ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ , ஹீரோயின் , ஹீரோயினோட அப்பா மூவரும் வக்கீல்.நல்ல வேளை மாமியார் ஜட்ஜ் இல்லை . இதுல ஹீரோ வீட்டோட மாப்ளையா இருக்கார். ஹீரோயின் ரொம்ப வசதி . வாழ்க்கைல முன்னேறனும், பிரபல வக்கீலா ஆகனுகறதுதான் ஹீரோவோட ஆசை , லட்சியம் எல்லாம், ஆனா ஹீரோயின் அவரை ஒரு எடுபுடியா் அதாவது பாய் பெஸ்டியா புருசனை நடத்துது . ஒரு முக்கியமான கேசை எடுத்து நடத்தி ஃபேமஸ் ஆகனும்னு ஹீரோ துடிக்கிறார்
வில்லன் ஊர்ல ஒரு பிரபல தொழில் அதிபர் , அவரை ஒரு பொண்ணு ஒரு வீழாவில் பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை பண்ணி போலீசில் ச்ரண்டர் ஆகுது. ஸ்கோப்பே இல்லாத இந்த கேசை எடுத்து வாதாட ஹீரோ ரெடி ஆகறார்
இது ஹீரோயினுக்கு பிடிக்கல . இதனால ஹீரோ வீட்டை விட்டு வெளில போய்டறார்.இப்போ ஹீரோ வெட்டி ஹீரோயின் வாழா வெட்டி
இந்த கேசை எடுத்து நடத்தி ஜெயிச்சாரா? மீண்டும் ஹீரோயின் கூட இணைஞ்சாரா? அல்லது அந்த கொலைக்குற்ற்வாளி கூட இணைஞ்சாரா? என்பதே க்ளைமாக்ஸ்
ஹீரோவா சிவக்குமார். இவருக்குன்னே தைச்ச ரெடி மேடு சட்டை மாதிரி ரோல், அசால்ட்டா பண்ணி இருக்கார் தன்மானத்துக்கு பங்கம் வரும்போது பொங்கும்போதும் சரி , இன்னொரு பெண்ணுடன் அன்பு காட்டும்போதும் சரி அருமையான நடிப்பு , ஆனா கோர்ட் காட்சிகளீல் கலக்கி இருக்கனும். ஓக்கே ரகம் தான்
ஹீரோயினா அம்பிகா . கணவனை மட்டம் தட்டும் நடிப்பு பிரமாதம் . பிற்பகுதியில் கணவனே கண் கண்ட தெய்வம் ரேஞ்சுக்கு இறங்கி வருவது சரியா ஒட்டலை . கணவன் இன்னொரு பெண்ணுடன் அன்பு செய்கிறான் எனும்போது பொறாமை கொள்வது செம நடிப்பு
கொலைக்குற்றவாளீயாக ரேவதி சோக நடிப்பில் ஜொலிக்கிறார். காதல் கொள்ளும்போது மிளிர்கிறார்
ரேவதியின் கணவராக நிழல்கள் ரவி ஜஸ்ட் லைக் தட் வந்துட்டுப்போறார்
ஹீரோவின் மாமனாராக மேஜர் சுந்தர்ராஜன் செமயான நடிப்பு . வில்லனாக சிவச்சந்திரன் . மிரட்டலான நடிப்பு
இசை சங்கர் கணேஷ். 3 பாட்டு தேறுது திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பு எல்லாமே எம் பாஸ்கர் குட் கோர்ட் சீன்களில் இன்னும் நல்லா வசனம் எழுதி இருக்கலாம்,
கதையுடன் ஒட்டாமல் வியாபாரத்துக்காக கவுண்டமணி செந்தில் காமெடி டிராக்
சபாஷ் டைரக்டர்
1 ஹீரோ ஹீரோயின் கேரக்டர் ஸ்கெட்ச் பக்காவா செட் பண்ணி இருப்பார் அதுக்கு ஒரு சபாஷ் . பட ஓப்பனிங்ல்யே ஆடியன்சை கதைக்குள் இழுத்து விடுவார்
2 ரேவதிக்கான ஃபிளாஷ் பேக் காட்சிகளை ப்ளேஸ் பண்ணிய விதம் அருமை
3 தேவை இல்லாத காட்சிகள் இல்லாமல் திரைக்கதையை கோர்ட் ரூம் டிராமாவாக அமைத்தது. க்ளைமாக்சில் ஹீரோ ஹீரோயின் சேர்வார்களா? மாட்டார்களா? என டெம்போ ஏற்றியது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹீரோ வெட்டி ஆஃபீஸ். கோவிச்சுட்டு வீட்டை விட்டு வெளில போறார். பூவாவுக்கே வழி இல்லை , தங்கறதே சர்ச்ல தான் தங்கறார், ஆனா ஃபீசே தராத தர வழி இல்லாத அவரது கட்சிக்காரர் ரேவதிக்கு புடவை அது இதுனு வாங்கித்தர்றார் ஏது காசு ? அவருக்கு நண்பர்களும் இல்லை
2 ரேவதிக்கு சேலை வாங்கித்தர்றது ஓக்கே பிரா பேண்ட்டீஸ் எல்லாம் வாங்கறார் சைஸ் எப்படி தெரியும் ? அவர் கூட நெருக்கமான பழக்கமும் இல்லை , அவரது கணவர் அனுப்பியதாக பொய் சொல்லித்தான் அதெல்லாம் தர்றார். இது எப்படி சாத்தியம் ?
