Saturday, November 12, 2022

அரச கட்டளை (1967) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)


ஜெயலலிதாவுக்கு  இந்தப்படத்துக்குப்பின்  தான்  கவர்ச்சிக்கன்னி  என்ற  பட்டப்பெயர்  கிடைத்தது என  விக்கி பீடியா  சொல்லுது . அப்படி  ஒரு  பட்டம்  அவருக்கு  இருக்குன்னே  எனக்கு  இப்போதான்  தெரியும்  இந்தப்படத்துக்கு  முதலில்  வைக்கப்பட்ட  டைட்டில்  பவானி .  பிறகுதான்  டைட்டிலை  மாற்றினார்கள். இந்தப்படம்  70  நாட்கள்  தான்  ஓடியதாம். கமர்ஷியலாக  இது பெரிய  வெற்றிப்பட,ம்  இல்லை  என்றாலும்  எம்  ஜி ஆர்  ரசிகர்களைத்திருப்திப்படுத்தியதாம்

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாட்டின்  மன்னனுக்கு  நாட்டில்  என்ன  நடக்கின்றது  என்பதே  சரியாகத்தெரியவில்லை ,  அமைச்சர்கள் , தளபதி  எல்லோரும் சேர்ந்து  மன்னரின்  கண்களுக்கு  கடிவாளம்  இட்டு  விடுகின்றனர் .  தொட்டதுக்கெல்லாம்  வரி , தொடாமல்  இருந்தாலும்  வரி  என  தாளிப்பதால்  மக்கள்  கொந்தளித்துப்போய்  இருக்கின்றனர் . அப்படி கொந்தளித்த  ஒரு  போராட்டக்குழுவின்  தலைவன்  மன்னரைக்கொன்று  விட்டால்  ஆட்சி  அகலும்  என  கொலை  முயற்சியில்  ஈடுபடுகின்றான். கைது  செய்யப்பட்டு  மன்னர்  முன்  நிறுத்தப்படுகிறான்.


 அப்போது  புரட்சி  இளைஞன்  நாட்டின்  நிலைமையை  மன்னனுக்கு  எடுத்துக்கூற  மன்னன் மனம்  மாறி மக்களின்  நாடித்துடிப்பை  உணர்ந்த  நீயே  இனி  தலைவன் மன்னன்.  இது  அரச  கட்டளை , நான்  நாடாளத்தகுதி  இல்லாதவன், எனக்கான  த்ண்டனையை  நானே  கொடுத்துக்கொள்கிறேன்  என  தற்கொலை  செய்து  கொள்கிறான். சாகும் முன்  தன்  ஒரே மகளை  இனி இவள்  உனக்கு  தங்கை  என  கூறி  இறந்து  விடுகிறார்


  கடும்  எதிர்ப்புகளுக்கு  இடையே  புரட்சி  இளைஞன்  ஆட்சிப்பொறுப்புக்கு  வருகிறான். பக்கத்து நாட்டில் இந்நாட்டு  இளவரசியின்  முறை  மாமன்  இருக்கிறான். அவன்  ஓலை  அனுப்புகிறான். எனக்குத்தான்  இளவரசியும் நாடும்  சொந்தம், சம்பந்தம்  பேச  வரலாமா? என்பதுதான்  ஓலையில்  எழுதப்பட்ட  சாராம்சம்


 ஆனால்    அமைச்சர்  சதியால்  அந்த   ஓலை  திருத்தி  எழுதப்படுகிறது. இளவரசியை  சிறைப்பிடிக்க  போர். படைகளுடன் வருகிறேன்  என  அவன்  எழுதியதாகபொய்யாக  ஓலை  ரெடி  பண்றாங்க 


  நாயகன்  அதாவது  புரட்சி  இளைஞன்  இளவரசியின்  விருப்பத்தைக்கேட்க  முறைமாமனைக்கட்டிக்க  சம்மதம்  என்கிறாள், அப்போ நானே  தனியாளாய்  அங்கே  போய்  எதிர்கொள்கிறேன்,  சுமூகமாகப்பேசுகிறேன்  என  கிளம்புகிறான்


மன்னனான  நாயகன் அந்த  நாட்டுக்கு  போய்  சம்பந்தம்  பேசி  வந்தால் நம்  பாடு  திண்டாட்டம்  ஆகி  விடும்  என சதிகாரரான  அமைச்சர் படைகளை  அனுப்பி  முறைமாமனை  சிறைப்பிடிக்கின்றனர் 


 குழபத்தை  ஏற்படுத்தி  தான்  மன்னன்  ஆக  வேண்டும்  என்பதே  அமைச்சரின்  விருப்பம்,  ஆனால்  மக்களாட்சியை  அமைக்க  வேண்டும்  என்பதே  மன்னனான  நாயகனின்  விருப்பம்,  அவரது  நோக்கத்தை  தோற்கடிக்க  சதித்திட்டம்  தீட்டப்படுகிறது 


இந்த  சதித்திட்டத்தை   நாயகன்  எப்படி  முறியடிக்கிறார்  என்பதே  திரைக்கதை 

நாயகனாக  எம் ஜி ஆர். கதை  ஆரம்பித்த  முதல்  10  நிமிடத்துலயே  சாதா  பொது  ஜனமா  இருந்தவர்  நாட்டின்  மன்னன்  ஆகும்  காட்சி  நம்ப  முடியல .  ஆனா  முதல்வன்  படத்தின்  கரு  இதுல  இருந்து  கூட  எடுக்கப்பட்டிருக்கலாம்.  மற்றபடி  எம் ஜி ஆர்  நடிப்பு , சுறு சுறுப்பு  பற்றி  சொல்லவே  வேண்டியதில்லை . அசால்ட்டா  பண்ணி  இருக்கார் \\\


