Tuesday, March 07, 2023

WE HAVE A GHOST (2023)-ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் காமெடி டிராமா) @ நெட்ஃபிளிக்ஸ்


2017ஆம்  ஆண்டு  ஜியோஃப்  மானா  எழுதிய  ஏர்னெஸ்ட்  என்னும்  சிறுகதையை  வைத்து  திரைக்கதை  எழுதி  எடுக்கப்பட்ட  படம் தான்  இது . காமெடி யாக  ஆரம்பித்து கோஸ்ட்  த்ரில்லராக  மாறி  க்ரைம்  த்ரில்லராக  க்ளைமாக்ஸில்  ஒரு  ட்விஸ்ட்டோடு  முடியும் இதில்  அப்பா-மகள்  செண்ட்டிமெண்ட்  சீன் கூட  உண்டு 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  16  வயது  டீன்  ஏஜ்  பையன், இவனுக்கு  18  வயதில்  ஒரு  அண்ணனும், அம்மா, அப்பாவும்  இருக்கிறார்கள், நாயகனின்  அப்பா  புதுசாக  ஒரு  செகண்ட்  ஹேண்ட்  வீடு  பார்க்க  ஓப்பனிங்  ஷாட்டில்  வருகிறார். அந்த  வீட்டை  விலைக்கும்  வாங்கி  விடுகிறார்


 அந்த  வீட்டில்  ஒரு  பேய்  இருப்பதை  நாயகன்    கண்டு  பிடிக்கிறான். அந்தப்பேய்  அவனை  பயமுறுத்துகிறது , ஆனால்  நாயகன்  பயப்படாமல்  அந்தப்பேயை  செல்  ஃபோனில்  வீடியோ  எடுத்து  யூ  ட்யூப்பில்  அப்டேட்டி  விடுகிறான். அந்த  வீடியோ  வைரல்  ஆகி  செம  ஹிட்  ஆகி டாக்  ஆஃப்  த ட் டவுன்  ஆகி விடுகிறது


 அடுத்து  ஒரு  சம்பவம் , நாயகனின்  அப்பா  இந்த  விஷயம்  அம்மாவுக்குத்தெரிய  வேண்டாம், தெரிந்தால்  பயப்படுவாள்  எனக்கூறிக்கொண்டு  இருக்கும்போதே  நாயகனின்  அம்மா  அந்தப்பேயை  நேரில்  பார்த்து  அலறி  அடித்து  ஓடுகிறாள் , அந்த  சம்பவத்தை லைவாக  வீடியோ  எடுத்து  அதை  யூ  ட்யூப்பில்  நாயகனின்  அண்ணன்  அப்ட்டேட்ட்  அது  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆகி  நாயகனும், நாயகனின்  குடும்பமும்  சோஷியல்  மீடியாவில்  செம  ஹிட்  ஆகிறார்கள்


 நாயகன்  அந்தப்பேயிடம்  நண்பனாகப்பழகுகிறான், அந்தப்பேயால்  பேச  முடியாது , ஏதோ  ஒரு  காரணத்தால்தான்  அந்தப்பேய்  இங்கேயே  சுற்றுகிறது , அந்தக்காரணத்தைக்கண்டு  பிடிக்க  வேண்டும் என  நாயகன்  நினைக்கிறான்


 இப்போது  போலீஸ்  நாயகனை  , பேயை  தேடி  வருகிறார்கள் . இருவரும்  எஸ்கேப்  ஆகி  போகும்போது  துரத்திப்பிடித்து  பேயை  கைது  செய்து  விடுகிறார்கள் 


அந்தப்பேய்  தப்பித்ததா? தன்னைக்கொலை  செய்த  ஆளை  கண்டு  பிடித்ததா? நாயகனும், பேயும்  இணைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை 


எர்னெஸ்ட் எனும்  பேயாக  டேவிட்  ஹார்பர்  படம்  முழுக்க  வசனம்  எதுவும்  பேசாமல்  அருமையாக  நடித்து  இருக்கிறார். நாயகனுடன்  அவருக்கு  உண்டாகும்  நட்பு  மிகச்சிறப்பு . நீண்ட  இடைவெளிக்குப்பின்  மகளை  சந்திக்கும்  காட்சியில்  உணர்ச்சி  பொங்கும்  நடிப்பு 


நாயகன்  ஆக  ஜாஹி  வின்சன் டீன்  ஏஜ்  பையனுக்கே  உரிய  துறுதுறுப்புடன்  நடித்திருக்கிறார். தன்   கேர்ள்  ஃபிரண்ட்  உடன்  சேர்ந்து  துப்பறியும்  காட்சிகள்  அருமை .ஒரே  ஹோட்டலில்  ஒரே  ரூமில்  ஒரே  படுக்கையில்  படுத்ஹ்டுத்தூங்க  நேரிடும்போதும்  கண்ணியம்  காக்கும்  விதம்  ரசிக்க  வைத்தது.  நாயகனை   கேர்ள்  ஃபிரண்டுடன்  தங்க  பெஸ்ட்  ஆஃப்  லக்  என  சொல்லாமல்  சொல்லும் பேயின்  குறும்புத்தனம்  செம  காமெடி 


நாயகனின்  அம்மா, அப்பா, அண்ணனாக  வந்தவர்கள்  போலீஸ்  ஆஃபீசராக  வரும் லேடி  அனைவரும்  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


வில்லனின்    நடிப்பும்  மிரட்டல் ., ஆனால்  கொலைக்கான  காரணம்  நம்பும்படி  இல்லை 


திரைக்கதை , இயக்கம்  கிறிஸ்டோபர்  லண்டன். 127  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடி டி  தளத்தில்  கிடைக்கிறது 