3 நிழல்கள் ரவி - ரேவதி தம்பதிக்கு மேரேஜ் ஆகி 4 வருடங்கள் வரை அவங்களுக்குள் தாம்பத்யமே நடக்கலை . அப்போ எல்லாம் அது பற்றிக்கவலைப்படாதவர் கோர்ட்ல கேஸ் நடக்கும்போது மட்டும் ரேவதி மீது குறை சொல்றார்
4 ரேவதியின் 14 வருட லட்சியமே வில்லனைக்கொலை செய்வதுதான். ஆனா எப்படி ஒருவரை மேரேஜ் பண்ண ஒத்துக்கறார் ? எப்படியும் தூக்கில் தொங்கப்போறோம்னு தெரியும்தானே?
5 ரேவதிக்குக்கணவர் மீது பெரிய அட்டாச்மெண்ட் இல்லை , இருவருக்கும் நெருங்கிய உறவு இல்லை ஆனா கோர்ட்ல டைவர்ஸ் நியூஸ் கேட்டதும் மயங்கி விழறார். அவரை வக்கீல் ஹீரோ தூக்கிட்டுப்போறார். லேடி கான்ஸ்டபிள் இருக்காங்களே?
6 வில்லன் ரேப் பண்ணப்போறப்ப கார் டிரைவரை பக்கத்துலயே வெச்சு இருப்பது எதுக்கு ? க்ளைமாக்சில் சாட்சி சொல்லவா?
7 வில்லன் ரேப் செஞ்ச பெண்ணைக்கொலை செய்வது ஓக்கே நேரில் கொலையைப்பார்த்த சாட்சியை உயிரோடு விட்டு வருவது ஏன் ?
8 ரேவதிக்கும் , சிவக்குமாருக்கும் நெருக்கம் ஏற்படும் காட்சிகள் நம்பகத்தன்மை இல்லை
9 அம்பிகா மன்னிப்புக்கேட்ட பின்னும் சிவக்குமார் பிகு பண்ணுவது ஓவர். அதைத்தொடர்ந்து வரும் வசனங்கள் மேல்சாவனிசம்
10 அம்பிகா வீட்டில் வேலை செய்யும் பணீப்பெண் அம்பிகா தரும் சுமங்க்லி பூஜை சேலை பரிசை வாங்க மறுத்து விட்டு அவர் ஒரு வாழாவெட்டி அவர் கையால புடவை வாங்க மாட்டேன் என்பதெல்லாம் ஓவரோ ஓவர் சம்பளம் மட்டும் எப்படி வாங்குவார் ?
11 ரேவதி ப்ப்ளிக் விழாவில் கொலை செய்வதை அத்தனை பேரு பார்க்கறாங்க , ஆனா யாரும் கண்டுக்கலை. அவரா ஸ்டேஷன் ல போய் சரண்டர் ஆகறார். விஐபி விழாவுக்கு வந்த போலீஸ் எல்லாம் வேடிக்கை பார்க்குமா?
சிபி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுவராஸ்யமான கோர்ட் ரூம் டிராமா . ரெண்டு மணி நேரபப்டம் தான் ஜீ ஃபைவில், அமேசான் பிரைமில், யூ ட்யூப் ல கிடைக்குது பார்க்கறவங்க பார்க்கலாம் ரேட்டிங் 2.5 / 5 இது ஒரு வெள்ளி விழா ஹிட் படம்
.