தர்மபுரியில் நடந்த உண்மைச்சம்பவம் தான் இந்தக்கதை .1980 களில் கதை பயணிக்கிறது. புரட்சி எண்னங்கள் கொண்ட தீவிர கம்யூனிஸ்ட் நக்சல் பார்ட்டியான ஒரு இளைஞன், மனசாட்சி கொண்ட அபூர்வமான ஒரு போலீஸ்காரர் இருவருக்கும் இடையே நிகழும் மனப்போராட்டாங்கள் தான் கதைக்களம்
நாயகனாக அப்பு என்னும் ரோலில் கண்ணா ரவி. கைதி படத்தில் வில்லனின் கூட்டத்தில் போலீஸ் இன்ஃபார்மராக வருபவர் , இடுங்கிய கண்கள் , தாடி என பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம். கச்சிதமான நடிப்பு
மனசாட்சி உள்ள போலீஸாக இளங்கோ குமாரவேல் , அபியும் நானும் படத்தின் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர் . பொன்னியின் செல்வன் திரைக்கதை உருவாக்கத்துக்கு மிக்வும் உதவியவர். சினிமாவிலும் சரி , நிஜ வாழ்விலும் சரி . நல்ல போலீசை பார்ப்பதே அபூர்வம் ஆகி விட்டதால் இவரது கேரக்ட்ர் டிசைன் நமக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது
படத்தின் திரைக்கதை நமக்கு ஏற்கனவே மிகவும் பழக்கமான மலையூர் மம்பட்டியான் , கரிமேடு கருவாயன் , சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை நினைவுபடுத்துகிறது. படத்தின் புரட்சிகரமான வ்சனங்கள் வாட்டாக்குடி இரணியன் போல் உள்ளது
ஒரு சொம்பு வெல்லாப்பாகை திருடிய குற்றத்துக்காக அதே சுடு வெல்லப்பாகில் அவளை அடித்துத்தூக்கிப்போடுவது கொடூரம், ஆனால் அந்த நிகழ்வில் அந்தப்பெண்ணின் மீதும் பிழை இருப்பதால் முழுமையான இரக்கம் வரவில்லை. சிறிய குற்றத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்ற கேள்வி மட்டும் எழுகிற்து
காட்டில் முள் விறகு வெட்டி கட்டிக்கொண்டு போகும் பெண்ணை போலீஸ் பிடித்து அடிப்பதும், அதைத்தொடர்ந்து இரக்கமுள்ள ஒரு போலீஸ் வாட்டர் கேனில் தண்ணீர் தருவதும் அதை கேனில் வாங்கிக்குடிக்காமல் கையேந்திக்குடிக்க தயார் ஆகும் பெண்ணின் நிலையும் மனதை கனக்க வைக்கிறது
விஷ் முள் கையில் பட்டு போலீஸ் துடிக்கும்போது இன்னொரு போலீஸ் இதே முள் செடியால்தானே அந்தப்பெண்ணை அடித்தாய்? அவளுக்கு எப்படி வலித்திருக்கும்,? வலி என்பது எல்லோருக்கும் பொதுதானே? என கேட்பது உருக்கம்
நாயகனின் காதல் சம்பந்தப்பட்ட காட்சி ஒரே ஒரு இடத்தில் தான் வருகிறது. அதே போல போலீஸ் குடும்பப்பின்னணியும் மனதில் ஒட்டவில்லை
மக்கள் மனதில் முதலில் நாயகனின் பின் புலம் நன்கு பதியும்படி காட்சிகள் இருக்க வேண்டும். அபோதுதான் ஒரு கனெக்ட்டிவிட்டி கிடைக்கும்
மற்றபடி இது போலீஸ் - புரட்சியாளர்கள் சேசிங் ஆடுபுலி ஆட்டம் போல் தான் போகிறது
மக்களை போலீஸ் சித்ரவதை செய்வதால் நாயகன் சரண்டர் ஆக முடிவு எடுப்பது நல்ல திருப்பம், ஆனால் மீடியா முன் அல்லது கோர்ர்ட்டில் சரண்டர் ஆகாமல் ஏன் போலீசிடம் சரண்டர் ஆகி வீணாக உயிர்ப்பலி ஆகிறார் என்ற கேள்விக்கு விடை இல்லை
ஆந்திரா கர்நாடகா தமிழக பார்டர் ஆன சக்கரக்கல் ஃபாரஸ்ட் ஏரியாவில் இல்லீகல் விஷயங்கள் எப்படி நடக்கிறது என்பதை தெளிவாகக்காட்டி இருக்கிறார்கள்
ஜாவேத் ரியாஸ் இசையில் பாடல்களில் புரட்சிக்கருத்துகள் பலம், பின்னணி இசை பல இடங்களில் திகில் ஊட்டுகிறது. வனப்பிரதேசங்களில் ஒளிப்பதிவு கச்சிதம்
திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் ரஃபீக் இஸ்மாயில் நம்பிக்கை ஊட்டும் இயக்குநராகத்தெரிகிறார். காமெடி டிராக், கமர்ஷியல் அம்சங்கள் சேர்க்காமல் எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயம் செய்த வகையில் பாராட்டத்தோன்றுகிறது
