Friday, September 02, 2022

யுத்த காண்டம் (2022) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @மூவிவுட் ஓடிடி


 பொதுவாகவே  பெரிய  ஹீரோவை வெச்சு 300 கோடி  செலவில்  எடுக்கப்பட்டு முதல் நாள் முதல்  காட்சிக்கு 300  ரூபா  500  ரூபா  டிக்கெட்  வசூலிக்கப்படுவதற்கு நான்  எதிரி . பெரும்பாலும்  டப்பா  படமாகவே  அமையும். ஃபாரின்ல  ஷூட்  பண்றேன்னு  சொல்லிட்டு  கதைல  திரைக்கதை  அமைப்பில்  கோட்டை  விட்டுடுவாங்க . அது  போக திரைக்கதையை  பக்காவா  ரெடி  பண்ணிட்டு  ஹீரோ  ஹீரோயினை  புக்  பண்ணாம  பெரிய  ஹீரோ  கால்ஷீட்டை  முதல்ல  வாங்கிட்டு  அவங்களுக்காக  படம்  ரெடி  பண்றது தான்  நடக்குது. இந்த  மாதிரி  மெகா பட்ஜெட்  டப்பா  படங்கள்  அடி  வாங்கி  திரைக்கதையை  நம்பி  ரெடி ஆகும்  மினிமம்   பட்ஜெட்  படங்கள்  ஜெயிச்சாதான்  அதுக்கு ரசிகர்கள்  ஆதரவு  தந்தாதான்  ஆரோக்யமான  தமிழ்  சினிமா  உருவாகும் 


 இரா  பார்த்திபனின்  இரவின்  நிழல்  உலகின்  முதல் நான் லீனியர்   சிங்கிள்  ஷாட்  ஃபிலிம்  நான்  இன்னும்  பார்க்கலை . காரணங்கள் 2  படம்  டப்பா  படம்  கதை  ப்ழசு  திரைக்கதை  செம  போர்  அப்டினு  ரிசல்ட்  வ்ந்தது. அப்றம்  அது  நிஜமான     முதல்  சிங்கிள்  ஷாட்  படமே  இல்லைனு  ப்ளூ  சட்டை  மாறன்  கிளப்பிய  பஞ்சாயத்து 


 ஆனா  இப்போ  ரிலிஸ்  ஆகி  இருக்கும்  யுத்த  காண்டம்  சுவராஸ்யமான    சிங்கிள்  ஷாட்  ஃபிலிம்,  ஒரே  இரவில்  ஒரே  ஒரு  போலீஸ்  ஸ்டேஷனில்  நடக்கும்  கதை , மொத்தமே 1 ம்ணி  நேரம் 30  நிமிடம்  தான்  படம்  அதுல  15  நிமிடம்    மேக்கிங்  டீட்டெய்ல்ஸ்  காட்றாங்க  . அப்போ  படம்  ஒண்ணே  கால்  மணி  நேரம், இது ல  முதல் 55  நிமிடங்கள்  பர பரப்பா , விறுவிறுப்பா  படம்  போகுது. அடுத்த  10  நிமிஷம்  லைட்டா  லெகிங்  ஆகுது , மீண்டும்  சூடு  பிடிக்குது. நிச்சயம்  ஒர்த்  ஆன  படம்   அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்ல   ஃபேமிலியோட  பார்க்கலா,ம்


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ராத்திரி  நேரம் . ஒரு  போலிஸ்  ஸ்டேஷன் . அங்கே  ஒரு சப் இன்ஸ்பெக்டர் . அவரு  கொஞ்சம்  விதண்டாவாதமான  ஆள் . அவர்  கிட்டே  ஹீரோ  பதட்டமா  வந்து  ஒரு  புகார்  தர்றாரு . அவரோட  காதலி  திடீர்னு  காணோம் . யாராலோ  கடத்தப்பட்டிருக்கலாம், க்ண்டு  பிடிச்சுக்கொடுங்கனு  புகார்  தர்றாரு


வில்லனான  போலீஸ்  ஆஃபீசர் அந்த ஹீரோவோட  காதலி  ஃபோட்டோவைப்பார்த்து  தப்பா  கமெண்ட்  பண்றாரு.  ஹீரோவுக்கும்  வில்லனுக்கும்  மோதல் . ஒரு  போலீஸ்  கிட்டே  சாமான்யன்  மோதுனா  என்ன  ஆகும் ?  துதான்  இங்கேயும்  நடக்குது 


 ஒரு  அரசியல்வாதி   கிட்டே  இருந்து  வில்லனுக்கு   ஃபோன்  வருது . இந்த  மாதிரி  ஒரு  பொண்ணு   அங்கே  போலீஸ்  ஸ்டேஷ்ன்  வந்திருக்கு  அவ  என்  கைக்கு  வந்தாகனும்னு  மிரட்றாரு 


