Thursday, October 27, 2022

10TH CLASS DIARIES (2022) ( தெலுங்கு ) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ அமேசான் பிரைம்

 


காலேஜ்  ரீ யூனியன்  பற்றிய  கதைக்கருவை  வைத்து  தமிழில்  எடுக்கப்பட்ட  முதல்  படம் 1988ல்  ரிலீஸ்  ஆன  பறவைகள்  பலவிதம் ( ராம்கி - நிரோஷா) . 2005ல்   ரிலீஸ்  ஆன  ஒரு  கல்லூரியின்  கதை  ரீ யூனியன்  சப்ஜெக்ட்  இல்லை என்றாலும்  கிட்டத்தட்ட  பழைய நினைவுகளை  மீட்டெடுக்க  கல்லூரிக்குப்போகும்  கதை . 2018ல் ரிலீஸ்  ஆன 96  படம்  தான்  தமிழில்  மெகா  ஹிட்  ஆன  முதல்  ஸ்கூல்  ரீயூனியன்  சப்ஜெக்ட்.  அந்தப்பட  வெற்றிக்குப்பின்  பல  படங்கள்  அதே  கதை  அமைப்பில்  தயார்  ஆகியதாகத்தகவல்கள் 

இந்தக்கதைக்குத்திரைக்கதை  எழுதும்போது ஹீரோயினைத்தேடும் படலம்  ஃபைவ்  ஸ்டார் , 6  மெழுகுவர்த்திகள்,  சார்லி ( மலையாளம்) , மாறா போன்ற  படங்களின்  தாக்கம்  தெரிகிறது. ஸ்கூல்  போர்சன்  96 ,  3 ,அழகி , பள்ளிக்கூடம்  வைகாசி  பொறந்தாச்சு , ஒரு  அடார்  லவ் ( மலையாளம்) போன்ற  படங்களின்  சாயல்  தெரிகிறது . ஓப்பனிங் 20  நிமிடக்காட்சிகள்  கோகுலத்தில்  சீதை  கார்த்திக்  கேரக்டர்  ஸ்கெட்ச்  நினைவு  வருகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  மிகப்பெரிய  தொழில்   அதிபர், கோடீஸ்வரர். அவருக்கு  கிடைக்காதது  எதுவும் இல்லை . எந்தப்பெண்ணையும்  வீழ்த்தும்  ஆற்றல்  உள்ளவர் . ஆனாலும்  அவர்  மனதில்  ஏதோ  ஒரு  குறை.  மன  நல  மருத்துவரை ப்பார்க்கிறார்.  உங்க  வாழ்க்கைல  நீங்க  அடைய  முடியாதது  ஏதாவது  இருக்கா?னு  கேட்கிறார். இல்லையே. எல்லாமே  என்  விருப்பப்படி  நடந்துட்டுதானே  இருக்கு ?   நினைச்சதெல்லாம்  கிடைச்சுடுதே? என  கேட்கிறார்


 அப்போதான்  சைக்யாட்ரிஸ்ட்   உங்க  முதல்  காதல்  எது ? அவரைப்பற்றி  சொல்லுங்க  என்றதும்  ஹீரோவுக்கு  பழைய  நினைவுகள்  எல்லாம்  வருது . அவரு  டென்த்  படிக்கும்போது  நடந்த  சம்பவங்கள்  ஃபிளாஸ்பேக்கா  ஓடுது  மனசில் 


ஸ்கூல்ல  படிக்கும்போது  ஹீரோ  சாந்தினினு  ஒரு  பெண்ணை  லவ்  பண்றார்.அந்தப்பொண்ணும்தான்.  கூட  இருக்கற  பசங்க  வேற  உசுப்பேத்தி  விட்டுட்டே  இருக்காங்க .  நீ  ஒரு  முத்தம்  கொடுடா  என  சவால்  விடறாங்க . ஸ்கூல்  காம்பவுண்ட்லயே  அந்த  சம்பவத்தை  அரங்கேற்றும்போது  சாந்தினியின்  அப்பா  அங்கே  வந்துடறார்.  பார்த்து  செம  கடுப்பாகி  பொண்ணை  அப்பவே  கூட்டிட்டுப்போய்டறார்


