Tuesday, June 28, 2022

தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (1983) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)


 ஹீரோ புகழ் பெற்ற  மூளை  மற்றும்  நரம்பியல்  மருத்துவர். இந்தியா  பூரா  பேசப்படும் ஆபரேஷனை  வெற்றிகரமா  நிகழ்த்தியவர் . இவருக்கு எல்லாமே  பர்ஃபெக்டா  இருக்கனும், ஒரு  சின்ன  தூசி  ஒட்டி  இருந்தாக்கூட  அந்த  டிரசைப்போட  மாட்டார் . இவருக்கு  ஒரு  சம்சாரம் , இவங்க  ரொம்ப  கூச்ச  சுபாவம்  , தனிமையில்  தம்பதிகள்  இருக்கும்போது கணவன்  எதிரே  கூட  புடவை  மாற்ற  மாட்டார்.. இவங்களுக்கு  ஒரு  பெண்  குழந்தை.  ரொம்ப  அழகா  இவங்க  ஃபேமிலி  ரன்  ஆகிட்டு  இருக்கு 


 வில்லன் ஒரு  மாடர்ன்  ஆர்ட்  ஓவியர் . இவர்  கலைக்கண்ணோடவோ வேற  ஏதோ  கண்ணோடவோ  பெண்களோட நிர்வாண  ஓவியம்  வரைவது  இவரோட  சம்சாரத்துக்குப்பிடிக்கலை , கருத்து  வேற்றுமையால  டைவர்ஸ்  வாங்கிட்டுப்போய்ட்டாங்க . ஜீவனாம்சம்  கொடுத்து  செட்டில்  பண்ணிட்டார் .


 ஓரு  ஓவியக்கண்காட்சில  வில்லனை  ஹீரோ  மீட்  பண்றார். இவங்க  ரெண்டு  பேரும்  பால்யகால  நண்பர்கள்.  ஹீரோ  சின்ன  வயசுல  படிக்கும்போது  வில்லன்  தான்  உதவி  பண்ணி  இருக்கார் .. அந்த  நன்றிக்கடன்  ஹீரோவுக்கு  உண்டு .  கண் காட்சில  வில்லன்  வரைந்த  ஓவியங்களை   ஹீரோவும்  , குழந்தையும்  ஆஹா  ஓஹோ  அபாரம்  பரிமளா    ரேஞ்சுக்குப்பாராட்றாங்க . ஆனா  ஹீரோயின்  அய்யோ அபச்சாரம்  நாராசம்  ரேஞ்சுக்கு  கரிச்சுக்கொட்றாங்க 


 வில்லனுக்கு  உடல்  நிலை  சரி  இல்லாம  போகுது. தன்   நன்றிக்கடனை  இப்படியாவது  செலுத்தலாம்னு  ஹீரோ  வில்லனை  தன்  வீட்டுக்குக்கூட்டிட்டு  வந்து  தங்க  வைக்கிறார்

 இதுக்குப்பின்  நடக்கும்  விபரீதங்களும்  அதுக்குப்பின்  நடக்கும்  சம்பவங்களும்  தான்  மிச்ச  மீதிக்கதை 


ஹீரோவா  சிவக்குமார். இவர்  டாக்டரா  ஆபரேஷன்  பண்ணும்  காட்சிகளை  விட  வீட்டில் மனைவியுடன்  செய்யும்  குறும்பில்  நல்ல  ஈடுபாட்டுடன்  நடித்திரு்க்கிறார். பிற்பகுதியில்    சீரியஸ்  நடிப்பிலும்  முத்திரை  பதிக்கிறார்


 ஹீரோயினா  லட்சுமி .  கணவன்  முன்பே  கூச்சப்படுவது  ட்ரீட்மெண்ட்  தரும்போது  வில்லன்  கையைத்தொடவே  அருவெறுப்புக்காட்டுவது  என  கலக்கல்  நடிப்பு 


  குழந்தையா   நடிச்சவர்  அப்பாவித்தனமான  நடிப்பு   வில்லனாக  சிவச்சந்திரன்.  நறுவிசான   நடிப்பு . 


 மகள்  பெரியவள்  ஆனதும்  ரோகினி  பங்களிப்பு  பாந்தம் 


 கதைக்கு  சம்பந்தம்  இல்லாம  ஒரு  காமெடி  டிராக்  அதுல  ஒய்  ஜி  மகேந்திரன்  வெண்ணீற  ஆடை  மூர்த்தி    நொக்கை  ஜோக்ஸ்


 இசை  சங்கர்  கணேஷ்  பாடல்கள்  ஓக்கே  ரகம் 


 ஒளிப்பதிவு  எடிட்டிங்  ஓக்கே . பின்  பாதி  திரைக்கதை  தடுமாறுது 


சபாஷ்  டைரக்டர்   ( எம்  பாஸ்கர் )


