Wednesday, October 26, 2022

ALA VAIKUNDAPURRAMULOO (2020) (TELUGU) -சினிமா விமர்சனம் ( வாரிசு படத்தின் ஒரிஜினல் வெர்சன்)

 


ஸ்பாய்லர் அலெர்ட்


இரண்டு  நண்பர்கள் ஒரே  இடத்தில்  பணி  புரிகிறார்கள். அதில்  ஒருவர்  நன்றாக  டெவலப்  ஆகி  பணக்காரர்  ஆகி விடுகிறார்,இன்னொருவர்  அவரிடமே  வேலைக்குப்போகிறார்.  அந்த  பணக்காரரின்  மனைவி , ,  அவர்களிடம்  வேலை செய்பவரின்  மனைவி  இருவரும்  ஒரே  சமயத்தில்  கர்ப்பம்  ஆகி  ஒரே  நாளில்    ஒரே  ஹாஸ்பிடலில்  பிரசவம்  நடக்கிறது


பணக்காரரின்  மனைவிக்குப்பிறக்கும்  குழந்தை அசைவில்லாமல்  இருப்பதைப்பார்த்து  நர்ஸ்  இறந்து  விட்டதாக  தவறாக  நினைக்கிறார். அப்போது   அந்தப்பணியாள்  தன்  குழந்தையைக்கொடுத்து  ஆள்  மாறாட்டம்  செய்து  அங்கே  வைக்கச்சொல்கிறார். அதன் படி  நர்ஸ்  செய்த  பிறகு  இறந்ததாக  நினைத்த  குழந்தை  அசைகிறது .  அப்போ  குழந்தையை  உரியவரிடம்  சேர்த்து  விடலாம்  என  நர்ஸ்  நினைக்கும்போது   அநதப்பணியாள்  அதற்குத்தடை  போடுகிறார்


 இருவருக்கும்  நடக்கும்  தள்ளு முள்ளில்  நர்ஸ்  உயரமான  மாடியில்  இருந்து  கீழே  விழுந்து  கோமாவிற்குப்போகிறார்.  இப்போ  பணியாள்  தன்  குழந்தை  தன்  முதலாளியிடம் வளரட்டும்  வசதியாக , முதலாளியின்  குழந்தை  நம்மிடம்  வளரட்டும்  என  நினைக்கிறார்.


மேலே  நான்  சொன்ன  சம்பவம்  படத்தின்  முதல்  10  நிமிடங்களில்  நடக்கிறது 


20  வருடங்கள்  கழிகிறது 


 முதலாளியிடம்  வளரும்  பணியாளின்  குழந்தை   மக்குப்பிள்ளையாகவும் , தைரியம்  இள்லாதவராகவும்  வளர்கிறது. பணியாளிடம்  வளரும்   பிள்ளை   உண்மை  பேசும்  நல்லவராகவும், துணிவு  உள்ள வாரிசு ஆகவும்  வளர்கிறது


பணக்காரரின்  உண்மையான  வாரிசுதான்  ஹீரோ . 20  வருடங்களாக  கோமாவில்  இருக்கும்  நர்ஸ்  கண்  விழித்து  ஹீரோவிடம்  உண்மையை  சொல்கிறார். இதற்குப்பின்  ஹீரோ  நடத்தும் சாக்சங்கள்  தான்  கதை 


 ஹீரோவாக  பணக்காரரின்  வாரிசாக  அல்லு  அர்ஜூன்  அமர்க்களமான  நடிப்பு . டான்ஸ் , ஃபைட்  காட்சிகளில்  பட்டையைக்கிளப்புகிறார். செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்   உருக  வைக்கிறார்.  காதலியிடம்  வழிவதில்  அக்மார்க்  ஆண்  முத்திரை  பதிக்கிறார்


ஹீரோயினாக  பூஜா  ஹெக்டே .  பாடல்  காட்சிகள்  தவிர  அவருக்குப்பெரிதாக  வேலை  எதுவும்  இல்லை 


‘ ஹீரோவுக்கு  அடுத்து  அதிக  காட்சிகளில்  நடிக்க  வாய்ப்பு  ஹீரோவின்  அப்பாவாக  நடிக்கும் பணியாள்  தான்.முரளி  சர்மாவின்  நடிப்பு  அதகளம்.  காலை  ஒரு  மாதிரி  சாய்த்து  சாய்த்து  நடப்பது , முகத்தில்  பேராசை  கண்களில்  வெறுப்பு  அவர்    அட்டகாசமான  முக  பாவனை, உடல்  மொழி