இங்கே  ஃபிளாஸ்  பேக்  கட்  ஆகுது . அந்தப்பெண்ணை  தேடிக்கண்டு பிடிங்க . அந்தப்பெண்  கிடைக்காம  போனதுதான்  உங்க  மன  உளைச்சலுக்குக்காரணம்   அப்டிங்கறார் 


 ஹீரோ  ஸ்கூல்  ரீ யூனியன்க்கு  பிளான்  போடறார். ரீயூனியன்ல  ஹீரோயினைத்தவிர  எல்லாரும்  கலந்துக்கறாங்க . அதுல  ஹீரோ கூடவே  எப்பவும்  இருக்கும்  இரு  நண்பர்கள்  அவங்களோட  காதலியை  சந்திக்கறாங்க . ஒரே  கலாய்ப்பு , கிண்டல்னு  போகுது 


இப்போ  ஹீரோயின்  எங்கே?னு  தேடனும். 1000  கிமீ  பயணம்  செஞ்சு  ஹீரோ  தன்   இரு  ஆண்  நண்பர்கள்  இரு  பெண்  தோழிகள்  இவர்களுடன்  பயணம்  செய்து  தேடல்  படலம்  ஆரம்பிக்கறார். இவரது  பயணம்  வெற்றி  அடைந்ததா? இல்லையா?  என்பதுதான்  திரைக்கதை 


 ஹீரொவா  ஸ்ரீகாந்த் .  ஏப்ரல்  மாதத்தில்  என்ற  படம் தான்  இவரது  நல்ல  வெற்றிப்படம். இவரது  நடிப்பும்  பிரமாதமா  இருக்கும், நீண்ட  இடைவெளிக்குப்பின்  பழைய  ஸ்ரீக்காந்த்தை  பார்த்த  திருப்தி . ஆள்  வெயிட்  போடாலம்  தொப்பை  இல்லாமல்  ஸ்மார்ட்டாக  இன்னமும்  இருப்பது   ஆச்சரியம் . நடிப்பும்  நல்லாருக்கு .  


ஹீரோயினா  சாந்தினி  கேரக்டர்ல  அவிகா  கோர். அழகான  முகம், பாந்தமான  நடிப்பு .  இவரது  க்ளைமாக்ஸ்   சீன்  படையப்பா  நீலாம்பரி  ஓப்பனிங்  சீனை  நினைவு  படுத்துது . இந்த  மாதிரி  எல்லாம்  இந்தக்காலப்பெண்கள்  இருப்பார்களா? என்ற  ஆச்சரியத்தில்  ஒரு  தெய்வீகக்காதலி  கேரக்டர்  டிசைன்  பிரமாதமாக  வடிவமைக்கப்பட்டிருக்கு 


சின்ன  வயது  சாந்தினியாக   நித்யா  ஸ்ரீ  சராசரியான  அழகுதான்  இவர்  இருக்கும்  பெஞ்ச்சில்  கூட  இருக்கும்  இரு  பெண்களும்  இவரை  விட  அழகாகத்தெரிகிறார்கள். அவ்வ்வளவு  ஏன்?  ஒட்டு  மொத்த  க்ளாசில்  இருக்கும்  எல்லாப்பெண்களுமே  இவரை  விட  அழகாகத்தான்  தெரிகிறார்கள் 


சாந்தினி  அதாவது  நாயகியின்  அப்பாவாக  நாசர்  கச்சிதமான  வில்லன்  நடிப்பு .  க்ளைமாக்ஸில்  இவர்  காட்டும்  செண்ட்டிமெண்ட்  எடுபடவில்லை 


சவும்யாவாக  அர்ச்சனா சாஸ்திரி  கலகலப்பான  நடிப்பு . நாகலட்சுமி  ஐ ஏ எஸ் ஆக   ஹிமாஜா  கச்சிதமான  கம்பீரம். 


