Monday, July 18, 2022

Delhi Crime (ஹிந்தி ) 2019 - டெல்லி க்ரைம் - வெப்சீரிஸ் விமர்சனம் ( டெல்லி நிர்பயா வழக்கு ) @ நெட்ஃபிளிக்ஸ்


எல்லாருக்கும்  தெரிஞ்ச  கதை  தானே?னு  இதுல  பார்க்கறதுக்கு  என்ன  இருக்கு?னு  அசால்ட்டா  விட்டுட்டேன்  அப்றம்  பார்த்தா  இது ஏகப்பட்ட  அவார்டுகளை  குவிச்சிருக்கு.  வெளிநாட்டில் விருது  வாங்கிய முதல்  இந்திய  வெப்  சீரிஸ்  என்ற  பெருமையும்  பெறுது. நம்ம  ஃபிரண்ட்ஸ்  யாராவது  கதையோ  கவிதையோ காட்டி  படிச்ட்டு கருத்து  சொல்லுன்னா  அசால்ட்டா  இருப்போம்  ஆனா  அது  ஆனந்த  விகடன்ல யோ  குமுதம்லயோ  பிரசுரம்  ஆனபின்பு  படிப்போம்  அது  மாதிரி  தான்  இதுவும்  அடேங்கப்பா  என்னா  ஒரு  மேக்கிங். மொத்தம்  7  எபிசோட்ஸ்  சராசரியா  ஒவ்வொரு  எபிசோடும்  50 டூ 55  நிமிடங்கள் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  மனைவியை  விட்டு  பிரிஞ்சு  வாழ்றவன். பிற்போக்குத்தனமான  எண்ணங்கள்  உள்ளவன் .  இவன்  பிரைவேட்  பஸ்ல  டிரைவரா  வேலை  பார்க்கறான். ஸ்கூல்  பஸ்  தான்  . காலை ல  ஒரு வாட்டி  மாலை  ஒரு  டைம்  ட்ரிப்   முடிச்ட்டா  வேலை  முடிஞ்சுது. அது  போக  பார்ட்  டைமா  வழில  பயணி  சிக்குனா  ஏத்திக்கிட்டு அவங்க  பர்ஸ்  வாட்ச்  பிடுங்கிட்டு  விட்டுடுவான்
இவன்  கூட இவனோட  தம்பி  ஒருத்தன்   ஒரு  க்ளீனர்  ஒரு  கண்டக்ட்ர்  அது  போக  வெட்டி  ஆளுங்க  3  பேர்  இருக்காங்க

  சம்பவம்  நடந்த  அன்னைக்கு  நைட்  சினிமா பார்த்துட்டு  வீட்டுக்கு  கிளம்பற   நிர்பயா தன்  பாய்  ஃபிரண்ட்டோட  இந்த  பஸ்ல  ஏறிட்டா. பாய்  ஃப்ரண்ட்  அவளை  அங்கங்க  தொடறது  கிஸ் பண்றது  அப்டினு  சில்மிஷம்  பண்ணிட்டு இருந்திருக்கான்  இதைப்பார்த்து  காண்ட்  ஆன  வில்லன்  அவன்  கிட்டே  வாக்கு  வாதத்துல்  ஈடுபட்டிருக்கான்.

  பேச்சு  முற்றி   சப்ஸ்டிடியூட்  டிரைவர்  கிட்டே  வண்டியை  ஓட்டச்சொல்லிட்டு  வில்லன்  வந்து  அவனைத்தாக்கறான்  அப்போ  அவனுக்கு  சப்போர்ட்  பண்ணுன  நிர்பயாவை  பஸ்  பின் பக்கம்  கூட்டிட்டுப்போய்  பாலியல்  பலாதகாரம்  பண்ணீடறான் . மீதி 5  பேரும்  டிட்டோ. அதுக்குப்பின்  அவன்  பண்ணுன  சம்பவம்தான்  கொடூரம் . இரும்பு  ராடை  அந்தப்பெண்ணின்   உறுப்பில்  விட்டு  எடுத்திருக்கான் . குடலை  கையை  விட்டு  உருவி  இருக்கான்

