Friday, February 10, 2023

MUKHACIHTRAM (2022)தெலுங்கு - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ அமேசான் பிரைம்)


 1991ல்  ஜெயராம்  நடித்த  மலையாளப்படமான  முகசித்ரம்  படத்துக்கும்  இதற்கும்  சம்பந்தம்  இல்லை , 1993ல்  சுரேஷ்மேனன் - ரேவதி  நடித்த  புதிய  முகம்  படத்துக்கும்  இதற்கும்  சம்பந்தம் இல்லை . 2022  டிசம்பர்  9ல்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  பிளாஸ்டிக் சர்ஜரி  செய்யும்  டாக்டர். . அவரது  அம்மா  இளமைப்பருவத்தில்  ஒரு  கார்  ஆக்சிடெண்ட்டில்   ஏற்பட்ட  முக  காயத்தினால்  ,மனம்  உடைந்து  இறந்து  விடுவதால்  இது  போல  மற்றவர்களுக்கு  நேரக்கூடாது  என  முடிவு  எடுத்ததாக  சொல்கிறார்


நாயகனுக்கு திருமணத்துக்கு  பெண்  பார்க்கிறார்கள். ஒரு  பெண்ணின்  ஜாதகம்  ஒத்துப்போகிறது. அந்தப்பெண்ணின்  ஃபோட்டோவை  தன்  நண்பர்களுக்கு  காட்டும்போதுதான்  அவர்களில்  ஒருவர்  முன்னாள்  பள்ளித்தோழி   நாயகனை  காதலிப்பதாக  சொல்கிறார்

 

ஆனால்  நாயகன்  அதெல்லாம்  இன்ஃபேக்சுவேஷன், நாம  ஸ்கூல் படிக்கும்போது  அப்படி பழகியது  உண்மைதான்  , இப்போ  எனக்கு  அந்த  மாதிரி  எண்ணம்  இல்லை  என்கிறார். ஆனால்  தோழியால்  அதைத்தாங்கிக்கொள்ள  முடியவில்லை 


ஆனாலும் திட்டமிட்டபடி  மேரேஜ்  நடக்கிறது. இதற்குப்பின்  சில  மாதங்கள்  கழிகின்றன. நாயகனின்  தோழி  ஒரு  சாலை  விபத்தில்  மாட்டிக்கொள்கிறார். அதில்,  அவரது  முகம்  முழுவதுமாக  சிதைந்து  விடுகிறது


அதே  நாளில்  நாயகனின்  ,மனைவியும்  ஆக்சிடெண்ட்டலாக  வீட்டின்  மாடியில்  இருந்து  மயங்கி  விழுந்து  இறக்கிறார். 


நாயகன்  தோழிக்கு  பிளாஸ்டி  சர்ஜரி  செய்து   தன் மனைவியின்  முக  அமைப்பைப்போல்  மாற்றுகிறார்


 தோழிக்கு  தான்  நினைத்தபடி  தன்  காதலன்  கணவனாகக்கிடைத்த  சந்தோஷம், ஆனால்  நாயகியின்  செல்  ஃபோனில்  சில  மர்மமான  விஷயங்கள்  அவருக்கு  கிடைக்கின்றன. நாயகன்  தான்  திட்டமிட்டு  மனைவியைக்கொலை  செய்தான்  என  கண்டுபிடிக்கிறார்


 இதற்குப்பின்  கதையில்  நடந்த  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  டாக்டர்  ராஜ்குமார்  ஆக   விகாஷ்  வ்சிஷ்டா  முதல்  பாதியில்  நல்ல  கணவனாகவும்  பின் பாதியில்  சைக்கோ  கேரக்டராகவும்  மாறுபட்ட  நடிப்பைத்தந்திருக்கிறார்


நாயகி  மகதியாக  நாயகனின்  மனைவியாக  ப்ரியா  வத்லிமணி  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.  ஹோம்லி  கேர்ள்  ஆக  முதல்  பாதியிலும்  , பின்  பாதியில்  தோழியின்  உடலில்  தன்  முகம்   பொருத்தபட  ஆக்ட்டிவிட்டிகள்  முற்றிலும்  மாறுவதை அனாயசமாக  கையாண்டிருக்கிறார்


