Monday, February 20, 2023

செம்பி (2022) தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ டிஸ்னி ஹாட்ஸ்டார் பிளஸ்


 1999ல் அர்ஜூன் - சோனாலி  பிந்த்ரே நடித்த  கண்ணோடு  காண்பதெல்லாம்  எனும்  படம்  தான்  பிரபு  சாலமன் இயக்கிய  முதல்  படம். சரியாகப்போகவில்லை . . 2001ல்  இவர் இயக்கிய  உசிரே  எனும்  கன்னடப்படம்  சேரனின்  பாரதிகண்ணம்மா  தமிழ்ப்படத்தின்  அஃபிசியல்  ரீமேக். ஆனால்  அது  சரியாக  அங்கே  ஹிட்  ஆகவில்லை .பிறகு 2022ல்  கிங்  , என  விக்ரம்  நடிக்கும்  படம்  டைரக்ட்  செய்தார், ஃபிளாப்.

தொடர்  தோல்விகளால் 3  வருடங்க்ள்  வாய்ப்புக்கிடைக்கவில்லை 2006ல்  இயக்கிய  கொக்கி , 2007 ல் இயக்கிய  லீ   2009 ல்  இயக்கிய  லாடம்  இந்த  மூன்று படங்களும்  இவருக்கு  நல்ல  பெயரைப்பெற்றுத்தந்தாலும் 2010ல்  இவரது  இயக்கத்தில்  வெளியான  மைனா  தான்  கமர்ஷியலாக  சூப்பர்  டூப்பர்  ஹிட். இவருக்கு  பெஞ்ச்  மார்க்காக  அமைந்த  படம் . பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட் 2012ல் இவர் இயக்கிய  கும்கி விக்ரம்  பிரபுக்கு  ஒரு  நல்ல  அறிமுகப்படமாகவும் , மியூச்சிக்கல்  ஹிட்  ஆகவும்  அமைந்தது 


2014ல்  இயக்கிய  கயல்  2016ல்  தனுஷ்  நடிக்க  வெளி வந்த  தொடரி  சுமார்  ரகம்  தான். 2021 ல்  இவர் தமிழ், தெலுங்கு , ஹிந்தி  என  மூன்று  மொழிகளில்  காடன்  எனும்  படம்  இயக்கினார் கும்கி பாகம்  2  இயக்கிக்கொண்டு  இருப்பதாக  தகவல் . இப்போது  செம்பி  வந்திருக்கிறது


ஒவ்வொரு  இயக்குநருக்கும்  சில  செண்டிமெண்ட்ஸ்  இருக்கும். மணிரத்னம்  படம்  என்றால்  மழை , இருட்டு , குதிரை , ரயில்  காட்சிகள்  நிச்சயம்  இடம்  பெறும் அது  போல  மைனா  மெகா ஹிட்டுக்குப்பின்  இவரது  ஃபேவரைட்ஸ்   பஸ் , மலைப்பாங்கான  இடங்கள் , வனம் , தம்பி  ராமய்யா 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

கொடைக்கானல்  மலைகிராமமான   புலியூர்  எனும்  ஊரில்  வீரத்தாய்  எனும்  பாட்டியும்  பேத்தியும்  வசித்து  வருகிறார்கள் . ஒரு  விபத்தில்  அந்த  பேத்தியின்  பெற்றோர்  இறந்து  விட்டதால்  பாட்டிதான்  கார்டியன்.  பாட்டிக்கு தேன்  கூட்டில்  ம்லைத்தேன்  எடுத்து  விற்பதுதான்  தொழில் .


