Thursday, February 16, 2023

MONEY HEIST -2021 ( நேஷ்னல் பேங்க் ஆஃப் ஸ்பெயின்) - வெப் சீரிஸ் விமர்சனம் ( பேங்க் ராபரி த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


முதல்;  2  பாகங்களில்  நாயகன்  தன்  ஆட்களுடன் ராயல் மிண்ட்  எனும்  இடத்தில்  பணம்  அச்சடித்துக்கொள்ளை  அடித்து  விடுகிறான், வெற்றிகரமாக  அவன்  ஆட்கள்  தப்பி  விடுகிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 கொள்ளைக்காரர்கள்  அனைவரும்  ஏற்கனவே  செய்து  கொண்ட  ஒப்பந்தப்படி   தனித்தனியே  வெவ்வேறு  இடங்களில்  வசிக்கிறார்கள் . போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ரக்கேல்  நாயகனைத்தேடி  அவன்  கொடுத்த  க்ளூவை  வைத்து  ஒரு  தீவுக்கு வந்து  இணைகிறாள் 


ரியோ வும் , டோக்கியோவும்  ஒப்பந்தத்தை  மீறி  சாட்டிலைட்  ஃபோனை  பிளாக்கில்  வாங்கி உபயோகிக்க   போலீஸ்  ட்ராக்  பண்ணி  ரியோவைப்பிடித்து  விடுகிறது , உடனே  டோக்கியோ நயகனான  ப்ரொஃபசருக்கு  தகவல்  சொல்ல  மீண்டும்  குற்ற  மேஜை மாநாடு  கூட்டபடுகிறது 


பேங்க்  ஆஃப்  ஸ்பெயினில்  90 டன்  தங்கக்கட்டிகள் இருக்கின்றன. அந்த  பொக்கிஷ  அறையைத்திறக்க  அங்கே  இருக்கும்  கவர்ன்ரால்தான்  முடியும், அங்கே  போய்  அவரைப்பிணயக்கைதியாகப்பிடித்து  வைத்து  தங்கத்தை  கொள்ளை அடித்து  ரியோவையும்  மீட்க  வேண்டும், இதுதான்  பிளான். நாயகனின்  இந்தத்திட்டம்  வெற்றி  அடைந்ததா? என்பதை  பாகம் 3 ( 10 எபிசோட்ஸ்)  பாகம் 4 ( 8 எபிசோட்ஸ்)  பாகம் 5 (10 எபிசோட்ஸ்) ஆக  மொத்தம் 28  எபிசோட்ஸ். ஒவ்வொரு  எபிசோடும்  50  நிமிடங்கள் கடைசி  எபிசோடு  மட்டும் 76  நிமிடங்கள் மொத்தம்  23  மணி  நேரம்  ஆகும்


முதல்  இரண்டு பாகங்களில்  நாயகனுக்கு  பெரிதாக  சவால்  இல்லை .  போலீஸ்  இன்ஸ்பெக்டரை  லவ்  பண்ணிவிடுவதால்  நேரடியான  வில்லன்  இல்லை ,,  இதில்  ஏகப்பட்ட  வில்லன்கள் 



1  பப்ளிக் ஸ்டண்ட்  பைத்தியம்  ராயல்  மிண்ட்  டைரக்டர்   ஆர்த்ரோ மிஷின்  கன்னுடன்  களம்  இறங்குவதால்


2  கவரனரின்  முதன்மை  பாதுகாப்பு  அதிகாரி  மாண்டியா 


3 இன்ஸ்பெக்டர்  அலிசியா

4  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் வில்லன் +வில்லி 

5   போலீஸ்  இன்சார்ஜ்

6  மிலிட்ரி 


இத்தனை  தடைகளையும்  நாயகன்  எப்படி  எதிர்கொள்கிறார்  என்பதை  மிக  விறுவிறுப்பாக  கொண்டு  சென்றிருக்கின்றனர்


 விக்கிபீடியாவில்  இந்த  வெப்சீரிஸ்  பற்றி  விபரம்  எடுத்தால்  இது  வாங்கிய  விருதுகள்  மட்டும்  எக்கச்சக்கம்  என  காட்டுகிறது , உலக  மொழிகள்  பலவற்றிலும்  இது  டப்  செய்யப்பட்டு  வெளியாக  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆகி  உள்ளது 

 நம்ம  ஊர்  பிக்பாஸ்  வந்த  புதிதில்  ஓவியா  ஆர்மி  உருவானது  போல  இதில்  வரும்  கேரக்டர்களுக்கு   டோக்கியோ  ஆர்மி ,  நைரோபி  ஆர்மி  எல்லாம்  உருவானது  வரலாறு 


