Monday, November 28, 2022

varane avashyamund (2020)=வாரனே அவஷ்யமுண்ட்(மலையாளம்) -சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 கேரளாவில்  சின்ன  ஊரான  சங்கணாச்சேரியிலேயே 40  நாட்கள்  ஓடிய  ஹிட்  படம்  தான்  இது.போஸ்டர்  டிசைன்  எனக்குப்பிடிக்காததால்  அப்போது  பார்க்கவில்லை. இது  நம்ம  ஆளு   நான் ஆளான  தாமரை  பாடல்  புகழ்  ஷோபனாவை  வயோதிகத்தோற்றத்தில்  பார்க்கும்  மனோதிடம்  இல்லாததால்  தவிர்த்தேன். ஆனால்  இப்போது   நெட்  ஃபிளிக்ஸ்ல  ரிலீஸ்  ஆனதாலும்    பலரும்  இந்தப்படத்தை  புகழ்ந்து  தள்ளியதாலும்  படம்  பார்த்தேன் 


சம்சாரம்  அது  மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி , காவலன்  அவன்  கோவலன்  போன்ற  குடும்பப்பாங்கான  படங்களை  எடுக்கு,ம்  விசு  ஒரு  அபார்ட்மெண்ட்லயே  மொத்தப்படத்தையும்  எடுத்து முடித்து  விடுவார். அவர்  பாணியில் கொஞ்சம்  காமெடி  கலந்து  சி  செண்ட்டர்  ரசிர்களை  திருப்திப்ப்டுத்தும்  விதமாக  வி  சேகர்  படங்களை  எடுப்பார் . இயக்குநர்  விக்ரமன்  படங்களில்  நெகடிவ்  கேரக்டர்களே  இருக்காது ., வில்லன்க்ள்  இல்லாத  நல்ல  படங்களைக்கொடுத்தவர்.  இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன்  படங்களில்  ஒரு  பிரமாதமான  ரொமாண்டிக்  ஃபீலிங்  கிடைக்கும். இந்த  நான்கு  இயக்குநர்களின்  ரசிகராக  இருக்கும்  ஒரு  இயக்குநர்  ஒரு  படம்  எடுத்தால்  எப்படி  இருக்குமோ  அப்படி  இந்தப்படம்  இருக்கிறது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகியின்  அம்மா  சிங்கிள்  மதர். கணவனைப்பிரிந்து  வாழ்பவர். பிரிந்து  போன  கணவருக்கு  இன்னொரு  மனைவி  , வாரிசுகள்  என  எல்லாம்  உண்டு . ஆனால்  இவருக்கு  ஒரே  ஒரு  மகள்  மட்டுமே. நாயகிக்கு  சில  வரன்கள்  வந்து  போகிறது , ஆனால்  எதுவும்  செட்  ஆகவில்லை . செட்  ஆன  ஒரு  வரன்  நாயகியுடன்  பேசிப்பழகியதில்  நாயகியின்  அம்மா  விஷயம்  கேள்விப்பட்டு   திருமணத்துக்கு  ஒத்துக்கொள்ளவில்லை, இதனால்  நாயகிக்கு  அம்மா  மீது  கொஞ்சம்  கோபம் 


 இது  போதாது  என்று  அந்த  அப்பார்ட்மெண்ட்டுக்கு  புதிதாக  குடிவரும்  ஒரு  மிலிட்ரி  ரிட்டயர்டு  மேன்  மீது  நாயகியின்  அம்மாவுக்கு  ஒரு  காதல்  வேறு . எல்லோரிடமும்  சிடுசிடுமுகமாக  இருக்கும்  அந்த  ,மிலிட்ரிமேன்  நாயகியின்  அம்மாவிடம்  மட்டும்  சிரித்துப்பேசுகிறார் ( இது  ஒன்றும்  புதிய  விஷயம்  இல்லை ,  முக  நூலிலே  கூட ஆண்களின்  பதிவுகளுக்கு  எட்டியே  பார்க்காத  பெரிய  பெரிய  ஆளுமைகள் , ரைட்டர்கள்  எல்லாரும்  பெண்கள்  பதிவில்  ஹார்ட்டின்  விட்டு  கமெண்ட்  போடுவது  காலம்  காலமாக  நடப்பதுதானே?) 


