Tuesday, July 05, 2022

உன்னைத்தேடி வருவேன் 1985 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் )

 


ஒரே  ஒரு  ஹாஸ்பிடல்ல  எடுக்கப்பட்ட  பிரமாதமான  காதல்  காவியம் நெஞ்சில் ஓர்  ஆலயம்  எடுத்ததும்  ஸ்ரீதர்  தான் .  பாடல்கள்  செம  ஹிட்  அடிச்சு  செம  ஜாலியான    படமான  ஜெயஸ்ரீ  மோகன்  நடிச்ச  தென்றலே  என்னைத்தொடு  சூப்பர்  டூப்பர்  கமர்ஷியல்  சக்சஸ் கொடுத்ததும்  ஸ்ரீதர்தான்  . கமல்  நடிச்ச  நானும்  ஒரு  தொழிலாளி  எனும்  டப்பா  படம்  கொடுத்ததும்  ஸ்ரீதர்தான். இந்த  இரண்டுக்கும்  இடைப்பட்டு  மீடியம்  ஹிட்  அடிச்ச    படம்தான்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

வில்லன்  ஒன்  சைடா லவ் பண்ற  பொண்ணுக்கு  வேற  ஒருத்தன்  கூட  கல்யாணம். கடுப்பான  வில்லன்  அவளைக்கொலை  பண்ணிடறான். கொலை  பண்ணிட்டு  போலீஸ்  துரத்தும்போது  அப்போதைக்கு  தப்பிக்க  நாயகிகள்  இருவர் இருக்கும்  வீட்டில்  அடைக்கலம்    ஆகறான்  , அவங்க  சாமார்த்தியமா  அவனை  போலீஸ்  ல  பிடிச்சுக்கொடுத்துடறாங்க. இதனால காண்டான  வில்லன்  அவங்களைப்பழி  வாங்கறதா  சபதம்  போடறான். அதுல  அவன்  ஜெயிச்சானா? இல்லையா?  என்பதுதான்  கதை \


  என்னடா? இது  மேலே  சொன்ன  கதைல  ஹீரோவே  இல்லையே? அது  போக  இது  20  நிமிட  குறும்படத்துக்கான   கதை  மாதிரி  தெரியுது  . இதை  எப்படி  ரெண்டேகால்  மணி  நேரம்  இழுக்க  முடியும் ? அப்டினுதானே  யோசிக்கறீங்க?அதுக்குதானே  கதை  இலாகா  இருக்கு ?


 அந்த  இரு  தோழிகளும்  ஹீரோவை  கலாட்டா  பண்றாங்க . ஒரு  தோழி  ஹீரோவை  ஒன்சைடா  லவ்வி  2  டூயட்டும்  பாடிடுது . இன்னொரு  தோழியை  ஹீரோ  ஒன்  சைடா  லவ்வி  மேரேஜூம்  பண்ணிக்கிறார்


ஹீரோவா  சுரேஷ்.  கமல் , மோகன் , கார்த்திக்  வரிசைல  அந்தக்காலத்துல   காலேஜ்  பெண்களால்  சிலாகிக்கப்பட்ட  ஒரு  இளம்  ஹீரோ  சுரேஷ் . இதுல  கிட்டத்தட்ட  ஒரு  கவர்ச்சி  நடிகை  மாதிரி  தான்  இவரை  யூஸ்  பண்ணி  இருக்காங்க 


 ஹீரோயின்களா  நளினி ., சாதனா. இதுல சாதனா  கிளாமருக்கு  என்று  முடிவானதும்   நீச்சல்  டிரஸ்ல  ஒரு  டூயட் , சாதா  டிரஸ் ல  ஒரு  டூயட்னு  பாட  விடறாங்க . குணச்சித்திர  நடிப்புக்கு  நளினி  என்பதால்  ஒரே  ஒரு  டீசண்ட்டான  பாட்டு  அவருக்கு 