 பின்னணி  இசை  பட்டாசைக்கிளப்பி  இருக்காங்க . குறிப்பாக  பாகம்  5ல்  வரும்  கடைசி  5  எபிசோடுகள்  கூஸ்பம்ப்  மொமெண்ட்ஸ்  களப்பும் பிஜிஎம்  பிரித்து  மேய்ந்திருப்பார்கள் 


சபாஷ்  டைரக்டர் 


1  முதல்  இரு  பாகங்களிலும்  சைக்கோ  வில்லனாக  வந்த  இன்சார்ஜ்  பெர்லின்   அதில்  இறந்து  விட்டாலும்  சாமார்த்தியமாக பேங்க்  ஆஃப்  ஸ்பெயின்  பிளான்  போட்டதே  அவர்தான்  என  அவருக்கு  ஒரு  ஃபிளாஸ்பேக்  வைத்து  டெவலப்  பண்ணியிருந்த  விதம், கேரக்டர்  டிசைன்  எல்லாம்  பிரமாதம்,  போன  பாகத்தில்  அவரை  வெறுத்தவர்கள்  இந்த  பாகங்களில்  விரும்புவார்கள்


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது  போல ஆரம்பத்தில்  தோன்றினாலும்  நாயகனின்  அண்ணன்  தன்  மனைவியை  புதுக்காதலியை  தன்  மகனுக்கு  அறிமுகப்படுத்துவதும்  மகன்  சித்தி  முறையான  அவளிடம்  காதல்  கொள்வதும்  அதற்குபின்  நடக்கும்  சம்பவங்களும் உள்ளத்தை  கொள்ளை  கொள்பவை 


3  90  டன்  தங்கத்தை  அரிசி  போன்ற  வடிவில்  உருக்கி   சாக்கடை  பைப்  வழியாக  வாட்டர்  டேங்க்கில்  பெற்று  மீண்டும்  கட்டியாக  மாற்று,ம் ஐடியா  எல்லாம்  வேற  ரகம் 


4   வெப்சீரிஸின்  வசனங்கள்  பிரமாதம். பஞ்ச்  டயலாக்ஸ்  ஆகட்டும்  வாழ்க்கைத்தத்துவங்கள்  ஆகட்டும்   எல்லாமே  செம ,


5  திரைக்கதை  எழுதியவர்  அலல்து  இயக்குநர்  ஒரு  டாக்டராக  இருக்குமோ  என  சந்தேகம்  வரும்  அளவுக்கு  ப்டத்தில்  வரும் பெரும்பாலான  கேரக்டர்கள்  டாக்டரகளாகவே  மாறி  சிகிச்சை  செய்கிறார்கள்,  ஆபரேஷன்  செய்து  தையல்  போடுகிறார்கள் , அதை  நம்பும்  விதத்தில்   காட்சிப்படுத்தி  இருக்கிறார்கள்


6   உள்ளே  கேப்டனாக  பணி  ஆற்றும்  பல்ர்மோ  கண்ணில்  அடிபட்டு  சிகிச்சை  பெறுவதும்   சில  இடங்களில்  வில்லன்  போல்  நடந்து  கொள்வதும்  சுவராஸ்ய  திருப்புமுனைகள் 


7   கவர்னரின்  செக்யூரிட்டி  ஆஃபீசர்  மாண்டியா  ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  அதகளம்.   செம  பர்ஃபார்மென்ஸ்


8  இன்ஸ்பெக்டர்  ரக்கேல் இப்போது  நாயகன்  பக்கம்  என்பதால்   கைது  செய்யப்பட்ட  அவரை  நாயகன்  மீட்கும் இடம்  கூஸ்பம்ப்  ரகம் என்றால்  அவரை பேங்க்  ஆஃப்  ஸ்பெயினுக்குள் ஹெலிகாப்டர்  மூலம்  உள்ளே  அனுப்பும்  சீன்  எல்லாம்  வேற  லெவல்


9   நிறை  மாத  கர்ப்பிணியான  இன்ஸ்பெக்டர்  அலீசியாவுக்கு  நாயகன்  பிரசவம்  பார்க்கும்  காட்சியும்  இருவரும்  போலீசிடம்  இருந்து  தப்பிக்க  கைக்குழந்தையுடன்  பரிதவிப்பதும்  செண்டிமெண்ட்  டச் 


10    தங்கம்  கொள்ளையடிக்கப்பட்ட  விபரத்தை  நாயகனே  வீடியோ  எடுத்து  மீடியாக்களில்  பரவ  விட்டு  ஸ்டாக்  மார்க்கெடை  ஸ்தம்பிக்கச்செய்வதும் ,  நாட்டின்  பொருளாதாரமே  கவிழும்  நிலையில்  நாயகன்  டீல்  பேசும்  இடம்  எல்லாம்  திரைக்கதையில்  தெறிக்க  வைக்கும்  அம்சங்கள் 