ஆஃப்பாயில்  பார்ட்டியாக   வருபவர்  கலகலப்பான  நடிப்பு . நண்பர்கள்  அடிக்கும்  லூட்டியில் தான்  கதை  களை  கட்டுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1   ஸ்கூல்  படிக்கும்போது  எல்லாருக்கும்  ஒரு  க்ரஷ்  இருந்திருக்கும் . அதை  மீட்டு  எடுக்கும்படியான  திரைக்கதை  அமைத்தது


2  ஸ்கூல்  கலாட்டா  மற்றும்  இப்போதைய  காதல்  கலாட்டா  காட்சிகளில்  கண்ணியம்,  முகம்  சுளிக்கும்படியான  காட்சிகளோ  இரட்டை  அர்த்த  வசனங்களோ  இல்லாதது  ஆறுதல்


  ரசித்த  வசனங்கள் 


1   என்  கிட்டே  என்ன  இல்லை ? அறிவு ? பணம் ? மகிழ்ச்சி ?  வசதி ?


  மன  நிம்மதி, அதான்  இல்லைம் அது  மனிதனுக்கு  அவசியம் 


2  எந்த  ஒரு  விஷயத்தையும்  வெளில  சொல்லலைன்னா  அதுன் கனவாவே  போய்டும்


3   மனசுல  என்ன  தோணுதோ  அதை  உடனடியா  செஞ்சுடனும்  , இல்லைன்னா  அது  ஒரு  குறையாவே  தங்கிடும் 


4   உன்  முகத்துக்கு  பொண்ணுங்க  எல்லாம்  விழ  மாட்டாங்க, திருஷ்டி  பொம்மை  வேணா  விழலாம் 


5  சும்மா  பேருக்கு  சிரிச்சுட்டு  இருக்கறது  வாழ்க்கை  இல்லை , நம்ம  மனசுக்குப்பிடிச்சவங்க  கூட  வாழறதுதான்  வாழ்க்கை 


6  வாழ்க்கைல  நாம  இழந்த  ஒவ்வொரு  விஷயத்துக்கும்  ஒரு  ஆல்ட்டர் நேட்டிவ்  நிச்சயம்  இருக்கும் 


7   வாழ்க்கைல  மகிழ்ச்சியா  இருக்கறதுக்கும்  மகிழ்ச்சி  இல்லாம  இருக்கறதுக்கும்  நம்ம  மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்  தான்  காரணம் 


8  நம்ம  மனசுக்குப்பிடிச்சவங்க  நல்லாருக்கனும்னு  நினைக்கரவங்க  அவங்க  சந்தோஷமான  வாழ்க்கைல  குறுக்கிட  மாட்டாங்க 


9  ஒரு  ஃபிரண்டா  உண்மையைச்சொல்லி  உன்  சந்தோஷத்தைக்கெடுக்கறதை  விட  ஒரே  ஒரு  பொய்யைச்சொல்லி  உன்  துக்கத்தை  தள்ளிப்போட  நினைச்சோம் 


10   நம்ம  காதல்  நம்மை  விட  உலகத்துல  இருக்கற  எல்லாருக்கும்  தெரியும் 


11  செத்தாலும்  நான்  இதைக்குடிக்க  மாட்டேன், ஏன்னா  இதைக்குடிச்சா  நான்  செத்துடுவேன்


12   ஒவ்வொரு  16  வயசுப்பொண்ணும்  நினைப்பது  என்ன  தெரியுமா?  அவங்களை  சிரிக்க  வைக்கற  , எப்பவும்  சிரிச்சிட்டே  இருக்கறவன்  கூட  இருந்தா  நல்லா  சந்தோஷமா  வாழ்க்கை  இருக்கும் 

13   பொதுவா  21  வயசுப்பொண்ணுங்க  பாய்  ஃபிரண்ட்னா  சினிமா  ஹீரோ  மாதிரி  ஹேண்ட்சமா  இருக்கனும்னு  ஆசைப்படுவாங்க 


