Sunday, November 06, 2022

பாக்தாத் திருடன் (1960) (தமிழ்) - சினிமா விமர்சனம் (கமர்ஷியல் மசாலா)

 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாட்டின்  துணைத்தளபதிதான்  வில்லன். மன்னனையும், ராணியையும்  வஞ்சித்துக்கொலை  பண்ணிடறான். ஒரு  நாட்டின்  ராஜா, ராணியையே  கொலை  செய்யும்  பராக்கிரமம்  கொண்டவன்  இளவரசனான  குட்டிக்குழந்தையைக்கொல்ல  முடியாதா?  இப்படி  எல்லாம்  லாஜிக்  மிஸ்டேக்  பார்த்தா  அரச  கதையே  பார்க்க  முடியாது . அதனால  குழந்தை  அரண்மனையில்  உள்ள  ராஜ  விசுவசிகளால் தப்ப  வைக்கப்படுகிறது. அந்தக்குழந்தை  திருடர்  கூட்டத்துல  வளர்கிறது, ஒரு  அரசியல்வாதியின்  மகன்  தகுதி  இருக்கோ  இல்லையோ  அடுத்த  அரசியல்  வாரிசாக  ஆவது  போல  திருடனின்  வளர்ப்பு  மகன்  திருடனாக  ஆகிறான் 



 பணக்காரர்களிடமிருந்து  கொள்ளை  அடித்து  ஏழைகளுக்குக்கொடுக்கும்    நல்ல  திருட்ன்  அவன்  நாட்டில்  போலி  அரசனுக்கும், போலி  அரசிக்கும்  ஒரு  பெண்  குழந்தை .


நாயகன்  தான்  அந்தத்திருடன். போலி  இளவரசியான  பெண்  நாயகன்  மீது  ஆசைபப்டுகிறாள்.. ஆனால்  அடிமைப்பெண்ணான   நாயகியை  நாயகன்  காதலிக்கிறான்


நாட்டில்  இருக்கும்  நீர்  நிலைகளில்  விஷத்தைக்கலந்து  விட்டால்  பொதுமக்கள்  நல்ல  தண்ணீருக்கு  அரண்மனைக்குத்தான்  வர  வேண்டும்.  அப்போ  குடிநீரை  காசுக்கு  விற்று  சம்பாதிக்கலாம்  என  போலி  மன்னன்  நினைக்கிறான். அந்த  விஷத்தை  முறியடிக்கும்  மருந்து  பற்றிய  ரகசியம்   போலி  இளவரசிக்குத்தெரியும்.


  அவருக்கு மட்டுமே தெரிந்த  அந்த  ரகசியத்தை  அறிய  நாயகன்  அவளைக்காதலிப்பது  போல  நடித்து    மருந்தைப்பெற்று  மக்களைக்காப்பாற்றுகிறான்


திருடர்  கூட்ட்த்தலைவனான  நாயகன்   கொடுங்கோல்  ஆட்சியை  அகற்றும்  வரை  கூட்டத்தில்  யாரும்  காதலிக்கவும்  கூடாது , திருமணம்  செய்யவும்  கூடாது  என்ற  நிபந்தனை  விதித்திருந்தான். ஆனால்  சந்தர்ப்ப  சூழ்நிலை  காரணமாக  அவனே  அந்த  விதியை  மீற  வேண்டிய  கட்டாயம், ஆனால்  கூட்டத்தினர்  அதற்கு  எதிர்ப்பு  தெரிவிக்கின்றனர்


 நாயகன், நாயகி  திரும்ண  நட்ந்ததா?  போலி  இளவரசி  நாயகனைப்பழி  வாங்கினாரா? 2நாட்டின்  இளவரசர்  தான்  அந்தத்திருடன்  என்பது  எப்படி  மக்களூக்குத்தெரிய  வந்தது  இதை  எல்லாம்  யூ  ட்யூப்ல  கண்டு  மகிழுங்கள் 