11  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாக  திடீர்  என  தோன்று,ம்  வில்லன்  வில்லி  இருவரும்  90  டன்  தங்கத்தை  மறைக்க  வைக்க  எடுக்கும்  முயற்சிகளும் , இன்ஸ்பெக்டர்  அதைக்கண்டு  பிடிக்கும்  லாவகமும்  அபாரம் 


12   எடிட்டிங்  அட்டகாச,ம்.  எந்த  எந்த  இடத்தில்  எந்த  எந்த  ட்விஸ்ட்டை  ஓப்பன்  பண்ணனுமோ  அந்த  அந்த  இடத்தில்  அதைக்கச்சிதமாகக்கையாண்ட  விதம் சபாஷ்  போட  வைக்கிறது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    ஒவ்வொரு  திட்டத்திலும்  பிளான்  ஏ  பிளான்  பி  என  பலவித  திட்டங்களில்  யோசிக்கும்  நாயகன்  தான்  போலீசில் மாட்டிக்கொண்டாலோ, தான்  கமாண்டிங்  ப்ளேசில்  இல்லாமல்  போனாலோ  ஆல்ட்டர் நேட்டிவாக  என்ன  செய்ய   வேண்டும்  என  ரெடி  பண்ணாமல்  இருப்பது 


2   தங்கத்தை  உருக்க  கிட்டத்தட்ட  ஒரு  ஃபேக்டரியே  பேங்க்குக்குள்  உருவாகி  அத்தனை  எந்திரங்கள்  இருக்கின்றன, அவற்றை  எல்லாம்  எப்படிக்கொண்டு  வந்தார்கள் ?


3   டோக்கியோ  5  புல்லட்  உடலில் பாய்ந்து   கீழே  விழுந்து  கிடக்கிறாள் , ஒரு  பெரிய  அதிகாரியான  மாண்டியோ  முட்டாள் தனமாக  அருகே போய்  எதற்குப்பார்த்து  மாட்டுகிறான் ? மிலிட்ரி  ட்ரெய்னிங்கில்   அதை  எல்லாம்  கூடாது  என  சொல்லிக்கொடுத்து  இருப்பார்களே? 


4  போலீஸ் இன்ஸ்பெக்டரும் காதலியுமான  ராக்கெல்  ஒரு  கட்டத்தில் காட்டில் ஓடும்போது  மரங்கள்  மீது  ஏறி  72  மணி  நேரம்  பதுங்கி  இருக்க  வேண்டி  இருக்கும்  என  முன்  கூட்டியே  நாயகன்  சொல்லி  விடுகிறான், ஆனால்  அதற்கான  பயிற்சியை  காதலிக்கு கற்றுத் தரவில்லையே?  அது  போக  ஒரு  போலீஸ்  ஆஃபீசரான  அவர்  நார்மல்  மனிதனைப்போல் மரம்  ஏற  தடுமாறுகிறார்


5  நாயகனின்  அண்ணன்   திட்டத்தை  விபரிக்கும்போதே   கவர்னரின்  செக்யூரிட்டி  டேஞ்சரஸ்  ஃபெலோ  என  சொல்லி  விடுகிறான், அப்படி  இருந்தும்   அவனை  அசால்ட்டாக  விட்டு  மாட்டிக்கொள்வது  ஏன் ?  


6   ,  கவர்னரின்  செக்யூரிட்டி  ஆஃபீசரை  வெளியே  விட்டதே  தவறு.  உள்ளே  உள்ள  வீக்னெசை  காட்டிக்கொடுப்பார்  என  தெரியாதா? 


7  ஆர்த்ரோ  அத்து  மீறி  பேங்க்குக்குள் வந்தபோதே  அவனை  வெளியே  அனுப்பி  இருக்கலாமே? அதை  ஏன்  செய்யவில்லை ? 


8     டோக்கியோ , நைரோபி  இருவர்  இறந்ததை  மக்களுக்கு  தெரிவித்து  அனுதாபம்  அள்ளிக்கொள்ளும்  நாயகன்  மக்கள்  புரட்சி வெசிப்பதை  சிரிப்புடன்  ரசிக்கிறான், ஆனால் க்ளைமாக்ஸில் நாயகன்  உட்பட  எல்லாரும்  பிணங்களாக  வெளியேறும்போது  மக்கள்  அமைதியாகப்பார்த்துக்கொண்டு  இருப்பது  எப்படி ? போலீஸ்  ஒழிக  டயலாக்  என்ன  ஆச்சு ? 



