பாண்டவர் பூமி மாதிரி தரமான படத்தில் நடித்தும் தடம் மாதிரி ஒரு த்ரில்லர் மூவில நடிச்சும் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலைனு அருண் விஜய்க்கு ஒரு ஆதங்கம். தனக்குப்பின் சினி ஃபீல்டுக்கு வந்த சிவகார்த்திகேயன் இப்போ மார்க்கெட்ல எங்கேயோ போய்ட்டாரு என்ற மனவருத்தமும் அவருக்கு உண்டு அதனால் தான் சிவகார்த்திகேயனின் சொந்தப்படமான சீம ராஜா டப்பா ஆனதும் அருண் விஜய் தன் ட்விட்டர் பக்கத்தில் அவரை எள்ளி நகையாடி ஒரு ட்வீட் போட்டார். விக்ரம் , சூர்யா வை எல்லாம் வெச்சு மாஸ் மசாலா ஹிட் குடுத்த தன் தெய்வ மச்சான் ஹரி தன்னை ஹீரோ வா வெச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணலையே என்ற மனக்குறையும் அவருக்கு இருந்தது. ,இப்போ ஹரிக்கும் மார்க்கெட் இல்லை அவரது கடைசி 2 பட்ங்கள் ஓடலை . அதனால இப்போ இருவரும் இன்ணைஞ்சிருக்காங்க
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோவோட அப்பாவுக்கு அக்னி நட்சத்திரம் படத்துல வர்ற மாதிரி ரெண்டு சம்சாரம். முதல் தாரத்துக்கு 3 பசங்க. 2வது தாரத்துக்கு ஒரு பையன். . அவர் தான் ஹீரோ.எல்லாரும் கூட்டுக்குடும்பமா இருக்காங்க . முதல் தாரத்தோட முதல் பையனோட மகள் ஒரு முஸ்லீம் பையனை காதலிக்கிறா. இது ஹீரோவுக்கும் தெரியும். ஆனா யார்ட்டயும் சொல்லலை . ஒரு நாள் அந்தப்பொண்ணு லவ்வரோட ஓடிடுது. தன் மகள் ஓடுன சோகத்தை விட அந்த உண்மையை மறைச்ச ஹீரோ மேல கோபப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளில அனுப்பறாங்க . பிரிஞ்ச குடும்பம் சேர்ந்துச்சா? இல்லையா? இதான் கதை
ஹீரோவா அருண் விஜய். ஜிம் பாடி அவருக்கு நல்லா கை கொடுத்திருக்கு. ஆக்சன் ஃபைட் காட்சிகளில் விளையாடி இருக்கிறார்.அம்மா அப்பா செண்ட்டிமெண்ட் காட்சிகளில் நல்ல உருக்கம்
ஹீரோயினா ப்ரியா பவானி சங்கர். மிக கண்ணியமான உடை , எளிமையான தோற்றம், கச்சிதமான நடிப்பு இவரது பலம் . வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்கள் மாதிரி லூசுத்தனம் செய்யாமல் இயற்கையாக இருப்பது சிறப்பு
அண்னனாக சமுத்திரக்கனி வில்லத்தன பார்வையில் ஒரு திருட்டுத்தனம் தெரியுது . குற்ற உனர்ச்சி காட்டனும்னு டைரக்டர் சொல்லி இருக்கலா,ம்அப்பாவாக ராஜேஷ் , அம்மாவாக ராதிகா பெண்களைக்கவரும் நடிப்பு
யோகிபாபு காமெடி என்ற பெயருல மத்தவங்களை உருவ கேலி பண்றார். ஷூட்டிங் கிளம்பும்போது கண்ணாடியில் தன்னைபார்த்துக்கொண்டு கிளம்புதல் நலம், அவர் ஒன்றும் சந்தானம், விவேக் போல பர்சனாலிட்டி என்பதை தெரிஞ்சுக்கனும்/ அவரு மற்ற பாத்திரங்களை அந்தத்தலையா இவனே அவனே என விளிக்கும்போது எரிச்சலாக இருக்கு
வில்லன் ஒரு தண்டக்கடன். இந்த லட்சணத்துல டபுள் ஆக்ட் வேற . டி வி சீரியல்ல வந்து கடுப்பைக்கிளப்பும் ரெண்டு பேர் இதுல சமுத்திரக்கனிக்கு தம்பிகளா வர்றாங்க . ஒருய் வேளை டி வி சீரியல் பார்க்கும் தாய்க்குலங்களைக்கவரவா இருக்கும்
இசை ஜிவிபி 2 பாட்டு செம ஹிட்டு . கேமராமேன் வழக்கம் போல் கேமராவை ஷேக் பண்ணி கலக்கி இருக்கார்