நாட்டின்  இளவர்சர்  என்பதை  அறீயாத  திருடர்  தலைவனாக  எம்  ஜி யார். அநாயசாமான  நடிப்பு . ரெடிமேடு  பாத்திரம். இந்தக்கால  மாடர்ன்  மங்கையர்  உடுத்தும்  பட்டியாலா  பேண்ட் , ஃபளாசா  பேண்ட்  எல்லாவற்றையும்  அந்தக்காலத்துலயே  அணிந்தவர்  தான்  எம்  ஜி யார்.  எம்  ஜி  ஆர்  பல  இமேஜ்களை  அந்தக்காலத்தில்  மெயிண்ட்டெயின்  பண்ணிட்டு இருந்தார். அதுல  ரொம்ப  முக்கியமானது  அவர்  ஒரு  படத்தில்  ஒன்றுக்கு  மேற்பட்ட  கதாநாயகியோடு  டூயட்  பாட  நேர்ந்தால்  அந்தப்பாட்டு  நாயகியின்  கனவில்  வரும், இவர்  கனவில்  வராது . பாட்டு  முடிஞ்சதும்  நினைவுலகில்  தங்கச்சி  அப்டின்னு  எஸ்கேப்  ஆகிடுவார் 


வாள்  சண்டை  போடும்போது  முகத்தில்  சிரிப்பைத்தாங்கி  நடித்த  ஒரே  தமிழ்  சினிமா  ஹீரோ  எம்  ஜி ஆர்  தான் . அவர்  ஃபைட்  போடுவது  போலவே  இருக்காது . சும்மா  விளையாட்டுக்காட்ற  மாதிரிதான்  இருக்கும், அட்டக்கத்தி  வீரர்  என  எதிரிகள்  அவரை  நக்கல்  அடித்தாலும்  வாள்  சண்டையில்  அவர்து  நிஜ  வீரத்தை  அறிய   சண்டைக்காட்சிகளில்  எம்  ஜி  யாரின்  வீரம் என்ற  தொடர்  ஜி  அசோகனின்  பாக்கெட்  நாவல்  இதழில்  வந்தது அதைப்படித்தால்  தெரியும்

அடிமைப்பெண்  ஜெரீனாவாக  வைஜெயந்திமாலா , என்ன  ஒரு  அழகான  , கண்ணிய்மான  தோற்றம் ? காதல்  காட்சிகளில் , சோகக்காட்சிகளில்  ஜொலிக்கிறார்


 போலி  அரசனாக  டி எஸ்  பாலையா  வில்லத்தனம்  மிக்க  நடிப்பு , போலி  அரசியாக  சந்தியா , அதிக  வாய்ப்பில்லை . இளவரசி  சுபேராக  எம் என்  ராஜம்  என்னைக்கவர  வில்லை . வில்லி  போன்ற  முகம் , இவர்  முகத்தை  எனக்கே  பிடிக்கலை , எம்  ஜி ஆருக்கு  எப்படிப்பிடிக்கும் ? 


துணை  தளபதியாக  அசோகன்  வில்லனாக  வந்தாலும்  அதிக  வாய்ப்பில்லை


 போலி  இளவர்சனாக  வரும்  எம்  என்  நம்பியார்தான்  மெயின்  வில்லன் . படத்தில்  3  வில்லன்கள்  இருந்தாலும்  இவர்  தான்  ஸ்கோர்  செய்கிறார்


ஒன்பது  பாடல்கள், அதுல  சூப்பர்  ஹிட்  பாட்டு  யாருக்கு  டிமிக்கி கொடுக்கப்பார்க்கிறே? எங்கே  ஓடுற  சொல்லு பாட்டு  கலக்கல்  டான்ஸ் , இசை  ஜி  கோவிந்தராஜூலு  நாயுடு ,  அனைத்துப்பாடல்களையும்  எழுதியவர் கவிஞர்  மருதகாசி . வழக்கமாக  எம்  ஜி  யார்  பட்ங்க்ளில்  ஒரு  தத்துவப்பாட்டும், புத்திமதி  சொல்லும்  பாட்டும்  இடம்  பெறும், ஆனால்  ஏனோ  இதில்  மிஸ்சிங் 



