Wednesday, July 20, 2022

மரியா மை டார்லிங் 1980 - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் )


 ஸ்பாய்லர்  அலெர்ட் 

ஹீரோ ஒரு  ஸ்மெக்ளர். கொலைகாரன். போலீஸ் அவரைத்தேடறதால  கெட்டப்  மாத்திக்கிட்டு நார்த்ல  இருந்து  சவுத்  வந்துடறாரு ஹீரோயின்  ஒரு  பிக்பாக்கெட்/.எப்படி  ஜோடிப்பொருத்தம்? 


ஊர்ல 1008  கிரிமினல்ஸ்  இருந்தாலும்  அந்த  போலீஸ்  ஸ்டேஷன்ல  எல்லார்  டார்கெட்டும்  பிக்பாக்கெட்  ஹீரோயினை  பிடிக்கறதுதான். கான்ஸ்டபிள்  , எஸ்  ஐ . இன்ஸ்பெக்டர்னு  எல்லாருமே  ஹீரோயினை  பிடிக்க  ட்ரை  பண்றாங்க  ஆனா  முடியலை 


பழைய  எம்  ஜி  ஆர்  படங்களில்  எல்லாம்  ஒரு  பாய்ண்ட்  நல்லா  நோட் பண்ணிப்பாருங்க  ஒரு  விஷயம்  தெரியும், அதாவது   எம்ஜிஆர்  அந்தப்படத்துல   வர்ற  எல்லா  லேடி  கேரக்டர்சோடும்  டூயட்  பாடி  முடிச்சிடுவார்  ஆனா  அதை  அந்த  பெண்  கனவு  காண்பது  போல்  தான்  சீன் இருக்கும்   டூயட்  பாடி  முடிச்ச  பின்  தங்கச்சிம்பார் .


 அது  மாதிரி  தான்  ஹீரோயின்  ஹீரோவை  லவ்  பண்றார்னு  ஹீரோ  சொல்லிக்கறார்  ஆனா  அவரும்  தான்  லவ்  பண்றார். ஆனா  ஒரு  ரீலுக்கு  ஒரு  வாட்டி  அவ  தான்  என்னை லவ்  பண்றா  அந்த  அன்புக்கு  முன்னால... என்னால  ஒண்ணும்  செய்ய  முடியலைங்கறார்


ஹீரோவுக்கு  ஒரு  ஃபிளாஸ்  பேக். அவரோட  அப்பாவைக்கொலை  பண்ணுன  ஒரு  கேங்  இருக்கு அந்த  கேங்க்ல  அடியாள்  மாதிரி  சேர்ந்து  அப்பாவைக்கொன்னவங்களைப்பழி  வாங்கப்பார்க்கறாரு  அப்போதான்  ஒரு  உண்மை  தெரியுது  அவரோட  காதலியை  போட்டுத்தள்ள  அந்த  கேங்  ட்ரை  பண்ணுது


 ஹீரோயினுக்கும்  ஒரு  ஃபிளாஸ்பேக்  இருக்கு . ஹீரோயினோட  அம்மா  அப்பா  இறந்துடறாங்க  வேற  யாரோதான்  அவரை  வளர்த்தறாங்க ., அவரு  இத்தனை  நாளா  ,மாமானு  கூப்ட்டுட்டு   இருந்தவர்  தான்  அவரோட  உண்மையான  அப்பா. அவர்  ஏன்  அப்பா  என்பதை  மறைத்தார்  என்பதற்கு  எட்டணாக்குப்பிரயோஜனம்  இல்லாத  ஒரு  ஃபிளாஸ்பேக்


 இறுதியி;ல்  ஹீரோ  ஹீரோயின்  சேர்ந்தாங்களா? ஹீரோ  அப்பாவக்கொன்னவங்களைப்பழி  வாங்குனாரா?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  ஒன் அண்ட்  ஒன்லி  கமல் ஹாசன். கடத்தல்காரனா  இருக்கும்போது  ஒரு குரல்    கெட்டப்  ,மாற்றி  சென்னைக்கு  வந்த  பின்  இன்னொரு  குரல்னு  வெரைட்டி  காட்டி  இருக்கார் 


 ஹீரோயினா  ஸ்ரீப்ரியா .  இவர் அடிகக்டி  பல  படங்களில்  பாய்ஸ்  கட்டிங்க்ல  ஆண்  மாதிரி  கெட்டப்ல  ஏன்  வர்றார்னு  தெரியலை  பெண்ணாக  லட்சணமா  பார்க்கதான்  நல்லாருக்கு  


வில்லனாக  சுதர்சன்  ஓக்கே  ரக  நடிப்பு  தேங்காய்  சீனிவாசன்  காமெடிக்கு . சுமார் தான் 


 ஷங்கர்  கணேஷ்  இசைல  6  பாட்டு  அதுல  மரியா  மை  டார்லிங்  மட்டும்  தேறுது 


சபாஷ்  டைரக்டர்  (துரை )

 1  கன்னட்த்தில்  இதை  ரிலீஸ்  பண்ணி  வெள்ளோட்டம்  பார்த்து  பின்  தமிழ்ல்  ஒரு மாசம்  கழிச்சு   ரிலிஸ்  செஞ்ச  புத்த்சாலித்தனம் 


2   ரொமான்ஸ்  கதை  மாதிரி  கொண்டு  போய்  ஆக்சன்  ட்ராமா  மாதிரி  சுத்தி  அடிச்சு  கடைசில  ரிவஞ்ச்  ட்ராமாவாக  முடிச்ச  விதம் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்   