 டிரஸ்  எல்லாத்தையும்  உருவிட்டு   பஸ்  சை  விட்டு  இருவரையும்  தள்ளி  விட்டு  பஸ்  ஏற்றிக்கொல்ல  பார்த்திருக்கான்  ஆட்கள்  வரவே  எஸ்  ஆகிட்டான்


இதுக்குப்பின்  போலீஸ்  டீம்  ஆறு நாட்களில்  எப்படி  இவங்களை  ட்ரேஸ்  அவுட்  பண்ணி  பிடிச்சாங்க ? மீடியாக்கள்  பப்ளிக்  ஸ்டரைக்  எல்லாத்தையும்  எப்படி  டீல்  பண்ணாங்க  இதுல  நட்ந்த  பாலிடிக்ஸ்  என்னென்ன? எனப்தை  விலாவாரியா  காட்டுறாஙக

  யாரும்  பயப்பட  வேண்டாம்  சம்பவத்தை  விஷூவலா  காட்டலை  வர்ணிப்பாதான்  வருது 

 ஷபாரிஷா  தான்  இந்த  கேஸ்ல்  டிஜிபியா  நடிச்சாங்க  அட்டகாசமான  நடிப்பு . இவருக்கும்  ஒரு  பெண்  இருப்பதால்  அந்தப்பெண்ணின்  வலியை  உணர்வது , மேலிட  பிரஷர், சொந்த  வீட்டில்  மகளே  அய்யய்யோ நான்  டெல்லில இருக்க  மாட்டேன்  கிளம்பறேன்  என  டார்ச்சர்  செய்வதை  அனுபவிப்பது  சக  போலீஸ்காரர்கள்  பொறுப்பில்லாமல்  இருக்கும் போது   அனைவரையும்  வேலை  வாங்குவது  மீடியாவைக்கையாள்வ்து  எல்லாமே  அதகளம்  வெல்டன்

  நிர்பயா  கூடவே  இருந்து  பார்த்துக்கும்  போலீஸாக  ராஷிகா  அமைதியான  நடிப்பு . அவருக்கும் அவரது  காதலனுக்கும்   இடையே  நிகழும்  கான்வோ  கதைக்குத்தேவை  இல்லாதது 

இன்ஸ்பெக்டர்  பூபேந்திரசிங்காக   ராஜேஷ்  திலக்  கச்சிதமான நடிப்பு. தன்  மகளுக்கு  மாப்ளை  பார்க்கும்போது  போலீஸ்காரர்  பொண்ணுனா  யோசிக்கறாங்க, மறைச்சு  தான்  பண்ண  வேண்டி  இருக்கு  என  புலம்பும்போது  கனகச்சிதம்

மெயின்  வில்லனா  டிரைவர்  ஜெய்சிங்கா  நடிச்சவர்  நடிப்பு  அட்டகாசம். அப்பாவி  மாதிரி  ஓப்பனிங்ல்  பேசி  நடந்த  சம்பவத்தை  அவர்  விவரிக்கும்போது  அவர்  குரலில்  கோபம்  பெருமிதம்  பொங்குவது  மிரள  வைக்கும்  நடிப்பு . ஆள்  ஒல்லியா  தனுஷ்க்கு  தம்பி மாதிரி  இருக்கார்  ஆனா  நடிப்பு  பட்டாசு 

மெயின்  ஹீரோயின்  டிஜிபி  மகளாக  வருபவர்  முக  அமைப்பு  அவ்ளோ  அழகு . மெயின்  கதைக்கும்  அவருக்கும்  சம்ப்ந்தம்  இல்லை  என்றாலும்  அவரை  ரசிக்க  முடிகிறது 





ரசித்த  வசனங்கள் 

1   இந்த  ஸ்டூடண்ட்ஸ்க்கு இந்த  மாதிரி  போராட்டங்கள்   எக்ஸ்ட்ரா  கரிகுலர்  ஆக்ட்டிவ்ட்டீஸ் . பதாகைகள்  எல்லாம்  எப்படித்தான்  அவ்ளோ  குயிக்கா  ரெடி  பண்றாங்களோ ?