சபாஷ்  டைரக்டர்  ( டி ஆர்  சுந்தரம்) 


1  சர்தார்  படத்தில்  வரும்  மினரல்  வாட்டர்  விற்பனை  தீம்  இந்தப்படத்தில்  இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் .  2022ம்  ஆண்டுக்கான  கதைககருவுக்கு  1960லயே  அச்சாரம்  போட்டதுக்கு  ஒரு  சபாஷ்


2  விடுத;லைப்புலி  பிரபாகரன்  ரெஃப்ரன்ஸ்  கூட  இருக்கு .  கூட்டத்தின்  தலைவன்  போட்ட  சட்டம்தான்  கூட்டத்தில்  இருக்கும்  யாரும்  வெற்றி  கிடைக்கும் வரை  காதலோ  கல்யாணமோ  செய்யக்கூடாது , ஆனா  தலைவ்னே  அந்த   விதியை  மிறிவிடுவான்


3  மோகன்லால்  நடித்த  அங்கிள் பன்  படத்தில்  அவர்  போடும்  குண்டான  கெட்டப்  இந்தப்படத்தில்  ஹீரோ  போடும்  மாறுவேடத்தில்  இருந்துதான்  எடுக்கப்பட்டிருக்க  வேண்டும் , அதே  போல்  தாயகம்  ப்ட்த்தில்  வில்லன்  மன்சூர்  அலிகான்  போடும்  கழுகுமூக்கு  கெட்டப்பும்  இதில்  ஹீரோ  போடும்  ஒரு  கெட்டப்தான் 


4  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  ஒரு  இடத்தில்  கூட  தொய்வு  ஏற்படவில்லை 


  ரசித்த  வசனங்கள் 


1 என்னைப்பின்  தொடர்ந்து    வருவது  நீங்கள்  தானே?


 உன்னைப்பின்  தொட்ரும்படி  செய்தது  நீதானே? 


2   வில்லன் -  இந்த  நாட்டில்  எத்தனையோ  சீர்திருத்தம்  செய்தாகி  விட்டது . தற்கொலை  செய்து  கொள்ள  தனி  இடம்  இனி  நிர்மாணிக்க  வேண்டும் 


3   அநீதியைச்செய்வது  மிருகத்தன்ம்  அதைக்கண்டு  ஒதுங்குவது  கோழைத்தனம்  எதிர்த்து  நிற்பதுதான்  மனிதத்தனம்


 4  நான்  யார்  தெரியுமா? இந்நாட்டு  இளவரசி 


 எல்லாரும்  இந்நாட்டு  மன்னரே!


5  காக்கா  கர்ருன்னுச்சாம் ,கருங்குயில்  போடீன்னுச்சாம்


6  ஆவதும்  பெண்ணாலே  அழிவதும்  பெண்ணாலே

  என  சும்மாவா  சொன்னார்கள் ?


  முழுமையாகத்தெந்ரியாமல்  பேசாதே, நல்லவை ஆவதும்  பெண்ணாலே, கெட்டவை  அழிவதும்  பெண்ணாலே


7  வீட்டை  ஆளும்  பெண்கள் நாட்டை  ஆளும்   தகுதி  உளளவர்கள்தானே?


8    அரசகுமாரியை  நான்  திருமணம்  செய்து  கொள்ள  வேண்டுமானால்  ஒன்று  நான்  அரச  பரம்ப்ரையை  சார்ந்தவனாக  இருக்க  வேண்டும், அல்லது  ம்க்கள்  அதரவைப்பெற்ற  தலைவனாக  இருக்க  வேண்டும் 


  உங்களுக்கா  மக்கள்  ஆதரவு  இல்லை ? (  உள்  குத்து  வ்சனம் )


9  நாய்  இல்லாத  ஊரிலே  நரி  ஊளையிட்டு  வந்ததாம்


 ஹா ஹா  


 ஏன்  சிரிக்கிறாய்?