இவருக்கு  ஜோடியாக   ஜெ.  பேருக்குத்தான்  ஜோடி , ஆனா  ஹீரோ  கூட  அதிக  காம்போ  காட்சிகள்  இல்லை . கதைக்கு  சம்பந்தமே  இல்லாம நாகேஷ்  காமெடி  டிராக்கில்  இவரும்  ஜாயின்  பண்ணிக்கிறார். அது  ஒரு   அரை மணி  நேரம்  ஓடுது /. மெயின்  கதைக்கும்  காமெடி  டிராக்குக்கும்  சம்பந்தம்  இல்லை . நாயகன்  ஒரு  பக்கம்  இருக்கிறார் , நாயகி  பாட்டுக்கு  வேற  ஒரு  பக்கம்  சுத்திட்டு  இருக்கார் 


ஆர்  எஸ்  ,  மனோகர்  தான்  அமைச்சர்  கம்  வில்லன் . கச்சிதமான  நடிப்பு .  எம் என்  நம்பியார்  இன்னொரு  வில்லன் .   இவரும்  கலக்கி  இருக்கிறார்


இளவரசியாக  சரோஜாதேவி .  வில்லவனாக  அசோகன் . அசோகனை  இதுல  நல்லவனா  பார்க்க  முடியுது 


பி எஸ்  வீரப்பா  கெஸ்ட்  அப்பியரன்ஸ் 


கே  வி  மகாதேவன்  இசைல  ஏழு  பாட்டுக்கள் 


1  எத்தனை  காலம் கனவுகள்  கண்டேன், காண்பதற்கு உன்னை  காண்பதற்கு 

2  வேட்டையாடு  விளையாடு  விருப்பம்  போல  உறவாடு 

3  புத்தம்  புதிய  புத்தகமே  உன்னைப்புரட்டிப்பார்க்கும்  புலவன்  நான் 

4  என்னைப்பாட  வைத்தவன்  ஒருவன்

5  ஆடி  வா  ஆடி  வா  ஆடப்பிறந்தவளே  ஆடி  வா 

6  முகத்தைப்பார்த்ததில்லை  , அன்பு  மொழியைக்கேட்டதில்லை 

7  பண்  பாடும் பறவையே  என்ன  தூக்கம் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    முறைப்பெண்னை  பெண்  கேட்டு  வர  எதுக்கு  ஓலை  அனுப்பனும்?  சொந்தம்  தானே?  முறைப்படி  சொந்தக்காரங்களோட  வர  வேண்டியதுதானே?   அறிமுகம்  இல்லாத  தேசத்து  இளவரசர்  எனில்   ஓலை  அனுப்பி  தகவல்  தரலாம்


2   நாயகன்  மன்னன்  ஆகி  ஒரு  மாசமோ  கொஞ்ச  நாட்களோ  ஆகி  இருந்தால்  எல்லாம்  அரண்மனையில் செட்  ஆகி  அவர்  கட்டுப்பாட்டில்  எல்லாம்  வரும்  அதற்குப்பின்  வெளில  போவது  ஓக்கே , மன்னன்  ஆன  அடுத்த  நாளே  அவர்  தனியாகக்கிளம்புவது  எந்த  நம்பிக்கையின்  அடிப்படையில் ? 


3  மன்னர்  நாயகனை  மன்னராக  நியமிப்பது  ஓக்கே  அவரின்  தற்கொலை  ஓவர்  டிராமாவா  தோணுது .  கல்யாண  வயதில்  மகள்  இருக்கும்போது  ஒரு  மன்னனாகிய  தந்தை  குற்ற  உணர்ச்சியில்  தற்கொலை  செய்வது  எல்லாம்  வாய்ப்பே  இல்லை . இப்படி  பொறுப்பே  இல்லாம  தற்கொலை  பண்ணிக்கிட்டமேனு  அவரோட  ஆவிதான்   இன்னொரு  வாட்டி  குற்ற  உணர்ச்சியில்  தற்கொலை  பண்ணிக்கனும் 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - படம்  லைட்டா  போர்  அடிச்சாலும்   பாடல்கள்  எம்  ஜி ஆர்  நடிப்பு  காப்பாத்துது. நாகேஷ்  காமெடி  டிராக்  எடுபடலை ,  ஜெ  வின்  கிளாமர்  காட்சிகள்  இதில் தூக்கல்  ரேட்டிங்  2. 25 /. 5

Arasa Kattalai
Arasa Kattalai poster.jpg
Theatrical release poster
Directed byM. G. Chakrapani
Screenplay byR. M. Veerappan
Ve. Lakshmanan
S. K. T. Samy
Produced byM. C. Ramamoorthy
StarringM. G. Ramachandran
B. Saroja Devi
CinematographyA. Shanmugam
Edited byK. Narayanan
Music byK. V. Mahadevan
Production
company
Sathyaraja Pictures
Release date
  • 19 May 1967
Running time
132 minutes
CountryIndia
LanguageTamil