தோழ்  மாயாவாக  ஆயிஷா  கான்  அர்ப்பாட்டமாக  நடித்துள்ளார் 


ஸ்ரீனிவாஸ்-ன்  ஒளிப்பதிவு  நாயகிகள்  இருவரின்  க்ளோசப்  ஷாட்டுகளில்   அழகியல் .   கால  பைரவாவின்    இசையில்  ஒரு  பாடல்  நன்றாக  இருக்கிறது , பிஜிஎம்  சுமார்தான் , இன்னும்  கவனம்  செலுத்தி  இருக்கலாம்



 சந்தீப்ராஜின்  கதை ,திரைக்கதைக்கு  கங்காதர் டைரக்சன்  பொறுப்பேற்று  இருக்கிறார்., இன்னும் திரைக்கதையில்  கவனம்  செலுத்தி    இருக்கலாம் 


  இரண்டு  மணி  நேரம்  தான்  மொத்தப்படமும், ஆனால்  நீண்ட  நேரமாக  ஓடுவது  போல  அலுப்பு ஏற்படுகிற்து



  ரசித்த  வசனங்கள் 


1  இப்பவெல்லாம்  மக்கள்  முட்டாள்தனமான  காரணங்களுக்காக  டைவர்ஸ்  வாங்கிக்கறாங்க 


2  பிறப்பால்  நமக்கு  என்ன  கிடைச்சிருக்கோ  அதை  நாம  கொண்டாடுவதில்  அர்த்தம்  இல்லை, நாம்  இந்த  உலகத்தில்  வாழ்ந்த  பின்  சொல்லிக்கொள்வது  போல், கொண்டாடுவது  போல்  ஏதாவது  சாதிச்சிருக்கோமா? அதுதான்  முக்கியம் 


3    அஞ்சு வருசமா  தண்ணி  அடிச்சுட்டு  இருக்கேன், எனக்கு  நீ  அட்வைஸ்  பண்னாதே



 ஓகே  மிஸ், ஆனா  நான்  30  வருசமா  அட்வைஸ்  பண்ணிட்டு  இருக்கேன் 


4  ஒரு  பெண்ணின்  மிகப்பெரிய  எதிரி  இன்னொரு பெண்ணாகத்தான்  இருக்க  முடியும் 


5    லவ்  ஃபெய்லியர்  ஆனா  ஆண்கள்  சரக்கு  அடிப்பாங்க, தம்  அடிப்பாங்க , சோகத்தை  மறக்க.. ஆனா  நான்  ஒரு  லேடி  ரைட்டர். ஒரு  மாறுதலா  இருக்கட்டும்னு  தண்ணி  அடிக்கற  பழக்கத்தை  லவ்  ஃபெய்லியரால  நிறுத்தப்போறேன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கர்ப்பமா  இருக்கும்போது  ரத்த  தானம்  செய்யக்கூடாது , உடல்  மிக  பலவீனம்  ஆகிடும்னு  நர்ஸ்  சொல்லிட்டு  நீங்க  கர்ப்பமா?  என  கேட்கும்போது  நாயகி  இல்லைனு  பொய்  சொல்லி  ரத்த்  தானம்  தர்றார்.அவ்ளோ  ஆபத்தை  வெச்சுட்டு  பிளட்  டொனேஷன்  தர  அவங்க  ரிலீட்டிவும்  இல்லை ,  ஃபிரண்டும்  இல்லை . எதுக்கு  நாயகி  ரிஸ்க்  எடுக்கனும் ? ( அதுக்கு  சால்ஜாப்பா  ஃபிளாஸ்பேக்ல  ஒரு  சமாதான  ட்விஸ்ட்  வெச்சிருக்காங்க,  ஒட்டலை )

2   தான்  கர்ப்பமா  இருப்பதை  கணவனிடம்  நாயகி  ஏன்  சொல்லவில்லை? முதல்  டைம் சொல்ல  முயலும்போது  தோழியின்  ஆக்சிடெண்ட்  நியூஸ்  வருது, ஓக்கே, அதுக்குப்பின்  ஏன்   சொல்லலை?