2   தீப்பிடிச்சு  எரியறப்போ  குழி    வெட்டக்கூடாது 

3 பஸ்  டீட்டெய்ல்ஸ்  மக்களுக்கு  தெரிஞ்சா  அவங்க  நொறுக்கிடுவாங்க. கேஸ்க்கு  எவிடென்ஸ்  போய்டும்

4   குற்றவாளிகள்  ஏழைகள்  என்பதில்  ஒரு  பயன்  இருக்கு . போலீஸ்க்கு  மேலிட  பிரஷர்  இருக்காது 

5 நீ  போலீஸ்க்கிட்டே  இருந்து  தப்பிக்கலாம், ஆனா  உன்  தலை  எழுத்துல்  இருந்து  தப்பிக்க  முடியாது 

6   மல்ட்டிபிள்  சேலஞ்ச்  ஹேண்டில்  பண்றதும்  ஒரு  டேலண்ட்  தான் 


7  ப்ணக்காரனுக்கும்  ஏழைக்கும்  உள்ள  தூரம்  எந்த  அளவு  அதிகம்  ஆகுதோ  அந்த  அளவு  க்ரைம்  ரேட்டும்  கூடும் 

8   பணக்காரங்க  கொண்டு  வரும்  பணம்  அவங்க  புழக்கத்தில்  விடும்  பணம்  ஏழைகளுக்கு  யூஸ்  ஆகறதே  இல்லை 

 9  ஏழைகள்  இழக்கறதுக்கு  எதுவுமே  இருக்க்றதில்லை 

10  எந்த  சர்ச்லயும்  பாவ  மன்னிப்புக்கேட்க  முடியாத  பாவம்  துரோகம்தான் 

11  உலகத்துலயே  பெரிய பாவம்  ஒரு  பெண்ணைக்கை  நீட்டி  அடிக்கறது 

12  நாம  பார்க்கற  வேலை  ஒருத்தருக்கு  பிடிக்கன்ம்னா  அவங்க  கிட்டே  எந்த  சகவாசமும்  நாம  வெச்சுக்கக்கூடாது 

13   நியூஸ்  பார்க்கறதால  போலீஸ்க்கு  எந்த  பிரயோஜனமும்  இல்லை  ஏன்னா  யாரும்  உண்மையான  நியூசை  சொல்றதில்லை  கம்பி  கட்ற  கதைதான்  நடக்குது 

14   பொதுவா  நமக்கு  ஒரு  வேலை  பிடிச்சிதுன்னா  பெஸ்ட்டாதான்  பண்ணுவோம் 

15   அடுத்த  தடவை  சிம்கார்டு  கீழே  கிடந்ததுன்னா  அதை  போலீஸ்  கிட்டே  ஒப்படைக்கனும்  புர்யுதா? அதை  உபயோகிப்பது  சட்டப்படி  குற்றம் 

  ஓக்கே  மேடம்   உங்க  கிட்டே  ஒபடைச்சுடறேன், நீங்க  யூஸ்  பண்ணிக்குங்க 

 சபாஷ்  டைரக்டர் 

1  ஒரு  முக்கியமான  கேஸ்ல  போலீசின்  நடவடிக்கைகள்  எப்படி  இருக்கும்?  குற்றவாளிகளை  எப்படி  ஸ்கெட்ச்  போட்டு  தூக்கறாங்க  என்பதை இவ்ளோ  தெளிவாக  டிட்டெய்லாக  அட்டகாசமாக  இதுவரை  எந்தப்படத்திலும்  நான்  பார்த்ததில்லை  அருமையான  திரைக்கதை 

