Monday, July 04, 2022

சிபிஐ 5 -த பிரெய்ன் - CBI5 THE BRAIN ( 2022) ( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஈரோடு தேவி அபிராமில  1988ல்  ரிலிஸ்  ஆன  ஒரு  சிபிஐ  டைரிக்குறிப்பு  மலையாளப்படமாகவே  நேரடியா  ரிலீஸ்  ஆகி  50  நாட்களைத்தாண்டி  ஓடுச்சு.அந்தப்படம்  அவ்ளோ  ஹிட்  ஆனதுக்கு  முக்கியக்காரணம்  அதுல  வரும்  ஒரு  மர்ம  மரணத்தில்  இறந்து  கிடந்தவர்  பாடி  வெய்ட்ல ஒரு  டம்மி  பொம்மை  ரெடி  பண்ணி  அதை  மாடில  இருந்து  தூக்கிப்போட்டு  அது  விழுந்த  பொசிசனை  வெச்சு  இது  தற்கொலை  இல்லை  கொலை என  முடிவுக்கு  வரும்  முக்கியமான  காட்சிதான் .பலரும்  சிலாகித்த  ஒரு  உத்தி  அது 


அந்தப்படத்தோட  அதிரி  புதிரி  வெற்றியைப்பார்த்து  மிரண்டு போன  அந்த  டீம்  அதே  டீமை  வெச்சு  அடுத்த  வருசமே  1989  ல    ஜாக்ரதா   எனும்  படத்தை  ரிலீஸ்  பண்ணுச்சு .ஆனா  அது  பிரமாதமா  ஹிட்  ஆகலை . அதனால  ஒரு  கேப் 


 மீண்டும் 2004 ல  சேதுராம ஐயர் சிபிஐ   ரிலீஸ்  ஆச்சு  இது  நல்ல  ஹிட் , இது  தமிழகம்  முழுவதும்  ரிலீஸ்  ஆகி  வெற்றி  வாகை  சூடியது 


2015ல்  நேரறியான் சிபிஐ   ரிலீஸ்  ஆச்சு . இது  மீடியம்  ஹிட் 


இப்போ 2022  ல  இது  ரிலீஸ்  ஆகி  இருக்கு. அனேகமா  தென்னிந்திய  சினிமாக்களிலேயே  ஏன்  இந்திய  சினிமாக்களிலேயே  5  பாகங்களாக  வந்தது  இதுவாகத்தான்  இருக்கும்  . இதுக்கு  அடுத்த  இடங்களில்  சிங்கம் 1,2,3   பிறகு   முனி , காஞ்சனா  1  காஞ்சனா2 . கமல்  நடிச்ச  கல்யாணராமன் ,ஜப்பானில்  கல்யாணராமன்   விக்ரம்  விக்ரம் 2022  , விஸ்வரூபம்  1  & 2    விக்ரம் நடிச்ச  சாமி 1  சாமி2 

ரஜினி  நடிச்ச எந்திரன் ,  2.ஓ  அப்டினு  பட்டியல்  நீண்டுக்கிட்டே  போகும் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


சம்பவம் 1  - ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  சரியான  சந்தேகப்பிராணி . புரியாத  புதிர்ல  ரகுவரன்  ரேகாவை  சந்தேகப்படற  மாதிரி  எப்போப்பாரு  மனைவியை  சந்தேகப்பட்டுட்டே  இருக்காரு . அந்த  மனைவி  ரேகா  மாதிரி  புருசனை  போட்டுத்தள்ளாம  புருசனை  டைவர்ஸ்  பண்ணிட்டு   சீதா  மாதிரி  வேற  ஒரு  துணையுடன்  வாழறாங்க . இதனால  செம  காண்டு  ஆன  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  தன்  முன்னாள்  மனைவியை  அவ  புருசனை  பழி  வாங்க  துடிக்கிறார் 


 சம்பவம் 2  - இன்னொரு  போலிஸ்  ஆஃபிசரோட  சம்சாரம்  ஒரு  வக்கீல்.  இவங்களுக்கு  புருசனைப்பிடிக்கலை  தன்  காலேஜ்  மேட்  ஒருத்தனை   எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  லைஃப்  பார்ட்னரா  வெச்சிருக்கு . இவங்க  2  பேரும்  ஜோடியா  சுத்தறதை  ஒரு  போலிஸ்  அஃபீசர்  பார்த்துடறார்