அதே  அப்பார்ட்மெண்ட்டில்  குடி  இருக்கும்  நாயகன் தனது தம்பியுடன்  அடிக்கடி  சண்டை  போட்டுக்கொண்டே  இருக்கிறான். அண்ணன்  தம்பி  இருவருக்கும்  வயது  வித்தியாசம்  அதிகம் .நாயகன்  தன்  முன்  கதையை  நாயகிக்கு  சொன்னதும்  நாயகிக்கு  நாயகன்  மீது அன்பு  பிறக்கிறது


 நாயகி, நாயகன், நாயகியின் அம்மா , மிலிட்ரிமேன்  இந்த    இரண்டு  செட்  லவ்  ஜோடிகள்  அவர்களை  சுற்றி  வாழும்  100%  அக்மார்க்  நல்லவர்கள்   நடத்தும்  சம்பவங்களே  திரைக்கதை 


நாயகியின்  அம்மாவாக  ஷோபனா. வயதானலும்  மயிலுக்கு  தோகை  அழகுதான்  என்பது  போல  ஷோபனாவின்  நடன  அசைவுகள்  இன்னும்  சிலாகிக்க  வைக்கின்றன. தன்னைப்பாராட்டாமல் தன்  மகள்  ஊர்வசியைப்பாராட்டுவது  கண்டு  துணுக்குறும்  காட்சி  கிளாசிக் . நாயகி  வீட்டில்  இல்லாத  போது    பக்கத்து  வீட்டுப்பையன்  மூலம்  மிலிடிரி  மேனுக்கு  சாப்பாடு  கொடுத்து  விட  முயலும்போது  நாயகி  ஆஜர்  ஆகி  நானே  கொண்டு  போய்  கொடுக்கிறேன்  என  சொல்லி விட்டு  லெட்டர்  ஏதும்  இருக்கா?  என  கேட்கையில்  ஷோபனா  காட்டும்  முக  பாவனைகள்  அட்டகாசம் 


நாயகியாக கல்யாணி  பிரியதர்ஷன் .  லூஸ்தனமான  தமிழ்  நாயகிகளையே பார்த்துப்பழக்கப்பட்ட  நமக்கு  யதார்த்தமான  புத்திசாலித்தனமான  நாயகியப்பார்க்க  மனதுக்கு  அறுதல்தான்.  கிட்டத்தட்ட  திரும்ணம்  நிச்சயம்  ஆகிவிட்டது  என்ற  நிலையில்  கூட  மாப்பிள்ளை  ஒரு  முத்தம்  கேட்கும்போது  அவர்  காட்டும்  தயக்கம்  இன்னமும்  பெண்கள்  தங்கள்  கண்ணியத்தைக்கட்டிக்காக்கிறார்கள்  என்ற  எண்ணம்  மேலோங்குகிறது மாப்பிள்ளையை விட  அவரது  அம்மா  பிடிச்சிருக்கு , அவரைத்தான்  மிஸ்  பண்றேன்  என  சொல்லும்போதும், நான்  இப்போ  அழுததை  உங்க  மகன்  கிட்டே  சொல்லிடாதீங்க  என  ஊர்வசியிடம்  வேண்டும்போதும்  கல்யாணி  பிரியதர்ஷன் .  மிகச்சிறந்த  நடிப்பை  வழங்கி  இருக்கிறார், நதியாவின்  குறும்பு , ரேவதியின்  எளிமை , சுஹாசினியின்  யதார்த்தம்  கலந்த  கலவை  இவர் 



வாழ்ந்து  கெட்ட  குடும்ப,ம்  மாதிரி  ஒரு  காலத்தில்  போலீஸ்  ஆஃபீசராக  பட்டையைக்கிளப்பிய  சுரேஷ்  கோபிக்கு  இதில்  அடக்கி  வாசிக்கும்  பாத்திரம். அவரது  ரசிகர்களுக்காக  ஒரு  ஃபைட்  சீனும்  உண்டு  நாட்டிய  விழாவில்  ஷோபனாவின்  நிகழ்ச்சி  பார்க்கும்போது  அவர்  காட்டும்  முக  பாவனைகள் கிளாசிக் 


நாயகன்  ஆக  துல்கர்  சல்மான்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார். நாயகிக்கு  கொடுக்கப்ப்ட்ட  ஸ்க்ரீன்  ஸ்பேசை  விட  இவருக்கு  மூன்று  மடங்கு  குறைவு , ஒரே  ஒரு  ஃபிளாஸ்பேக்  சீன்  கதை  சொல்லுவதிலே தனது  அக்மார்க்  முத்திரையைப்பதித்து  இருக்கிறார்


