Tuesday, December 06, 2022

GOODBYE (2022)(ஹிந்தி) - திரை விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

GOODBYE (2022)(ஹிந்தி) -குட் பை = திரை விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிகஸ்

நான் பார்க்கும் கடைசி சூர்யோதயம் இது என உயிரே ( தில் சே) படத்தில் அமரர் சுஜாதா வசனம் ஒன்று வரும். அது போல எத்தனை பேருக்கு தன் இறப்பின் கடைசி தருணத்தை உணர முடிந்திருக்கிறது ?இந்த உலகத்தை விட்டுப்போகும் முன் எத்தனை பேரால் நிறைந்த மனதுடன் குட் பை சொல்லிப்போக முடிந்திருக்கிறது? நம் பெற்றோரின் இறப்பிற்கு முன் அவர்களுடன் நாம் பேசிய கடைசி தருணங்கள் என்ன? நாம் அவர்களுடன் நேரம் செலவிட்டிருக்கிறோமா? இவற்றை எல்லாம் அலசும் படம் தான் இது .
திருமண கொண்டாட்ட்டங்கள் இடையே முழுக்க முழுக்க ஜாலியான பல படங்கள் வந்திருக்கின்றன. ஹம் ஆப் கே ஹைங் கோன் (1994) என்ற ஹிந்திப்படம் முழுக்க முழுக்க திருமண ஏற்பாடுகள் இடையே நிகழும் ஒரு கதை.ராஜ்கபூர் இயக்கத்தில் சத்யராஜ் - குஷ்பூ நடித்த கல்யாண கலாட்டா (1998) முழுக்க முழுக்க ஒரு திருமண மண்டபத்தில் நிகழும் க்ரைம் த்ரில்லர் கதை
ஆனால் ஒரு இழவு வீடு அல்லது ஒரு இறப்பு நடந்த வீட்டில் முழுக்க முழுக்க அவர்கள் ஈமக்க்ரியை , சட்ங்கு சம்பிரதாயங்கள் பற்றியே பல சுவராஸ்யமான சம்பவங்களுடன் படம் வந்திருக்கிறதா? என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும்
நாயகி தன் ஆஃபீசில் நிகழ்த்திய ஒரு சாதனைக்கான பார்ட்டி கொண்டாட்டத்தில் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரது செல் ஃபோன் பேட்டரி டவுன் , சார்ஜ் போடச்சொல்லி அங்கே இருக்கும் பணியாளிடம் தந்து விட்டு தன் நடனத்தை தொடர்கிறார். பின் ஃபோனை மறந்து வீட்டுக்கு வந்து விடுகிறார். மறு நாள் காலை அவரது ஃபோன் கிடைக்கிறது. அவரது அப்பா நைட் பூரா கால் பண்ணி இருக்கார். அம்மா இறந்துட்டாங்க என்ற தகவலை சொல்ல
பதறிப்போன நாயகி அப்பா வீட்டுக்கு அம்மாவைப்பார்க்கப்போகிறாள். அவரது சகோதரர்கள் வருகிறார்கள் . உறவினர்களும் வருகிறார்கள் . ஒவ்வொருவரும் இறந்து போன அம்மாவுடனான தன் அழகிய தருணங்களை நினைத்துப்பார்க்கின்றனர் பிறகு காசியில் கங்கை நதியில் அஸ்தியை கரைக்க செல்கின்றனர். அங்கே நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை
நாயகனாக அப்பாவாக அமிதாப் பச்சன். என்னதான் சூப்பர் ஸ்டாராக ஆக்சன் அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் இது போன்ற கேரக்டர் ரோலில் அவரைப்பார்க்க மனசுக்கு இதமாக இருக்கிறது . மனைவியுடனான காதல் தருனங்கள் , பட்டம் விட்டு தூது விட்ட்து போன்ற டீன் ஏஜ் சம்பவங்களை நினைத்துப்பார்க்கும் இடங்கள் கவிதை . அந்தக்காட்சிகளை கார்ட்டூன் வடிவில் காட்சிப்படுத்தியதும் அழகு
அம்மாவாக காயத்ரி ரோலில் நீனா குப்தா. மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக வாழ்ந்திருந்தார். அது போல படம் முழுக்க பிணமாக வந்தாலும் ஆங்காங்கே ஃபிளாஸ்பேக் காட்சிகளில் உயிருடன் வந்து திரைக்கதைக்கு உயிர் ஊட்டுகிறார். இவரது ஆக்கிரமிப்புதான் முழுப்படத்திலும் , நிறைவான நடிப்பு
