச்சரியமாக  இருக்கிறது 


3  சந்தேக  லிஸ்ட்டில்  பிரமோத்தும்  இருந்தும்  கமிஷனர்  எப்படி  அந்தக்கெசை  இன்வெஸ்டிகேட்  செய்ய  அவரையே  நியமிக்கிறார்? 


4  ஒரு  போலீஸ்  ஸ்டேஷனில்  சாதா  போலீஸ்  இறந்த  சம்பவத்துக்கு  சி  எம்  மே  ஓவர்  பிரஷர்  தருகிறார்  என்பது  காதில்  பூச்சுற்றல்,  அவர்  அரசியல்  செல்வாக்கு  மிக்கவர்  இல்லையே? 


5  மெயின்  கதைக்கோ ,   நாயகனின்  இறப்புக்கோ  எந்த வித  சம்பந்தமும்  இல்லாத  அஞ்சலி - நாயகன்  போர்சன்  முக்கால்  மணி  நேரம்  இருப்பது  அயற்சி . ஆனா  அதையும்  கட்  பண்ணிட்டா  படம்  ஒரு  மணி  நேரம்  தான்  ஓடும்


6  அப்பாவின்  மோசமான  நடத்தையால்  பெண்  சபலம்  உள்ள  கெட்டவரான  வினோத்க்கு  குற்ற  உணர்ச்சி  வருவதாகக்காட்டும்  இடம்  நம்ப  முடியவில்லை 


7  துப்பாக்கியில்  இருக்கும்  ஃபிங்கர்  பிரிண்ட்ஸ்  ரிப்போர்ட்  வருவதற்குள்  கேசை  முடி  கேசை  முடி என  பறக்கும்  மினிஸ்டர்  கேரக்டர்  எரிச்சல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  எதுவும்  இல்லை , க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு  ஸ்பானிஸ்  படத்தின்  தழுவல்  என  சிலரும் , ஒரு  கொரியன்  படத்தின்  ஒன்  லைன்  எடுத்து  டெவலப் பண்ணி  இருக்கிரார்கள்   என  சிலரும்  சொல்கிறார்கள். ஆனால்  படமாக்கப்பட்ட  விதத்தில்  பார்க்கத்தகுந்த  ஒரு  நல்ல  ஸ்லோ  பர்ன்  த்ரில்லர் தான்  இது . ரேட்டிங்  2.75 / 5 


Iratta
Iratta.jpg
Film poster
Malayalamഇരട്ട
Directed byRohit M. G. Krishnan
Written byRohit M. G. Krishnan
Produced byPrassanth Kumar Chandran
Joju George
Martin Prakkat
Sijo Vadakkan
StarringJoju George
Anjali
Arya Salim
Srikant Murali
CinematographyVijay
Edited byManu Antony
Music byJakes Bejoy
Production
companies
Appu Pathu Pappu Production House
Martin Prakkat Films
Release date
  • 3 February 2023
CountryIndia
LanguageMalayalam