  ஊர்வசி  நாயகிக்கு  வருங்கால  மாமியாராக  வந்து  அசத்துகிறார். ஹோட்டலில்  சாப்பிடும்போது  நாயகியிடம்  நாசூக்காக  திருமணம்  கேன்சல் என்பதை  சொல்லும்  நேர்த்தி  போதும்  அவரது  ந்டிப்புக்கு 


இவர்கள்  நான்கு  பேர்  போக  அப்பார்ட்மெண்ட்வாசிகள்  எல்லாருமே  அவரவர்க்கு  தரப்பட்ட  கேரக்டரை  கச்சிதமாக  செய்திருக்கிறார்கள் . ஒரு  பாசிட்டிவ்  எனர்ஜியே  ஓடுது 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகிக்கு  வரனாக  வரும்  ஒரு  டிராஃபிக்  இன்ஸ்பெக்டர்  எப்போப்பாரு  ட்யூட்டி  ஞாபகவாகவே  இருக்க  அவரை  நைசாக  நாயகி  கழட்டி  விடும்  காட்சி  கிளாசிக்  காமெடி


2   சாக்லெட்  என்றால்  விரும்பி  சாப்பிடும்  நாயகி  அந்த  ஒரு  காரணத்துக்காகவே   ஒரு  வரனை  ஒக்கே  சொல்வதும்  அந்த  வரன் -  ஊர்வசி  - நாயகி  மூவருக்குமான  காட்சிகள் ஒரு  சிறுகதை


3 நாயகி , அம்மா  இருவரும்  பேசும்  அந்த  நீண்ட  லாங்க்  ஷாட்  கச்சித,ம். இருவரின்  ந்டிப்பும்  செம 


4 துல்கரின்  ஃபிளாஸ்பேக்கில்  அம்மா, அப்பா  இருவ்ரும்  இறந்து  கிடக்கும்  வீட்டில்  பிணத்துக்கு  அருகில்  தன்  தம்பியுடன்  உறங்கிய  அனுபவத்தைப்பகிரும்போது    பகீர் 


5  துல்கரின்  அத்தையாக  வருபவர்  வாடசப் க்ரூப்  தோழி  என  ஓப்பன்  பண்ணும் ஷாட்



  ரசித்த  வசனங்கள் 


1 சார், லவ்  மேரேஜ்னா  பொறுப்பா  சைன்  பண்ண  அப்பா  வேணு,ம்


அப்பா  பொறுப்பே  இல்லாதவர்


2 சினிமாவை  விட  சீரியலுக்குத்தான்  அதிக  வரவேற்பு 


3  என்னது ?  உன்  பாஸ்வோர்டு  சுடுதண்ணியா?


4  வயசான  பின்  நம்ம  மைலேஜ்  கூடனும்னா  குறைவான  உணவு  எடுத்துக்கனும் 



5  பார்ப்பது  என்னமோ  டாம்  அண்ட்  ஜெர்ரிதான் , ஆனா அழுதுட்டே  பார்ப்பா 


6  உங்க  மனசு  மாறனும்னா  மீன்  வாங்கி  பேரு  வைங்க . இவ  பேரு  எலிசபெத், என்  மனைவி, இந்தப்பேரு  வேணாம்,  வேற  நல்ல  பேரு  வைங்க 


7  பேரு  என்ன?


  மேஜர்


 நாயோட  பேரு  கேட்டேன்


 ஜிம்மி  


அப்போ  மேஜர்  ஜிம்மினு  கூப்பிடலாமா?



8  சர்வர் = சார் , ஆர்டர்  பண்ணுங்க 


 டிரஃபிக்  எஸ் ஐ =  லைசென்சை  எடு


 வாட்?


 சாரி  லைம்  ஜூஸ்  கொண்டு  வா


, சாப்பாட்டை    ரெடி  பண்றதை விட  அவளுக்கு  மேரேஜ்  பண்ணிக்கறது  ஈசினு  நினைக்கறா


10  அம்மா,  உனக்கும் , மேஜருக்கும்  லவ்  இருக்குனு  அபார்ட்மெண்ட்ல  அரசல்  புரசலா  பேசிக்கிறாங்க , நிஜமா?