மகளாக ராஷ்மிகா மந்தனா, ஏற்கனவே சுல்தான் ,புஷ்பா ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் . அழகிய முகம் , கண்ணிய உடை , கச்சிதமான நடிப்பு அப்பாவுடனான வாக்குவாத காட்சிகளில் , பண்டிட் உடன் நடத்தும்ம் விவாதங்களில் ஜொலிக்கிறார்
இவர்கள் நீங்கலாக ஃபாரீனிலிருந்து வரும் மகன்கள் , வளர்ப்பு மகன் , மருமகள் என அனைத்து கேரக்டர்களுமே தங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
இறப்பு வீட்டுக்கு வரும் உறவினர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் அவர்களது எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை காமெடி கலந்து சொல்லப்பட்டிருக்கிறது . பின் பாதியில் திரைக்கதை காசிக்கு பயணிக்கும்போது இறந்தவருக்கு செய்யும் ஈமச்சடங்குகள் பற்றிய விவாதங்கள் , பாரம்பரியமாக நம் முன்னோர்கள் சொன்னதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது
சாவு வீட்டில் எல்லாரும் சோகமாக இருக்க நான்கு பெண்கள் இறந்து போன அம்மாவின் பெயரில் ஒரு வாட்சப் க்ரூப் ஆரம்பித்து அங்கேயே ஒரு செல்ஃபி எடுத்து அதை வாட்சப் டிபி ஆக வைப்பது ரசிக்க வைக்கிறது
மூத்த மகன் தான் மொட்டை அடிக்கனும் என பண்டிட் சொல்லும்போது மகன் பதறுவதும் , மொட்டை அடிக்க மறுப்பதும் யதார்த்தம் என்றால் க்ளைமாக்சில் அவன் மொட்டை அடித்து அதற்கான காரணத்தை சொல்லும்போது உருக்கம்
ஸ்டுப்பிட் என செல்லப்பெயர் வைக்கப்பட்ட நாய் கூட நன்றாக நடித்திருக்கிரது /
ஆஷிஷ் வித்யார்த்தி கெஸ்ட் ரோலில் வருகிறார்
ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவரான விகாஸ் பால் தான் இயக்கி இருகிறார். எல்லோருக்கும் ஒரு இழப்பு இருக்கும் என்பதால் நடுத்தர வயதுள்ள எல்லோராலும் இந்தக்கதையை எளிதில் கனெக்ட் பண்ணிக்கொள்ள முடியும்
சுதாகர் ரெட்டியின் ஒளிப்பதிவு காசியின் அழகை கண் முன் நிறுத்துகிறது
அமித் த்ரிவேதியின் இசையில் சோக மெலோடி சாங்க்ஸ் அதிகம் . பிஜிஎம் கச்சிதம்
ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் ரெண்டரை மணி நேரத்தில் ஒரு ஃபீல் குட் மூவியைப்பார்த்த திருப்தி
சபாஷ் டைரக்டர்
1 ஃபாரீனில் இருந்து இழவுக்கு வ்ந்த மகன் அன்று இரவே பெட்ரூமில் மனைவியுடன் கூடலில் இருக்க ஆயத்தம் ஆவதை பெட்ரூம் கதவைத்தட்டி கண்டிக்கும் அப்பா. அருமையான சீன், காந்தியடிகள் தன் சுய சரிதத்தில் தன் அம்மா இறந்த அன்று இரவு மனைவியுடன் கூடலில் இருந்தேன் என குறிப்பிட்டிருப்பார் , அந்த வரி இன்ஸ்பிரேசனாக இருக்கலாம்
2 வீட்டின் மொட்டை மாடியில் காக்கா வருவதைப்பார்த்து அதை விரட்டப்போகும் நாயகி பின் அது நம் முன்னோரின் ஆத்மாவாக இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்ட பின் அதை ரசிப்பது குட்
3 காசியில் ஈமச்சடங்குகள் செய்யும் பண்டிட்டாக வருபவரின் கேரக்டர் டிசைன் அருமை , அவரது நடிப்பும் கன கச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 இந்த வயசுல ஒருகுழந்தையை ஏன் தத்து எடுக்கனும்னு தோணுச்சு?