ரசித்த  வசனங்கள்

  1   சொர்க்கத்துல  கூட இப்படித்தான்  நடக்கும்  போல , யாரோ  பண்ற  ஒரு  சின்னத்தப்பால  அது  நரகமா  மாறிடும் 


2   போர்ல  யார்  கட்சி  மாறுவாங்க  தெரியுமா? துரோகிகள் தான்


3   நேஷ்னல் பேங்க்  ஆஃப்  ஸ்பெயின்ல  இருந்து  தங்கத்தை  கொள்ளை  அடிக்கப்போறோமா? அது  ஒண்ணும்  அவ்வளவு  ஈசியான  விஷயம்  இல்லையே?


 ஈசியான  விஷயத்தை  நாம  எப்போ  செஞ்சிருக்கோம்?


4  எப்பவுமே  போர்  ஆரம்பிக்கற  அந்த  முதல்  நொடி  ரொம்ப  முக்கியமானது


5  வாழ்க்கையும்  ஒரு  செஸ்  கேம்  தான், யார்  அட்டாக்  பண்றாங்களோ அவங்களுக்கு  கிடைக்கற அளவு  டைம்  யார் டிஃபண்ட்  பண்றாங்களோ  அவங்களுக்கு   அந்த  அளவு  டைம்  கிடைக்காது

6  எப்போ  எல்லாம்  வெள்ளம்  வருதோ  அப்போ  எல்லாம்  வெளீல  இருக்கும்  எலிகள்  ஈசியா  தப்பிச்சிடும்


7   கடந்து விட்ட  காலத்தை  மீண்டும்  கொண்டு  வர  இசைக்கு  மட்டும் தான்  சக்தி  உண்டு 


8 ரத்தத்துல  வேகம்  இருக்கனும், புத்தில  விவேகம்  இருக்கனும்


9 மக்களுக்கு  பிரச்சனைகளை  உருவாக்கறது  ரொம்ப  சுலபம், யாராவது  அவங்களைக்காப்பாற்ற  வருவாங்கனு  நம்பி  இருப்பாங்க 


10 நம்மை  விட  எதிரி  பலசாலியா  இருந்தா   எதிரியோட  பலத்தை  நமக்கு  சாதகமா  உபயோகப்படுத்திக்கனும்


11  ஒவ்வொரு  சூழ்நிலைக்கும்  புரொஃப்சர்  எங்களைத்தயார்படுத்தி  இருந்தாரு, உண்மையைச்சொல்லனும்னா  தியரில  சொல்றதை எல்லாம் பிராக்டிகலா நடத்த  முடியாது 


12   பெத்தவங்களைப்பொறுத்தவரை  ஆண் குழந்தையோ  பெண்  குழந்தையோ  அன்பு  ஒரே  மாதிரிதான்  இருக்கும்


13   இந்த  உலகத்துல  எல்லாமே  ஒரு  தராசு  மாதிரிதான்  இயங்கிட்டு  இருக்கு , லாபம்  வந்தா  கூடவே  நட்டமும்  வரும் 


14  நம்ம  கிட்டே  இழப்பதற்கு  எதுவுமே  இல்லை  எனும்போதுதான்  பலம்  வரும் 


15    நீ  என்ன  கண்  டாக்டரா?  என்  கண்ல  விழுந்த  கண்னாடித்துகள்களை  நீ  எப்படி  எடுப்பே? பேசாம  டாக்டரைக்கூப்பிட்டுக்கலாம்


  கவலைப்படாத , ஒரு  சிற்பியோட  கையை  விட  லாவகமா  என்  கைகள்  செயல்படும்


16  ஒரு  பெயிண்ட்டர்  இன்னும்  மூணு  வருசம் தான்  உயிரோடு  இருப்பான்னு  தெரிஞ்சா  அவன்  பெயிண்ட்  ப்ண்றதையே  நிறுத்தச்சொல்றியா? ஹாஸ்பிடல்லியே  இறுகி  சாவதை  விட  வெளில  போய்  திருடி  சாகலாம்


17   ஒரு  நல்ல  அப்பா  எப்படி  இருக்கனும்? தெரியுமா?


தெரியலயே, நீயே  சொல்லிடு


 அப்பா  ஆகறதுக்கு  முன்னே  எப்படி  இருந்தானோ  அப்படியே  இருக்கனும், மாறக்கூடாது


18 காதலில் இருப்பவர்கள்  எப்போதும் சந்தோசமா  இருப்பாங்க, யார்  மீதும் கோபப்பட மாட்டாங்க


19  எல்லாத்துலயும்  ரிஸ்க்  இருக்கு , ரிஸ்க்கே  இல்லாத  வாழ்க்கை  போர்  அடிக்கும் 


20  இதெல்லாம்  அரசாங்கத்தோட  சொத்து 


 அதனால தான்  எதையும்  வேஸ்ட்  பண்ணாம  எல்லாத்தையும்  எடுத்துட்டு  இருக்கோம்


21   வாழ்க்கைல  பாடங்கள்  சும்மா  கிடைப்பதில்லை , நாம்  பண்ற  எல்லாத்துக்கும்  விளைவுகள்  இருக்கும்


22   நம்ம  இயக்கத்தோட  முதல்  விதி  ஒரு  பெண்ணால  நாம  பாதிக்கப்படக்கூடாது  என்பதுதான்


23  உனக்கு  எத்தனை  நாட்களா  அவளைத்தெரியும் ?