1   நார்த்ல  கடத்தல்  காரனா  இருக்கும்  ஹீரோ  சென்னைக்கு  வரும்போது  போலீஸ்  அடையாளம்  கண்டுபிடிக்காமல்    இருக்க  ரெண்டு  ஐடியா  பண்றார் அது  இதுவரை  இந்திய  சினிமாவில்  யாருமே  யூகிக்க  முடியாதது. 1  சலூனுக்குப்போய்    தாடியை  ஷேவிங்  பண்ணிடறார்  2  ஒரு  பல்  டாக்டர்ட்ட  போய்   பல்  ஷேப்பை  மாத்தறார்.   ஷப்பா  முடியலை. போலீஸ்  ஸ்டேஷன்ல  தேடப்படும்  குற்றவாளியின்  வித  வித  கெட்டப்  ஃபோட்டோக்களை  இப்போ  கம்ப்யூட்டர்  மூலமாகவும்  அப்போ  ஓவியர்  மூலமாகவும்  ரெடி  பண்ணி  ஒட்டி  வெச்சிருப்பாங்கனு  தெரியாதா? 


2  பிக்பாக்கெட்  ஸ்ரீப்ரியா  போலீஸ்  துரத்தும்போது  ஒரு  ஜெண்ட்ஸ்  டாய்லெட்ல  நுழைஞ்சுக்கறார். துரத்து  வந்த  தத்தி  போலீஸ்  லேடிஸ்  டாய்லெட்  வெளில  வந்த  ஒரு  லேடி  கிட்டே  ஏம்மா  உள்ளே  வேற  ஏதாவது  பொண்ணு  இருக்கா?னு  கேட்டுட்டு  கிளம்பிடறார்


3  ஹீரோ  ஹீரோயின்  கூட  ஒரே  ஹோட்டல்ல  ஒரே  ரூம்ல  நாலஞ்சு  நாள்  தங்கறார்/ எந்த  விதமான  பாதுகாப்பு  ஏற்பாடும்  பண்ணாம  இணையறார். அதுக்குப்ப்பின்  ஹீரோயின்  தான்  கர்ப்பமா  இருக்கறதா  சொன்னதும்  செம  ஷாக்  ஆகறார். இது  எப்படி  நடந்துச்சு>னு  ஆச்சர்யமா  கேட்கறார்


4  போலிஸ்ல  இருந்து  தப்பிக்க  ஹீரோ  தான்  இறந்த  மாதிரி  செட்டப்  டெட்  பாடி  ரெடி  ப்ண்றார்  ஆனா  அந்த  விஷயத்தை  ஹீரோயின்  கிட்டே  சொல்லலை .  அதுக்கு  அவர்  சொல்லும்  லாஜிக்  நான்  செத்துட்டேன்னு  தெரிஞ்சா  அவ   இன்னொரு  மேரேஜ்  பண்ணிக்குவா. ஏம்ப்பா   நீங்க  கர்ப்பம்  ஆக்கிட்டு  விட்டுட்டுப்போய்டுவீங்க  அவங்க  வேற  மேரேஜ்  பண்ணிக்கனுமா? கர்ப்பம்  ஆக்கும்  முன்னால்  தான்  போலீசால்  தேடப்படும்  குற்றவாளி  மாட்டிக்குவோம்  மாட்னா  ஜெயில்தான்னு  அவருக்கு  தெரியாதா? 


5 க்ளைமாக்ஸ்  ல  நிறை  மாத  கர்ப்பிணியான  ஹீரோயின்  முன்னிலைலயே  ஹீரோ  உயிரோடதான்   இருக்கான்  தேடப்போறோம்னு  ஏன்  சொல்லனும்?  சொல்லிட்டு  நீ  என்  கூட  வர  வேணாம்னு  ஏன்  தடுக்கனும்? சொல்லாமயே  கிளம்பி  இருக்கலாம் 


6  போலீஸ்  ஸ்டேசன்ல இருக்கும்  எல்லா  போலீசும்  பிக்பாக்கெட்  ஆன  ஹீரோயினைப்பிடிக்க  ட்ரை  பண்றாங்க . போலீஸ்  ஆஃபீசர்  ஆன  தேங்காய்  சீனிவாசன்  பிடிக்க  முடியாம  போனதுக்கு  சொல்லும்  காரணம்  இருக்கே > அட அட அட  அவரு  பிக்பாக்கெட்  அடிக்கும்போது  கையும் களவுமா  பிடிக்கனுமாம் 


 சி பி  எஸ்  ஃபைனல்  க்மெண்ட்ஸ்  -  கமல்  ரசிகர்கள்  மட்டும்  தான்  பார்க்க  முடியும். லாஜிக்கே  இல்லாத  அரதப்பழசான  மசாலா . ரேட்டிங் 1.75 / 5 


Maria My Darling
Maria My Darling.jpg
VCD cover in Kannada
Directed byDurai
Written byThirumathi S. Madhu
N. Bhaskar (dialogues)
Produced byThirumathi S. Madhu
Starring
CinematographyV. Ranga
Edited byM. Vellasami
Music byShankar–Ganesh
Production
company
Durgeswari Films
Release dates
14 November 1980 (Kannada)
19 December 1980 (Tamil)[1]
CountryIndia
Languages
  • Kannada
  • Tamil