2   இந்த  வெப்சீரிஸ்ல  எத்தனையோ  பேர்  நட்ச்சிருக்காங்க  ஒருவர்  நடிப்பு  கூட  குறை  சொல்லும்படி  இல்லை  கலக்கி  இருக்காங்க, ஆல் க்ரெடிட்ஸ்  கோஸ் டூ  டைரக்டர்
‘3  சைவ  பழக்கம்  உள்ள  போலீஸ்காரர்  டிஜிபி  இடம்  ஃபோன்  பண்ணி  அவருக்கு  அசைவ  உணவுதான்  கிடைச்சுது  என  புகார்  சொல்ல  அவரிடம்  தன்மையாக  பேசி  ஃபோனை  கட்  பண்ணி  பிறகு  அந்தப்பொண்ணு  தொண்டைக்குழில  சாப்பாடு  இறங்காம  சீரியசா  இருக்கு  இந்த  ஆளு  ட்யூட்டியைப்பார்க்காம  சாப்பாடு  பற்றி  புகார்  பண்ணிட்டு  இருக்கான்  என  திட்டும்போது  விசில்  அடிக்கத்தோணுது 


4   கிட்டத்தட்ட  ஆறரை  மணி  நேரம்  ஓடும்  சீரிஸ்ல  ஒரு  இடத்தில்  கூட  லேக்  ஆகலை  விறுவிறுப்பா  போகுது  . இத்தனைக்கும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  சில  சீன்கள்  கிளைக்கதைகள்  இருந்தும்...  சபாஷ் 

லாஜிக்  ,மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 

1   குற்றவாளி  ஆதாரத்தை  அழிக்க  அவங்க  வீட்டு  மண்  த்ரைல 2  இஞ்ச்  அளவு  தோண்டி  ஒளிச்சு  வைக்கிறான், ஈசியா  போலீஸ்  எடுத்துடறாங்க.. ஆக்சுவலா  புத்திசாலியா  இருப்பவன்  அட்லிஸ்ட்  5  அடியாவது  தோண்டி  இருக்கலாம் அல்லது  அவங்க  வீட்டில்  புதைக்காமல்  அந்த  ஏரியா  தோட்டத்தில்  புதைச்சிருக்கலாம்

2    சம்பவம்  நடந்த  தேதி  நிஜ  நிகழ்விலும்  சரி ப்டத்திலும்  சரி  17ம்  தேதி  அதுக்குப்பின் 6  நாட்களில்  எல்லாரையும்  பிடிச்சிடறாங்க  ஆனா  இபி  பில்  கட்டாததால  கரண்ட்  கட்  பண்ணீடற  மாதிரி  காட்றாங்க  வழக்கமா  இ பி  பில்  கட்டலைன்னா  26ம்  தேதி  வர்னிங்    குடுப்பாங்க .31ம்  தேதி  காலை  மீண்டும்  ஒரு  வார்னிங். 31 மாலை  தான்  கட்  பண\ணுவாங்க. எப்படி  20ம் தேதி கட்பண்றாங்க ., பில்  கட்ட  லாஸ்ட்  டேட்டே 25  தானே?


3  6  மணி  நேரம்  பயணம்  செஞ்சு  குற்றவாளியைப்பிடிக்க  ஒரு  டீம்  போகுது அதுல  ஆறு  பேர்ல  ஒரு  ஆளுக்குக்கூடவா  நீச்சல்  தெரியாம  இருக்கும்?  குற்றவாளி  ஆத்துல  குதிச்சாலோ  தள்ளி  விட்டாலோ  நீந்தத்தெரிந்திருக்க  வேணாமா?  போலீஸ்  தகுதில  நீச்சல்  தெரிஞ்சிருக்க  வேணாமா? 

 4   தப்பிக்கும்  குற்றவாளிக்கு  போலீஸ்காரங்க  6  பேருக்குமே  நீச்சல்  தெரியாது  என்ற  விஷயம்  எப்படி  தெரிஞ்சுது ? அவன்  முன்னால  அதைப்பற்றி  அவங்க  பேசிக்கவே  இல்லையே? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்   க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  விரும்பிகள்  அனைப்வரும்  பார்க்கலாம், அடல்ட்  கண்ட்டெண்ட்டோ  கொடூரமான  காட்சிகளோ  ரத்தம்  தெறிக்கும்  வன்முறையோ  காட்சியாக  இல்லை.  பெண்களும்  பார்க்கலாம். ரேட்டிங்  3.5 / 5