 தேங்காய்  சீனிவாசன்  -  மனோரமா  காமெடி   சின்ன  பொருளை  திருடி  வெச்சுக்கும் கிளப்டோமேனியா    வியாதியை  வெச்சு  கொண்டு  போனது  சுமாரா  இருந்தாலும்  வில்லன்  காம்போ  காமெடி  டிராக்  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கு 


 வில்லனா  புது முகம்  வினோத் . நல்லா  தான்  பண்ணி  இருக்கார் 


இசை  இளைய  ராஜா


1  ஏண்டி அம்மா  கேலி  சும்மா   2    ஒர்ய  ஒரிய  ஒரியாட்டடி  வலையில்  விழுந்த  வனமோகினி   3   ஒரு  நாளில்  வளர்ந்தேனே  மலர்ந்தேனே  4   என் அன்பே  என் அன்பே  நீ  என் வசம்   5  அனுராதாவோட  கிளப் டேன்ஸ்  பாட்டு  அதை  ஸ்கிப்  பண்ணிட்டதால என்ன  பாட்டுனு  தெரில (அந்தக்காலங்களில்  இது  மாதிரி  ஒரு  கிளப்  டேன்ஸ்  சாங்  அவசியமா  அனாவசியமா  இடம்  பெறும்  . சகிக்காது. ஆனா  அதை  ரசிக்கவும்  ஒரு  சி  செண்ட்டர்  ஆடியன்ஸ்  க்ரூப்  இருந்திருக்கு  போல )


 இதுல்;  5  பாட்டுல  3  பாட்டு  செம  ஹிட்டு 


பின்னணி  இசை  வழக்கமா  கலக்குவார்  ராஜா  இதில்  சுமாராதான்  பண்ணி  இருக்கார் 


சபாஷ்  டைரக்டர் (ஸ்ரீதர்)


1   மெயின்  கதையான  வில்லன்  கதை  மொத்தமே  15  நிமிசம்  தான்  , ஆனா   அதுக்கு  சம்பந்தமே  இல்லாத  ஹிரோ -  ஹீரோயின்கள்  ரொமாண்டிக்  போர்சன்  தான்  2  மணி  நேரம்  அதை  ஜாலியா  கொண்டு  போன  விதம்


2  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  2  ஹீரோயின்களும்  குளிக்கற  சீன்கள்  எல்லாம்  வெச்சிருக்காங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  பொதுவா  அரசியல்  பலம்  மிக்க  விஐபி  யைக்கொலை  பண்ணத்தான்  உயரமான  பில்டிங்க்ல  இருந்து ரைபிள்ல  குறி பார்த்து  லாங்க்  ஷாட்ல  ஷூட்  பண்ணுவாங்க . ஆனா  ஒரு  சாதா  பொண்ணைக்கொலை  பண்ண  மேரேஜ்  ஊர்வலக்கூட்டத்துல  பண்றது  ரொம்ப  ரிஸ்க்  ஆச்சே?

2  வில்லன்  லவ்  பண்ற  பொண்ணுக்குக்கல்யாணம்கறதாலதான்  கொலை  பண்றான் , ஆனா  டிஸ்கோ  சாந்தி  கிட்டே  டயலாக்  பேசும்போது  உங்க  கூட பல  வருசம்  வாழ்ந்திருக்கறதால  உங்களுக்கு  ஹெல்ப்  பண்றேன்னு  சொல்வது  எப்படி ?


3  டிஸ்கோ  சாந்தி  வில்லன்  கிட்டே  இனிமே  வீட்டுக்கு  வர  வேணாம்,  போலீஸ்  கண்காணிக்குதுனு  சொன்ன  பின்னும்  வில்லன் டூர்  ஸ்பாட்  மாதிரி  வந்துட்டு தான்  இருக்கான்


4  வில்லன்  ஜெயில்ல  இருந்து  தப்பி  ஹாயா  சுத்திட்டு  இருக்கான். பேப்பர் ல  அவன்  ஃபோட்டோ  வருது  ஆனா ஒரே  ஒரு  கூலிங்  கிளாஸ்  போட்டா  அடையாளம்  தெரியாதா?