 சம்பவம் 3  -  வில்லன்   டெக்னாலஜி  தெரிஞ்சவன் . ஹார்ட்  பிராப்ளம்  வந்தவங்க  இதயத்துக்கு  பேஸ்  மேக்கர்  வெச்சுக்குவாங்களே  அதை  கம்ப்யூட்டர்  ,மூலமா  ஆப்பரேட்  பண்ணி  செயற்கையான  முறையில்  இதயத்தை  நிற்க  வைத்து  சாகடிக்க  முடியும்னு  ஒரு  டெக்னாலஜி   தெரிஞ்சு  வெச்சிருக்கான் 


சம்பவம் 4 - விமானப்பயணத்துல  ஒரு  அமைச்சர்  ஹார்ட்  அட்டாக்ல  ஸ்பாட்  அவுட் . இது  இயற்கையான  மரணம்னு  நினைச்சு  கேசை  க்ளோஸ்  பண்ணுது  போலீஸ் . பிறகு  அதே  மினிஸ்டரோட ஃபேமிலி  டாக்டர்  மர்மமான  முறையில்  மரணம்  அடைகிறார். அந்த  கேசை  டீல்  பண்ற  போலீஸ்  ஆஃபீசரும்  மர்ம  மரணம்  அடைகிறார். மினிஸ்டர்  மரணத்தில்  மர்மம்  இருக்குனு  டவுட்  கிளப்புன  ஒரு பிரஸ்  ரிப்போர்ட்டர்  மர்ம  மரணம்


  இந்த  கேஸ்  சிபிஐ கைக்கு  சிக்குது .  ஹீரோ  அதை  எப்படி  துப்பு  துலக்கி  கண்டுபிடிச்சார்  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


ஹீரோவா  மெகா  ஸ்டார்  மம்முட்டி . இவரோட  பாடி  லேங்க்வேஜ் , வசன  உச்சரிப்பு  அனைத்தும்  அருமை .   அந்த  கம்பீரம்  தான்  அவரது  பிள்ஸ் . அவர்  வரும்போது  பின்னணியில்  இசைக்கும்  பிஜிஎம்  மாஸ் . லேசா  தொப்பை  போட்டிருப்பது  மட்டுமே  மைனஸ்


லாயராக  ஆஷா  சரத். என்ன  ஒரு  மிதர்ப்பான  நடிப்பு . தன்  கள்ளக்காதல்  விஷய்ம்  சிபிஐக்கு  தெரிஞ்சும்  ஆண்ட்டி  அலட்டிக்கவே  இல்லையே ? லெஃப்ட்  ஹேண்ட்ல   டீல்  பண்ணும்  விதம்  அருமை 


ஃபைவ்  ஸ்டார்ல  சாக்லேட்  கேர்ளாக  அறிமுகம்  ஆன  கனிகா  வுக்கு  இதில்  ட்விஸ்ட்  ஏற்படுத்தும்  ரோல்  அற்புதமா  பண்ணி  இருக்கார் 


காமெடி  ரோல்   குணச்சித்திர  ரோல்  பண்ணிட்டு  இருந்த    சவுபின்  சாகிர்  இதுல  ஆக்சன்  ரோல்  நல்ல  வெரைட்டி  காட்டி  இருக்கார் 


கடந்த  4  பாகங்களிலும்  முக்கிய  ரோல்களில்  நடிச்ச  முகேஷ்  , ஜெகதி  ஸ்ரீகுமார்  இதிலும்  ஆஜர்  , ஆனா  அதிக  காட்சிகள்  இல்லை  வந்தவரை  நிறைவு 


 சிபிஐ  ஆஃபீசர்களாக  வரும்  ரஞ்சி  பணிக்கர்  மிடுக்கான  நடிப்பு  அவரது  டிரஸ்சிங்  சென்ஸ்  பக்கா 


லொட  லொடனு  பேசிட்டே  இருக்கும்  போலீஸ்  ஆஃபீசராக  சாய்  குமார்  கவனம்  கவர்கிறார்.பிரதாப்  போத்தன்  அதிக  வேலை  இல்லை 


திரைக்கதையை  எஸ் என்  சாமியும்  இயக்குநர்  மது  வும்  இனைந்து  எழுதி  இருக்காங்க , கொஞ்சம்  சுத்த  வைக்கும்  கதைதான்  ஆனா  சாமார்த்தியமா  திரைக்கதை  அமைச்சிருக்காங்க 