3  நாயகி  சீரியசா  ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகி  இருக்கும்போது  கூட  வந்த  அப்பாவை  நான்  பார்த்துக்கறேன்  நீங்க  கிளம்புங்கனு  நாயகன்  சொன்னதும்  நாயகியோட  அப்பா  கிளம்புவது  எப்படி ? எந்த  அப்பாவாவது  மகள்  சீரியசா  ஹாஸ்பிடல்ல  இருக்கும்போது  கிளம்புவாரா? ( அவர் கிளம்பினாத்தான்  ஆள்  மாறாட்ட  பிராசஸ்  நடக்கும்  என்ற  திரைகக்தை சவுகர்யத்துக்காக   இருந்தாலும் )


4  நாயகி  ஆபரேஷனுக்குப்பின் டிஸ்சார்ஜ்  ஆகி  வீட்டுக்கு  வந்ததும்  அவரைக்காண  வரும்  அம்மா, அப்பா  விடம்  நாயகன்  அவர்  ரெஸ்ட்  எடுக்கனும்னு  சொன்னதும் உடனே  சரி  என  கிளம்பிடறாங்க . . மக  சரியாகும்   வரை  கூட  இருக்க  மாட்டாங்களா?

5  நாயகி  நாயகனைப்பற்றிய  ஒரு  விஷயத்தைப்புகாராக  வாட்சப்  வாய்ஸ்  மெசேஜ்  ஆக  அம்மாவுக்கு  அனுப்பி  இருக்கிறார். அதைக்கேட்ட  அம்மா  வுக்கு   அப்போது  போலீசில் புகார்  கொடுக்க  வில்லை , சரி , மகள்  விபத்தை சந்தித்ததும்  சந்தேகம்  வரவில்லையா?


6  நாயகி  நாயகனின்  நண்பனின்  வாக்குமூலத்தை  செல்ஃபோன்  வீடியோவில் பதிவு  செய்து  விட்டு  அவரை  ரிலீஸ்  செய்கிறார், ஒரு  எச்சரிக்கையோடு , எனக்கு  ஏதாவது  ஆபத்து  நடந்தால்  இந்த  வீடியோ   வைரல்  ப்ண்ணி  விட்டுடுவேன்  என்கிறார். அவர்  ஒரி பெண், அப்போதே  அவரைத்தாக்கி  செல் ஃபோனை  பிடுங்கி  இருக்கலாமே? நண்பன்  ஏன்  அதை  செய்யவில்லை ?


7 வீட்டுக்குள்  சி சி டி வி  கேமரா  இருப்பது  தெரிந்தும்  நாயகன்  எப்படி  நாயகியிடம்  ஒப்புதல்  வாக்குமூலம்  தருகிறான்? அது  ரெக்கார்டு  ஆகும்  என  தெரியாதா?


8  நாயகி  இப்போது  ஒரு  கன்னிப்பெண். ஆனால்  பிளாஸ்டிக்  சர்ஜரி   செய்து  மேரேஜ்  ஆன  பெண்ணின்  முகம்  பெற்று  இருக்கிறார். நாயகன்  மேல்  தரும்  புகாரின்  படி  அவரை  செக்கப்  செய்தால்  கர்ப்பம்  இல்லை , கன்னிப்பெண்  என்பது  தெரிந்து  விடுமே?


9  நாயகனின் தோழி  இடது  கைப்பழக்கம்  உள்ளவர் , பிளாஸ்டிக்  ச்ர்ஜரிக்குப்பின்  முகம்  மாறும், சரி , இடது  கைப்பழக்கமும்  மாறுமா? 


10  கோர்ட்டில்  வக்கீல்  வாதிட்டதும்  அவரின்  உதவியாளர்  கோர்ட்  வளாகத்திலேயே  கை  தட்டுகிறார். ஜட்ஜ்  ஒண்ணும்  சொல்லலை.   இதுக்கு  எல்லாம்  அனுமதி  கிடையாதே?


11  வழக்கமா  ஜட்ஜ்  தான் ஆர்டர்  ஆர்டர்  என்பார்,  இதில்  வக்கீல்  தன்  வாதத்துக்கு  ஆடியன்ஸ்  தரப்பில்  எகத்தாளமான  சிரிப்பு  வந்ததும்  ஆர்டர்  ஆர்டர்  என்கிறார்


12   க்ளைமாக்சில்  வரும்  அந்த  கோர்ட்  ரூம் சீனே  தேவை  இல்லாதது. நாயகியிடம்  இருக்கும்  ட்ரம்ப்  கார்டான  நண்பனின்  ஒப்புதல்  வாக்குமூலமே  போதும், ஆனால்  அதை  யூஸ் பண்ணவே  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  ஏ  சர்ட்டிகேட்  கொடுத்திருப்பது  கண்ட்டெண்டுக்காக,  காட்சி  ரீதியாக  கிளாமரோ  வன்முறையோ  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம் , சுமார்  ரகம்  தான்  , ரேட்டிங்  2.25 / 5