அருண் விஜய் திறமை இருந்தும் அதிர்ஷ்டம் கூடி வராத ஒரு நல்ல நடிகர் . பாண்டவர் பூமி அவர் நடித்த நல்ல படங்களில் ஒன்று . தடம் நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் நடித்த மாறுபட்ட த்ரில்லர் மூவி . தடையறத்தாக்க , குற்றம் 23 போன்ற வித்தியாசமான வெற்றிப் படங்கள் நடித்தும் அவருக்கான பிரேக் இன்னும் கிடைக்காமல் போனது வருத்தமே அவர் சினிமா உலகத்தில் அடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகின்றன என்பது ஆச்சரியமான விஷயம்தான்,
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் . நாயகி ஒரு லேப் டெக்னீஷியன் . ஆதரவற்ற நோயாளிகளுக்கு ரத்த தானம் அளிக்க வைப்பதில் முனைப்பு காட்டி தொண்டு செய்து வ்ருபவர். நாயகிக்குத்தெரிந்த நபருக்கு ரத்த தானம் வழங்குவது மூலம் நாயகன் - நாயகி அறிமுகம் உண்டாகிறது. நாள்டைவில் இது காதல் ஆகிறது
நாயகியின் அப்பா காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை . நாயகன் - நாயகி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர் .இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை . 5 வருடங்கள் கழித்து நாயகியின் அப்பாவிடம் இருந்து அம்மா மூலம் அழைப்பு வருகிறது ., நாயகியின் தங்கைக்கு திருமணம் நிச்சயம். அந்த நிகழ்வுக்கு அழைக்கிறார்கள்
நாயகி அம்மா வீட்டுக்குப்போறா. நாயகன் ட்யூட்டியில் பிசி என்பதால் போகவில்லை . விழா முடிந்து திரும்பும்போது நாயகி கொலை செய்யப்படுகிறாள்
நாயகன் அந்த கொலை கேசை துப்பு துலக்கி குற்றவாளி யார் என்பதைக்கண்டு பிடிப்பதே மிச்ச மீதிக்கதை
மொத்தப்படமே ஒரு மணி நேரம் 50 நிமிட்ங்கள் தான்
நாயகனாக அருண் விஜய் . இதில் மீசை இல்லாமல் நடித்திருக்கிறார். மீசை இல்லாம கெட்டப் போட்டு நடிக்கும்போது முகத்தில் கோப உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தி விட முடியும் என நாயகன் பட ரிலீஸ் டைமில் கலை வித்தகன் கமல் பேட்டி அளித்திருந்தார் ( ஆனால் நாயகனை விட சத்யா மீசை தாடி கெட்டப்ல தான் கமலின் அதீத கோபம் வெளிப்பட்டது )
மீசை இல்லாத அருண் விஜய் நம்ம மைண்ட்டுக்கு செட் ஆக கொஞ்ச நேரம் பிடிக்கிற்து , ரொமாண்டிக் காட்சிகளில் கூட முகத்தை விறைப்பாகத்தான் வைத்திருக்கிறார் . ரெஃப்ரன்ஸ்க்கு வால்டர் வெற்றி வேல் படம் பார்த்திருப்பார் போல
நாயகியாக பாலக் லால் வாணி . ஹிந்தில லால் என்றால் சிவப்பு என அர்த்தம், குழந்தை சிவப்பாப்பிறந்ததால் பாலக் லால் வா நீ அப்டினு வெச்சுட்டாங்க போல . அழகு , நிறம் இரண்டிலும் பூரணத்துவம் பெற்ற நடிகை நடிப்பிலும் கச்சிதமாக இருக்கிறார் . கதைக்குத்தேவைப்படாத காட்சிகளிலும் கிளாமராக வருகிறார்.
போலீஸ் எ ட்டய்யாவாக காளி கச்சிதமான நடிப்பு
நாயகியின் அம்மா, அப்பாவாக வருபவ்ர்கள் நடிப்பு கனகச்சிதம்., நாயகியின் தங்கை அழகு முகம் . ஒல்லியான உடல் வாகு கவனிக்க வைக்கிறார்
இர்வுக்காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு சவாலான பணி தான் ஷபீரின் இசை ஓக்கே ரகம், பின்னணி இசையில் நல்ல வேகம்
சபாஷ் டைரக்டர் ( ஜி என் குமரவேலன்)
1 ஓப்பனிங் சீன்ல நாயகி தன் குழந்தைக்கு ஒரு கதை சொல்றா. இது என்னடா சம்ப்ந்தம் இல்லாம போகுதுனு நினைக்கறோம், கிட்நாப் செய்யப்படுவதற்கு முன் ஃபோனில் நாயகி குழந்தைக்கு ஃபோன்ல கதை சொல்லும்போது அந்த ஆட்டோல இருக்கற பொருட்களை வைத்து துப்பு சொல்லும் காட்சியும் நாயகன் அதை கரெக்டா கண்டுபிடிப்பதும் சபாஷ் ஐடியா
2 தனா வின் அம்மாவாக நடித்த பெண்ணின் நடிப்பு அபாரம். ஒரே ஒரு சீன் தான் வர்றாங்க , கவனிக்க வைக்கும் பர்ஃபார்மென்ஸ்
3 பின் பாதியில் வரும் இன்வெஸ்டிகேஷன் சீன்கள் கச்சிதமான பேப்பர் ஒர்க்
ரசித்த வசனங்கள்
1 சாதாரணமா பழகறவங்க கிட்டேக்கூட குலம் , கோத்திரம் பார்த்துப்பழகறவர்தான் என் அப்பா
உலகத்துல எந்த உயிருக்கும் தீங்கு நேரக்கூடாதுனு நினைக்கற கேரக்டர் நீ, சரியா?
