Thursday, July 07, 2022

MAJOR 2022 ( தெலுங்கு)) - சினிமா விமர்சனம் ( ரியல் இன்சிடெண்ட் ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிகஸ்


2018 ல  ரிலீஸ்  ஆன  ஹோட்டல்  மும்பை   எனும்  ஹிந்திப்படம் ,( நெட் ஃபிளிக்ஸ் )2012 ல  ரிலீஸ்  ஆன  சாஹித் ( ஜியோ சினிமாஸ்) 2010 ல  ரிலிஸ்  ஆன  மும்பை  டைரீஸ்  ( ஜி ஃபைவ்) இவை  எல்லாமே பேசிக்கா  ஒரு  மாதிரி  கதை  அம்சம்  கொண்ட  படங்க்ள் தான்


2008 ல்  மும்பை  தாஜ்  ஹோட்டல்ல  டெரரிஸ்ட்  அட்டாக்  நடந்தது  அப்போ  மிலிட்ரி  ஃபோர்ஸ்  எப்படி  அதை  ஹேண்டில்  பண்ணாங்க ?  என்பதை  அதில்  கலந்துக்கிட்ட  மேஜர்  சந்தீப்  உன்னி  கிருஷ்ணன்  வாழ்க்கை  வரலாறு  மூலமா  சொல்லி  இருக்காங்க . இவர் அசோக  சக்ரா  விருது  வாங்கியவர்


 பொதுவா  பயோ  கிராஃபின்னா  படம்  ஸ்லோவா  போகும், ஆனா  இதுல  பின்  பாதி  பூரா  ஆக்சன்  சீக்வன்ஸ்  என்பதால்  படம்  செம  ஸ்பீடு . முன்  பாதில  லவ்  போர்சன்  வர்றதால  ஜாலியா  தான்  போகுது 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


 சின்ன வயசுலயே  ஹீரோ  மிலிட்ரில சேர  ஆசைப்படறாரு, ஆனா  அவரோட  அம்மா  அப்பாவுக்கு  அது  பிடிக்கல, இருந்தாலும்  பிடிவாதமா  இருக்காரு . அவருக்கு  ஒரு காதலி . நாட்டைக்காக்க  நீங்க  பார்டருக்குப்போய்ட்டா  என்னைக்காப்பது  யார்?  அதனால  நம்ம  காதல்  ஒத்து  வராது  ஃபிரண்ட்சா  இருப்போம்னு  சொல்றா.  இருந்தாலும்  சில  பல  சம்பவங்களுக்குப்பின்  இருவருக்கும்  திருமணம்  ஆகிடுது. படத்தோட  முதல்  50  நிமிடங்கள்  ஃபேமிலி  லவ்  மேரேஜ்  அப்டினு  ஜாலியா  போகுது 


 ஹீரோ  மிலிட்ரில  ட்ரெய்னிங்  ஆஃபீசரா  இருக்காரு  , அப்போ  ஒரு  இடத்துல  தீவிரவாதிங்க   பீஸ்ட்  படத்துல   வர்ற  மாதிரி  அட்டாக்  பண்றாங்க   அந்த  தாக்குதல்ல  பொது  மக்களை  ஹீரோ  அண்ட்  டீ,ம்  எப்படிக்காப்பாத்துனாங்க? என்பதே  மிச்ச  மீதிக்க்தை 


ஹிரோவா  நடிச்சு  படத்தோட  திரைக்கதை  எழுதி  இருப்பவர்  படத்தோட  ஹீரோ அதிவி  சேஷ்  ஹிந்தில  எப்படி  ஆயுஸ்மான் குரானாவோ , தமிழ்ல  எப்படி  பிரகாஷ்  ராஜோ  அந்த  மாதிரி  தெலுங்குல  இவர்  நடிச்ச படங்கள்  எல்லாமே  மாறூபட்ட  கதை  அம்சம்  கொண்டவை   நாட்டுப்பற்று  மிக்க  ராணுவ  வீரரா  நல்லா  ஹோம்  ஒர்க்  பண்ணி  நடிச்சிருக்கார் . முன்  பாதில  லவ்  போர்சன்ல   ஜெயம்  ரவி  யை  நினைவுபடுத்தறார். பின்  பாதி  ஆக்சன்  காட்சிகளில்  அருண்  பாண்டியன்  தான்  நினைவு  வந்தார் 


ஹீரோயினா  சஜி  மஞ்ச்ரேக்கர்    டீன்  ஏஜ் போர்சன்ல  சாக்லெட்  கேர்ளாகவும்  ஃபேமிலி  கேர்ளாக  வரும்  போது  மாறுபட்ட  சோக  நடிப்பையும்  வழங்கி  இருக்கார் .கர்ப்பமாக  இருக்கும்போது  நீ    கூட  இருக்கனும்  என  புருசனிடம்  வாதிடும்போது  டச்சிங் 