 நாயை பக்க்த்தில்  வைத்துக்கொண்டே  கேட்கிறிர்கள்


10  பாலை  வனத்தில்  பாலைத்தேடுகிறீர்கள்  


11  ஏறிய  நான்  கீழே  இறங்க  மாட்டேன்  (  திருப்பதி  அஜித்  பஞ்ச் = நான்  இறங்கிப்போறவன்  இல்லை  ஏறிப்போறவன்  ரெஃப்ரன்ஸ்)) 


12  உன்னைத்திட்டி  திட்டி  என்  நாக்கு  பாதி  செத்து  விட்டது 


13  ஆட்டைக்கட்ட  வேண்டிய  இடத்தில்  கட்டி  வைத்தால்  புலி  தானே  அங்கே  வரும் 


14  தேடிக்கொண்டிருந்த  சஞ்சீவி  மலை  காலில் தடுக்கியது  போல  நான்  தேடிய  நீங்கள்  என்  கைவசம்  கிடைத்து  விட்டீர்கள் 


15 எட்டாக்கனியக்கிட்டாது  என  விட்டுச்செல்பவள்  நான்  அல்ல  மரத்தை  வெட்டி  வீத்தியாவது  கனிய  அடவேன் 


16  ம்ண்ணில்  கிடந்த  மாணிக்கத்தின்  மேல்  ஒட்டிக்கிடந்த  தூசியைத்துடைப்பது  குற்றம்  ஆகாது .ஆவர்  இந்த  நாட்டின்  இளவரச்ர் , நீ  அடிமைப்பெண் 

பாடல்கள்


1  புல்  புல்  பார்வையிலே  (  ஓப்பனிங்  சாங்)


2  சிரிச்சாப்போதும்  சின்னஞ்சிறு பொண்ணு  திண்டாடச்செய்யும் 


3  கண்ணீரின் வெள்ளம்  இங்கே  ஓடுதய்யா ( அடிமை  விற்கப்படும் இடத்தில்  ஹீரோயின்  சோகப்பாட்டு) 


4  யாருக்கு  டிமிக்கி கொடுக்கப்பார்க்கிறே? எங்கே  ஓடுற  சொல்லு  (  ஹீரோ  மாறுவேடத்தில்  ஹீரோயினை  கலாய்க்கும்  பாடல் ) 


5   வெற்றி  கொள்ளூம்  வாளேந்தி  (  முதல்    டூயட்) 


6  எந்தன்  கதை  இதானா? இருள்  சூழந்த  வாழ்வுதானா? ( நாயகி  சோகப்பாடல் _


6  உண்மை  அன்பின் 


7   பல்லவி  - அழகு  லைலா - சரணம் அறியா  வயசு  அதுவும்  புதுசு அதனால்  தயங்குது  என்  மனசு  




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  விஷம்  கலந்த  தண்ணீரை  சரி  ஆக்கும்  மருந்து  ரகசியத்தை  அறிந்து  கொள்ள  இளவரசியைக்காதலிப்பது  போல்  நடிக்கும்  ஹீரோ  அந்த  ரகசியத்தைப்பெற்றதும்  டக்னு  அந்த   இட்த்தைக்காலி  செய்திருக்கலாமே?  அப்பவே  இது  நடிப்பு  என  ஒப்புதல்  வாக்குமூலம்  ஏன்  தரனும் ? பிறகு  ஒரு    சந்தர்ப்பத்தில்  சொல்லி  இருக்கலாமே?  அவர்  கூக்குரல்  இட்டு  வீரர்க்ளை  அழைப்பார்  என  தெரியாதா? ஏன்  ரிஸ்க்??


2  க்ளைமாக்ஸ்ல  வில்லி  உன்னை  அழித்தே  தீருவேன்  என சவால்  விடும்போது  ஹீரோ  நீ  அழிந்து  விடாதே  என  சொல்லி  விட்டு  செல்ல  முற்படுகிறார். அப்படியே  போய்  இருக்கலாம் ., வில்லி  ஒரு  நிமிடம்  நில்  என்றதும்  எதற்கு  நிற்கிறார்? ஏதோ  ஸ்விட்சை  தட்டி  விட்டதும்  ஹீரோ  பாதாளத்தில்  விழுகிறார்


3  க்ளைமாக்ஸ் ல  வில்லன்  ஒரு  ஆளைப்பிடித்து  அவன்  முகம்  தெரியாத  வாறு  நிற்க  வைத்து  ஹீரோ  குரலை மிமிக்ரி  செய்து  ஏமாற்றும்போது  ஹீரோயின்  முகத்தைக்காட்டு  என  சொல்லி  இருக்கலாமே?  