2 அப்பா, நீங்க பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சிருந்தாக்கூட இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்காது , என் சந்தோஷம்தான் உங்க சந்தோஷம்னு சொல்லுவீங்களே? நான் இப்போ சந்தோஷமாத்தான் இருக்கேன்
ஆனா நான் சந்தோஷமா இல்லையே?
3 எனக்கு மட்டுமல்ல , எல்லாருக்கும் கோபம் வரனும். அப்போதான் தப்பு நடக்காம பார்த்துக்க முடியும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அஞ்சு வருசங்கள் வரை தாத்தா , பாட்டியை நேரில் பார்த்திராத ஒரு பெண் குழந்தை முதன் முதலா அபோதான் பார்க்குது . அன்னைக்கே அம்மா அப்பாவை விட்டுட்டு 2 நாட்கள் அவங்க கூட த்ங்க ஒத்துக்குது , அது எப்படி ?
2 போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான ஹீரோ ஒரு ஃபைட் சீன்ல அடியாளை காலி பிளாஸ்டிக் குடத்தால அடிக்கறாரு தலைல , அவன் அப்படியே துடிதுடிச்சு உக்காந்துடறான். தண்ணிக்குடமா இருந்தாக்கூட வலிக்கும், காலி பிளாஸ்டிக் குடத்தால அடிச்சா குடம் தான் உடையும் வலிக்காது
3 நாயகி நாயகனுக்கு ஃபோன் பண்ணி 2 மணி நேரமா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லனும்னு ட்ரை பண்ணிட்டே இருந்தேன் , லைனே கிடைக்கலைனு சொல்லுது . வாட்சப்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாமே? ஆண்ட்ராய்டு ஃபோந்தான் வெச்சிருக்காங்க
3 ஒரு சப் இன்ஸ்பெக்டரோட மனைவி ஷேர் ஆட்டோல பிரயாணிப்பாங்களா? ஒரு சீன்ல அவரு ஆட்டோல போய் இருப்பாரா? ஷேர் ஆட்டோவா?னு டிஸ்கஷன் நடக்குது
4 நைட் 10 மணிக்கு மேல நார்மல் ஆட்டோ அதிகமா ஓடுமா? ஷேர் ஆட்டோ அதிகமா ஓடுமா?னு ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர்ட்ட விசாரிக்கிறார். ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு இந்த விஷயம் ஆல்ரெடி தெரிஞ்சிருக்காதா?
5 ஹீரோ போலீஸ் வேலைல சஸ்பெண்ட் ஆகிடறாரு. ஆனா ட்யூட்டில இல்லாத அவர் கூட ட்யூட்டில இருக்கற போலீஸ் ஏட்டய்யா எப்பவும் அவர் கூடவே இருக்காரே? டிபார்ட்மெண்ட்ல கண்டுக்க மாட்டாங்களா?
6 ஏரிக்கரைல ஒரு புருசன் பொண்டாட்டி பொணம் கிட்க்குதுனு லாரி டிரைவர் சொல்றான். அது தம்பதிகள்தான்னு எதை வெச்சு சொல்றான்?> ஒரு ஆணும், பெண்ணும் டெட் பாடியா கிடக்கறாங்க என்ற டயலாக் தானே சரி?
7 இன்வெஸ்டிகேஷன் செய்யும் எல்லாக்காட்சிகளிலும் நாயகன் போலீஸ் ஏட்டய்யாவுடன் தான் சுத்திட்டு இருக்கார் . கரெக்டா ஃபைட் சீன் வரும்போது தனியாக வருவது ஏன்?
8 ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் நாயகி நான் ஒரு போலீஸ் ஆஃபீசர் மனைவி என்ப்தை சொல்லி இருக்கலாம், விடறாங்களோ இல்லையோ ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கலாம்
9 பொதுவா ஆட்டோ பிடிக்கும் பெண்கள் அவங்களா ஒரு ஆட்டோவை தான் தேர்ந்தெடுப்பாங்க , ஏம்மா, ஆட்டோ வேணுமா>? என அழைக்கும் ஆட்டோவை தேர்ந்தெடுக்க மாட்டாங்க . காலியாக இருக்கும் ஷேர் ஆட்டோவில் ஆட்டோ டிரைவர்கள் இருவர் மட்டும் இருக்கும் ஆட்டோவில் ஏன் நாயகி ஏறுகிறார்?
10 இப்பவெல்லாம் ஓலா , ரெட் டாக்சி செம பிரபலம் அதை புக் பண்ணாம ஷேர் ஆட்டோவில் ஒரு போலீஸ் ஆஃபிசர் மனைவி ஏன் வரனும் ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சராசரியான ஒரு பழிவாங்கும் கதைதான் , சுமாராதான் இருக்கு , பார்க்கறவங்க பார்க்கலாம் ரேட்டிங் 2 / 5 . இந்தப்படம் 2019ல் பூஜை போட்டு 2020ல் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சுது, ஏனோ லேட்டாக ரிலீஸ் ஆகி இருக்கிறது
Sinam | |
---|---|
Directed by | G. N. R. Kumaravelan |
Written by | R. Saravanan |
Produced by | R. Vijayakumar |
Starring | Arun Vijay Pallak Lalwani |
Cinematography | S. Gopinath |
Edited by | Raja Mohammad |
Music by | Shabir |
Production company | Movie Slides Pvt Ltd |
Release date |
|
Running time | 114 minutes |
Country | India |
Language | Tamil |