ஹீரோவோட  அம்மா  அப்பாவாக  ரேவதி  பிரகாஷ்ராஜ் . உண்மை  சம்பவத்தில்  அந்த  மேஜரின்  பெற்றோரை  ஸ்ட்டி  பண்ணி  மேக்கப்  பாடி  லேங்க்வேஜ்  எல்லாம்  மாற்றி  நடித்திருப்பது  சிறப்ப்பு. டி வி யில்  ஹோட்டல்  அட்டாக்  பற்றி  நியூஸ்  வரும்போது   திக்பிரமை  அடைந்து  நடுரோட்டில்  நடக்கும்  சீன்  ஒண்ணு  போதும்  ரேவதி  கலக்கல்  நடிப்பு . பிரகாஷ்  ராஜ்  பற்றி  தனியே  சொல்ல  வேண்டியதில்லை  சிறப்பான  நடிப்பு 


குழந்தையுடன்  மாட்டிக்கொண்ட  பெண்ணாக   சோபிதா   பக்காவான  நடிப்பு  ஹையர்  ஆஃபீசராக   முரளி  சர்மா  கச்சிதம் 


சபாஷ்  டைரக்டர்


1    படத்துக்கு  உயிரோட்டமான  பின்னணி  இசை  பின்  பாதியில்  கலக்கலா  அமைஞ்சிருக்கு அதே  போல  ஆக்சன்  சீக்வன்ஸ்  காட்சிகள்  சம்பவத்தை  நேரில்  பார்ப்பது  போல  படமாக்கப்பட்டிருக்கு 


2   பயோகிராஃபி  படங்களின்   தலை  எழுத்தே  ஸ்லோ  மெலோ  டிராமா  என்பதை  மாற்றி  கமர்ஷியல்  மசலா  ஆக்சன்  த்ரில்லர்  ரேஞ்சுக்கு  எடுத்து  வைத்தது  அருமை 


3  நடித்த  அனைத்து  நடிகர்களின்  பர்ஃபார்மென்ஸ்   பக்கா 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஒரு  சீன்ல  வாட்டர் பாட்டலைப்பார்த்து  அது  ஆசிட்  பாட்டிலோனு  பயந்துட்டேன்னு  ஒரு  டயலாக்  வருது . ஆசிட் சாதா  பாட்டில்ல  கவர்  பண்ண  முடியாதுனு  +2  ல  கெமிஸ்ரி  லேப்ல  படிச்சவங்களுக்குக்கூட  தெரியுமே? 


2  டி வி  மீடியா  மூலமா  மேஜர்  ஒரு தவறான   தகவலை  பரப்பி  ஹோட்டல்ல  குறிப்பிட்ட  இடத்துக்கு  தீவிரவாதிகளை  வர வெச்சு  தாக்கறாரு. அந்த  எல் கேஜி  ஐடியாவைக்கூடவா  அந்த  ஆட்கள்  புரிஞ்சுக்காம  ஏமாறுவாங்க? ஜாக்கிரதையா  ட்ரை  பண்ண  மாட்டாங்களா? 


ரசித்த  வசனங்கள்


1   அர்னால்டு  சிவாஜி  நகரா?


 சுத்தம்  அது    அர்னால்டு  ஸ்வார்செனேகர் 


2  உன்  பேரென்ன?

 டெல்லிக்காரி 

  ஏன்  ? பேரில்லையா? 


அது  என்  பர்சனல் 


3   என்னை  பயப்படுத்தப்பார்க்கறியா?


 இதானா  உன்  டக்கு ? உன்னை  மிரட்றேன் 


4   அவன்  நமக்கானவன்  இல்லை  நாட்டுக்கானவன் 


5  நாமும்  தப்பனும்  நம்மை  நம்பி  இருக்கறவங்களும்  தப்பனும்,அ தான்  சோல்ஜர்  வேலை 


6   உன்னை  மாதிரி  ஒரு  வீரனை  நான்  இழக்க  விரும்பலை


‘ ட்ரெய்னிங்  வந்ததே   ஃபைட்  பண்ணத்தானே? பின்  வாங்குனா  எப்படி சார் ?


7  நம்ம  கிட்டே  பிளான்  இல்லை  எந்த  தகவலும்  இல்லை 


  ஆனா நாம  ஸ்பாட்ல  இருக்கோமே? 


8  உங்க  தியாகத்தைப்பற்றிதான்  இங்கே  எல்லாரும்  பேசறாங்க  ஆனா  அதனால  நமக்கு  என்ன  பிரயோஜனம்? 


9  மக்களைக்காப்பாத்த  நிங்க  துடிப்பது  புரியுது  அதுக்கு  முதல்ல  நம்மளைக்காப்பாத்திக்கனும்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்  ரைட்டர்  சுபாவின்  கதைகளில்  வரும்  மிலிட்ரி  போர்சன்  கதை  ரசிகர்கள்  பார்க்கலாம்,  ஜனரஞ்சகமாத்தான்  இருக்கு  .   நெட்  ஃபிள்க்சில்  கிடைக்குது . தெலுங்கு  ஹிந்தி  ரெண்டு  மொழிலயும்  இருக்கு   ரேட்டிங்  2.5 / 5