  ச்சே  ச்சே  அப்படி  சொல்லிட  முடியாது 


 ஹப்பாடி 


 அப்படி  இல்லைனும்  சொல்ல  முடியாது 


11  மேரேஜூக்குப்பின்  வேற  ஒரு  முகம்  காட்டுவது  ஆணின்  குணம்   அது  என்னை  பயப்படுத்துது 


12  இவன்  தான்  என்  தூக்க  மாத்திரை , இவன்  அருகில்  இருந்தாதான்  எனக்கு  தூக்கம்  வரும் 



13 வாழ்க்கைல  ஒரு  புது  உறவு  வர்றது  நல்லதுதான்  என்பதை  தெரிஞ்சுக்க  ஒரு  ஸ்பேஸ்  கொடுக்கனும்  நாம 


14  பயணம்  நம்மை  புதுப்பிக்கும்,  புதிய  மனிதர்கள்  , புதிய  மொழி  , புதிய  உணவு 



15   ப்யணங்களின்  கூடுதல்  அழகு  எது  தெரியுமா?  ரிட்டர்ன்  டிக்கெட்  எடுத்து  வெச்சுக்குவதுதான்


16  நமக்காக  ஒருவர்  காத்துக்கொண்டிருக்கிறார்  என்ற  உணர்வு  இல்லை  எனில்  நாம்  போகும் பயணம்  வீணே!


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 சுரேஷ்  கோபியும்  துல்கரும்  செஸ்  விளையாடும்போது   ராணிக்கு  குதிரை  மூலமா  அட்டாக்  கொடுக்கும்போது  லூஸ்தனமா  ராணியை  நகர்த்தாம  பான்  மூவ்  பண்றாரு. ஒரு  எல்  போர்டு  பிளேயர்  கூட  அப்படி  ஆடமாட்டான் 


2   டூ வீல்ர்ல  போகும்போது  நாயகன் , நாயகி  இருவருமே  ஹெல்மெட்  இல்லாம  தான்  பயணிக்கறாங்க .மக்களுக்கு  விழிப்புணர்வை  ஊட்ட  வேண்டாமா? 

3   சுரேஷ்  கோபி  ஒரு  ஆளிடம்  சட்டை  இவ்ளோ  சுருக்கமா  இருக்கு    அயர்ன்  பண்ணிட்டு  வா  என  ஒரு  சட்டையை  விரித்துக்காட்டும்போது  அது   பர்ஃபெக்ட்டா  அயர்ன்  பண்ணிதான்  இருக்கு .  என் கண்  தான்  ஏமாற்றுதோனு  ரிவர்ஸ்  ஓட்டிப்பார்த்தேன்


4  ஷோபனா  தன்  மகளிடம்  நான்  10வது  படிக்கும்போது  ஒருத்தனை  லவ்  பண்ணினேன்,  12  வது  படிக்கும்போது  ஒருத்தன், காலேஜ்  படிக்கும்போது  ரெண்டு  பேரை லவ்  பண்ணினேன், , ஆனா  மேரேஜ்  ஆனது  வேற  ஒருத்தன்  கூட  அதுவும்  லவ்  மேரேஜ்  தான்  என  சொல்லும்  வ்சனம்  எதுக்கு ? தியேட்டரில்   கை  தட்டல்  வாங்க  வேண்டுமானால்  இது  யூஸ்  ஆகலாம், ஆனா  ஆரோக்யமான  வசனம்  அல்ல,  அப்போ  நாயகி  பதிலடியாக  சொல்வதும்  அதே  தேவை  இல்லாத  ஆணி  தான் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் . எந்த  திருப்பங்களும்,  விறுவிறுப்பும்  இல்லாத  அமைதியான  நதியைப்போல ஒரு  ஃபீல்  குட்  மூவி  பார்க்க  விரும்புவர்கள்  மட்டும்  பார்க்கலாம் . மொக்கை  காமெடி  டிராக் , வில்லன் ,  காபரே  டான்ஸ்  லொட்டு  லொசுக்கு  இல்லாத  கண்ணியமான  படம்  ரேட்டிங்  3  / 5 


Varane Avashyamund
Varane Aavashyamundu.jpg
Theatrical release poster
Directed byAnoop Sathyan
Written byAnoop Sathyan
Produced byDulquer Salmaan
Starring
CinematographyMukesh Muraleedharan
Edited byToby John
Music byAlphons Joseph
Production
companies
  • Wayfarer Films
  • M Star Entertainments
Distributed byPlay House Release
Release date
  • 7 February 2020
Running time
145 Minutes
CountryIndia
LanguageMalayalam