Tuesday, July 12, 2022

இங்கேயும் ஒரு கங்கை 1984 - சினிமா விமர்சனம் ( கிராமத்துக்காதல் )


 அந்தக்காலத்துல  எல்லா  ஆர்ககெஸ்ட்ராக்களீலும்  தவறாமல்  இடம்  பிடித்து  விடும்  பாட்டு  மென்  சோகப்பாடலான

  1  சோலை  புஷ்பங்களே  என்  சோகம்  சொல்லுங்களேன்  செம  பாட்டு.  இது   படத்தோட  பின்  பாதில தான்  வரும்   


2 வில்லா வளைச்சு  வெச்ச  புருவமோ ?    (டைட்டில்  சாங்க்  )

அப்புறம்   

3 தெற்குத்தெரு மச்சானே...  4  உன்னை  தான்  நினைச்சேன்  5   சந்தனக்கிளியே  6  ஆட்டம்தான்


 மேலே  சொன்ன  6  பாடல்களில்  கடைசிப்பாட்டு  மட்டும்  சுமார்  ரகம் , மீதி  எல்லாமே  ஹிட்டு . இளையராஜாவை  நம்பினார்  கைவிடப்படார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ   ஒரு  ஆடு  திருடன்/  ஒரு  ஆட்டை  மட்டும்  இல்லை  ஊர்ல  ஏமாளிங்க  யார்  ஆட்டை  வேண்டுமானாலும்  ஏமாந்தா ஆட்டையைப்போட்டுட்டுப்போய்  வித்துடுவான் 


ஹீரோயின்  அதே  கிராமத்துல  இருக்கற  பொண்ணு . இவங்க  வீட்லயும்   மாடு  பசு  எருமை  எல்லாம்  இருக்கு . ஒரு  நாள்  இவங்க  வீட்டுல  மாடு  களவு  போகுது . ஹீரோ  தான்  அதை  செஞ்சார்னு  சண்டைக்குப்போகுது. ஆனா  ஒரு  ட்விஸ்ட். அந்த  திருட்டை  செஞ்சதே  ஹீரோயினோட  அப்பாதான்


இந்த  உண்மை  தெரிஞ்சதும்  ஹீரோயின்  மனசு  படாத  பாடு  படுது  செய்யாத  குற்றத்துக்காக  கண்டபடி  சாபம்  விட்டுட்டமே  அப்டினு  மனசு  கலங்கி  அதுக்குப்பரிகாரமா  ஹீரோவை  லவ்  பண்ணுது 


 இது  என்னடா  எங்கயும்  பார்க்காத  புதுக்கதையா  இருக்கேனு  நினைக்கறப்போ   இந்த  லவ்  மேட்டர்  வெளில  தெரியுது . மாப்ளைக்கு  வசதி  இல்லை  சொத்து  இல்லை நில புலன்   இல்லைனு  சொல்லி  பொண்ணோட  அப்பா  காதலுக்கு  தடை  போட்டுடறார். 


பணம்  சம்பாதிச்சு  பெரிய  ஆள்  ஆகி  இந்த  ஊருக்கு  வர்றேன்னு  சபதம்  போட்டு  ஹீரோ  கிளம்பறார்

 நேர்மையான  ஏழைக்கு  பொண்ணு  தர  எல்லா  பெண்ணோட  அப்பாக்களும்  யோசிப்பாங்க , ஆனா  ஒரு  பணக்காரனுக்கு  பொண்ணு  தர  யோசிக்க  மாட்டாங்க   அதன்  படி    ஹீரோயினோட  அப்பா  ஒரு  உடல்  ஊனமுற்ற  பணக்காரனுக்கு  கல்யாணம்  பண்ணி  வெச்சுடறார்.


 மேரேஜ்க்கு    சம்மதிக்கலைன்னா  தற்கொலை  பண்ணீக்குவேன்னு  வழக்கமான  மிரட்டல்  தான்


ஹீரோ  திரும்பி  வந்து  பார்த்தா  மாற்றான்  தோட்டத்து  மல்லிகையா  ஹீரோயின் . இடைவேளை  இதுக்குப்பின்  என்ன  ஆச்சு  ? என்பதே  திரைக்கதை 


ஹீரோவா  புரட்சி  நாயகன்  முரளி. இவருக்கு  மினிமம்  பட்ஜெட்  விஜயகாந்த்னு  ஒரு  பேரு  உண்டு . நல்ல  மனுசன் . குடிப்பழக்கத்தால  சீக்கிரமா  இறந்துட்டார்.  நல்ல  சுறு சுறுப்பான  நடிப்பு . சண்டைக்காட்சிகளில்  வேகம், நாயகியை  லந்து  பாடும்  பாடல்  காட்சிகளீல்  குறும்பு  லாவகம்  எல்லாம்  பக்கா 


 ஹீரோயினா  தாரா  . நயன்  தாரா  அளவுக்கு  இல்லைன்னாலும்  நல்ல  நடிப்பு ஒப்பனை  இல்லாத  இயறகை  அழகு 


 ஹீரோயின்  கணவனா  வாகை  சந்திர  சேகர்   அழுத்தமான  நடிப்பு க்ளைமாக்ஸ்  தியாக  வசனத்தில்  தியேட்டரில்  கைதட்டல்  அடங்க  வெகு  நேரம்  ஆகும் 