 காதலை  அளவு  காலம்  வெச்சு  அளக்கக்கூடாது


24  ஆபத்துல  இருந்து  தப்பிப்பது  ,முடியாத  காரியம், ஆனா  வாழ்க்கைல  நங்க  கத்துகிட்டது  முடியாத  காரியம்னு  எதுவும்  இல்லை  என்பதை 


25   சந்தோஷம்கறது  மின்னல்  மாதிரி  டக்னு  வந்துட்டு  டக்னு  போய்டும்


26    ஒரு  திறமையான  செஸ் ஆட்டக்காரன் கூட்  அவன்  பக்கத்துல  அவன்  காதலி  இருந்தா  அவனால  திறமையா  ஆட  முடியாது 


27  நாங்க  நெருக்கமா  இருக்கும்போது  உண்மையை  மட்டும் தான்  பேசிப்போம், ஆனா  எல்லா  நேரமும்  உண்மை  இனிப்பா  இருப்பதில்லை 


28  எந்த திட்டமா  இருந்தாலும்  அதுல  சொதப்பல்கள்  இருப்பது  சகஜம்தான் 

 29  வாழ்க்கைல  விபத்துகள்  எதார்த்தமானவை, அதைப்புரிஞ்சுக்காதவன் தான்  தன்னால  நீண்ட  நாட்கள்  உயிர்  வாழ முடியும்னு  முட்டாள்தனமா  யோசிக்கிறான்


30   வாழ்க்கைல  நமக்கு  எது  முக்கியம்கறதை  நாம  முடிவெடுக்கத்தெரிஞ்சுக்கனும் 


31 வாழ்க்கை  ஒரு  விளையாட்டு , திடீர்னு  தலைகீழாக்கூட  நம்  நிலை  மாறலாம், அப்போ  நம்மைக்குறை  சொல்லிக்கறது  பெரிய  தப்பு 


32  என்னதான்  திட்டம்  போட்டாலும்  சில  சமயம்  வாழ்க்கை  நம்ம  கட்டுப்பாட்டில்  இருக்காது 


33  வாழ்க்கை  என்பது  ஒரு அனுபவம், ஒரு  முறை  தான்  அது கிடைக்கும், அதைக்கொண்டாடு 


34  உலகத்துல  இரண்டு  விதமான  மக்கள்  இருக்காங்க

 1  பிரேக்கப்  ஆன்னாக்கூட  எங்கிருந்தாலும்  நல்லாருனு  வாழ்த்தற  டைப் 

2  பிரேக்கப்  ஆகிட்டா  தன் வாழ்க்கையே  அவ்ளோதான்  அப்படினு  உடைஞ்சு  போய்டுவாங்க 


35   காதல்  என்பது  சீசா  போல  , ஒரு  பக்கம்மேலே  போனா  இன்னொரு  பக்கம் கீழே  போகும், ரெண்டு  பக்கமும் பேலன்சா  இருப்பது  டெம்ப்பரவரிதான்


36    அன்பும், வலியும்,   என்கிட்டே  ஒருத்தர்  கொடுத்துட்டா  அதை  நான்  அதே  அளவு  திருப்பிக்கொடுத்துடுவேன் 


37 பயத்துல  இருக்கும்போது  காதுல  எது  விழுந்தாலும்  நம்பத்தோணும், அவங்களை  ஈசியா  ஏமாத்தலாம்


38  ஸ்டாக்  ஹோம்  சின்ட்ரோம்னா என்ன  தெரியுமா?  தன்னை  யார்  கடத்தி  வெச்சிருக்காங்களோ  அவஙளையே  லவ்  பண்ற்து


39  நம்ம  உடம்பில்  காயம்  ஏற்பட்டா  ரத்தத்தில் இருக்கும்  திசுக்கள்  தானாகவே  அதை  சரி  செய்யும் 


40  நம்ம  கிட்டே  இருக்கும் சின்ன் சின்ன  குறைகளோட்  ஸ்பெஷாலிட்டி  என்ன  தெரியுமா?  நம்மை  வேறுபடுத்திக்காட்டும்

‘41 ஒவ்வொரு  நிமிசமும்  நாம்  யார்?னு ப்ரூஃப்  பண்ணிக்காமிச்ட்டே  இருக்கனும் 


42   ஒரு குற்றத்தோட  முதல்  எதிரி  யார்  தெரியுமா?