ஆஹா தமிழ் ஓ டி டி யில் இது காணக்கிடைக்கிறது
ரசித்த வசனங்கள்
1 நம்ம ஒவ்வொருவருக்குள்ளேயும் நெருப்பு இருக்குது. அதை அணையாம பார்த்துக்கனும்
2 மதம் பிடிக்காதவரை நாம எல்லோரும் கோயில் யானைகள் தான். நம்ம பலம் நமக்கே தெரியாது
3 பாவப்ப்ட்ட ஜனங்களை வஞ்சிக்காதீங்க், உங்க வம்சமே அடியோட அழிஞ்சிடும்
4 கம்யூனிஸ்ட்டோட வேலை புரட்சி ப்ண்றது ரவுடித்தனம் பண்றது இல்லை
5 புரட்சி என்பது அடிதடில இறங்குவது அல்ல , மக்களின் உரிமைக்காகப்போராடுவது
6 நம்மை ஒருத்தன் அடிச்சான்னா நாம திருப்பி அடிக்கனும், இல்லைன்னா அழிஞ்சு போய்டுவோம்
7 வியாபாரி என்னைக்கும் வியாபாரிதான், அவனோட லாபத்துக்கு ஒரு பிரச்சனைன்னா எந்த நிலைக்கும் இறங்குவான்
8 ஒரு மரத்தில் இருந்து பல மலர்கள் உதிர்வ்தைப்போல ஒரு புர்ட்சி இளைஞனின் மரணத்தில் இருந்து பல புரட்சிகள் உருவாகும்
9 சதைல அடிப்பதற்கும் , எலும்புல அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு, சதைல் அடிக்க அடிக்க எதையும் தாங்கும் அளவுக்கு ரெடி ஆகிடும், ஆனா எலும்பு அப்படி இல்லை , அடிக்க அடிக்க வலு குறையு,ம், அதனால போலீஸ் அடி எப்பவும் எலும்பை குறி வெச்சுதான் இருக்கும்
10 கவர்மெண்ட்னு ஒண்ணு இருந்தா ஆண்ட்டி கவர்மெண்ட்டுன்னு ஒண்ணு இருந்தே தீரும், இது சோசியல்சயின்ஸ்
11 மரணம் என்பது ஒரு ஹீரோவின் முடிவு அல்ல , அவன் தன்னை மாதிரி 1000 ஹீரோக்களை உருவாக்கிச்செல்கிறான்
12 தனக்காக வாழ்ந்து மரணிக்கிறவன் இறப்பில் எந்தப்பெருமையும் இல்லை , ஆனால் மக்களுக்காக வாழ்ந்து மடிபவனுக்கு ஒரு பேரு இருக்கு , அதுதான் ரத்த சாட்சி
13 பல தியாகங்களுக்குப்பிறகுதான் நமக்கு வெற்றி கிடைக்கும்
எது தியாகம் ? ஒருத்தன் உயிருக்காக அப்பாவி மக்கள் உயிரைப்பணயம் வைபபதா?
14 போராட்டம்னா மக்களோடு மக்களா நின்னு போராடுவது. காட்டுக்குள்ளே ஓடி ஒளிவது அல்ல
15 அரசாங்கத்துக்கு எதிரா போடனும்னா அதுக்கு ஒரே வழி மக்கள் போராட்டமா அது மாறனும், இல்லைனா அரசாங்கம் நம்மை நசுக்கிடும்
16 நம்ம எல்லார்க்குள்ளேயும் ஒரு மனுசத்தன்மை ஒளிந்திருக்கிறது , அது எப்போதாவதுதான் வெளி வரும். அப்படி வெளி வர நினைக்கும்போது நாம அதைப்போட்டு அமுக்கிடறோம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு போலீஸ் ஆஃபீசர் ஒரு யானை முன் 5 அடி தூரத்தில் நின்று துப்பாக்கியால் சுடுகிறார். 2 நாட்களாக உணவு இல்லாமல் பசியாக இருக்கும் யானை இது, இப்படி எல்லாம் அசால்ட்டா சுட வாய்ப்பே இல்லை .யானை மிரண்டு தாக்க வாய்ப்பிருக்கு, இப்படி எல்லாம் அமைதியா சாகாது
2 ஒரு சொம்பு வெல்லப்பாகு வீணாப்போனதுக்கே பதறும் அந்த ஆள் ஒரு கொப்பரை வெல்லப்பாகு வீணாகும்படி அந்தப்பெண்னை அந்த கொப்பரையில் தள்ளுவாரா?
3 போலீசின் கொடுமைகளைப்பற்றி நன்கு அறிந்த ஹீரோ கோர்ட்டில் சரண் அடையாமல் ஏன் போலீசில் சரண்டர் ஆகிறார்?
4 ஹீரோவின் குடும்பப்பின்னணி , காதலி பற்றிய டீட்டெய்லிங் எதுவும் சொல்லப்படாமல் எப்படி அந்தக்கேரக்டர் மீது ஆடியன்சுக்கு ஒரு அட்டாச்மெண்ட் வரும் ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்குப்பிடிக்காது , கம்யூனிஸ்ட்களூக்குப்பிடிக்கும் . ரேட்டிங் 2.25 / 5 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40