  வில்லனா  ஜனகராஜ். காமெடியனா  பார்த்த  இவரை  ரேப்  சீன்ல  பார்க்க  என்னவோபோல  இருக்கு 


  திரைக்கதை  இயக்கம் மணிவண்னன்   ஒளிப்ப்திவு  எடிட்டிங்  ஓக்கே  ரகம் 


  சபாஷ்  டைரக்டர்

\

1    இளையராஜா  கிட்டே   ஆல்ரெடி  வேற  படத்துக்காக  போட்ட  ட்யூன்களை  வாங்கி  அதுக்குத்தக்க  திரைக்கதை  எழுதி  இவர்  எடுத்த  இரண்டு  படங்களுமே  ஹிட்  1  இளமைக்காலங்கள்   இன்னொண்ணு  இது 


2    முதல்  பாதி  கலகலப்பு  பின் பாதி  ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்  வசனங்கள்  என  ஒரே  நேர்கொட்டில்  செல்லும்  திரைக்கதை 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    வில்லன்  ஹீரோயினை  ரேப்  செய்ய  துரத்தும்போது  வீடே  அமளி  துமளி  ஆகுது  எல்லா  பொருட்களும்    கலைஞ்சு  கிடக்கு . அப்போ  வில்லனின்  மனைவி  மாமியார்  வந்து  அதை  பார்த்துடறாங்க  . இந்த  விஷயம்  மாமாக்கு  தெரிஞ்சா  உங்க  பொண்ணை  வாழா வெட்டி  ஆக்கிடுவேன்னு  மிரட்றான்  வில்லன் . அப்போ  எண்ட்ரி  ஆகும்  மாமனார்  வீட்டில்  சிதறிக்கிடந்த  பொருட்களைப்பார்த்து  நடந்ததை  யூகிக்க  மாட்டாரா ? 


2   தன்  கண்  முன்னே  தன்  கணவன்    வேற  ஒரு   பெண்ணை  பலாத்காரம்  செய்வதைப்பார்த்த  பின்பும்  ஒரு  கிராமத்துப்பெண்  அதை  ஜீரணிச்சிக்கிட்டு  சும்மா  இருப்பாரா ? 


3   அப்போ  அப்படி  சும்மா  இருந்த  வில்லனின்  மனைவி  கொஞ்ச  நேரம்  கழிச்சு  உன்  கூட  வாழவே  எனக்குப்பிடிக்கல  வெளில  போ  என  டயலாக்  சொல்லும்போது  ஒட்டவே  இல்லை  அதை  முதல்லியே  சொல்லி  இருக்கலாமே?  ஹீரோயின்  பேர்  ரிப்பேர்  ஆகி  இருக்காதே ?


4   எல்லாத்தையும்  விட  பெரிய  கொடுமை  நல்லவனான  புருசன்  தன்  மனைவி  மீது  பழி  சொல்வந்தும்   அவளது  கற்பு  பற்றி  வில்லன்  களங்கம்  கற்பித்தும்  தன்  அப்பா  முன்  மனைவியை  விட்டுக்கொடுக்காமல்  பேசாமல்  மனைவி  நடத்தை  கெட்டவள்  என  பழி  போடுவது  நம்ப  முடியல  அதுக்கு  என்ன  காரணம்னு  பின்  அவர்  சொல்லும்  சால்ஜாப்  ஏத்துக்கற  மாதிரி   இல்லை 


5  வில்லன்  ஹீரோயினை  ரேப்  பண்ண  ஆத்து  மேட்டில்   ஊருக்கு  வெளியே  என  பல  இடங்கள்  சந்தர்ப்பங்கள்  இருந்தும்  கூட்டுக்குடும்பமாக  10  பேர்  வசிக்கும்  இடத்தில்  வீட்டிலேயே   அட்டெம்ட்  ரேப்    சீன்    லாஜிக்கே  இல்லை  மாட்டிக்குவோம்னு  தெரியாதா? 

6  க்ளைமாக்ஸ்  காட்சி  அப்படியே  1981ல் ரிலீஸ்  ஆகி  மெகா  ஹிட்  ஆன  அந்த  7  நாட்கள்  படம்  மாதிரியே  இருக்கு . கொஞ்சம்  மாற்றி  இருக்கலாம்


  ரசித்த  வசனங்கள் 


1    ஒரு  பொண்ணோட  பேச்சு  எடுபடுவது  கஷ்டம் .  உயர  உயரக்குதிச்சாலும் உலைல  இருக்கற  அரிசியால  பானையை  உடைக்க  முடியாது  அது  மாதிரி  தான்  பெண்  சொல்கிற சொல்லும்  அம்பலம்  ஏறாது  


2  என்  கணவர்  கெட்டவரா  இருந்தாக்கூட  வர  யோசிக்கலாம்  ஆனா  அவரு  நல்லவரா  போய்ட்டாரே?  உடலால்  ஊனமா  இருந்தாலும்  மனதளவில்  அவர்  செல்வந்தர் 


சி பி  எஸ்   ஃபைனல்  கமெண்ட்  -  இளையராஜாவின்  பாடல்களுக்காகவும் தாரா  அப்டின்னே  யார்னே  தெரியாதே  என்பவர்கள்  மட்டும்  பார்க்கலாம்   ரசிக்கலாம் . அநதக்காலத்துல்  ஹிட்  ஆன  படம்