போலீஸா?

ம்ஹூம், குற்றவாளி  காட்டும்  அவசரம்

43  ஒரே  ஆளைப்பற்றி  இரு  வேறு  நபர்கள் ஒரே  காரணத்துக்காக  ஒரே  சமயத்தில்  நினைப்பது  ஆச்சரியகரமானது 

44  உலகத்தையே  இயங்க  வைப்பது, ஈர்ப்பது   காதல் .அது  சில  சமயம்  எதிர்திசையில்  இயங்கும் 

45 சின்ன  வயசுல  உன்  அம்மா  அப்பா  உன்னைக்கண்டிச்சு  ஒழுங்கா வளர்த்தலைனு  நினைக்கிறேன் , தொட்டதுக்கெல்லாம்  மத்தவங்களை  குறை  சொல்லிட்டே  இருக்கே ?

46  நான்  என்னைத்தவிர  வேறு  யார்  பேச்சையும்  கேட்க மாட்டென்  , அவ்ளோ  ஈகோயிஸ்ட்

47 பாதியிலேயே  நிறுத்தப்பட்ட  கவிதை  மாதிரி  இந்த  திட்டம்  பாதியிலேயே  இருக்கு , நீதான்  ஃபினிஷ்  பண்ணனும்

‘48  அவள்  இன்னேரம்  அவனை  அடிச்சுட்டு  இருப்பா

ஆனா  சத்தமே  கேட்கலையே? 

அதிக  பட்ச  வன்முறைல  சத்தமும்  கேட்காது  ரத்த்மும்  வராது 

49  எல்லாத்தையும்  ஒரே  இடத்தில்  இன்வெஸ்ட் பண்ணனும்னா  அது  கோல்டு  தான் 

50  கண்ணுக்குத்தெரிந்த  விஷயத்தை  விட்  கண்ணுக்குத்தெரியாத  விஷயத்தால்தான்  ஆபத்து 

51 கண்ணுக்குத்தெரியாத  விஷயத்தை  நாம்  தேடிக்கிட்டு  இருக்கோம், அது  நம்மை  கவனிச்சுட்டு  இருக்கலாம்  என்பது  நமக்குத்தெரியாது 

32   வேலையையும், பர்சனல்  லைஃபையும் போட்டுக்குழப்பிக்கக்கூடாது 

53  கண்மூடித்தனமான  காதல்  எல்லாம்  தற்கொலைலதான்  போய்  முடியும் 

54   நீ  இந்த  பிளானைக்காதலிக்கறே , அவன்  உன்னைக்காதலிக்கிறான், அதனால  அவன்  உன்னையும், உன்  பிளானையும்  குறையே  சொல்ல  மாட்டான் 

55 எமோஷனல்  ஷாக் மூளையை  செயல்படாத  நிலைக்குக்கொண்டு  போயிடும் 

56   சில  நேரங்களில்  பிரிவு  ,மட்டும் தான்  மனசில்  உள்ள  காயங்க்ளுக்கு  மருந்தாக  அமையும் 

57  காலம்  எல்லாத்துக்கும்  நல்ல  மருந்து  வெச்சிருக்கும் 

58   உன்  வலியை  நான்  க்டன்  வாங்க  முடியாது .  அதை  யாருக்கும்  திருப்பிக்கொடுக்கவும்  முடியாது 

59   ஒருத்தரோட  நம்பிக்கையை  அடையனும்னா  உண்மைகளை  சொல்லனும், எதையும்  அவங்க  கிட்டே  மறைக்கக்கூடாது 

60 பொதுவா கர்ப்பிணிப்பெண்களுக்கு  மோப்ப  சக்தி  அதிகம், அதை  ப்ரொஃபசர்  எதிர்பார்க்காததால  பிரச்ச்னை 

61  ஒருத்தரால  அதிகபட்சம்  50  நிமிடம்  தான்     வாக்குமூலம்  கேட்க  முடியும் , அதுக்குப்பின்  அவங்க  கவனம்  சிதற  ஆரம்பிக்கும்

62  வாழ்க்கை  என்பது  நமக்கு  அளிக்கப்பட்ட வ்ரம் , இருக்கும்  ஒவ்வொரு  வினாடியையும்  நாம  அனுபவிக்கனும்

63  குழப்பங்கள்  நிறைந்த்துதான்  வாழ்க்கை 

64 மரணம்  என்பது  நம்  மூச்சு  நிற்பது  மட்டுமே  இல்லை, நாம  நினைச்ச  வாழ்க்கையை  வாழ  முடியாமல்  போவதும்தான் 