1    ஹீரோ  , ஹீரோயின் , வில்லன்  மூவரின்  கேரக்டர்  ஸ்கெட்ச்சும்  பக்காவா  வடிவமைக்கப்பட்டு  எக்சிக்யூட்  பண்ணப்பட்டிருக்கு .ஓப்பனிங்கிலேயே  வசனங்கள்  மூலம்  இவரிவர்  இன்னின்ன  கேரக்டர் என  விளக்கியது  அருமை 


2  ஹீரோ  ஹீரோயின்  இருவருக்குமிடையேயான  தம்பதி  ஊடல்கள்  செம  கிளுகிளுப்பு , இருவருக்கும்  கெமிஸ்ட்ரி  பயாலஜி  ஒத்துப்போனது  சிறப்பு 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   புகழ்  பெற்ர  டாக்டர்  நண்பனை  ஹாஸ்பிடலிலேயே  தனி  நர்ஸ்   வெச்சு  நண்பனைக்கவனிக்கலாம், அல்லது  ஒரு  நர்சை  அப்பாயிண்ட்  பண்ணி  வீட்டில்  நர்சை  வரச்சொல்லி  கவனிக்கலாம்,


2   வில்லன்  வீட்டில்  மயங்கி  விழறான்  . கையைத்தொடவே  கூச்சப்படும்  நாயகி  வில்லனை  அரவணைத்து  கட்டிலில்  ஏன்  கிடத்தனும்  அவன்  என்ன  சாக்கடைலயா  விழுந்துட்டான். தரைல  தானே?  தண்ணீர்  மட்டும்  தெளிச்சா  வேலை  முடிஞ்சது . அந்தக்காட்சி  நம்பகத்தன்மை  இல்லை 


3  ஹீரோயின்  பாத்ரூமில்  குளீக்கும்போது  ஈரக்கையில் பிளக்  போடுவது  ஷாக்  அடிப்பது  அப்போ  வில்லன்  ஓடிவந்து  காப்பாற்றுவது  தப்பு  நடப்பது  செம  காமெடி  ,. கணவன்  வீட்டில்  இல்லாதப்ப  பாத்ரூமில் தாழ்  போடாமல்  தான்  மனைவி  குளிப்பாளா? 


4    பின்  பாதியில்  விழி  ஒளி  இழந்த  நாயகிக்கு  மூக்கு  நல்லாதானே  இருக்கு? அருகில்  இருப்பது  புருசன் தான்  என்பது  வாசனைலயே  தெரியாதா? 


5 நண்பனின்  மனைவியைக்கெடுத்து  விட்டு  வில்லன்  தற்கொலை  செய்துகொள்ளும்  காட்சி  மனதில்  ஒட்டவே  இல்லை 


6   பின்  பாதியில்  ஹீரோ  பரதேசி  மாதிரி  ஆவது  ஊர்  மக்கள்  அவரை  பாபா  பாபா  என  அழைப்பது  படு  செயற்கை 


7  டாக்டராக  இருக்கும்  ஹீரோ  தன்  மனைவியை  மன்னிக்கத்தயார்  இல்லாதது  ஆச்சரியம்,


8  க்ளைமாக்சில்  நாயகி  கடலில்  சாகறேன்னு  கடல்  ஆழத்துக்கு  செல்லாமல்  கரையோரமாகவே  நடப்பது  செம  காமெடி . அம்மாவைக்காப்பாற்ற  மகள்  ஓடி  வரும்போது  மாப்பிள்ளை  ஏன்  அவ்ளோ  பின்  தங்குகிறார்?   டிராமா  பார்ப்பது  போல  இருக்கு 



ரசித்த  வசனங்கள் 


இடிவிழுந்த வீட்டுக்கு யாருமே குடிபோக மாட்டாங்க


2  இது மாடு மேஞ்ச துளசி இனி மாடத்துல வைக்க முடியாது


3  இது அப்பா மீனு, இது அம்மா மீனு, இது நானு மீனு ( குட்டி  மீன்) 


4  பால் பாயசம் செம . ‘இந்த ருசியை மாத்திரம் என்னால் வரைய முடிஞ்சிருந்தா நான் வரைந்த ஓவியங்கள்லேயே இதுதான் நம்பர் ஒன்னா இருக்கும்


5  ஊருக்கே  பூ  விற்றாலும்  தன்  கூந்தலில்  ஒரு  முழம்  பூ  கூட  வைக்காதவதான்  இந்த  ஏழைப்பூக்காரி 


சி பி  ஃபைனல்  கமெண்ட்  - பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  வகையிலான  திரைக்கதை  யூ  ட்யூப்ல  ஜீ ஃபைவ்ல  ஜியோ  சினிமாஸ்ல  கிடைக்குது  ரேட்டிங்  2.5 / 5