14    அதே  மாதிரி  25  வயசுப்பொண்ணுங்க  வாழ்க்கைல  நல்லா  செட்டில்  ஆன  வெல்த்தியான  பையன்   கிடைக்கனும்னு  ஆசைப்படுவாங்க 


15    ஆனா  ஒரு  பொண்ணுக்கு  40  வயசு  ஆகும்போதுதான்  எப்படிப்பட்ட  ஆண்  தனக்கு  உகந்தவன்னு  தெரிய  வரும் 


16  ஒரு  ஃபிரண்ட்  மாதிரி  கூடவே  இருந்தாப்போதும் , ஒல்ரு  பொண்ணு  லைஃப்  ஃபுல்லா   ஹேப்பியா  இருப்பா . இதைத்தான்  எல்லா   ஏஜ்  பொண்ணுங்களும்  பொதுவா  விரும்புவாங்க 


17  ஒவ்வொருவரின்  வாழ்க்கைலயும்  ஏதோ   ஒரு  திருப்தியின்மை  இருக்கும்


18   நம்ம  ரெண்டு  பேருக்கும்  நடுவே  ஒரு  கோடு  எப்பவும்  இருக்கனும், கோட்டுக்கு  அந்தப்பக்கம்  நீ , இந்தப்பக்கம்  நான், இப்படியே  எந்நாளும்  இருப்போம்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நடு  ராத்திரில  ஒரு  டென்த் படிக்கும்  பொண்ணு  சைக்கிள்  எடுத்துட்டு  வீட்டுக்குத்தெரியாம   வெளில   போய்ட்டு  வருவது  ரொம்பவே  ரிஸ்க் . அதுக்குத்தேவையும்  இல்லை . பகலில்  போய்  செக்  பண்ணி  இருக்கலாம் 


2  க்ளைமாக்ஸ்  காட்சி  நம்ப  முடியல  ஹீரோயின்  ஒரு  ரூம்ல    ரொம்ப  நாட்களாக  அடைபட்டு  இக்ருக்கார் .  சிலந்திக்கூடு  எல்லாம்  கட்டி  இருக்கு  . சாப்பாடு  குளியல்  எல்லாம்  இல்லை . ஆனா  ஆள்  பார்க்க  நல்லாதான்  இருக்கார் இத்தனைக்கும்  அந்த  சீனில்  மேக்கப்  வேற 


3  ஹீரோயின்  தங்கி  இருக்கும்  ஹோட்டலில்  அந்த  லேடியின்  கணவர்  வேறொரு  பெண்ணிடம்  தவறாக  நடப்பதை  நாயகி  பார்ப்பது  , அதனால் நாயகியிடமே  அவர்  தவறாக  நடந்து  கொள்ள  விளைவது , அதைத்தொடர்ந்து  வரும்  காட்சிகள்  இந்தத்திரைக்கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் = ஸ்கூல்  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  கொஞ்ச  நேரம்தான்  வந்தாலும்  அதில்  நடித்தவர்கள்  புதிது  என்பதால்  ஒரு  அமெச்சூர்த்தனம்  நாடகத்தனம்  தெரியுது .  பின்  பாதி  திரைக்கதை  நடிப்பு  நல்லாருக்கு  . ஒரு  சராசரி  லவ்  ஸ்டோரி   ரேட்டிங்  2. 25 / 5 


10th Class Diaries
10th-Class-Diaries.jpg
Theatrical release poster
Directed byGarudavega Anji
Story byVennela Ramarao
Produced byAchut Rama Rao P.
Ravi Teja Manyam
StarringSriram
Avika Gor
Srinivasa Reddy
Vennela Ramarao
Himaja
Archana
CinematographyGarudavega Anji
Edited byPrawin Pudi
Music byScore:
S. Chinna
Songs:
Suresh Bobbili
Production
companies
Anvitha Avani Kreation
SR Movie Makers
Distributed byAjay Mysore Productions
Release date
  • 1 July 2022
CountryIndia
LanguageTelugu