65  முக்கியமான  சில  விஷயங்களை  நாம  அலட்சியப்படுத்திட்டா  அதுக்கான  விலையைக்கொடுத்துதான்  ஆகனும் 

66   நடக்கிற  எல்லா  விஷயமுமே  நல்லது  எது ? கெட்டது  எது?னு  நாம  தெரிஞ்சுக்கத்தான் 

67   ஒரு  அம்மாவோ , அப்பாவோ  தங்கள்  குழந்தைக்கு  நல்லது  ப்ண்ணனும்னுதான்  நினைப்பாங்க , ஆனா  குழந்தை  அவங்களைப்புரிஞ்சுக்காது 

68 பெற்றோர்க்ள்  நம்மை  நல்லா  வாழ  வெச்சாங்களா? என்பதை  மட்டும்  பார், எந்த  வழில  அதை  செஞ்சாங்க  என்பது  அனாவசியம் 

69   ரிஸ்க்  ஜீரோன்னா  அதுக்கான  வேல்யூவும்  ஜீரோதான் 

70   நாம  ஜெயிக்கறதுக்கு  வாய்ப்பு  இல்லைன்னா  மெதுவாதான்  தோற்கனும், ஒரு  வேளை  திடீர்னு  ஜெயிக்க  ஒரு  ஐடியா  உருவாகலாம், அதுக்கான  கேப்  தேவைப்படும் 

71  வாழ்க்கைல  ஒரு  தடவை  நடந்ததே  மீண்டும்  நடக்கும்னு  சொல்லிட  முடியாது 

72   டியர் , நான்  மீண்டும்  உனக்கு  ஒரு  முதல்  முத்தம்  தரனும்

 ஹலோ, முதல்  டைம்  தர்றதுதான்  முதல்  முத்தம் 

73   உனக்கான  கடைசி  முத்தம்  தர  எனக்கு விருப்பம்  இல்லை , பிரிந்த  தம்பதி  மீண்டும்  சேரும்போது  ஒரு  முத்தம்  தருவாங்களே  அது  மாதிரி 

74   நாம  வாழ்க்கைல  ஆசைப்படறது  எல்லாம்  யாருக்கும்  சொந்தமாது இல்லை, யாரோ  யாரு  கிட்டேயோ   எப்பவோ கடனா  வாங்குனதுதான்

75   எனக்குப்பிரச்சனை  வரும்போதெல்லாம்  வாழ்வின்  சந்தோஷ தருணங்களை  நினைச்சுப்பார்த்துக்குவேன் 

76  மங்களகரமான  விஷயங்களுக்குப்பயன்பட்ட  தங்கம்தான்  பல  கொலைகளுக்கும் காரணமா  அமைஞ்சது

77   தன்னை  சுத்தி  இருக்கறதை  அழிச்சாலும்   தங்கம்  அழியாம  அப்படியே  உயிரோட்  இருக்கும் 

78   மனசுல  இருக்கறதை  சொல்ல  நேரம் , காலம்  தேவை  இல்லை 

79 உண்மையான  காதல்  என்பது வாழ்க்கைல ஒருவ்ர்  மீது  ஒரு  முறைதான்  வரும்னு  மக்கள்  நம்பிக்கிட்டு  இருக்காங்க 

80  எனக்கு ஏழு  குழந்தைகள் 

அப்போ  நீ  ஃபேக்டரில  வேலை  பார்க்கலை , பெட்ரூம்ல  உன்  பொண்டாட்டி  கூட வேலை  பார்த்திருக்கே?

அதுல  ட்விஸ்ட்  என்னான்னா  ஏழு  குழந்தைகளும்  ஏழு  வேற  வேற  பொண்டாட்டிக்குப்பிறந்தவை 

81   நாம  நல்லவங்களா  இருக்க  முயற்சி  பண்றோம், ஆனா போர்ல  நல்லவங்களுக்கு  வேலை இல்லை 

82  தம்  அடிக்கிறயா?

செத்துடக்கூடாதுனு  9  மாசம்  முன்னே  அந்த  பழக்கத்தை  விட்டேன், இப்போதான்  வாழ்வதற்கான  ஆப்சனே  இல்லையே?