அவருக்கு  இணையாக  ரோகினி  அதிக  காட்சிகள்  அவருக்கு  இல்லை 


ஹீரோவின்  உண்மையான  அப்பாவாக  ஜெயராம்  ஹேர்  ஸ்டைலில்  நடிப்பில்  வசீகரிக்கிறார்.  ஹீரோவின்  உண்மையான  அம்மாவாக  தபு . இவருக்கும்  அதிக  வாய்ப்பில்லை 


நர்சாக  வரும்  ஈஸ்வரிராவ்  குறை  சொல்ல  முடியாத  நடிப்பு . இவர்கள்  போக  நவ்தீப் , சுஷாந்த்,  சுனில், நிவேதா  பெத்து ராஜ்   என  நட்சட்திரப்பட்டாளமே  இருக்கிறது 


 சமுத்திரக்கனி  வில்லனாக  வருகிறார். குணச்சித்திர  நடிப்பில் அப்பாவாக, தத்துவம்  பேசும்  போராட்டக்காரராகவே  பார்த்த  நமக்கு  அவரது  வில்லத்தனம்  என்னவோ  போல்  உள்ளது


தமனின்  இசையில்  பாடல்கள்  எல்லாமே  ஹிட் தான் . அதற்கு  அமைக்கப்பட்ட  நடனங்கள்  அருமை 


முதல்  பாதியில்  விறுவிறுப்பாக  கலகலப்பாகப்போகும்  திரைக்கதை  பின்  பாதியில்  குறிப்பாக  கடைசி  20  நிமிடங்கள்  பாசப்போராட்டமாக  இழுவை  போல்  தோன்றுகிறது . எடிட்டிங்கில்  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


பி எஸ்  வினோத்  ஒளிப்பதிவு  கண்ணுக்கு  இதம் .  பல  காட்சிகளில்  பிரம்மாண்டம், ஆர்ட்  டைரக்சனும்  அருமை 


இந்தப்படம்  நெட் ஃபிளிக்சில்  கிடைக்கிற்து



ரசித்த  வசனங்கள் 


1   வீட்டில்  தீபம்  எரிந்தால்  அது  அந்த  வீட்டுக்கு  மட்டும்  தாம்  வெளிச்சம்  கொடுக்கும், ஆனா  அதே  தீபம்  கோவிலில்  இருந்தால்  அந்த  ஊருக்கே  வெளிச்சம்  கொடுக்கும்


2  நான்  பொய்  சொன்னா  எனக்குத்தலைவலி  வந்துடும், உண்மை  சொன்னா  மத்தவங்களுக்குத்தலைவலி  வந்துடும் 


3   நிஜத்தை  சொல்லும்போது  மட்டும்  தான்  பயமா  இ ருக்கும்,  சொல்லாம  விட்டுட்டா  ஒவ்வொரு  நிமிசமும்  பயமா  இருக்கும் 


4 குழந்தையைப்பெத்து  எடுக்கும்போது  மட்டும்தான்  அம்மாவுக்கு  வலி , ஆனா   அதுக்குப்பின்  வாழ்நாள்  முழுதும்  அப்பாவுக்கு  வலி 


5  யோவ், என்னய்யா  கீழேயே  பார்க்கறே?  மேலே  பாரு


 சாரி  மேடம், நான்  உங்களுக்குக்கீழேதானே  வேலை  பார்க்கிறேன், மேட்சுக்கு  மேட்ச்


6  கல்யாணம்  ஆன  புதுசுல  தம்பதி  பெட்ரூம்  கதவை  சாத்துனா  அவங்க  பேசறது  வெளில  கேட்கக்கூடாதுனு  நினைக்கறாங்கனு  அர்த்தம், கல்யாணம்  ஆகி  பல  வருடங்கள்  கழித்து பெட்ரூம்  கதவை  சாத்துனா  அவங்க  ரெண்டு  பேரும்  பேசிக்காம  இருப்பது  வெளில  தெரியாம  இருக்கனும்னு  அர்த்தம் 


