Tuesday, November 29, 2022

லவ் டுடே (2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 2/12/22 முதல்


 திரைக்கதை  மன்னன்  கே  பாக்யராஜின்  சிஷ்யர்  ஆர்  பாண்டியராஜன்  அவர்களுக்கும் இந்தப்பட  இயக்குநர்  பிரதீப் ரங்கநாதனுக்கும்  ஒரு  ஒற்றுமை  இருக்கிறது. இருவருமே  தங்கள்  முதல்  படத்தை  வேறு  ஒரு  ஹீரோவை  வைத்து  மீடியம்  ஹிட்  படத்தைக்கொடுத்தவர்கள் . 2  வது  படத்தில்  தாங்களே  ஹீரோவாக  நடித்து  தன்னைத்தானே  இயக்கிக்கொண்டவர்கள். முதல்  படத்தை  விட  இரண்டாவது  படம்  மெகா  ஹிட் . இருவர்  படங்களுமே மிகச்சிறிய  முதலீடு , மாபெரும்  கலெக்சன். கன்னி  ராசி  படத்தில்  பிரபுவை  ஹீரோவா  வெச்சு  படம்  எடுத்துட்டு  அடுத்து  ஆண்பாவம்    அதிரி  புதிரி  ஹிட்  கொடுத்தவர்தான்  பாண்டியராஜன். இவர்  ஜெயம்  ரவியை  வெச்சு  கோமாளி  எனும்  மாறுபட்ட  காமெடி  ரொமாண்டிக்  மெலோ  டிராமா  தந்தவர் . இந்தப்படம்  வெறும்  5  கோடி  முதலீட்டில்  எடுக்கப்பட்டு  இப்போ 70  கோடி கலெக்சன்  என  சொல்றாங்க 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  , ஹீரோயின்  இருவரும்  லவ்வர்ஸ். ஹீரோயினோட  அப்பாவுக்கு  இவங்க  லவ்  மேட்ட்ர்  தெரிஞ்சு  ஹீரோவை  வீட்டுக்கு  வரச்சொல்றார்.  நகைக்கடைல  எக்சேஞ்ஸ்  ஆஃபர்ஸ்  போடுவாங்களே  அது  மாதிரி   இருவர்  செல்ஃபோனையும்  ஒரே  ஒரு  நாள்  மாத்தி  வெச்சிருந்தா  போதும் , மேரேஜ்க்கு  ஓக்கே  சொல்றார். இதுதானே ? ஜூஜூபி  மேட்டர்  என  நினைக்கும்  இருவரும்  அவர்களே  எதிர்பாராமல்   சந்திக்கும்  பிரச்சனைகள்  தான்  கதை , க்ளைமாக்சில்  அவர்கள்  இணைந்தார்களா? இல்லையா?  என்பதை  திரையில்  காண்க 


ஹீரோவாக  பிரதீப்  ரங்கநாதன்  பலரும்  சொல்லியது  போலவே  நடிகர்  தனுஷ்  சாயலில்தான்  இருக்கிறார்.  அவர்  பாணி  நடிப்பு  பாதி  தன்  பாணி  நடிப்பு  மீதி  என  கலந்து  கட்டி  அடிக்கிறார்.  ரஜினி  போலவே  நடித்த  நளினி  காந்த்  ,  கே  பாக்யராஜ்  போலவே  நடித்த  யோகராஜ்  இருவ்ரும்  பெரிய  அளவில்  முன்னேறாததுக்குக்காரணம்  சொந்த  சரக்கு  இல்லை  என்பதால். ஆனால் இவரிடம்  நடிகராகவும்  சரி , இயக்குநராகவும்   சரி  சரக்கு  இருக்கு 


ஹீரோயினாக   இவனா.. குடும்பப்பாங்கான  பாந்தமான  முகம் , க்ண்ணியமான  உடை , கச்சிதமான  முக  பவனைகள் , கண்  கவரும்  முக  வசீகரம்  , ஒரு  தமிழ்  நடிகைக்கு  இதை  விட  வேறு  என்ன  வேண்டும் ? நடிகை  சுவலட்சுமி  அளவுக்கு  பேசப்படுவார் 


நாயகியின்  அப்பாவாக  சத்யராஜ் . இவருடைய  கேரக்டர்  வில்லன்  கேரக்டர்   மாதிரியும்  இருக்கு  , குணச்சித்திர  கதாபாத்திரம்  போலவும்  இருக்கு 


நாயகனின்  அம்மாவாக  சித்தி  ராதிகா.  அனுபவம்  பேசுது ., அருமையான  நடிப்பு 


நாயகனின்  தங்கைக்கு  வரும்  மாப்பிள்ளையாக  யோகிபாபு  வுக்கு  லைஃப்  டைம் கேரக்டர். பிரமாதமான  கேரக்டர்  டிசைன். தன்  செல்  ஃபோனை  யாருக்கும்  தராதவர்  என  வில்லன்  முகம்  காட்டுபவர்  பின்  அதற்கான  காரணம்  சொல்லும்போது  அடடா  என  அசத்துகிறார்


நாயகனின்  தஙகையாக  வரும்  ரவீனா   மெழுகுச்சிலை  போல  இருக்கிறார், கச்சிதமான  நடிப்பு 

யுவன்  சங்கர்  ராஜாவின்  பிஜிஎம்  கலக்கல்  ரகம் ,  3  பாட்டு  ஆல்ரெடி  செம  ஹிட்டு   தினேஷ்  புருஷோத்தமனின்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளிர்ச்சி 


சபாஷ்  டைரக்டர்


1   படத்தின்  கதை  செல்  ஃபோன்  பேக்டிராப்பில்  வருவதால்  டைட்டில்  போடும்போது  மேக்கிங்  ஆஃப்  செல் டோன்  டீட்டெய்ல்ஸ்  காட்டியது 