83   வாழ்க்கை  என்பது  முரண்பாடுகள்  நிறைந்தது , அமைதியை  உருவாக்க  சில  சமயம்  துப்பாக்கியைக்கையில்  எடுக்க  வேண்டி  வரும்

84 எல்லாரும்  சொர்க்கம்  போகத்தான்  ஆசைப்படுவாங்க, ஆனா  டோக்கியோ  சொர்க்கம்  போர் அடிச்சதாலதான்  நம்மை  விட்டுப்போய்ட்டா 

85    ஏழு  குழந்தைகளையும்  வானவில்  மாதிரி  வெவ்வெற  கலர்ல  பெத்திருக்கே, அனேகமா  அவங்க  அம்மா  சாயல்  போல 

86  பரவால்லியே , தங்கமான  மனுசனா  இருக்காரு , இவருக்கு ஒருதங்கச்சி  இருக்கா?னு  கேளு

87  பெரியவங்க  எதையும்  யோசிச்சு  யோசிச்சு  சீரியசா  பண்றதாலதான்  கடைசி  வரை  எதையும்  பண்றதில்லை , ஆனா  குழந்தைங்க  அவங்க  நினைச்சதைப்பண்ணும், அந்த  குழந்தைத்தனம்  தான்  என்னை  ஜெயிக்க  வைக்கப்போகுது 

88 நம்ம  கிட்டே  இருக்கும்  குழந்தைத்தனம்  தொலைஞ்சிடாம  பார்த்துக்கனும்

89 சயின்ஸ் என்பது  ஃபார்முலாவும், கால்குலேஷனும்  மட்டும்  இல்லை , நம்பிக்கையும்  இருக்கனும் , அதைக்காதலிக்கனும்

90   ஜெயில்ல சுதந்திரம்  பறி  போவது  பெரிய  விஷயம்   இல்லை , தனிமை  தான்  பெரிய  பாதிப்பைத்தரும் 

91 வாழ்க்கைல  நீ  கத்துக்க  வேண்டிய  முதல்  விஷயம்  உன்  பிரியமானவ  கிட்டே  உன்   துரோகத்தைப்பத்தி  சொல்லாம  இருக்கறது

92  ஒரு  தடவை  உன்  தப்பை  ஒத்துகிட்டா  அது  கல்வெட்டு  மாதிரி  அவ  மனசுல  பதிஞ்சிடும்

93  உன்  ஆள்  உன்னை  சந்தேகப்பட்டா  தப்பே  உன்  மேல  இருந்தாலும் ஒத்துக்காதே , எல்லாம்  அவ்ளோட  கற்பனைனு நம்ப   வை 

94   ப்ரொஃபசரைபொறுத்தவரை  மாயை  என்பது  அசாதாரணமான  ஒரு  விஷயத்தை  சாதாரண  விஷயத்தில்  ஒளித்து  வைப்பது , ஆனா  பெர்வின்  தியரில  நம்ப  முடியாத  விஷயத்தை  நடக்கும்னு  நம்பறது 

95   உன்  குரல்  தொனியே  சரி  இல்லையே? சாதரரணமா  பிரியப்போகும்  தம்பதிகள்  தான்  இந்த  தொனில  பேச்சை  ஆரம்பிப்பாங்க 

96  காதல்  ஒரு  சின்ன  நம்பிக்கைல  தான்  ஆரம்பிக்குது , ஆரம்பத்துல  இருக்கும்  க்வர்ச்சி  போகப்போக குறைஞ்சிடுது  இல்ல?

97  உண்மையைத்தவிர  வேற  எதையும்  உன் கிட்டே  நான்  எதிர்பார்க்கல், அதுக்கு  விலையா  எதை  வேணா  தரத்தயாரா  இருக்கேன்

98 எலிகன்ஸ்னா  என்ன? ஒரு  ஆஃபீசரோட  நடை  உடை  பாவனைகள் தோற்றத்தை  வைத்துஅவ்ரோட  மனைவி  இப்படித்தான்  இருப்பாங்கனு  நாமளா  கற்பனை  செய்து  கொள்வது 

99   ஏமாற்ற்ம்  என்பது  தற்காலிகமானது, ஆனா  நமக்கு  ஏற்ப்டும்  தோல்விகள்  நாம்  யார்  என்பதைக்காட்டிக்கொடுத்துடும் 

100  வாழ்க்கையைப்புரட்டிப்போடும் மோசமான சம்பவங்கள்  வாழ்க்கையில் ஒரு  முறை தான்  நிகழும், மரணம்  மாதிரி

101  ஒருவர்  ஒரு  த்டவை தான்  சாக  முடியும்,  உயிருக்கு  உயிரான  காதல்  ஒரு முறைதான்  தோற்றுப்போகும் 

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பார்த்தே  தீர வேண்டிய  பிரமாதமான  விறுவிறுப்பான  ஆக்சன்  த்ரில்லர் . அடல்ட்  க்ண்ட்டெண்ட்  உள்ளது ,  நெட்  ஃபிளிக்ஸில்  கிடைக்கிறது , ரேட்டிங்  4 / 5