தத்து எடுக்கறதுனா எந்த வித கடின உழைப்பும் தேவை இல்லையே? அதான்
2 நேத்துத்தான் அம்மா இறந்தாங்க , காலைலதான் எரிச்சுட்டு வந்தோம், பெட்ரூம்ல என்னடா மனைவி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கே?
அது அது வந்து அம்மாவோட கடைசி ஆசை அவங்க பாட்டி ஆகறது , அவங்க ஆசையைத்தான் நிறைவேத்திட்டு இருக்கோம்
3 சாஸ்திரங்கள் , சம்பிரதாயங்கள் எல்லாம் காலம் காலமா மக்கள் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க . உனக்கு அது புரியலை , தெரியலை என்பது உலகத்தின் தவறு அல்ல
4 இறந்தவர்களின் அஸ்தியை நாம் ஏன் கங்கை நதியில் கலக்கிறோம் தெரியுமா? புண்ணியம் கிடைக்கும் ,. அதனால் தான்
அதெல்லாம் ஒண்ணும் இல்லை . சாம்பலை நதியில் கரைத்தால் விவசாயத்துக்கு நல்லது
5 பழங்கதைகள்னு நாம கிண்டல் பண்றமே அந்தக்கதைகளுக்கு நம்மை விட அதிக வயசு , டினோசரை விட அதிக வயது ,ஏன்? இந்த உலகத்தின் வயதை விட அதிகம். ந்ம்ம முன்னோர்கள் நமக்குச்சொன்னதை நாம் நம் சந்ததியினருக்கு சொல்லிச்செல்வோம்
6 ரெண்டு நாட்கள் எங்காவது வெளில போவதாக இருந்தால் நான் என்னென்ன செய்யனும்?னு லிஸ்ட் போட்டுக்குடுப்பியே? இப்படி திடீர்னு என்னை விட்டுட்டு மொத்தமா போய்ட்டியே? இனி நான் என்ன செய்யனும்னு யார் எனக்கு சொல்வாங்க ?
7 மூத்த மகன் தான் முடி துறக்கனும், அது ஒரு வகை தியாகம்., முடியை இழப்பதால் ஈகோ போகும்
8 90 வயசு வரை அவளுக்கு அயுள் உண்டுனு சொன்னீங்களே? அதுக்கு முன்னேயே போய்ட்டாளே?
ஒவ்வொரு பெற்றோரும் அவங்க குழந்தைங்க 100 வயசு வரை வாழனும்னு தான் ஆசைப்படுவாங்க
9 இறப்பு என்பது திடீர்னுதான் வரும், சுற்றிலும் பலர் அமர்ந்து ஒருவர் இறப்புக்காக காத்திருக்கும்போதா வரும் ?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - அக்டோபர் 7ம் தெதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது நெட் ஃபிளிக்சில் வெளியாகி உள்ளது 40 வயது கடந்த ஆண்களுக்கும், அனைத்துப்பெண்களுக்கும் இந்தப்படம் பிடிக்கும் .ரேட்டிங் 3 / 5
 




Goodbye
Goodbye 2022 film poster.jpg
Theatrical release poster
Directed byVikas Bahl
Written byVikas Bahl
Produced by
Starring
CinematographySudhakar Reddy Yakkanti
Edited byA. Sreekar Prasad
Music byAmit Trivedi
Production
companies
Distributed byZee Studios
Release date
  • 7 October 2022
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹30 crore
Box officeest. ₹9.66 crore[2]