Saturday, November 12, 2022

APPAN-அப்பன்(2022)( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) @ சோனி லைவ்


இருக்கும் வரை உன்னால்  முடிந்த  அளவு  யாருக்காவது  உதவி  செய்து  கொண்டு  இரு  என்பதுதான்  பெரியோர்களின்  உபதேசம்.  என்  அப்பா  அடிக்கடி  என்னிடம்  சொல்வது  நீ  யாருக்காவது  உதவி  செய்யாவிடினும்  ஒருவருக்குக்கூட  உபத்திரவமாக  இருந்து  விடாதே  என்பதுதான். ஆனால்  ஊரில்  உள்ள  அனைவருக்கும்  , தன்  குடும்பத்தினருக்கும்  உபத்திரவமாக  இருந்த  ஒரு  ஆளின்  இறுத்க்கால   சம்பவங்கள்  தான்  இந்தப்படத்தின்  கதை 

  

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  திமிர்  பிடித்த  ஆள்/  சக  உயிர்களை  நேசிக்காவிட்டாலும்  பரவாயில்லை  தன்  குடும்பத்து  ஆட்களிடம்  கூட  பாசமே  இல்லாத  ஆள் .  சின்ன  வயசில் அதாவது  மைனரா  இருந்த  காலத்தில்  இவரது  சேட்டைகள்   எண்ணிலடங்கா. 

ஊரில்  உள்ள  பல  பெண்களின்  வாழ்க்கையில்  விளையாடிய  பெண்  பித்தன். அப்படிப்பட்ட  ஆள் தனது  மகன் , மகள்  அனைவருக்கும்  திருமணம்  செய்து  வைத்த  பின்  வயோதிக  நிலையில்  படுத்த  ப்டுக்கை  ஆகிறான். இடுப்புக்குக்கீழே  எந்த  உறுப்புகளும்  செயல்படவில்லை . பக்கவாதம்  போல  ஆகி  விடுகிறது . இந்த  நிலையிலும்  குடும்பத்தினரை  அவன்  டார்ச்ச்ர்  செய்வது  குறையவே  இல்லை 


அவன் இறந்தது  போல  கனவு  கண்ட  அவன் மனைவி  அதை  நினைத்து  ச்ந்தோஷப்படுகிறாள் .அப்பா  இப்போ  இறப்பாரா? நாளை  இறப்பாரா? என  எதிரபார்த்துக்காத்திருக்கும்  மகன் . சொத்து  கிடைச்சா  போதும்  சீக்கிரம்  போய்ச்சேரட்டும்  என  நினைக்கும்  மகள் . 


  நீங்க  கண்டுக்காம  இருங்க, காரியத்தைக்கச்சிதமா  நாங்க  முடிச்சிடறோம்  என  கொலை  செய்ய  சதித்திட்டம்  தீட்டும்   கிராமத்து  மக்கள் 


 இப்படி  பலரும்  நாயகனின்  இறப்புக்கு  காத்திருக்க  ஒரு  திடிர்  திருப்பம் .  இடுப்புக்குக்கீழே  செயல்படாமல்  இருந்த  அவனது  உடல்  பாகங்கள்    மெல்ல  செயல்படத்தொடங்குகிறது 


நாயகனின்  வீட்டுக்குப்ப்க்கத்தில்தான்  நாயகனின்  சின்ன  வீடு  இருக்கிறது . தன்  ஆசை  நாயகியை  என்  அறைக்கு  அழைத்து  வந்தால்  தான்  என்  சொத்துக்கள்  உங்களுக்கு  என  கண்டிசன்  போடுகிறான்  நாயகன் 

இதற்குப்பின்  இந்தக்க்தையில்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  திரைக்கதை 

நாயகனாக., கொடுமைக்கார  அப்பாவாக அலன்சியர்  லே  ;லாப்ஸ்  அந்த  கதாபாத்திரமாகவே  வாழ்ந்த்ருக்கிறார் , பிரமாதமான  நடிப்பு .  பாசமுள்ள  அப்பாவாக  சிவாஜி ,  ராஜ்கிரண் , ரகுவரன் ,என  பல  நடிகர்களின்  நடிப்பை  வியந்த  நமக்கு  இந்த  கொடுமைக்கார  அப்பா  கேரக்டர்  புதுசு . அதனால்  மனதில்  சுலபமாகத்தங்கி  விடுகிறது  இந்த  கேரக்டர். ஆனால்  அதை  கச்சிதமாக  செய்து  முடிப்பது  அத்தனை  சுலப்மானதல்ல . 