7  சம்பாதிக்கனும்னு  சொல்ற  பொண்டாட்டில்  எல்லாருக்கும்தான்  கிடைப்பா, ஆனா  சம்பாதிச்சது  போதும்  அப்டினு  சொல்ற  பொண்டாட்டி  சிலருக்கு  மட்டும்தான்  கிடைப்பா 


8  மேலே  இருந்து  உன்னைக்கீழே  கொண்டு  வர  25  நிமிசம்  போதும் ஆனா  கீழே  இருந்த  உன்னை  மேலே  கொண்டு  வர  25  வருடங்கள் ஆகிடுச்சு 


9  பிரச்சனையை  அப்படியே  விட்டுட்டு  வந்துட்டா  எக்சாம்  ஹால்ல  ஆன்சர்  பேப்பரை  பிளாங்க்கா  குடுத்துட்டு  வர்ற  மாதிரி   இருக்கும் , மனசுக்கு  ஒரு  நிறைவைத்தராது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


 1  பொதுவா   டெலிவரிக்கு  ஒரு  பொண்ணு  ஹாஸ்பிடல்  வருதுன்னா  அவங்க  கூட  பெண்  வீட்டு  சொந்தம்  புருசன்  வீட்டு  சொந்தம்னு  பலர்  இருப்பாங்க,  குறிப்பா  பெண்ணின்  அம்மாவோ  சகோதரியோ  கூடவே  இருப்பாங்க, ஆனா  பணக்காரப்பெண்ணான  தபுவின்  டெலிவரி  டைமில்  கண்ணுக்கு   எட்டின  தூரம்  வரை  யாரையும்  காணோம் (  அப்பதானே  குழந்தையை  மாத்த  முடியும்னு  டைரக்டர்  நினைச்ட்டார்  போல )


2    அவ்ளோ  பெரிய  ஹாஸ்பிடலில்  ஒரு  நர்ஸ்  கூட  ஃபைட்  பண்ணி  ஆள்   தள்ளிவிடறார்  அதை  யாரும்  பார்க்கலை 


3  20  வருடங்களாக  கோமாவில்  இருக்கும்  நர்சால்  நமக்கு  என்றாவது  ஆபத்து  வரலாம்  என  வில்லன்  நினைக்கவே  இல்லை , அசால்டா  நர்சை  விட்டுடறான் 


4   ஹீரோ  ஹீரோயின்  முகத்தைப்பார்த்துதான்  பொதுவா  லவ்  வர்ற  மாதிரி  காட்டுவாங்க , இதுல  ஹீரோ மிடி  போட்டுட்டு  வர்றாரு  அவரோட  தொடை  அழகைப்பார்த்து  ஹீரோ  லவ்வறாரு  என்ன  கொடுமை  சார்  இது ?  


5  மேஜர்  சுந்தர்ராஜன்  பாணில  ஜெயராம்  அடிக்கடி “  ஓக்கே   நான்  பேசறேன், ஐ  வில்  ஸ்பீக்   அப்டினு  2  மொழில  ஒரே  டயலாக்கை  எதுக்கு  பேசறாரு ?


6 ஹீரோவோட  தாத்தா  சர்ட்ல  கீழே  விழுந்த  கறை  இருக்கு , அப்படியே  சாக்கடை  மண்  எல்லாம்  ஒட்டி  சேறு  பூசி  இருக்கு, அதைப்பார்த்து  வெகுண்டு  10  நிமிசம்  ஃபைட்  போட்டுட்டு  வரூம்போது  சர்ட்  நார்மல்  ஆகிடுது , வாஷிங்  மிஷின்ல  போட்டு  டிரையர்ல    ஹாய  வெச்சு  அயர்ன்  பண்ணினாக்கூட  அவ்ளோ  குயிக்கா  ஆகாது 


சி பி எஸ்  ஃபைனல்  கமென்ட் -   ஜாலியான   கமர்ஷியல்  மசாலாவாதான்  படம்  போகுது ,  கடைசி  20  நிமிடங்கள்  மட்டும்  ஸ்லோ ,  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5 / 5


வாரிசு  படத்தின்  ஃபர்ஸ்ட்  லுக்  போஸ்டரில்  வந்த  போஸ்  படத்தில்   முதல்  பாதியில்  வருது