 ஒரு  நாள்  தேன்  எடுத்து  அதை  பேத்தியிடம்  கொடுத்து  குறிப்பிட்ட  இடத்தில்  டெலிவரி  செய்யச்சொல்கிறார்.  வழியில்  பேத்தி  மூன்று  இளைஞர்களால்  பாலியல்  வன் கொடுமைக்கு  ஆளாகிறார்


பதறிபோன   பாட்டி  போலீசில்  புகார்  கொடுக்கிறார். சம்பவம்  நடந்த  இடத்தில்  கிடைக்கும்   ஆதாரங்கள், சிசிடிவி  ஃபுட்டேஜ்  வைத்துப்பார்த்த  போது   எதிர்க்கட்சித்தலைவரின்  மகனும், அவனது  நண்பர்களும் தான்  குற்றவாளிகள்  என  தெரிய   வர  போலீஸ்  ஆஃபீசர்  பேரம்   பேசி  3  கோடி  ரூபாய்  லஞ்சமாக  வாங்கி  ஆதாரங்களை  அழித்து  விடுகிறார். பாட்டியிடமும்  போய் இது  பெரிய  இடத்து  விவகாரம், கேசை  வாபஸ்  வாங்கிக்கொள்  என  மிரட்டுகிறார்


 மிரட்டிய  போலீஸ்  ஆஃபீசரை  கோபத்தில்  கடுமையாகத்தாக்கி  விட்டு  பாட்டி  தன்  பேத்தியுடன்   ஒரு  பஸ்சில்  ஏறி  விடுகிறார்


 இதற்குப்பின்   பஸ்  சில்  உள்ள  பிரயாணிகள்  சேர்ந்து  அந்த  பேத்திக்கு  எப்படி  நீதி  வாங்கிக்கொடுத்தார்கள்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


பாட்டியாக  கோவை  சரளா.  சதி  லீலாவதி படத்தில்  கமலுக்கு  ஜோடியாக  நடித்தபோது  ஆச்சரியப்படாதவர்கள் , பாராட்டாதவர்கள்  யாருமே  இருக்க  முடியாது . கோவை  வட்டார  வழக்கு  கொங்குத்தமிழை  மிகப்பிரமாதமாகப்பேசும்  ஒரே  நடிகை  கோவை  சரளா  தான்  ( மெட்ராஸ்  பஷைக்கு  லூஸ்  மோகன் ) 


இதில்  அவருக்கு  போடப்பட்டிருக்கும்  மேக்கப்  , அவரது  உடல்  மொழி , நடிப்பு  எல்லாமாக  சேர்ந்து  ஏதோ  உலகப்படம்  பார்ப்பது  போன்ற  உணர்வைத்தந்தது. ஆவேசமாக  போலீசை  தாக்கும் போது  அனல்  பறக்கும்  நடிப்பு 


நிலா  எனும்  சிறுமி  பேத்தியாக  நடித்திருக்கிறார். கச்சிதமான  நடிப்பு , க்ளைமாக்சில்  கோர்ட்டில்  குற்றவாளிகளைக்கண்டு  மிரள்வது  பிரமாதம் 


அரசியல்வாதிகளாக  நாஞ்சில்  சம்பத் , பழ கருப்பையா  அருமையாகப்பொருந்தி  விடுகிறார்கள் . 


கண்டக்டராக  தம்பி  ராமய்யா மொக்கை  காமெடி  செய்து  எரிச்சல்  ஊட்டுகிறார். சீரியசான  கதையில்  மடத்தனமான  காமெடி  டிராக்  வைத்தது  இயக்குநர்  பிழை 


 வக்கீலாக  வரும்  அஸ்வின்  கேரக்டர்  டிசைன்  நாடகத்தனம்


 நல்லதோர்  வீணை  செய்தே  நலம்  கெட  அதைப்புழுதியில் விடுவதுண்டோ  எனும்  வரிக்கேற்ப  பிரமாதமான  , இயற்கையான , அருமையான  முதல்  ஒரு  மணி  நேரம்  உலகப்படம்  பார்க்கும்  உணர்வைத்தந்தாலும்   பின்  பாதி  திரைக்கதை  பஸ் சில்  பயணிக்கும்போது  செயற்கையான  சம்பவங்கள். நம்ப  முடியாத  காட்சிகளால்  வீரியம் இழக்கிறது 


 ஜட்ஜ்  ஆக  வரும்  பேராசிரியர்  கு  ஞான சம்பந்தம்  கச்சிதமான  நடிப்பு 


‘நிவாஸ்  கே  பிரசன்னாவின்  பின்னணி இசை  கனகச்சிதம் .,  ஜீவனின்  ஒளிப்பதிவு  அள்ளுகிறது .