5   தோழிகள் 2  பேரும்  ஒண்னாதான்  எப்போப்பாரு  இருக்காங்க டக்னு  வேலையை  முடிக்காம  ஒவ்வொருவரா  கொலை  பண்ண  வில்லன்  முடிவெடுப்பது  ஏன்?  படத்தை  இழுக்கவா? 


6  ஒரு  சீன்ல  நளினி  குளிச்சுட்டு  இருக்கும்போது  மோதிரம்  வழுக்கி  சிங்க்ல  விழுது . சுரேஷ்  வந்து  அதை  எடுத்தது,ம்  உங்க  கையாலயே  அதை  போட்டு  விடுங்க  அப்டீங்கறார். சிங்க்ல  ல  விழுந்த  மோதிரத்தைக்கழுவாமயே  போட்டு  விடறார். இது  ஒரே  ஷாடல்  வேற  எடுத்துத்தொலைச்சிருக்காங்க 


7   வில்லன்  டிஸ்கோ  சாந்தி  கிட்டே  எனக்குப்பணம்  தேவைப்படும்போது  சொல்லி  அனுப்றேன் நான்  சொல்ற  இடத்துல  நீ  பணம்  கொண்டு  வந்து  தரனும்கறான்  ஆனா  ஒவ்வொரு  டைமும்  வீட்டுக்கு  வந்து  தான்  வாங்கிட்டுப்போறான்


8  போலீஸ்க்கு  ஃபோன்  பண்ணும்  டிஸ்கோ  சாந்தியை  வில்லன்  பார்த்துடறான்  அப்பவே  டக்னு  அதை  தடுக்காம  ஸ்லோ  மோஷன்ல   மெதுவா  வந்து 10  நிமிசம்  கழிச்சுக்கொலை  பண்றான்


9    வில்லன்  ஒரு  கேனக்கிறுக்கனா  இருப்பான்  போல  நளினி  வீட்டுக்கு  ஃபோன்  பண்ணி  இன்னும்  5  நிமிசத்துல  உன்  வீட்டுக்கு  வர்றேன்  என்  கிட்டே  இருந்து  நீ  தப்பிக்கவே  முடியாதுனு  டயலாக்  பேசறான். அதுக்கு  பேசாம  போய்  இருக்கலாம் 

10    வில்லன்  இருக்கும்  வீட்டில்  மனோரமா  நுழைந்து  கதவைத்தாழ்  போடாமதான்   இருக்காங்க  ஹீரோ  சும்மாவே  உள்ளே  வரலாம்   பைக்  ல  வந்து கதவை  எல்லாம்  உடைச்சுக்கிட்டு  எதுக்கு  கஷ்டப்படனும் ?


ரசித்த  வசனங்கள்


  மொத்த  ரெண்டே  கால்  மணி  நேரபப்டத்துல  ரசித்த  வசனம்னு  தேடுனா  காமெடி  டிராக்  தான்  சிக்குச்சு 


1   என்னை  வருத்தப்பட  விடுங்களேன்


2  ஹாஸ்பிடல்ல  என்னென்ன  பலகாரம்  கொடுத்தாங்க ?


3   ஏங்க  ஏற்கனவே மூணு  பொண்ணுங்களை  அவன்  கொன்னிருக்கான்.  என்னை  ஏதாவது  பண்ணிடுவானோ?


 இது  பயமா?  எதுனா  செய்யட்டும்னு  ஏக்கமா? 


சிபிஎஸ் ஃபைனல்  கமெண்ட்  - இது  காமெடிப்படம்  இல்லை  ஆனா  இவங்க  எடுத்து  வெச்சிருகக்ற  சீன்களை  எல்லாம்  பார்த்து  ஜாலியா  சிரிச்ட்டு  வரலாம் ரொம்ப  மொக்கை  எல்லாம்   இல்லை    ரேட்டிங்   - 1.75 / 5 . யூ  ட்யூப்ல  கிடைக்குது