சபாஷ்  டைரக்டர்


1   அலாவுதீனும்  அற்புத விளக்கும்  (1957),பட்டிணத்தில்  பூதம் (1967)  THE BRASS BOTTLE (1964) மை டியர் குட்டிச்சாத்தான் ( !984)  ஆகிய  படங்களின்  கான்செப்ட்  தான், அதன்  அப்டேட்டட்  வெர்சன், ஆனால்  கு்ழந்தைகள்  ரசிக்கும்படி  படமாக்கிய  விதம் 


2 உலக  திரைப்பட  வரலாற்றிலேயே  முதல்  முறையாக  ஒரு  ஆவியை  போலீஸ்  கைது  செய்யும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1   கமான், யா.  நாம  புது  வாழ்க்கையை  ஆரம்பிபோம்


  டாடி , இது வரை  நாம  எத்தனை தடவை  புது  வாழ்க்கையை  ஆரம்பிச்சு  இருப்போம்? கணக்கே இல்லை 


2 மனிதர்களால்  பேயைத்தொட  முடியாது  , ஆனா  பேய்  நினைச்சா மனுசனைத்தொடலாம், இது  புதுசா  இருக்கே? அப்போ  நீங்க வெச்சதுதான்  சட்டம் ? 


3   நான  ஆர்டர்  பண்ற  மாதிரி  பேசுனாதான்  ஆவிங்க  நம்ம  சொல்  பேச்சு  கேட்கும்னு  விக்கிபீடியால  போட்டிருக்கு 


ஓ  அப்படியா?  ஏ  ஆவியே?  ஒழுங்கா  என்  கண்  முன்னால  வா


4  பேய்  இருக்கும் வீட்டை  எங்க தலைல  கட்டீட்டீங்க, இதுக்காக  எங்க  லாயருக்கு  நீங்க  பதில்  சொல்லியே  ஆகனும்

‘ அம்மா, நமக்கு  லாயர்  எல்லாம் இருக்காங்க்ளா?


 சும்மா , மிரட்றதுக்காக  சொல்றதுதான்


5   நீ  ரொம்ப  வித்தியாசமானவன்,


எப்டி  சொல்றே?

 சட்டத்தை  மீறி  நிறைய  விஷயம்  பண்றியே? 


6   என்  வாழ்க்கையின்  ஒவ்வொரு  விஷயத்தையும்  எங்கப்பா  பிளான்  பண்ணி  வெச்சிருக்காரு , இதுவே  எனக்குப்பிடிக்கலை 


7  நான்  எப்பவும், எதுலயும்  ஜெயிச்சுட்டே  இருக்கனும்னு தான்  எதிர்பார்க்கிறார், இதுவே  தப்பில்லையா?


8  வாழ்க்கைல  எப்பவும்  நாம  நினைப்பது  எல்லாமே  நடக்காது 


9  நீ  என்னை  விட  நல்லவனா  இருக்கே , 45  வயசுல  என்  கிட்டே  இல்லாத  மெச்சூரிட்டு  16  வயசுல  உன்  கிட்டெ  இருக்கு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனின்  அம்மா  போலீஸ்  விசாரணையில்  இருக்கும்போது  கண்ட்ரோல்  ரூம்ல  இருந்து  பாத்ரூம்  போறேன்னு  சொல்லி  அங்கே  போகாம  ஒரு போலீஸ்  ஆஃபீசர்  கஃபியை  தட்டி விட்டு  கவனத்தை  திசை  திருப்பி  அவரோட  ஃபோனை  எடுத்து  மறைவிடம்  வந்து  மகனுக்கு  ஃபோன்  பண்றார். இது  எப்படி  சாத்தியம் ? போலீஸ்  கண்ட்ரோல்  ரூம்ல  சிசிடி வி கேமரா  இருக்கும், அவரோட  ஃபோன்   ஜிபிஎஸ்  மூலமா  யாருக்கு  ஃபோன்  பண்றார், எந்த  ஏரியாவில் மகன்  இருக்கான்னு  தெரிஞ்சுக்க  வாய்ப்பு  இருக்கே? 


2  நாயகியின்  அம்மா  ஃபோனில்  பேசுவதை  பார்த்து  விட்ட  அந்த  லேடி  ஆஃபீசர்  அவரது  ஃபோனை  பிட்ங்கி  ரிசீவ்டு  கால்  செக்  செய்தாலே  லொகேஷன்  கண்டு பிடித்து  நாயகனை  மடக்கி  விடலாம், அதை  விட்டு  விட்டு  நாயகியின்  அம்மாவை  விசாரணை  பண்ணி  டைம்  வேஸ்ட்   பண்ணிட்டு  இருக்கார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  ஒரே  ஒரு  லிப்  கிஸ்  சீன்  மட்டும்  உள்ளது, மற்றபடி  குடும்பத்துடன், குழந்தைகளுடன்  காண வேண்டிய  குதூகலமான   படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - -  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  காமெடி , ஆக்சன் , த்ரில்லிங்  என  பரபரப்பாக  நகரும்  திரைக்கதை  குழந்தைகளுக்கு  மிகவும்  பிடிக்கும் ., ரேட்டிங்  3 / 5 



We Have a Ghost
We have a ghost poster.png
Official release poster
Directed byChristopher Landon
Screenplay byChristopher Landon
Based on"Ernest"[1]
by Geoff Manaugh
Produced by
  • Marty Bowen
  • Dan Halsted
Starring
CinematographyMarc Spicer
Edited byBen Baudhuin
Music byBear McCreary[2]
Production
companies
Distributed byNetflix
Release date
  • February 24, 2023
Running time
127 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$75.3 million[3]