இசை  ஜேக்ஸ்  பிஜாய் . பிஜிஎம்  தான்  இவரது  துருப்புச்சீட்டு   


சபாஷ்  டைரக்டர்  ( மது )


1  பொதுவாக  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  கொலை  நடந்ததும்  அது  யார்  செஞ்சாங்க  எதுக்கு  என  தான்  கதை  நகரும்  , ஆனா  மாறுபட்டு  இதில்  டார்கெட்  ஒருத்தருக்கு  வெச்சோம்  ஜஸ்ட்  மிஸ்  ஆகி  வேற  ஒருத்தர்  செத்துட்டாரு  என்ற  ட்விஸ்ட்டை  அபாரமா  நம்பி  இருக்காங்க 


2   ஆஷா  சரத் , கனிகா  போன்ற  கிளாமர்  ஆர்ட்டிஸ்ட்  இருந்தும்  க்தைக்களம்  கள்ளக்காதலில்  நகர்ந்தும்  காட்சிகளை  கண்ணியமாகவே  படமாக்கிய  விதம் 


3  விபத்தில்  சிக்கி  பேச்சு  வராத  ஜெகதி  ஸ்ரீகுமாரை  சாமார்த்தியமாக  இதில்  பயன்படுத்திய  விதம்  (  ஏன்னா  மற்ற 4  பாகங்களில்  இவர்  முக்கியமான  காமெடி  ரோலில்  வருவார்  ) 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடலக்ள் 


1  பொதுவாக  மினிஸ்டர்  வரும்    ஃபிளைட்டில்  பாதுகாப்பு  ஏற்பாடுகள்  பலமா  இருக்கு,ம்  அதனால்  வில்லன்   கொலை  செய்ய    தேர்ந்தெடுத்த  இடம் ,  நேரம்  மிக  மிக  ரிஸ்க்  ஆனது . அந்த  ஃபிளைட்டில்  மினிஸ்டர்  வர்றார்னு  தெரியாம  போச்சு  என  சால்ஜாப்  சொன்னாலும்  ஏத்துக்க  முடியல 


2   கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஒரு  விதவைப்பெண்ணிடம்  பேசும்போது  அவரிடம்  தவ்றான  பார்வை  செலுத்துறார். டச்  பண்ன  ட்ரை  பண்றார். இது  கதைக்கோ  ட்விஸ்ட்டுக்கோ  எந்த  சம்பந்தமும் இல்லாமல்  தனியா  தெரியுது 


3 பொதுவா  போலீஸ்  ஆஃபீசர்   உடைய  மனைவி  கள்ள்க்காதலில்  ஈடுபடுவது  மிக  ரிஸ்க் ,  கள்ளக்காதலனுக்கும்  அந்த  ரிஸ்க்  இருக்கு  ஏன்னா  மாட்டிக்கிட்டா  போலீஸ்  ஆஃபீசர்  சாமார்த்தியமா  போட்டுத்தள்ள  வாய்ப்பு  இருக்கு  ஆனா  அந்த  பதை  பதைப்பே  இல்லாம  அவங்க  2  பேரும்  ஜாலியா  சுத்திட்டு  இருக்காங்க 


4  பொதுவா  கள்ளக்காதல்  ஜோடி  நைட்டில்  ஒரு  இடத்தில்  கூடி  பின்  அதிகாலை 3  டூ4  கிளம்பிடுவாங்க  ஏன்னா  அதிகாலை  5  மணிக்கு  பேப்பர்  போடறவன்   வாக்கிங்  போறவன்  பால்  காரர்  இப்படி  எதிர்ப்பட  வாய்ப்பு  இருக்கு  , ஆனா  அந்த    ஜாக்கிரதை  உணர்வின்றி  அந்த  லாயர்  அதிகாலை  அஞ்சரை  மணிக்கு அஞ்சரைக்குள்ள  வண்டியைப்பிடிக்கற  மாதிரி  அசால்ட்டா  வெளில  வந்து  அப்படி  மாட்டிக்குவாரா? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  பாகம்  அளவு  பிரமாதம்  இல்லை  என்றாலும்  பார்க்கக்கூடிய  தரத்தில்  இருக்குனு  சொல்லலாம். படம்  கொஞ்சம்  ஸ்லோ  வாதான்  போகுது  .நெட் ஃபிளிக்ஸ்lஅ  கிடைக்குது  ரேட்டிங் 2.75 / 5