2   நாயகன் . நாயகி , சத்யராஜ் , ராதிகா , யோகிபாபு -  ரவீனா  ரவி  இவர்கள்  கேரக்டர்  டிசைன்  செய்யப்பட்ட  விதம்  அவர்களிடம்  கச்சிதமான  நடிப்பை  வெளிக்கொணர  வைத்த  பாங்கு 


3  மெயின்  கதையை  விட  அதிக  ரசனைக்குரிய  யோகிபாபு  - ரவீனா   காதல்  காட்சிகள்  கல்யாண  காட்சிகள்  அதகளம்


4   பெண்கள்  என்றாலே  1000  பேர்  ஃப்ளர்ட்டிங்  பண்ண  வருவாங்க , என்  கிட்டே  கூட  வந்தாங்க  என  ராதிகா  உணர்த்தும்  இடம்  சரியான  செண்ட்டிமெண்ட்  சீன் 


5    அந்த  ஹேக்கர்  என்னடா  பண்றான்?  என  ஹீரோ  ஒவ்வொரு  முறை  கேட்கும்போதும்  தொட்டா  தூக்கிடலாம்  என  பில்டப்  குடுக்கும்  நண்பன்  காமெடி  டிராக்  கலக்கல்  சீன்


6  பதம்  பார்க்கறதுன்னா  என்னடா? என  நாயகி  கேட்கும்போது  நாயகன்  சமாளிக்கும்  காட்சியும் ,  அதைத்தொடர்ந்து  நாயகி  கொடுக்கும்  கவுண்ட்டர்  டயலாக்கும் 


  ரசித்த  வசனங்கள் 


1  வெறும்  கையை  வீசிட்டு  வ்ந்துடாத 


 மருதாணி  வெச்ட்டு  வரவா?


2   பாஸ்போர்ட்  வெரிஃபிகேஷனுக்காக  கால்  பண்ணி  இருக்கோம்

 இது  நாம   போட்டு  வெச்ச  திட்டம்  ஆச்சே?  கொஸ்டீன்  பேப்பர்  லீக்  ஆகிடுச்சா? 


3   நாம  லவ்  பண்றவங்க  நமக்கு   உண்மையா  இருக்கனும்னு  நினைப்போம், ஆனா  நாம  அவங்களுக்கு  அதே  மாதிரி  உண்மையா  இருக்கனும்னு  நினைக்க  மாட்டோம் 


4   ஒரு  விஷயத்தை  நாம  மறைச்சா  தப்பானதைப் பண்றோம்னு  அர்த்தம்  இல்லை தெரியக்கூடதுனு  கூட  இருக்கலாம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனுக்கும்  எக்ஸ்  கேர்ள்  ஃபிரண்ட்ஸ்  உண்டு  நாயகிக்கும்  பல  பாய்  பெஸ்டிகள்  (  எடுபுடி  வேலை  செய்பவ்ர்கள்)  உண்டு , ஆனா   நாயகியை  மட்டும்  நாயகன்  குறை  சொல்வது  ஏனோ ?   தானிக்கு  தீனி  சரியாப்போச்சுதானே? 


2  நாயகியை  மார்ஃபிங்  பண்ணி  எடுக்கப்பட்ட  அந்த  வீடியோ  க்ளிப்  காட்சி    இல்லாமலேயே  பவர்ஃபுல்  க்ளைமாக்ஸ்  அமைத்திருக்க  முடியும் 


3  போலி  ட்விட்டர்  அக்கவுண்ட்டை  நாயகன்  உட்பட பல  நண்பர்களும்  ஆபரேட்  செய்ததாக  சொல்லும்  ஹீரோ  நாயகியின்  தஙகையை  வர்ணித்தது  யார்? என  தனக்குத்தெரியாது  என  வாதிடுகிறார், ஆனால்  பாஸ்வோர்டு  சரியாகப்போட்டாலும்  ட்விட்டர்  அல்ல்து   ஃபேஸ்புக்கில்  வேறு  லொகேஷன்ல  இருந்து  ஆபரேட்  செய்தால்  மெயிலுக்கு  தகவல்  வருமே? 


4  டபுள்  மீனிங்  டயலாக்ஸ்  ,  முகம்  சுளிக்க    வைக்கும்  காட்சிகள்  ஆங்காங்கே  உண்டு. ஃபேமிலியோட  பார்க்க  சங்கட,ம்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஆல்ரெடி  சூப்ப்ர்  டூப்ப்ர்  ஹிட்  ஆன  படம்.  இனி  புதுசா  சொல்ல  என்ன  இருக்கு ?   ஆனந்த  விகடன்  மார்க்  44 ( இது  துப்பாக்கி  க்கு  அளிக்கப்பட்ட  மார்க் )   நெட்  ஃபிளிக்சில்  2/12/22  முதல்  கிடைக்கும்   ரேட்டிங் 3 / 5 


Love Today
Love Today 2022 poster.jpg
Poster
Directed byPradeep Ranganathan
Written byPradeep Ranganathan
Based onApp(a) Lock
by Pradeep Ranganathan
Produced byKalpathi S. Aghoram
Kalpathi S. Ganesh
Kalpathi S. Suresh
StarringPradeep Ranganathan
Ivana
Raveena Ravi
CinematographyDinesh Purushothaman
Edited byPradeep E. Ragav
Music byYuvan Shankar Raja
Production
company
Distributed byRed Giant Movies
Release date
4 November 2022
Running time
154 minutes
CountryIndia
LanguageTamil
Budget5 crore[1]
Box office70 crore[2]