அவரது  மனைவியாக  வரும்  பாலி  வல்சன் மனோரமா, சுஜாதா , சரண்யா  பொன்வண்ணன்   போல  அற்புதமான  நடிகை . கலக்கலாக  நடித்திருக்கிறார் 


மகனாக  சன்னி  வைன், தானே  அப்பாவைக்கொல்ல  துணியும்போதும்  சரி  , கிராமத்தார்  கொலை  செய்ய  வரும்போது  தடுக்கும்போதும்  சரி  கச்சிதமாக  நடித்திருக்கிறார்


மருமகளாக  வரும்  நாடோடிக்ள்  புகழ்  அனன்யா   கவனிக்க  வைக்கும்  நடிப்பு 

  சீரியசாகப்போகும் கதையில்  இன்னொரு  மகளாக  வரும்  கிரேஸ்  ஆண்ட்டனி  கலகலப்பாக  கொண்டு  போக  உதவுகிறார்


  சொத்து  நம்ம  கைக்கு  கிடைக்கனுமே  என  அவர்  ராத்திரியோட  ராத்திரியா  தன்  கணவனுக்கு  ஃபோன்  போட்டு  வர  வைப்பது  கலக்கல்  காமெடி 


நாயகனின் ஆசை  நாயகியாக   ஷீலாவாக   ராதிகா  ராதாகிருஷ்ணன்  ( சித்தி ராதிகா அல்ல)  மாறுபட்ட  நடிப்பு, க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  அவருக்குப்பெரும்  பங்கு உண்டு 


ஒரு  காலத்தில்  தமிழக  அர்சியலில்  படுத்துக்கொண்டே  ஜெயித்தவர்  என்ற  பெருமையை   எம் ஜி யார்  பெற்றார். அதுபோல  பட்ம்  முழுக்க  படுத்துக்கொண்டே  இயங்காமல்  கிடக்கும்  நாயகன்  சிறந்த  திரைக்கதை  மற்றும்  அனைவரின்  அம்சமான  நடிப்பின்  மூலம்   ஜெயித்திருக்கிறார்கள் 


பப்புவின்  ஒளிப்பதிவு   கனகச்சிதம் ,கிரன் தாஸ்   எடிட்டிங்  பக்காவாக  ரெண்டு  மணி  நேர  படமாக  தந்திருக்கிறார், டான்  வின்செண்ட்டில்  இசை  படத்துக்கு  கூடுதல்  பலம்   ஆர்  ஜெயக்குமாருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கும்   இயக்குநர்  மஜூ  வுக்கு  இது  முதல்  ப்டமாம்  நம்ப  முடிவில்லை. மாறுபட்ட்  ஒரு   ஃபேமிலி  மெலோ  டிராமா 

சபாஷ்  டைரக்டர்


1    கதைக்கள்ம்  இந்திய  மொழ்ப்படங்களுக்கே  ரொம்பப்புதுசு. ஒரு  கொடூரமான  அப்பா  கேரக்டரை  மையப்படுத்தி  இதுவரை  எந்தக்கதையும்  வந்ததில்லை 


2  நாயகனைக்கொலை  செய்யப்போவது  யார்  என்பதை  கடைசி  வரை  யூகிக்க  முடியவில்லை . நல்லதொரு  திருப்பம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மலையில்  வசிப்பவர்களுக்கு  ஆயுள்  அதிகம்


2    சொத்து  ஒரு  மனுசனை  எப்படி  எல்லாம்  அலைய  வைக்குது ?


3  ஊர்ல  யாரெல்லாம்  என்  பசங்கனு  எனக்கே  சரியாத்தெரியல  , அவ்ளோ  குறும்பு   ப்ண்ணி  இருக்கேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  உடல்  நிலை  சரி  இல்லாத  ஒரு  வயோதிகரைக்கொலை  செயவது  மிக  சுலபம் .  ஆனா  மாந்தரீகம் , மந்திரவாதி  என  அலைவது  காமெடி. நல்லா  ஆரோக்யமா  இருக்கறவங்களைக்கொலை  பண்ணத்தான்  பில்லி  சூனியம்  வைப்பாங்க 


2   மனைவி  , மகன் ,  சின்ன  வீடு  , மக்ள்  என  அனைவரும்  பாசம்  காட்டினாலும்  வயோதிகத்தில்  முடியாமல்  இருக்கும்  ஒரு  ஆள்  இவ்ளோ  திமிர்  செய்ய  முடியுமா? மனோ ரீதியாக  ஒரு  பயம்  வந்துடாது ? அவர்  எப்படி  தெனாவெட்டாக  இருக்கிறார்? பொத்வா  வயோதிகம்  வந்துட்டாலே   ஒரு  மரண பயம்  வருமே? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  கமர்ஷியல்  அயிட்டங்கள்  இல்லாத  மாறுபட்ட  கதைக்கள்ம்  கொண்ட  படம், அனைவருக்கும்  பிடிக்காது , உலகப்படங்கள் , மலையாளப்படங்கள்  பார்த்துப்பழக்க்ம்  உள்ளவர்கள்  மட்டும்  பார்க்கலாம்,  அடல்ட்  கண்டெண்ட்  எதுவும் இல்லை , ஆனா   வசனங்கள்  சில   கொடூரமா  இருக்கும், ஃபே,ம்லியோட  பார்ப்பதைத்தவிர்க்கவும்   ரேட்டிங்  2.75 / 5 


Appan
Appan.jpeg
Official Film Poster
Directed byMaju
Written byMaju
R Jayakumar
Produced byJosekutty Madathil
Ranjith Manambarakkat
StarringSunny Wayne
Ananya
Alencier Ley Lopez
Grace Antony
Pauly Valsan
CinematographyPappu
Edited byKiran Das
Music byDawn Vincent
Production
company
Tiny Hands Productions
Distributed bySonyLIV
Release date
28 October 2022
Running time
129 minutes
CountryIndia
LanguageMalayalam