Sunday, November 27, 2022

PADAVETTU (2022) (மலையாளம்) - திரை விமர்சனம் ( பொலிடிக்கல் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 மலையாளத்தில்  படவெட்டு  என்றால்  போர்  என்று அர்த்தம். ஏழை  மக்களின் அப்பாவித்தனத்தைப்பயன்படுத்தி  அரசியல்  செய்து  குளிர்  காய  நினைக்கும்  சுயநல  அரசியல்வாதிக்கும், சாமான்ய  மனிதனுக்கும்  இடையே  நடக்கும்  போர்  தான்  கதை 

நாயகன்  ஒரு  விளையாட்டு  வீர்ர். காலில்  அடிபட்டு  அவரால்  விளையாட்டிலும்  கவனம்  செலுத்த  முடியவில்லை , வாழ்க்கையிலும்  வெற்றி  பெற  முடிவதில்லை .இதனால்  தான்  காதலித்த  பெண்ணைக்கூட  கல்யாணம்  செய்து  கொள்ள  முடியாத  சூழ்நிலைக்கைதி  ஆகிறான்


நாயகிக்கு  வேறொருவன்  கூட  திருமணம்  ஆகி  விவாகரத்தும்  ஆகி  விடுகிறது. இருவரும்  ஒரே  ஊர் தான் 


நாயகனுக்கு  அப்பா, அம்மா  இல்லை , தன்  சித்தியுடன்  வசித்து  வருகிறான். அவர்கள்  வீடு   சிதிலம்  அடைந்து  இருக்கிறது . உள்ளூர்  அரசியல்வாதி  ஒருவன்  தன்  சுய நலத்துக்காக  மக்களிடையே  நல்ல  பேர்  வாங்கி  ஓட்டு  வாங்குவதற்காக   நாயகன்  வீட்டை  தன்  சொந்தச்செலவில்  புதுப்பித்து  தருவதாக  அறிவிக்கிறான்


 இதில்  நாயகனுக்கு  உடன்பாடு  இல்லை  என்றாலும்  நாயகியின்  சித்தி  அதை  மகிழ்ச்சியோடு  ஏற்கிறாள் . வீடு  புதுப்பிக்கப்பட்டபின்  வீட்டின்  முன்  ஸ்பான்சர்டு  பை இன்னார்  என  கட்சிப்பேர்  பொறிக்கப்படுகிறது 


 நாயகனை  ஊரில்  உள்ளோர்  ஸ்பானசர்டு  ரவி  என  கிண்டல்  செய்கிறார்கள் . இது  பொறுக்காத  நாயகன்  அந்த  நினைவுக்கல்லை  பெயர்த்து  விடுகிறான்


எதிர்க்கட்சியான  வில்லன்  அதை  உடைத்தது  நாயகன்  தான்  என்பதை தெரிந்திருந்தும்  அதை  உடைத்தது  ஆளும்  கட்சி  என  மக்களிடையே  வதந்தி  பரப்புகிறான்


வில்லன்  ஏழை  மக்களின்  நிலங்களை  அபகரிக்க  திட்டம்  போடுகிறான். அதை  நாயகன்  எப்படி  முறியடிக்கிறான்  என்பதே  திரைக்கதை  


நாயகனாக  நிவின் பாலி . வேலை  வெட்டிக்கே  போகாத  இளைஞன்  கதாபாத்திரம்  ஏன்  அப்படி  இருக்கிறான்  என்பது திரைகக்தையின்  பின்  பகுதியில்தான்  நமக்குத்தெரிய  வருகிறது.  அதனால்  நாயகன்  மீது  நமக்கு  ஒரு  பிடிப்பே  வரவில்லை 


 நாயகியாக அதிதி  பாலன். இவருக்கு  வசனத்தை  விட  தன்  கண்களில்  தான்  அதிக  நம்பிக்கை  போல்  இருக்கிறது . நாயகனுடன்  கண்களாலேயே  பேசுகிறார். மெயின்  கதையில்  நிகழும்  அரசியல்  சண்டைகளை  விட  கிளைக்கதையான  நாயகியின்  காதல்  தான்  நம்  மனதில்  தங்கி  விடுகிறது. பிரமாதமான , அமைதியான்  நடிப்பு , தான்  சொல்ல  வருவதை  முக  பாவனைகளாலேயே  நடித்து  விடுகிறார். நாயகியின்  கதாபாத்திரம்  எப்ப்டி  உயிரோட்டம்  உள்ளதாக  இருக்கவேண்டும்  என்பதற்கு  நல்ல  உதாரணம் . நாயகிக்கு  அறிமுகப்பாடல்  காட்சியோ , டூயட்  காட்சியோ  இல்லை , ஆனாலும்  அவர் ரசிகர்கள்  மனதில்  சிம்மாசனம்  இட்டு  அமர்ந்து  விடுகிறார்