சபாஷ் டைரக்டர்
1 அட்லீ மாதிரி அடுத்தவங்க படத்தை காப்பி அடிக்காம தன் முந்தைய படங்களான வேங்கை , தாமிரபரணில இருந்தே பட்டி டிங்கரிங் பண்ணி திரைக்கதை அமைத்த விதம்
2 பிரியாபவானி சங்கரை கண்ணியமாகக்காட்டியது பாடல்காட்சிகளில் லொக்கேஷன் கேமரா ஆர்ட் டைரக்சன் ச்பாஷ்
3 ஹீரோவின் இடத்துக்கு வரும் ஹீரோயினின் அப்பா தலைவாசல் விஜய் அங்கே தன் மகள் இருப்பது தெரியாமல் இதே மாதிரி ஹாட் பேக் எங்க வீட்டிலும் இருக்கு , இதே மாதிரி ஸ்கூட்டி எங்க வீட்டிலும் இருக்கு என சொல்ல அதுக்கு கவுண்ட்டர் கொடுக்கும் யோகிபாபு இந்தாளு பொண்ணைப்பார்த்திருந்தாக்கூட இதே மாதிரி பொண்ணு என் வீட்டிலும் இருக்குனு சொல்வார் என்பது
ரசித்த வசனங்கள்
1 ஒரு குடும்பத்துல சந்தோஷத்தை வேணா எல்லாரும் அனுபவிக்கலாம்,ஆனா யாரோ ஒருத்தர் கஷ்டப்பட்டா போதும்
2 வலியும் ,வேதனையும் எல்லாருக்கும் இருக்கும்,ஆனா ஒருத்தரை ஒருத்தர் குத்தி வேதனைப்படுத்திக்க வேணாம்
3 உலகத்துலயே பெரிய பாவம் ஒரு பெண்ணை கை நீட்டி அடிக்கறதுதான்,அந்தத்தப்பை நான் பண்ணிட்டேன்
4 உன் செல் ஃபோன் ஸ்க்ரீன் லாக் ரிலீஸ் எது?
எல் .உன்னுது?
அதை அப்படியே தலைகீழ் ஆக்கிடலாம் 7
அப்போ ரெண்டையும் சேர்த்துனா ஸ்கொயர் , கட்டம் கட்டிடலாம்
5 கும்பகோணத்தில்; இருக்கீங்கனு சொன்னீங்க , லோக்கல்ல தான் இருக்கீங்க ?
அ து வந்து கும்பகோணம் டிகிரி காபி கடைல..
லாஜிக் மிஸ்டேக்ஸ் ,திரைக்கதை சொதப்பல்கள்
1 யோகி பாபு தன் ஜிம்மி பெயர்க்காரணம் கூறும் நாய் பிரியாணி கதை ஆல்ரெடி அமைதிப்படைல சத்யராஜ் சொன்ன கதைதான்
2 ஒரு சீன்ல ஹீரோ கார்ல உக்காந்திருக்கார் , அவர் கார்ல தான் வில்லனோட அடியாள் வெளில இருந்து கண்ணாடியை குனிஞ்சு பார்க்கும்போது ஹீரோ தன் கார்க்கண்னாடியை தானே உடைச்சு ஓட்டை ஏற்படுத்தி பில்டப் கொடுக்கிறார். எதுக்கு ?
3 எப்போ கல்யாண வீட்ல தண்ணி அடிச்சீங்களோ அப்பவே உங்க மேல வெச்சிருந்த ,மரியாதை போச்சுனு வசனம் பேசும் ஹீரோ பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவரே தண்ணி அடிக்கிறார்
4 சிசிடிவி கேமராவில் மங்கலாகத்தெரியும் மஞ்ச சுடிதார்யார் என தெரியாமல் ஹீரோ தடுமாறுகிறார். மத்தவங்களுக்கு தெரியல ஓக்கே டூயட் பாடுன ஹீரோயினை ஹீரோவுக்கு தெரியாதா?
5 ஹீரோ தன் ஃபோனை ஹீரோயின் வீட்டில் மறந்து வெச்சுட்டுப்போக அதைக்குடுத்துட்டு வா என மகளிடம் சொன்னதும் மகள் தன் ஃபோனை மாற்றிக்குடுப்பது எப்படி ? கேட்டா ஒரே மாடல் அதனாலனு சமாளிக்கறாங்க. டிஸ்ப்ளே பார்த்தா தெரியாதா?
6 ஹீரோ தன் கார் கண்னாடியை தானே உடைப்பது மாதிரி வில்லன் தன் செல் ஃபோனை தானே உடைச்சுக்கறான் கஷ்டம்டா சாமி
சி பிஎஸ் கமெண்ட் - மாமூல் ம்சாலா படம் பார்ப்பவர்களுக்குப்பிடிக்கும். எனக்குப்பிடிக்கலை . ஹீரோயின் 2பாட்டு மட்டுமே பிடிச்சுது . யானை− அருண்"விஜய்−ன் வலிமை + ப்ரியா பவானி சங்கரின்"எளிமை + இயக்குனர் ஹரியின் பழமை. யோகிபாபு கடுப்பு அடிக்கும் காமெடி.2 பாட்டு செம ஹிட்டு.பி,சி சென்ட்டர்ல ஓடிடும்.விகடன்"மார்க்"40 ,ரேட்டிங் 2.25 /5