4  திரைச்சீலைகளைக்கிழித்து அதைக்கோட்டைக்கதவில்  கட்டி  கீழே  இறங்குகிறார்  ஹீரோ  அது  என்ன  ஜக்காடு  பெட்ஷீட்டா?  கிழியாமல்  இருக்க? அவர்  கையால்  கிழிபடும்  திரைச்சீலை  அவரது 75  கிலோ  வெயிட்டைத்தாங்குமா>?



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  எம்  ஜி ஆர்  ரசிகர்கள்  மட்டுமல்ல  ஜனரஞ்சகமான   பொழுது  போக்குப்படம் காண  விரும்பும்  அனைவருமே  பார்க்கலாம், ரேட்டிங்  3 / 5 


  • சில  சுவராஸ்ய  தகவல்கள் (  நன்றி - விக்கிபீடியா)

மேனாள் கோல்டன் ஸ்டூடியோ அதிபர் நாயுடு பாக்தாத் திருடன் படத்துக்கான நிதியைக் கொடுத்தார். எம். ஜி. ஆர். ஒவ்வொரு காட்சிக்கும் புதிதாக 'செட்' போட வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஒரு காட்சிக்கு 'செட்' போட ₹30, 000 செலவாயிற்று. இந்த ரீதியில் படம் எடுத்து முடிய ₹5 லட்சம் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. இதற்கு மேலும் ₹2 லட்சம் செலவிட வேண்டும் என எம். ஜி. ஆர். சொன்னபோது நாயுடுவுக்கு பயம் ஏற்பட்டது. 

எம். ஜி. ஆர். வைஜெயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம் இதுவாகும். படம் எடிட்டிங் செய்யப்பட்ட போது எம். ஜி. ஆர். உடனிருந்தார். "(வைஜெயந்திமாலாவின்) அசைவுகள் சீராக இருந்ததால் எடிட்டிங் செய்வது சுலபமாக இருந்தது" என எம். ஜி. ஆர். குறிப்பிட்டார் என வைஜெயந்திமாலா தெரிவித்தார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த எஸ். என். லட்சுமி ஒரு சந்தர்ப்பத்தில் 'டூப்' போடாமலேயே புலியுடன் மோத வேண்டி ஏற்பட்டது. "இந்தப் படத்தின் கதாநாயகன் நானா அல்லது இந்த இளம் பெண்ணா?" என எம். ஜி. ஆர். வேடிக்கையாகக் கேட்டாராம்.[



SongSingersLength
"Azhagu Laila"A. P. Komala02:28
"Enthan Kathai Idhana"P. Suseela02:51
"Vetri Kollum Vaalendhi"05:24
"Kanneerin Vellam"03:16
"Pothukulunguthey...Sokkudhe Manam"03:30
"Bul Bul Paarvaiyile"K. Jamuna Rani02:12
"Siricha Pothum"Jikki & group02:44
"Unmai Anbin"T. M. Soundararajan & P. Suseela02:18
"Yaarukku Dimikki"T. M. Soundararajan02:34





a




a
Baghdad Thirudan
Baghdad Thirudan poster.jpg
Theatrical release poster
Directed byT. P. Sundaram
Written byA. S. Muthu (dialogues)
Produced byT. P. Sundaram
Harilal Patoviya
StarringM. G. Ramachandran
Vyjayanthimala
CinematographyM. Krishnaswamy
Edited byG. D. Joshi
Music byG. Govindarajulu Naidu
Production
company
Southern Movies
Release date
  • 6 May 1960
CountryIndia
LanguageTamil
a