நாயகனின்  சித்தியாக  வரும்  ரம்யா  சுரேஷ்   வீட்டு  வேலைகளை  செய்து  கொண்டே  பட  பட  என  பொறிந்து  கொண்டே  வசனம்  பேசும்போது  மனோரமாவை  நினைவுபடுத்துகிறார்


அரசியல்வாதி  வில்லனாக  ஷம்மி   திலகன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.

ஷினே  டாம்  ஷாக்கோ  வுக்கு  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை  நிறைவான  நடிப்பு 


நாயகியின்  அப்பாவாக  வரும்  இந்திரன்ஸ்  கச்சிதம் 


காட்டுப்பன்றியை  விரட்டிக்கொல்லும்  காட்சியில்  ஒளிப்பதிவாளரும், இசை  அமைப்பாளரும்  மிரட்டி  இருக்கிறார்கள் 


கோவிந்த்  வசந்தராசன்  இசையில்  நாயகன்  - நாயகி  பார்வையாலேயே  காதலைப்பரிமாறும்  மழை  காட்சி  அற்புதம் 


ஷமித்  அகமதுவின்  படத்தொகுப்பு  கச்சிதம்  என்றாலும்  திரைக்கதை  மிக  மெதுவாக  நகர்வதால்  பல  இடங்களில்  சலிப்பு  ஏற்படுகிறது 


இயக்குநர் விஜி  கிருஷ்ணராஜ்  துணிச்சலாக  படத்தை  இயக்கி  இருந்தாலும் ப்டத்தின்  டைட்டிலைப்போல்வே போர்  என  சொல்லத்தக்க வகையில்  தான்  காட்சிகள்  நகர்கின்றன. இன்னும்  திரைக்கதையில்  சுவராஸ்யத்தைக்கூட்டி  இருக்க  வேண்டும் 


நெட்  ஃபிளிக்சில்  இன்று  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது 



ரசித்த  வசனங்கள் 

  


1 ஏழைகள்  சிந்திக்க  நாம  நேரம்  கொடுத்திடக்கூடாது. அவங்களை உபயோகிச்சுக்கனும்


2 நாம ப்த்துப்பேருக்கு உதவி  செஞ்சா  அதைப்பார்த்து  ஒரு  பத்துப்பேரு  இன்னொரு  பத்துப்பேருக்கு  உதவி  செய்ய  மாட்டாங்க ?\


3 நமக்கான  மண்  நமக்கானது , நமக்கான  நீர்  நமக்கானதுநமக்கான  உரினையை  பிறர்  தட்டிப்பறிக்க  நினைக்கும்போது  நாம்  எட்டிப்பாய்வதில்  தவறில்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   மாற்றுத்திறனாளிகள்  கூட  வேலைக்குப்போய்  சம்பாதிக்கறாங்க , ஆனா  நாயகன்  காலில்  அடிபட்டதுக்காக  வீட்டுத்திண்ணைலயே  முடங்கிக்கிடப்பது  அவரது  கேரக்டர்  மேல்  எரிச்சலையே  கிளப்புகிறது 


2  நாயகன்  தன்  சித்தியை பல  முறை அடிக்கிறார், தள்ளி  விடுகிறார்.  ஆனால்  டைட்டிலில்  எந்த  உயிரினமும்  துன்புறுத்தப்படவில்லை  என  அறிவிப்பது  எப்படி ?


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சாதா  ஆளை  ஏமாற்றும்  அரசியல்வாதியின்  கதையைச்சொன்ன பாரதிராஜாவின்  என்   உயிர்த்தோழன்  ஒரு  தோல்விப்படமே., ஆனா  அதுல  இருந்த  உயிரோட்டம்  கூட  இதுல  இல்லை . ரேட்டிங்  2.25 / 5 


Padavettu
Padavettu.jpg
Theatrical release poster
Directed byLiju Krishna
Written byLiju Krishna
Produced by
Starring
CinematographyDeepak D. Menon
Edited byShafique Mohamed Ali
Music byGovind Vasantha
Production
companies
Distributed byCentury Release
Release date
  • 21 October 2022
Running time
145 minutes
CountryIndia
LanguageMalayalam