 போலிஸ்  ஸ்டேஷன்  வாசல்ல  ஒரு  வண்டில  ஹிரோயின்  மயக்க  நிலைல  இருக்காரு   வில்லன்  கிட்டே  மாட்டிக்கறாரு .  விலலன்  ஹீரோ  கிட்டேயும்  ஹீரோயினை  ஒப்ப்டைக்கலை , அந்த  மினிஸ்டர்  கிட்டேயும்  தகவல்  சொல்லலை 


 மும்முனைபோராட்டம் ஹீரோ - வில்லன் - மினிஸ்டர்  இவங்களுக்குள்  நட்ந்த  போராட்டம் தான்  திரைக்கதை 


போலீஸ்  ஸ்டேஷன்ல  நடக்கும்  சம்பவங்கள்  எல்லாம்  அப்படியே  நம்ம  கண்  முன் நடக்கும்  சம்பவம்  மாதிரி  அருமையா  படமாக்கப்பட்டிருக்கு .


போலீஸ்  ஸ்டேஷனில்  வில்லனைத்தவிர  மற்ற  போலீஸ்கள் எல்லாம்  மனிதாபிமானம்  உள்ளவங்களா  இருக்காங்க ,


படம்  சிங்கிள்  ஷாட்  ஃபிலிம்  என்பதால்  க்ளோசப்  காட்சிகள் இல்லை   மொக்கை  காமெடி  சீன்களோ  தேவை  இல்லாத    காட்சிகளோ  இல்லை


 முதல் 55  நிமிடங்களுக்குப்பின்  வரும்  ஹிரோ  ஹீரோயின்  கான்வோ  சீன்  அதைத்தொடர்ந்து  வரும்  லவ்  போர்சன்  கொஞ்சம்  போர்  அடிக்குது ., இவ்ளோ  பதட்டமான  சூழலில்  ரொமான்ஸ்  பண்றதைப்பார்த்து  ரண  களத்துலயும்  உங்களுக்கு  கிளுகிளுப்பு  கேட்குதா?னு  நினைக்கத்தோணுது 


 அந்த  ஹீரோயின்  துரத்தப்படுவதற்கான  காரணம்  தெரிஞ்சதும்  சமீபத்துல  வந்த  சில  மெடிக்கல் க்ரைம்  த்ரில்லர்  படங்கள்  கண்  முன்  வந்து  போகுது 

படத்தின்  முதல்  பாதி  காவல்  துறை  உங்கள்  நண்பன்  படத்தின்  கதையை  நினைவுபடுத்துது 



ஹீரோ  ஹிரோயின்  இருவரும்  புதுமுகங்கள்  குட்  ஆக்டிங் .  போஸ்  வெங்கட்  முக்கிய  ரோலில்  நடிச்சு  இருக்கார். கதை  வசனம்  இவர்  தான்



 புதிய  முகம்  புகழ்  சுரேஷ்  மேனன்  மினிஸ்டரின்  கையாளா  வர்றார்


  படத்தின்  பிஜிஎம்  முதல்  பாதியில் பதட்டமான  சுழலை  படம்  பிடிச்சு  கண்  முன்  நிறுத்துது 


இயக்கம்  அனந்தராஜன்

லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  அவ்ளோ  பெரிய   மினிஸ்டர்  முக்கியமான  சாட்சியைப்பிடிக்க  சும்மா  டம்மியா 4  ஆட்களை  மட்டும்  அனுப்புவாரா? அதகளம்  பண்ணி  இருக்கனுமே>


2  மினிஸ்டரின்  ஆள்  போலீஸ்  ஸ்டேஷனுக்கே  வந்து  எல்லார்  முன்னாலயும்  ஒரு  போலிஸ்  ஆஃபிசரை  நடத்தும்  விதம்  நம்ப  முடியாம  இருக்கு  சிசிடிவி  இருக்கும்  கால  கட்டம்  மீடியாக்களில் விஷயம்  பரவுமே  என்ற  பயம்  இருக்காதா?    அட்லீஸ்ட்  முகத்தை  மாஸ்க்  போட்டாவது  ,ம்றைச்சிட்டு  வர்றது  ஷேஃப்


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விஜய் நடிச்ச  பீஸ்ட்  விக்ரம்  நடிச்ச  கோப்ரா  மாதிரி படங்களைப்பார்க்கறதுக்கு   இது  போல  சுவராஸ்யமான  திரைக்கதை  அமைப்பு  கொண்ட  பட்ங்களைப்பார்க்கலாம் . கேபிள்  சங்கரின்  மூவி  வுட்  ஓடிடி  தளத்தில்  கிடைக்குது   மேதகு  பாகம் 2  உட்பட  பல படங்களின்  தொகுப்பு  இங்கே  இருக்கு . ஒரு  ஆண்டுக்கான  சப்ஸ்கிரிப்சன்  ரூ 365  ஆக  இருந்த்து  இப்போ வெறும் 99  ரூபாதான். நாம  த்யேட்டர்ல  ஒரு  படம்  பார்க்க  ஆகும்  செலவு . படத்துக்கான  ரேட்டிங் 2.75 / 5  ஆனந்த  விக்டன்  எதிர்பார்ப்பு  மார்க் 41