சபாஷ்  டைரக்டர்


1  ஹாஸ்பிடலில்  பேத்தி  மயக்கத்தில்  இருக்க  பாட்டி  அங்குமிங்கும்  பதட்டத்துடன்  அலைபாயும்  காட்சி  காண்பவரையும்  பதட்டத்தில்  ஆழ்த்துகிறது 


2   கோவை சரளாவுக்கு அளிக்கப்ப்ட்ட  ஒப்பனை , அவர்து  உடல்  மொழி, நடிப்பு  கனக்ச்சிதம் 


3   கண்ணுக்குக்குளுமையான  ஒளிப்பதிவு 




  ரசித்த  வசனங்கள் 


1    இந்த  பூமியை  ஆட்சி  புரிந்து  கொண்டிருப்பது  கடவுள்  இல்லை ,  பணம்  தான் 


2  மற்ற  குற்ற  வழக்குகளில்  பாதிக்கப்ப்ட்டவர்கள்  தான்  குற்றத்தை  நிரூபிக்க  வேண்டும், ஆனால்  போக்சோ  சட்டத்தில்  குற்றவாளிகள்  தான்  தாங்கள்  நிரபராதிகள்  என  நிருபிக்க  வேண்டும் 


3  உண்மையைப்புரிய  வைக்க  மொழி  தேவை  இல்லை  , வலி  போதும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பின்  பாதிக்கதையை  முழுக்க  முழுக்க  கோர்ட்  ரூம்  டிராமாவாக  ஆக்கி இருக்கலாம்,  பஸ்  ட்ராவல்  சம்பவங்கள்  எரிச்சல் 


2   சந்தேகத்துக்கு  இடமான  40  பேரின்  ஃபோன்  நெம்பருக்கு  பஸ்  பயணிகள்  ஃபோன்  பண்ணி  விசாரித்து  உண்மையைக்கண்டு  பிடிக்க  முயல்வது  நம்ப  முடியவில்லை 


3   புதிதாக  குற்றம்  செய்யும்  நபர்களாக  இல்லாமல்  பிளான்  பண்ணி  ரெகுலராக  குற்றம்  செய்பவர்கள்  இப்படித்தான்  சி சிடி வி  கேமரா  பார்க்கும் இடமாக  போவார்களா? 


4  ரேப்  கேசில்  பாதிக்கப்பட்ட  நபரை  பெயரை  ஃபோட்டோவை  வெளியிடக்கூடாது  என  சட்டம்  இருந்தும்   சிறுமியின்  ஃபோட்டோ  எப்படி  வெளியாகிறது ?


5  கம்ப்யூட்டர்  மற்றும்  டெக்னாலஜி  வச்தி  படைத்த  போலீசாலேயே  பஸ்  இருக்கும்  இடத்தைக்கண்டு  பிடிக்க  முடியவில்லை ., தத்தி  வில்லனான  அரசியல்வாதியின்  டம்மி  அடியாட்கள்  பஸ்  இருப்பிடத்தைக்கண்டுபிடிப்பது  எப்படி ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  கதைகக்ரு பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளான  சிறுமியின்  கதை  என்றாலும்  காட்சிகளில்  18+  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்   -  சைல்டு  அப்யூஸ்  எனும்  டெம்ப்ளேட்டில்  முதல்  பாதி  உலகத்தரம்  , பின்  பாதி  அமெச்சூர்  நாடகத்தனம்  என  எடுக்கப்பட்ட  படம் . ரேட்டிங் 2.25 / 5 

Sembi
Sembi poster.jpg
Theatrical release poster
Directed byPrabhu Solomon
Written byPrabhu Solomon
Produced byR. Ravindran
Ajmal Khan
Reyaa
StarringKovai Sarala
Ashwin Kumar Lakshmikanthan
Thambi Ramaiah
Nanjil Sampath
CinematographyM. Jeevan
Edited byBuvan
Music byNivas K. Prasanna
Production
companies
Trident Arts
AR Entertainment
Distributed byRed Giant Movies
Release date
  • 30 December 2022
CountryIndia
LanguageTamil